Tuesday 3 October 2017

மூன்றாவது இரண்டு

வணக்கம் வலையுலக நட்புகளே ! _()_ 

இந்த வருடம் இரண்டே இரண்டு இடுகைகளுடன் இமாவின் உலகை  அமைதியாக உறங்க விட்டிருக்கிறேனா!! ;(

என் தாயாரின் உடல் நலக் குறைவும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் என் நேரத்தை முழுமையாகவே ஆக்கிரமித்துக் கொண்டன. இப்போ விடுமுறை. 

சென்ற விடுமுறையில் என் நேரம் பெரும்பாலும் என் பெற்றோர் வசிக்கும் ஒய்வு இல்லத்திலேயே கழிந்தது. இம்முறை அங்கு செல்ல முடியவில்லை.  

'வைரல்' என்னும் சொல் இப்போ வெகு சாதாரணமாக எல்லோர் வாயிலும் புழங்குகிறது. :-) இவ்வருடம் இரண்டாவது தடவையாக வைரஸ் தாக்கியிருக்கிறது என்னை. பாடசாலைச் சின்னவர்கள் வழியே வந்தது, ஒரு மாதமாக என்னோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, எங்கள் பாடசாலையில் பலருக்கும் இதே பிரச்சினை. 

என் தாயாரது  நுரையீரல்கள்  பாதிக்கப்பட்டிருக்கின்றன. நான் போய்ப் பார்க்க, அவருக்குத் தொற்றினால் சிரமப்படுவார். அதனால் எனக்கு விடுமுறை. 

இதற்கு மருந்து ஏதும் தருவதில்லை. கொத்துமல்லித் தண்ணீர், ஊதுமக்கஞ்சி, பழங்கள், ஆவி பிடிப்பது என்று செய்ய வேண்டியதெல்லாம் செய்கிறேன். ஒய்வு முக்கியம் என்கிறார்கள். இன்றைய என் ஒய்வு நேரச்  செயற்பாட்டை உங்களோடு பகிர வந்தேன்.

என் மாணவர் தன் தாய்நாடான  லெபனானுக்கு  குடும்பத்தைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டார். அவர் வரும் வரை வேறு வகுப்பிற்கு உதவியாகச் செல்லப் பணிக்கப்பட்டிருக்கிறேன். சென்ற வாரம்  தையல் வேலையைத் தெரிந்துகொண்ட மாணவிகள் இருவருக்கு உதவிய இடைப் பொழுதில் என்னை ஈர்த்தது அருகே மற்ற மாணவர்கள் சிலர் செய்துகொண்டு இருந்த கைவேலை. சதுரப் பலகைகளில் சாமோவன், டொங்கன் சித்திர வடிவங்களைச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள். நான் விசாரிக்க ஆரம்பித்ததும், முயற்சி செய்து பார்க்கும்படி எனக்கும் ஓர் பலகைத் துண்டைக் கொடுத்தார்கள். 

செதுக்குவதற்கான ஆயுதங்கள் ஏற்கனவே என்னிடம் இருந்தன. பலகைக்கு
நேற்றே  'இந்தியன் இங்க்'  தடவிக் காய வைத்திருந்தேன். இன்று, முதல் முயற்சி. 

இந்தப் பக்கம் சில இடங்களில் ஒரு தடவைக்கு மேல் தீந்தை பூசப்பட்டுவிட்டது. பூசப்பட்டுவிட்டது என்ன! நான்தானே பூசினேன்! ;( அந்த இடங்கள்தான் செதுக்கிய இடங்களில் அசிங்கமாகத் தெரிகின்றன. ;(

'ஹங்சபூட்டுவ' (හංස පූට්ටුව - கழுத்துகள் பின்னிய வடிவிலான  ஒரு சோடி அன்னங்கள்)  வரைகிறேன் என்று ஆரம்பித்தேன். பிறகு ஒற்றை அன்னத்தோடு விட்டுவிட்டேன்.
இன்னொரு முறை பெரிய பலகையில் செதுக்கலாம் அதை. 

என்னிடம் உள்ள 'இந்தியன் மை'  நீரில் கரையும் போல் தெரிகிறது. (மாணவர்கள் வேறு சாயம் எதோ பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர்களது நல்ல கருப்பாக இருந்தது.) இதற்கு மேல் வாணிஷ் பூசுவதாக இருக்கிறேன். சின்னவரிடம்  இருக்கிறது என் வாணிஷ்  பேணி. அது வரும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லை. :-)

கொத்திக் கிளறியதை... க.கா.போ. 

செதுக்கிய கை வலிக்கிறது. நாளை மோசமாக வலிக்குமோ! :-) 

கன  காலம் கழித்துத் தட்டியிருக்கிறேன். பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. காலை எழுந்து வந்து திருத்துவேன். 

16 comments:

  1. ஆவ்வ்வ்வ்வ் இமா ரிட்டேன்ஸ்ஸ்ஸ்:)).. வெல்கம் இமா வெல்கம்... ஜெபா அன்ரி நலம்தானே?.. நீங்க நலமாகிவிடுவீங்க.. கவலை வேண்டாம்.

    பலகையில் கைவண்ணம் மிக அழகு.

    இமாவின் கைவண்ணம் பார்த்துக் கிரிஸ் அங்கிளுக்குப் பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆண்மை வந்திருக்குமே.

    ReplyDelete
    Replies
    1. _()_ //இமா ரிட்டேன்ஸ்ஸ்ஸ்// :)) தெரியேல்ல அதீஸ். ஒரே வந்து வந்து காணாமல் போறது. இனி எதுவும் சொல்ல மாட்டன். ஏலுமான நேரம் வருவன்.

      //ஜெபா அன்ரி நலம்தானே?// இல்லை. இனி 'ஆம்' என்கிற நிலை வராது என்று தெரிகிறது. கிழவியாகேக்க அப்பிடித்தான் சிலருக்கு. ஏற்றுக் கொள்ளுவம்.
      //நீங்க நலமாகிவிடுவீங்க.// ஆகினால் திரும்ப இந்தப் பக்கம் வர மாட்டனே! பரவாயில்லையா! :-)

      முதல் ஆளாக வந்திருக்கிறீங்கள். எதிர்பார்க்கேல்ல. கவனத்துக்கு வந்திராது எண்டு நினைச்சன். மிக்க நன்றி அதிரா.

      //கிரிஸ்// வேலையால வந்து பார்த்து, 'என்ன நிலமெல்லாம் குப்பை?' எண்டவர். பிறகு கிண்டுறன் எண்டார். வேலை முடிய, 'ம்... பரவாயில்லை,' என்ன திறமா இருந்தாலும் இந்தச் சொல்லுக்கு மேல பாராட்டு வராது. :-)

      Delete
    2. //இல்லை. இனி 'ஆம்' என்கிற நிலை வராது என்று தெரிகிறது.... ஏற்றுக் கொள்ளுவம்.//
      நீங்களும் என்னைப்போல ஞானியாகிட்டீங்க இமா:)..

      /// கிழவியாகேக்க அப்பிடித்தான் சிலருக்கு. //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கிழவி எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:).. இதை நினைவில வச்சு:) இமாவுக்கு இந்த வயதாகும்போது கூப்பிடுவன்:) அப்போ கோபிக்கக்கூடா இப்பவே சொல்லிப்போட்டன்:).. கம்பிமேல் நின்றமையால் உடனே பார்த்தேன்... தானாடா விட்டாலும் தசை ஆடுமெல்லோ.. பழய நட்பு எங்கு பார்த்தாலும் கால்கள் தன்னால ஓடுது:).

      //என்ன திறமா இருந்தாலும் இந்தச் சொல்லுக்கு மேல பாராட்டு வராது. :-)//
      ஹா ஹா ஹா அவருக்குத் தெரியும் திறமா இருந்தா எப்பூடி இருக்குமென:))

      Delete



  2. அஆவ் நல்லா இருக்கே வுட் ஆர்ட் ..அநேகமா இதுக்கு ஸ்பெஷல் பெயிண்ட் இருக்கும்னு நினைக்கிறேன் அதை யூஸ் பண்ணுங்க லிங்கில் ஒரு படம் இருக்கு காய் வலி சரியானதும் அதை செய்யுங்க :)

    https://www.etsy.com/no-en/listing/244827846/hawaiian-tapa-turtle-print

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு பேசும் சொல்லி வைச்சு வந்தீங்கள் போல! :-)

      ஹா! அந்த ஆமையை ஏற்கனவே ஒரு சின்னவர் செய்யுறார். அவங்களுக்கு கை நல்ல உறுதி. வடிவா வருது. ஒப்பிட்டுப் பார்க்க இடம் குடுக்க ஏலாது. ;D கட்டாயம் ஒரு ஆமை செய்ய வேணும். பெரியவருக்கு விருப்பம்.

      ம்... ஹவாயிலயும் 'டாப்பா' இருக்கு என்கிறது இப்பதான் தெரியும்.

      //ஸ்பெஷல் பெயிண்ட்// இருக்க வேணும். ஸ்கூல்ல திரும்ப விசாரிக்க வேணும்.

      //காய் வலி// எனக்குத் தான் டச் விட்டுப் போச்சு எண்டு இருந்தன். பரவாயில்லை. :-)

      Delete
    2. //ரெண்டு பேசும் சொல்லி//

      வைச்சு வந்தீங்கள் போல! :-) //

      ஹாங் ஹா ரெண்டு பேரும் /பேசும்

      சேம் பின்ச் :))


      இல்ல இந்த பூஸ் எனக்கு சொல்லவேயில்ல நான் எதேச்சையா டாஷ்போர்ட் திறந்தேன் பார்த்தா உங்க போஸ்ட் :)



      //காய் வலி // சாமீ பூனைய இந்த பக்கம் அனுப்பிடாதிங்க :)

      அது இன்னிக்கு நானா நாலஞ்சி இடத்தில போட்ட பின்னூட்டத்தில் எல்லாம் ரொம்ப மிஸ்டேக்ஸ் :)

      அது என்னன்னே தெரில .வெதர் சேஞ்சுக்கு தூக்கமா வருது :)
      ஒரு இடத்தில நடிகர்கள் என்று டைப்பினது நடுக்கர்கள்னு விழுந்திருக்கு :)

      டிலீட் செய்ய மனசில்லை விட்டுட்டேன் :)

      Delete
    3. கை நடுங்கி இருக்கும் போல! ;)))

      Delete
    4. ///இல்ல இந்த பூஸ் எனக்கு சொல்லவேயில்ல நான் எதேச்சையா டாஷ்போர்ட் திறந்தேன் பார்த்தா உங்க போஸ்ட் //

      நான் சொல்லாமலேயே இவ்ளோ ஸ்பீட்டா வந்திருக்கிறா:) ஒருவேளை சொல்லியிருந்தா.... வேகமா வந்து கம்பிவழி மோத:).. அதையும் பிறகு நாந்தேன் ஓடிப்போய் பிரிச்செடுத்து விடோணும்:)..

      Delete
  3. நோ மாடரேஷன் ?? :)

    உடம்பை கவனிச்சுக்கோங்க செபா ஆன்டியை விசிட் செய்யும்போது நான் விசாரித்ததாக சொல்லவும் ..இப்போதைய வைரஸ் தொற்றுக்கள் மோசம்தான் .டேக் கேர் .

    ReplyDelete
    Replies
    1. //நோ மாடரேஷன்// டீல்ல விட்டாச்சுது. ;D இவ்வளவு காலத்துக்கும் விளம்பரம் ரெண்டு மூண்டுதான் வந்துது.

      //உடம்பை கவனிச்சுக்கோங்க// அது எல்லாம் நல்லாக் கவனிக்கிறன். ரெஸ்ட் எடுத்து எடுத்து குண்டாகீட்டன். ;D
      //செபா ஆன்டியை விசிட் செய்யும்போது// மூக்கை மூடிக் கொண்டு இண்டைக்குப் போறதா இருக்கிறன். நேஸோட கதைக்க வேணும். ஆனால் அறைக்கு வெளிய நிண்டு பார்த்துட்டு வந்துருவன். கதைக்க ஏலுதில்லை எனக்கு. தொண்டை கப்சிப்! ஆனால் ஏஞ்சல் கேட்டதாகச் சொல்லுவன்.

      Delete
  4. அவ்வ்வ்! அன்னத்திட குடுமியைக் காணேல்ல! :-) வெட்ட மறந்து போனன். கொஞ்ச நேரத்தில திரும்ப இன்னொரு படம் சேர்ந்து விடுறன்.

    ReplyDelete
  5. அருமை
    உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நான் உங்கள் பக்கம் சென்று படித்துக் கொண்டிருந்த சமயம் இங்கே வந்திருக்கிறீர்கள். :-) நன்றி ஜெயக்குமார்.

      Delete
  6. ஹாய்... இமா. சுகமில்லை என்றாலோ இங்கு வருவீங்க. நலமாயிடுவீங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க.
    அழகா இருக்கு ஆர்ட். நீங்க சொன்னபின்னே தான் தெரியுது. நீங்க கொட்டியது.
    அம்மா நலனுக்கு என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. அப்பதானே நேரம் கிடைக்குது ப்ரியா. ;-)
      அம்மாட்ட ஒன்றும் கதைக்கேல்ல. என் இருமலைப் பார்த்ததும் நேஸ், 'அந்தோனியாவுக்குக் குடுக்கிறேல்ல,' எண்டு வாழ்த்தி அனுப்பினா. சால்வையால முகத்தை மூடிட்டு சட்டென்று வேலையை முடிச்சிட்டு வந்துட்டன்.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா