Thursday, 28 December 2017

டேப் & டிஸ்பென்சர்

 நத்தார் அன்பளிப்புகளைப் பொதிகளாகச் சுற்றும் சமயம் இடைநடுவே 'டேப்' தீர்ந்து போயிற்று. புதியதை மாற்ற‌ முயன்றேன். என் சின்னக் கைகளுக்கு பிரயத்தனமாக‌ இருந்தது. கர்ர்... மாடியிலிருந்து இறங்கி வந்து, தோட்டத்தில் நின்றிருந்த‌ மனிதரிடம் உதவி கேட்டேன். அவரும் பழையதைக் கழற்ற‌ சிரமப்பட்டார்.
 திடீரென்று தோன்றிற்று... புதியதை மாட்டிவிட்டுத் தள்ளினால் வராதோ! வந்தது. புதியதும் தானாகப் பொருத்தமான‌ இடத்தில் சென்று அமர்ந்தது.
எல்லோரும் இப்படித் தான் செய்வார்கள் போல‌. நமக்குத்தான் தாமதமாக‌ வெளித்திருக்கும் என்று தோன்றிற்று. :‍)

9 comments:

  1. பழயதை நகர்த்திப் புதியதைப் புகுத்தப் பக்குவம் தேவைதான்!
    மனதிற்கும் மாற்றும் கரத்திற்கும்..:))

    இங்கிருப்பது நான் உபயோகிப்பது சிரமமில்லாத டேப் - ரேப் டிஸ்பென்சர்.
    அதனால் உங்கள் அனுபவம் புதுமை!..
    வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
    Replies
    1. //பழயதை நகர்த்திப் புதியதைப் புகுத்தப் பக்குவம் தேவைதான்!
      மனதிற்கும் மாற்றும் கரத்திற்கும்..:))// ஆஹா! ;))) கலக்கல் கொமண்ட் இளமதி. ;‍)

      இது உண்மையில‌ மம்மிடது. அதனால்தான் எனக்கு மாட்டத் தெரியேல்ல‌. :‍)

      Delete
  2. Replies
    1. ஸ்கூல்ல‌ பலசாலிகளைப் பிடிச்சுச் செய்ய‌ வைக்கிறதால‌ இப்பிடிக் குறுக்கு வழிகளெல்லாம் வேண்டியிருக்கிறதில்லை. நாமாகவே காரியமாற்ற‌ வேணும் என்றால் கொஞ்சம் யோசிக்க‌ வேண்டியிருக்குது.

      Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது டேப் அல்ல ரேப் ஆக்கும்:) ஹையோ றீச்சருக்கு வரவர டமில் மறதியாகுது.. நானும் இல்லை எனில்:) இந்த வலையுலகில் டமிலை எல்லோரும் கொன்றிடுவினம் போல இருக்கே ஆண்டவரே!!:)..

    ReplyDelete
    Replies
    1. garrrrrrrrrrrrr :) வடிவேலு காமெடிய நினைச்சேன்

      Delete
  4. நீங்கள் ரீச்சர் என்று கூப்பிட்டால் நான் ரேப் எண்டு எழுதுறன். ;))))))

    ReplyDelete
  5. நான் டிஸ்பென்சரை என்னிக்குமே யூஸ் பண்ணதில்லை வீட்ல இருந்தாலும் :) இது நல்ல ஐடியா

    ReplyDelete
    Replies
    1. நான் நிறையத் தரம் வடிவா டேப்பைப் பிச்சு எடுக்கிறன் எண்டு சுண்டுவிரல் தோலைக் காயப்படுத்தி இருகிறன். சில‌ நேரம் அது நெய்ல்பொலிஷைப் பிடுங்கீரும். இப்ப‌ பயத்தில‌ அரை குறையாக‌ டேப் பிஞ்சு வருது.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா