Thursday, 14 December 2017

ஔவை சொன்ன‌ வாக்கு!!

நத்தார் கொண்டாடுவதற்கான‌ மனநிலை இன்னும் வரவில்லை. அதனாலேயே கொண்டாட‌ வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

செபா சொல்லுவார்... "சாகப் போற‌ மாடு, கண்டுக்குப் புல்லும் வைக்கோலும் சேர்த்து வைச்சுட்டுச் சாகிறது இல்லை," என்று. உண்மைதான். கன்று எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். இன்னொரு பசுவிடம் கெஞ்சியோ அடம் பிடித்தோ பாலருந்தலாம். அல்லது... இன்னொரு மாடு தீவனத்திற்கு, தன் சீவனத்திற்கு என்ன‌ செய்கிறது என்பதைக் கவனித்து அதன்படி நடந்தாலே பிழைத்துக் கொள்ளும். 

மனிதர்!! 

பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அம்மா அம்மாதான். நான் நன்றாக‌, சந்தோஷமாக‌ இருப்பதைத்தான் அம்மா விரும்புவார். 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்... ம்... ஔவையாருக்கு இதைச் சொல்வது சுலபமாக‌ இருந்திருக்கும். ஒரு வயதுக்கு மேல் வளர்ப்புத் தாயையும் விட்டு, தன் காலே தனக்குதவி என்று சுற்றுலாக் கிளம்பிய‌ பெண்மணி.  ;-) பெரிதாக‌ எதிலும் பிடிப்பு இருந்திராது, தமிழைத் தவிர‌. 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கு என்னென்றிட்டுண்டிரும். 

கடைசி ஆறு சொற்களையும் பிரித்துப் பிரித்து எழுதிப் பார்த்தேன். :‍) கவிதைத் தன்மை தொலைந்து போனாற்போல இருந்தது. தேடலாம் என்று இணையத்தில் உலாவ‌... கொடுமையொன்று கண்டேன்!! ;( படம் போட்ட‌ குழந்தைகள் அரிச்சுவடியில் 'ஔ' என்கிற‌ எழுத்துக்கு 'ஔவையார்' என்று எழுதியிருப்பார்கள். இணையத்தில் சில‌ ஔவைகளையும் ஏராளமான‌ அவ்வைகளையும் கண்டேன். ;( 

தமிழ், 'தமிழை வளர்க்க‌ நினைக்கும் தமிழராலேயே' மரித்து விடும் என்று முன்பே ஔவைக்குத் தெரிந்திருக்குமோ! அதனால் தான், 'நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எமக்கு என்ன!' என்று மனம் நோகாமலிருக்கும்படி அப்படிப் பாடி வைத்தாரோ!!! ;D

தட்டச்சு செய்வது சிரமமாகிப் போகும் என உணர்ந்து எழுத்து மாற்றம் வந்த‌ பின்பும், 'ஔ' 'ஐ' எழுத்துகளைத் தட்டுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாதபடிதான் இருந்துவருகிறது. ஆனாலும்... நாம் 'அய்யா' என்போம்; 'அவ்வை' என்போம். ;((

மீண்டும்... விஷயத்துக்கு வருகிறேன். மாண்டார் வருவரோ மாநிலத்தீர்!! வேண்டா... நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும் எனக்கு என்ன‌ என்று இட்டு உண்டு இருக்கலாம்.  அதன் ஒரு படியாக‌... இந்த‌ அலங்காரம். 
கையிலிருந்த‌ பொருட்களை வைத்துச் செய்தேன். இம்முறை அழகான‌ இலைகள் அகப்பட்டன‌. ஒரு சாடியில் சில‌ மிட்டாய்களும் இருந்தன‌. இவை அம்மா வீட்டிலிருந்து எனக்குக் கடத்தப்பட‌ பொக்கிஷங்கள். தன்னைச் சந்திக்க‌ வரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக‌ மிட்டாய்கள் வைத்திருப்பார்.

முன்பெல்லாம் நிறமற்ற‌ செலோஃபேன் கடதாசியில் மிட்டாய்களைச் சுற்றுவேன். இம்முறை கையிலிருந்தது சிவப்பு செலோஃபேன். 
நீளமாகத் தெரிபவை ஜெல்லி மிட்டாய்கள். 
செய்முறை இங்கே ‍- http://www.arusuvai.com/tamil/node/30177 

14 comments:

  1. ”ஔவை சொன்ன வாக்கு” ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றது இமா.
    எனக்கென்ன என்றிட்டு இருக்க முடியாமல் போவதே எனக்குண்டான பிரச்சனை.
    எனக்கும் இத்தனை நாட்கள் இல்லையில்லை 2 வருடங்களை அண்மிக்கிறது அந்த இட - இடை வெளி ஏற்பட்டு! இன்னும் இப்பவும் எனக்கென்ன என்றிட்டு இருக்க முடியாத நிலைதான்.

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. உங்கள் அம்மா போலவே என்னவரும் மகிழ்ச்சியாக எப்பவுமே அகமும் முகமும் மலர்ச்சியாக இருப்பதனையே விரும்புபவர்.
    ஆழப் புதைந்து போனவற்றை மீளக்கொண்டுவரும் முயற்சியில் இப்பொழுதுதான் நானும் இறங்கியுள்ளேன். இப்படி எமை நேசித்து இன்றில்லாமல் போனர்வர்களுக்காகவும் இப்பொழுது எமை நேசித்துக்கொண்டிருப்பவர்களுக்காகவும் இழப்பின் வலிகளிகளிலிருந்து எம்மை நாமே வெளிக்கொண்டுவர முயல்வோம்...
    தங்களின் மனத்திடமும் தெளிவும் என்னையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி இமா!

    அம்மாவின் நினைவும் உங்களை வருடிச் செல்ல நீங்கள் செய்த அழகிய கைப்பணி நத்தார் மெழுகுதிரியுடனான அலங்காரத்தட்டு மிகமிக அழகு!
    இப்படிக் கைப்பணிகள் செய்யும்போது நம்மை நாமே திடப்படுத்திக் கொள்ளவும் வழியாகிறது.
    நான் க்விலிங் செய்ததைத்தவிர வேறேதும் கைவேலை செய்ததில்லை. முயன்று பார்க்கவேண்டும்.

    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
    Replies
    1. //எனக்கென்ன என்றிட்டு இருக்க முடியாமல் போவதே எனக்குண்டான பிரச்சனை.// :‍) தெரியும் இளமதி. சிலவிஷயங்களை விருப்பமில்லாவிட்டாலும் நல்லது என்று தெரிஞ்சால் மனசைக் கடுமையாக்கிக் கொண்டு செய்யுறது / செய்யாமல் விடுறதுதான் நல்லது. எனக்கென்ன‌ என்று இருக்கவே முடியாது இளமதி. மற்றவங்களுக்கென்று இருக்க வேணுமே!

      கொஞ்ச‌ நாள்ல‌ பழகீருவன். நான் சரியாகிற‌ நேரம் அடுத்த‌ இன்னிங்ஸ் துவங்கி இருக்கக் கூடும். ;D

      சில உறவுகள் முகம் கொடுக்கிற‌ விஷயங்களோட‌ பார்க்கேக்க‌... எனக்கு வந்தது சின்னனாத் தெரியுது.

      //எமை நேசித்து இன்றில்லாமல் போனர்வர்களுக்காகவும் இப்பொழுது எமை நேசித்துக்கொண்டிருப்பவர்களுக்காகவும் இழப்பின் வலிகளிகளிலிருந்து எம்மை நாமே வெளிக்கொண்டுவர முயல்வோம்.// ஆமாம், அதுதான் சரி. திரும்ப‌ உங்கட‌ எழுத்து வேலை, க்வில்லிங் எல்லாம் மெதுவாகத் தொடங்குங்கோ. நானும் கொஞ்சம் கைவேலைகள் செய்யத் தொடங்கி இருக்கிறன். ஃபோட்டோ எடுக்கத்தான் மறந்து போறன். :‍)

      Delete
  2. ஒள இங்கிறது ow இங்கிலீஷிலே எழுதறமாதிரி முந்தி நா ஸ்கூலில் படிக்கும்போது அவ்வை னு படிக்கலை இமா இந்த ஒளவையார் தான் ஆனா ப்ரொனவுன்ஸ் பண்ணும்போது அவ்வையார் அப்படின்வோம் .

    சரி நம்ம அவ்வை பாட்டிக்கு வருவோம் ..பாட்டி ஈஸியா சொல்லிட்டு போய்ட்டாங்க ஆனா வலி அனுபவித்தவங்களுக்கே தெரியும்
    காலை நீட்டி ஆர்டர் போட்டு சாப்பாடு செய்யச்சொல்லி சாப்பிட்டப்போ அருமை தெரிலா இப்போ தெரியுது :(

    நௌ கமிங் டு கிராப்ட் ..செம அழகு இமா அந்த ரெட் பெரிஸ் /சூப்பர் ஐடியா ..
    இந்த முறை நானும் கொஞ்சம் கார்ட்ஸ் வித் யார்ன் சிம்பிளா செஞ்சேன் ..இப்பவும் பெரிய போஸ்டர் சர்ச்சுக்கு செஞ்சிட்டிருந்தேன்

    வான் நிலா சொல்லலைன்னா இந்த பதிவு கண்ணிலே பட்டிருக்காது :) நிலவுக்கு நன்றி

    இதை 6சுவைக்கு செல்கிறேன் செய்முறை பார்க்க

    ReplyDelete
  3. எச்சூஸ்மீ இமா :) பாஸ் வெர்ட் மறந்துட்டேன் கமெண்ட் போட முடியலை அங்கே :)
    அப்புறம் தேடி போடறேன்

    ReplyDelete
    Replies
    1. //பாட்டி ஈஸியா சொல்லிட்டு போய்ட்டாங்க ஆனா வலி அனுபவித்தவங்களுக்கே தெரியும்// :‍) ஆனால்... அனுபவிக்காதவர்கள் ஒருவரும் இருக்கேலாது ஏஞ்சல். எல்லாருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில‌ வந்துதான் ஆகும்.

      //சூப்பர் ஐடியா// நன்றி ஏஞ்சல்.

      //கார்ட்ஸ் வித் யார்ன்// நினைச்சிருக்கிறன். அது வருஷம் பிறந்த‌ பிறகுதான் செய்யுறது, உங்கட‌ வேலையைப் பார்த்த‌ பிறகு. :‍) //பெரிய போஸ்டர்// மறக்காமல் இடைக்கிடை படம் எடுத்து வையுங்க‌. நான் மறந்து மறந்து போறன். ;(

      //வான் நிலா சொல்லலைன்னா// :‍) வானம் இணைத்த‌ அபூர்வ‌ உறவு!

      //பாஸ் வெர்ட் மறந்துட்டேன்// :‍) பரவாயில்லை ஏஞ்சல். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நத்தார்க் காலம் இனிமையானதாக‌ அமையட்டும்.

      Delete
  4. வாங்கோ இமா வாங்கோ.. சோர்ந்து போயிடாமல்.. உந்தி உந்தி வெளியே வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி.. கடந்து விட்ட காலத்தை திரும்பிப் பார்த்தால் சிலது துக்கம்.. சிலது மகிழ்ச்சி....

    நாம் எல்லாம் நெடுகவும் இருக்கப்போகிறோமோ... இந்த வலையுலகுக்குள்ளேயே எத்தனை பேரை இழந்து விட்டோம்.. அதனால., கவலைகள் இருக்கும்தான்.. இல்லை எனச் சொல்லிட முடியுமோ.. அதை ஒரு ரூமில் வச்சுப் பூட்டி விட்டு... நாம் மகிழ்ச்சியாக இருந்து எம்மோடு கூடுபவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துவோம்.

    ReplyDelete
  5. இருப்பினும் இமாவுக்கு இவ்ளோ நப்பித்தனம் கூடாது:)).. அவ்ளோ குட்டி முட்டாய்களை எப்படித்தான் உருத்துச் சாப்பிடுவதாம்? கர்ர்:))... ஆனா பார்க்க கொள்ளை அழகு.

    ReplyDelete
    Replies
    1. //கடந்து விட்ட காலத்தை திரும்பிப் பார்த்தால் சிலது துக்கம்.. சிலது மகிழ்ச்சி.// உண்மைதான்.

      அது சரி... எப்ப‌ இருந்து பாதிக்கம்போட‌ சுற்றுறீங்கள்? பயமாக் கிடைக்கே! :‍)

      //நாம் எல்லாம் நெடுகவும் இருக்கப்போகிறோமோ.// ம். :‍) //இந்த வலையுலகுக்குள்ளேயே எத்தனை பேரை இழந்து விட்டோம்.// அதை நினைக்கத்தான் புதினமாக‌ இருக்கு அதீஸ். இங்க‌ வந்தபிறகுதான் கொம்ப்யூட்டர் பழகினவ‌. பிறகு அங்க‌ உங்களோட‌ எல்லாம் கதைச்சு... நீங்கள் எல்லாருமாகத் தான் இங்கயும் இழுத்து வைச்சிருந்தனீங்கள். இப்ப‌ எனக்கு வாசிச்சுப் பார்க்க‌ பழைய‌ பதிவுகளாவது இருக்கு. //நாம் மகிழ்ச்சியாக இருந்து எம்மோடு கூடுபவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துவோம்.// எல்லா இணைய‌ நட்புகளுக்கும் என் அன்பு நன்றிகள்.

      //குட்டி முட்டாய்களை// எனக்குத் தூக்க‌ ஏலுமான‌ அளவிலதானே செய்யலாம்! ;

      Delete
  6. அன்புத் தாயின் நினைவுகளை அசைபோடும் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. என்ன‌ இடுகை புதிதாகப் பதிவானாலும் தவறாமல் வருகை தருகிறீர்கள். மிக்க‌ நன்றி சகோதரரே.

      Delete
  7. My Grandma Memories not Erasable..

    ReplyDelete
    Replies
    1. Hi mahan! ;( I wish your birthdays fell on different dates now. Let's move on. This is life.

      Delete
    2. ஆஆஆவ்வ் இதாரிது சிங்கப்பூர் பாட்ஷாவோ.. அதெப்படி கிராண்ட்மா மட்டும் கண்ணில தெரிகிறா.... கர்ர்ர்:))...

      தப்பு இமா தப்பு.. நீங்க ஹை மகன் எனச் சொல்லக்கூடா.. ஹை பேரன் எனச் சொல்லோணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      Delete
  8. //அதெப்படி கிராண்ட்மா மட்டும் கண்ணில தெரிகிறா.// கர்ர் சொல்லக் கூடாது அதீஸ். :‍)

    //ஹை மகன் எனச் சொல்லக்கூடா.// நான் எங்க‌ சொன்னன்! "ஹாய் மகன்!" என்று தானே சொன்னனான்.

    //ஹை பேரன் எனச் சொல்லோணும்// கட்டாயம் பேரனோட‌ கதைக்கேக்க‌, 'ஹாய் பேரன்!' எண்டு சொல்லுவன். :‍)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா