Thursday, 25 January 2018

ஆக்வாஃபாபா விப்ட் க்ரீம்

தற்செயலாகக் கண்முன் தோன்றிய‌ அந்தக் காணொளியைத் தொடர்ந்து பார்க்க‌ வைத்தது... உண்மையில் அந்தக் குட்டிப் பையனின் சிரித்த‌ முகம்தான். பார்க்கும் போது எங்கள் பாடசாலையில் சின்னவர்கள்  oral presentation இற்குத் தயாராவது நினைவுக்கு வந்தது.

ஒரு தடவை சின்னவரொருவர் எலிப்பொறி வேலை செய்யும் விதத்தை விளக்கினார். பழகும் போது எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. பரீட்சகர் முன்னால்... பொறி சின்னவரது கையை இறுகப் பற்றிக் கொண்டது. வலியில் துடித்து போனார் சின்னவர். பரீட்சகர் பதறிப் போனார். சின்னவரோ வலியின் மத்தியிலும் நிறுத்தாமல் தொடர்ந்து தன் பேச்சை முடித்துவிட்டே கையைப் பார்த்தார். 

இந்தச் சின்னவர் சொன்ன‌ விதம் என்னைக் கவர்ந்தது; க்ரீம்  செய்து பார்க்க‌ வைத்தது.

க்றிஸ்ஸுக்கு கடலை கடிக்க‌ முடியாதாம். எப்பொழுதும் ப்ரெஷர் குக்கரில் போட்டு மெத்தென்று அவித்து வைப்பார். (நான் தனியாக‌ எனக்கு அவித்துக் கொள்வேன்.) யேமன் சொன்ன‌ அளவு கடலை, நீர், நேரம் எல்லாம் பார்க்கவில்லை க்றிஸ். அது அவருக்கு வேண்டாத‌ வேலை. உப்பும் போட்டிருந்தார். தண்ணீரை வடிக்கும் போது கண்டுவிட்டேன். அந்தத் தண்ணீரைக் கொட்டாதிருக்கும்படி சொல்ல‌ அப்படியே விட்டுவைத்தார். நான் அதில் எப்பொழுதாவது ரசம் வைப்பதுண்டு. சுவையாக‌ இருக்கும். இம்முறையும் அதற்காகத் தான் கேட்கிறேன் என்று நினைத்திருப்பார். 

முதலில் நீர்க்க‌ இருந்ததைப் பார்த்ததும், இது வேலை செய்யாது என்று தோன்றியது. இரவு தூங்கப் போகுமுன் பார்க்க‌ சற்று ஜெலி போல் ஆக‌ ஆரம்பித்திருந்தது. ஐஸ்க்யூப் தட்டில் நிரப்பி குளிரூட்டியில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டேன். காணொளியில் சொல்லியிருந்தபடி என் தட்டுகளின் ஒவ்வொரு குழியும் ஒரு மேசைக்கரண்டி கொள்ளளவாக‌ இருந்தது வியப்பைத் தந்தது. இப்படித்தான் எல்லாக் குளிரூட்டித் தயாரிப்பாளர்களும் தயாரிப்பார்களோ! 

இன்றுதான் நேரம் அமைந்தது செயற்படுத்த‌. 'விப்ட் க்ரீம்' தயாரிப்பில் இறங்கினேன். வெள்ளையாகவே வராது என்று மனம் சொல்லிற்று. இருந்தாலும், பிழைத்துப் போனால் நான்கு கரண்டி சீனியும் கொஞ்சம் மின்சாரமும் கொஞ்ச‌ நேரமும் தானே வீண்! 
ஆனால் என் அவநம்பிக்கையைத் தகர்த்தபடி மெதுவே வெள்ளைவெளேரென நுரைத்து எழுந்தது க்ரீம். சுவையும் பறவாயில்லை. (க்றிஸ் ஒரு பொழுதும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மாட்டார். அவரது அகராதியில், 'பறவாயில்லை,' என்றால் நன்றாக இருக்கிறது என்று பொருள்.) என் சின்னவர் ஒரு முறை விழுந்து எழுந்து அழுதார். 'பறவாயில்லை கண்ணா, அழாதைங்கோ!' என்றதும் கோபம் வந்தது. பிறகு, 'பறவாய் இருக்கு,' என்று அழ ஆரம்பித்துவிட்டார். (பரவாயில்லை! பரவாயில்லை! எது சரி!! உதித் பாடுவது போல் பருவாயில்லை என்று சொல்லாதவரைக்கும் சரிதான்.)

ஏணியை இழுத்து வந்து ஏறி பைப்பிங் பை & நொசில்ஸை எடுக்கப் பஞ்சியாக‌ இருந்தது. பிஸ்கட்டில் கரண்டியால் அள்ளி வைத்துச் சுவைத்தோம்.
மீதியைக் குளிரூட்டியில் வைத்திருக்கிறேன். கரைந்து போகுமா! அப்படியே இருக்குமா! கெட்டிப்படுமா! பார்க்கலாம்.  

17 comments:

 1. ஆஹா இது புதுசு இமா புதுசு. பார்த்துவிட்டு சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. செய்துபார்த்த‌ பிறகு தான் போஸ்ட்டே போட்டேன் ப்ரியா. சாதாரண‌ விப்ட் க்றீம் போல‌ இல்லை இது. இமிடேஷன் தானே! விப்ட் க்றீம்ல‌ சீனி இராது. இது தனிய‌ சீனி மட்டும்தான். கிஸஸ் செய்யலாமாம். அதுக்கும் பவ்லோவாவுக்கும் சரியாக‌ இருக்கும்.

   Delete
 2. ஆஹா சீனிப்பவுடரில் கொஞ்சம் பால் சேர்த்து பட்டரில் அடித்தால் இப்படி விரைவான கிரீம் வந்துவிடுமே டீச்சர்.

  ReplyDelete
  Replies
  1. //பால் சேர்த்து பட்டரில்// ;)
   அவற்றைத் தவிர்ப்பதற்காக‌ யாரோ கண்டுபிடித்த முறை இது நேசன்.

   Delete
 3. எலிப்பொறி விளையாட்டு விபரீதமாக முடிந்திருக்கு கடந்த காலத்தில்)))

  ReplyDelete
  Replies
  1. நேசன் சின்னனில‌ குழப்படியா! :‍)

   Delete
 4. ஆஹா...வெகு அருமை....


  காணொளியும் கண்டேன்....புதிய உணவு எனக்கு....செய்து பார்க்கும் ஆவல் அதிகமாக வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. நானும் சும்மா ஒரு ஆர்வத்தில‌ தான் செய்து பார்த்தேன். உப்புப் போடாமல் கடலையை அவித்திருந்தால் திகட்டாமலிருந்திருக்கக் கூடும். மிச்ச‌ க்யூப்ஸ் ஃப்ரீஸரில் இருக்கிறது. அடுத்த‌ தரம் வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கேக் ஐஸ் பண்ணக் கிடைத்தால் இதைத்தான் ட்ரை பண்ணுவதாக‌ இருக்கிறேன். 2 எலிகள் மட்டும் சுவை பார்த்தால் போதாது. :-)

   Delete
 5. ஆஹா... இதை நான் ஏற்கனவே
  http://bhavnaskitchen.com/ இவங்கட
  இந்த https://youtu.be/dojJjRVd7hw வீடியோவில் பார்த்திருக்கிறேன் இமா.
  சரியா வருமோன்னு செயற்படுத்தவில்லை.
  ஆனால் இப்ப உங்களின் பதிவின் பின்னர் அடுத்தமுறை கடலை அவித்த அந்த நீரில் செய்து பார்த்துவிட நினைக்கிறேன்.

  அவிச்ச கடலை தண்ணீரை ரசத்துக்கு நானும் உபயோகிப்பதுண்டு!
  என்ன ஒன்று அதிலிருக்கும் உப்பை மறந்து மேலும் உப்புப் போட்டுவிடுவதுண்டு..:p
  இதற்கு நிச்சயம் உப்பு லேசாக அல்லது இல்லாமலும் இருந்தால் நல்லதென நினைக்கிறேன். செய்து பார்ப்போம்.
  நன்றி இமா!

  ReplyDelete
 6. ஆஹா.. இதை நான் ஏற்கனவே
  http://bhavnaskitchen.com/ இவங்கட
  இந்த https://youtu.be/dojJjRVd7hw வீடியோவில் பார்த்திருக்கிறேன்.
  சரியா வருமோன்னு நினைச்சுச் செயற்படுத்தியதில்லை.
  உங்களின் பதிவின் பின்னர் அடுத்தமுறை கடலை அவித்த அந்த நீரில்
  செய்து பார்த்துவிட நினைக்கிறேன்.

  அவிச்ச கடலை தண்ணீரை ரசத்துக்கு நானும் உபயோகிப்பதுண்டு!
  என்ன ஒன்று அதிலிருக்கும் உப்பை மறந்து மேலும் உப்புப் போட்டுவிடுவதுண்டு..:p

  இன்னுமொன்று இதற்கு உப்பு மிக லேசாகவோ அல்லது இல்லாமலோ இருந்தால் நல்லதெல்லோ..
  அடுத்த முறை நானும் செய்து பார்க்கோணும்.
  நன்றி இமா!

  ReplyDelete
  Replies
  1. உப்பு இல்லாமலிருந்தால் தான் நல்லது. எனக்கு கடலை / பயறு அவிச்ச தண்ணீரில் செய்யும் ரசம் நல்லவிருப்பம் இளமதி.

   Delete
 7. Replies
  1. நன்றி சகோதரரே! எல்லாப் புகழும் அந்தக் குட்டிப் பையனைத் தான் சேர வேண்டும். :-)

   Delete
 8. ஆகா.. அருமை.. குளிர்சாதப் பெட்டியில் வைத்த மீதிக்கு என்ன ஆச்சு.. :)

  வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete
  Replies
  1. :-) அது அப்படியே தான் இருந்தது. ஒரு வாரம் வரை அப்பப்போ கொஞ்சம் சுவைத்தேன். பிறகு அவசியமில்லாமல் உடலில் சீனியைச் சேர்த்துச் சிரமப்படுவானேன் என்று கொட்டிவிட்டேன்.

   திரட்டி பற்றி - சென்று பார்த்தேன். என் வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் என் பதிவுகள் குறைந்துவிட்டது. எப்போதாவது ஒரு இடுகை... அதற்காக திரட்டியை நாடுவதற்கு மனம் ஒப்பவில்லை. ஒழுங்காக அடிக்கடி எழுத நேரம் அமையும் போது வருகிறேனே!

   Delete
 9. Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
  Tamil News | Latest Tamil News | Tamil Newspaper

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி சகோதரரே!

   Delete