Monday 20 April 2020

My Locket

Locket என்பதன் தமிழாக்கம் என்னவாக இருக்கும்!!

சென்ற தவணை இடம்பெற்ற ஒரு கருத்தரங்கின் முடிவில், எங்களை வழிநடத்திச் சென்றவர் தன் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியைக் காட்டி அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். வித்தியாசமாக இருக்கிறதே என்று முன்பே யோசித்தேன்.

சிறப்புத் தேவைகளுடனான குழந்தைகள் பற்றிய கருத்தரங்கு அது. சில குழந்தைகளின் பெற்றோர் ஒன்றாகச் சேர்ந்து அமைப்பொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தில் மாதமொரு முறை ஒன்றுகூடுவார்களாம். குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக, நன்கொடை சேகரிக்கும் முயற்சியாக தாய்மாரில் ஒருவர் இந்தச் சங்கிலிகளை விற்கிறார்.


சிமிழ்களின் விளிம்புகளிலுள்ள வெட்டுவேலைகளில் வித்தியாசமானவை இருக்கின்றன. விரும்பியதைத் தெரிந்துகொள்ளலாம். வாங்கும் போது சிமிழ்கள், இரண்டு உருவங்களுடன் வரும். மேலும் ஐந்து உருவங்களை சிமிழ் கொள்ளும். அவற்றை மேலதிகமாகப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். பணத்தை அனுப்பியபின் lockdown அறிவிக்கப்பட... என் ஆர்வம் குறைந்து போயிற்று. இனி ஒரு மாதம்! கழித்துத் தான் கிடைக்கும் என்று முடிவு செய்து தபாலை எதிர்பார்ப்பதைத் தவிர்த்தேன். சில நாட்கள் கழித்து எதிர்பாராத சமயம் தபாற்பெட்டியில் சின்னதாகப் பொதி ஒன்று. என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

இப்போ என்  சங்கிலியின் கதை -
                சிமிழின் விளிம்பிற்கு - சிற்றலைகளைத் தெரிவு செய்தேன். Ripples of love & kindness.
              Family heart - என் அன்புக் குடும்பத்திற்காக
              குருசு - க்றீஸ்தவத்தைக் குறிக்க.
              Autism puzzle - தற்போது நான் செய்யும் தொழிலைக் குறிப்பதற்காக
              துவிச்சக்கரவண்டி - எட்டாவது வயது முதல் நாட்டை விட்டு வெளியேறும் வரை இரண்டு சக்கர வண்டிகள் என் வாழ்வின் முக்கிய அங்கமாக இருந்திருக்கின்றன. முதலில் ஒரு சின்ன ஹீரோ, பிறகு பச்சை நிற ரோட்ஸ்டார், ஒரு chopper, ஒரு சின்ன Asia சைக்கிள், கடைசியாக ஒரு பெரிய லேடீஸ் சைக்கிள். அதன் பின் பச்சை நிற Yamaha mate 50 ஒன்று வைத்திருந்தேன்.
          இரண்டு முயல்களும்... ட்ரிக்ஸி, ட்ரேஸியின் நினைவாக
          கற்கள் பதித்த பூ - என் கைவினைப் பிரியத்தையும் அணிகலன் பிரியத்தையும் குறிக்க.

இன்னும் எத்தனை வருடங்கள் விசேட தேவைகளுள்ள சிறுவர்களோடு பயணிப்பேன் என்பது தெரியாது. இந்தச் சங்கிலியை அவர்கள் நினைவாக எப்பொழுதும் என்னோடு வைத்திருக்க விரும்புகிறேன்.

6 comments:

  1. அழகாக உள்ளது...

    நலமாக கவனமாக இருங்கள்...

    ReplyDelete
  2. Wow அழகாக இருக்கு..

    ReplyDelete
  3. பெண்டன் அழகு இமா பத்திரமாக வச்சிருங்கோ.

    எப்படி இருக்கிறீங்க இமா? நலம்தானே அங்கு எல்லோரும்.. இப்போ உங்களுக்கு விண்டர் ஆரம்பிக்குதெல்லோ..

    ReplyDelete
    Replies
    1. ஹாய் அதிரா! சுகம்தானே! இங்கு எல்லோரும் நலம். நீங்களும் பத்திரமாக இருங்கோ. ஓம், ஆனால் வின்டர் துவங்கின மாதிரியே இல்லை. :-)

      பத்திரமாக வைச்சிருக்கத் தான் ஆசை. எங்கட கையில என்ன இருக்கு! ;)

      Delete
  4. அழகு.

    நலமாக, கவனமாக இருங்கள்.

    ReplyDelete
  5. என் அன்பு நன்றிகள். நீங்களும் பத்திரமாக இருங்கள்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா