கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். ;)))
இமாவின் உலகப் பிரசித்தி பெற்ற கட்லட் பாடசாலை நிகழ்வொன்றுக்காகத் தயாரானது. கிளம்பும் சமயம் பார்த்தால் வெற்று ஐஸ்க்றீம் பெட்டிகள் எதனையும் காணோம்.
அவற்றில் கொண்டு போனால் திரும்பக் கொண்டுவருவதைப் பற்றி யோசிக்கத் தேவை இராது. தவிர ஒரு பெட்டி, ஒரு டின் மீனில் செய்த கட்லட்டுக்குச் சரியாக இருக்கும்.
பெட்டிகள் கண்ணில் படாது போகவே, அலமாரியில் இருந்து ஒன்றை வெளியே எடுத்து அதிலிருந்ததை வேறு பாத்திரத்தில் கொட்டி வைத்து விட்டு கழுவி எடுத்துப் போனேன்.
பாடசாலை மேசையில் இருந்த பெட்டியைக் காணோம். ;( தேடும் போது உமா சொன்னார் அது தனக்கென நினைத்து எடுத்து வைத்து விட்டாராம்.
எதற்காகக் கொண்டு வந்தேன் என்பதைச் சொல்லி விட்டு அவருக்கு இன்னொரு நாள் தனியாக வீட்டுக்கு எடுத்துப் போவது போல் செய்து வருவதாக வாக்களித்தேன்.
"என் பெயர் அதில் போட்டு இருந்தது. அதனால் எனக்குத்தான் என்று நினைத்து விட்டேன்" என்றார் மெதுவாக.
பெட்டியைப் பார்த்தேன். அவர் சொன்னது சரிதான் "உ மா"
"உங்களுக்குத் தமிழ் தெரியுமா?"
"எழுத்துக் கூட்டி மெதுவே வாசிப்பேன். பேச வராது," என்றார் ஆங்கிலத்தில்.
ஆமைக்கும் அடி சறுக்கிய தருணம் ஒன்று. ;)
மற்றது உண்மையில் சோளப்பூ தான். முன்பொருமுறை தோட்டத்தில் விளைந்தது.
இல்லாதது இமா -இட்லி மா.
இ. மா.
ReplyDeleteஉ.மா,
க. மா.
போன்ற எல்லா மாக்களுக்கும் விபரம் சொ. மா?
சமைய்ல் பண்டங்க்ள் எல்லாமே, இமா வை போல வே மாவில் போட்டு வைத்துட்டீங்க இதிலிருந்து எத்தனை ஐஸ் கிரீம் டப்பா காலி பண்ணீங்க்ன்னு தெரியுது.
ReplyDeleteவலைப்பூ அகராதி மாதிரி, உங்க வலை”டப்பா” அகராதியும் ஒண்ணு போடுங்கோவன்!! ;-))
ReplyDeleteஇதிலிருந்து அறிந்து கொள்வது யாதெனில் இமாவுக்கு ஐஸ் க்ரீம் ரொம்ப பிடிக்கும்.
ReplyDeleteஇமா- இட்லி மா
ReplyDeleteகமா-கடலை மா
உமா- உளுந்து மா
கோமா- கோதுமை மா
அமா-அரிசிமா
ஆமா- இது என்ன மா ஆட்டா மாவா?
மமா- இவர் எந்த மாமா :)
தப்புப் பண்றீங்க சபையோரே, தப்புப் பண்றீங்க. ;)
ReplyDeleteஇமாவுக்கு ஐஸ் க்ரீம் டப்பா தான் ரொம்பப் பிடிக்கும். ஐஸ் க்றீம் பிடிக்காது. ;)
டப்பாலயும் இப்புடி சீத்ரூ புடிக்கும். அப்பதான் உள்ள இருக்கிற அளவு தெரியும். (கூட ஒரு ஸ்கூப் வைக்கணும்.)
ம(ம்)மா... இது தகுமா!! ;)
ReplyDelete~~~~~~~~~~
//எத்தனை ஐஸ் கிரீம் டப்பா காலி பண்ணீங்க்ன்னு தெரியுது.// ஜலீலா, இதில் பலதும் பல வருடங்களாக எங்களோட இருக்கு. ;)
~~~~~~~~~~
இர்ஷாத்துக்கு தொண்டை கட்டி இருக்கு. அதான் வெறும் ஸ்மைலியோட ஓடீட்டாங்க. ;))))
~~~~~~~~~~
ஹுசேன், //வலை”டப்பா” அகராதி// அது உங்க வேலை. சரியாக் கண்டு பிடிக்கணும். பார்க்கலாம், யார் 100% ஸ்கோர் பண்றாங்க என்று. ;))
~~~~~~~~~~
இல்ல ஸாதிகா. பிடிக்காது. வருஷத்துல 1 தடவை சாப்பிட்டால் பெருசு. இது எல்லாம் பழசு. வீட்ல வாங்கினால் சுகர் ஃப்ரீ / க்ளூட்டன் ஃப்ரீ வாங்குவாங்க. எப்பவாச்சும் ட்ரிப் போனா மட்டும் ஒரு கோன் / ஐஸிசாக் வாங்குவேன்.
~~~~~~~~~~
கவி...
மமா- மரவள்ளி மா ;)
உ.மா - உளுந்து மா
ReplyDeleteக. மா - கடலை மா
அ.மா - அரிசி மா
சி. அ. மா - சிவப்பு அரிசி மா
த. உ.மா - தனி உளுந்து மா??
ஹோ. மீ. மா - ஹோல்மீட் மா//
வ. கோ. மா - வறுத்த கோதுமை மா
வ. உ. மா - வறுத்த உளுந்து மா
ஆ.மா - ஆட்டா மா
பா. மா - பால் மா
உமா மாமா க.மா சோ.மா ந்னு
ReplyDeleteஅமா போட்டார் இமாவுக்கு
இது சும்மா :)
போட்டி என்ன இமா !!
இ.மா இடியப்ப மாவு :)
பு.மா புளிச்ச(புட்டு) மாவு
ப.மா பஜ்ஜி மாவு
சிவாவுக்கு... அமுல். ;)))
ReplyDelete~~~~~~~~~~
வான்ஸ்,
த. உ.மா - தன்னாலே உயரும் மா கிக் கிக்
~~~~~~~~~~
இலா,
//பு.மா புளிச்ச(புட்டு) மாவு// கிக் கிக் ;))
என்ன இமா. நல்ல நாளிலே நமக்கு தமிழ் புரிய கொஞ்சம் லேட். அதிலும் இந்த மாக்கள் எல்லாம் ஒரே கு.ம. (குழப்பமா) இருக்கு.
ReplyDeleteஇ.மா என்றால் இமா. கரெக்டா.ஹி ஹி.
;)
ReplyDeleteயாரு எல்லா மா-வையும் கண்டுபிடித்தாங்க இமா?
ReplyDeleteதன்னாலே உயரும் மா- கொஞ்சம் டூ மச்சா இருக்கு. Self Rising Flour-ங்கறதை மொழிபெயர்த்து,மண்டையப் பிச்சுக்க வைக்கறீங்களே? கர்ர்ர்ர்ர்ர்ர்!
அந்த 'டூ மச்' தானே என்னை இத்தனை தூரம் கொண்டு வந்து விட்டிருக்கு. ;)
ReplyDeleteவிக் அனுப்பட்டா மகி. ;))
இந்த மா(ம)க்கள் படுத்தும்பாடு!! வானதி மாதிரியேதான் நான் நினைத்தேன்.ஆனால் த.உ.மா வுக்கு நான் நினைத்தது.தனிஉளுத்தம்மா என.ஏனெனில் நான் அப்படி வைத்திருக்கிறேன்.(வ.து,வ.து).
ReplyDeleteசில பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டது இப்பதிவு.நன்றி
கேட்டா வந்ததால வசதியா போச்சி .. :-)).இல்லாட்டி நானும் கொஞ்சம் யோசனை பன்னிருப்பேன் :-((
ReplyDeleteவாங்கோ ஸ்ரீப்ரியா. ;) கருத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஜெய்லானி... என்ன??? தூக்கக் கலக்கமா!! கேட்டைத் திறந்துட்டு வருவாங்க, தெரியும். 'கேட்டாவேயா' வருவாங்க. ;)
பாத்தீங்களா ..!! நான் ஊர் உலகம் பூரா (பிளாக் ) தப்பு கண்டு பிடிச்சாலும் கடைசியில நான் எப்பவும் மாட்டக்கூடியது உங்க கிட்டதான் !! :-)
ReplyDelete//உலகம் பூரா// !! ;))
ReplyDeleteஹி ஹி. இது சும்மா, மருமகன் மேல இருக்கிற பிரியத்துலதான். ;)