Wednesday 13 October 2010

என்ன சொல்கிறீர்கள்!!

வரப்போகும் சனிக்கிழமை (16/10/2010) எங்கள் பாடசாலை வருடாந்தச் சந்தை - School Fair நடைபெற இருக்கிறது.
கடந்த ஒன்பது வருடங்களில் ஒரு முறை வீட்டுத்துணிகள் (லினன்) விற்பனைப் பிரிவிலும், மீதி எட்டு வருடங்களும் விளையாட்டுப் பொருள் விற்பனைச்சாலையில் வேறு இரு ஆசிரியர்களுடனும் இணைந்து செயலாற்றி இருக்கிறேன். முதல் வருடம் பழக்கமில்லாததால் சங்கடமாக இருந்தது. இப்போ ரசிக்கிறேன். பிடித்திருக்கிறது.

இம்முறை 'ஃபேஸ் பெய்ன்டிங்' பொறுப்புக் கிடைத்திருக்கிறது, தயாராகிறோம். 

முன்பு ஒரு முறையும் இதற்காகப் பாதி வேளையில் என்னை இழுத்துப் போய் விட்டார்கள். இன்னொரு முறை பலூன் விற்றேன். ;) ஒரு முறை பணப்பெட்டிக்குக் காவல் வைத்தார்கள். திடீர் திடீரென்று வேறு வேலைக்கு இழுத்துப் போய் விடுவார்கள். எது செய்தாலும்.... ஜிலுஜிலு என்று ஒரு தொப்பி, முகத்தில் ஒரு படம்... வந்தீர்களானால் என்னை அடையாளம் காண மாட்டீர்கள். 

இது எங்கள் நாள். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என்று வேறுபாடு இல்லாமல் எல்லோரும் சந்தோஷமாக ஒன்று கூடும் நாள்.

என்னிடம் கைவினை கற்கும் மாணவிகள் இருவர் கூட்டாக வாழ்த்திதழ்கள் தயாரித்து விற்று அந்தப் பணத்தைப் பாடசாலைக்குக் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் வயதுக்குச் சுலபமல்ல இந்த வேலை. பாருங்களேன்...
சிலுவை - ஐரிஸ் ஃபோல்டிங் - அறிமுகம் செய்து வைத்த அறுசுவைத் தோழிகள் நர்மதாவுக்கும், வாணிக்கும் என் நன்றிகள்.

மீதி இரண்டும் பிரதானமாக எம்போஸிங் முறையில் தயாரானவை.

சென்ற தவணை அனேகமான காலை & மதிய போசன இடைவேளைகளை வகுப்பறையில் செலவழித்திருக்கிறார்கள். எப்போ இவர்களைத் தேடிப்போனாலும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டு, உணவு அருந்திக் கொண்டு அதே சமயம் மும்முரமாக வேலையில் இருப்பார்கள்.
இந்தத் தொகுதியிலுள்ளவை எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. வெகு நேர்த்தியாக இருந்தது வேலை.
சூரியகாந்தி - நாட்காட்டியிலிருந்து
ஸ்டிக்கர் & ரிப்பன்
ஸ்டொகிநெட் வண்ணத்துப் பூச்சி & கிஃப்ட்ராப்
விடுமுறைக்காலம் கூட இருவருக்கும் இந்த வேலையில் தான் போயிருக்கிறது. அனுபவித்துச் செய்திருக்கிறார்கள்.
அழகான ஆந்தை
தையல் வேலை
ஒரு விடயத்தை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இதில் என் பங்கு அதிகம் இல்லை. யோசனை சொன்னேன். எப்போவாவது மேற்பார்வை செய்தேன். ஊக்கம் கொடுத்தேன். மீதி எல்லாம் அவர்கள் வேலைதான். தாங்களாகவே விலையும் நிர்ணயம் செய்தார்கள். 50 சதம் முதல் $3.50 வரை ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயித்திருந்தார்கள். ஆசிரியர்களிடம் விற்பனையை ஆரம்பித்தார்கள். தபாலுறைகள் இல்லாதது யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை.நன்றாக விற்பனையாகின்றன.

முதல் நாள் விற்பனை $11.50. இன்று $13.00

சந்தைக்கு நடுவே 2 நாட்கள் மீதமுள்ளன.

வெள்ளிக்கிழைமை மதிய இடைவேளையின் பின் மீந்திருப்பவற்றுக்கு தபாலுறைகள் தயாரித்து இணைக்க இருக்கிறார்கள். தேவைப்பட்டால் விலைக்குறைப்பும் பரிசீலிக்கப்படுமாம். முழுவைதையும் விற்று முடிப்பதுதான் அவர்கள் நோக்கம்.
கீழே உள்ளவை நிறைவுறாதவை.

பதினொரு வயதான இவர்கள் திறமையையும், பாடசாலைக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டி சான்றிதழுக்கு சிபாரிசு செய்யலாம் என்று இருக்கிறேன்.

என்ன சொல்கிறீர்கள்!!

27 comments:

  1. சூப்பரோ சூப்பர் இமா.எது அழகாக இருக்கிறது எனச்சொல்லமுடியாமல் இருக்கிறது.எல்லாமே நன்றாக செய்திருக்கிறார்கள்.அழகாக இருக்கிறது. நிச்சயம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் இமா.பரிசு,சான்றிதழ் என்று கொடுங்கள்.அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    அறுசுவை தோழிகளின் கைவினைகளும் இங்கு இருப்பதைக்காண மகிழ்ச்சி.நன்றி.

    ReplyDelete
  2. சூப்பரோ சூப்பர் ..repeatu...

    mee the second.....

    ReplyDelete
  3. appadiey nan chonathu polavey siethu kaati erukkengal...

    antha maanavargalukum enathu valthukkal.

    ReplyDelete
  4. //அறுசுவை தோழிகளின் கைவினைகளும் இங்கு இருப்பதைக்காண மகிழ்ச்சி.// ;) இல்ல... 'ஐரிஸ் ஃபோல்டிங்கை' எனக்கு அறிமுகம் செய்து வைத்தது அவர்கள் என்றேன் ப்ரியா. ;))

    ப்ரியாவுக்கு வடை கிடைத்து இருக்கிறது போல. ;)

    ~~~~~~~~~~

    எனக்கு ஒரு மாணவர் இருக்கார்... சொல்லுக் கேக்காத மாணவர். பேர் சிவா. ;))) எத்தனை தடவை சொல்றேன்... தமிழ்ல தட்டச் சொல்லி. காதிலயே போடக் காணோம். முன்னால யாராச்சும் தட்டி இருக்கிற வரியை காப்பி பண்ணி மட்டும் போட்டுருவாங்க.

    கவிதைன்னா உருகி உருகி ;) தமிழ் வருது இல்ல. கமண்டுக்கு வராதா!! க்ர்ர்ர்ர் ;))))

    நன்றி சிவா. (தெரியும், எப்பவும் போல.. இந்தத் தடவையும்.. ஒரு காதால போய்... மற்றக் காதால வெளிய வந்துரும்.) ;))))

    ReplyDelete
  5. "அறிமுகம் செய்து வைத்த அறுசுவைத் தோழிகளின்" கைவினைகளும் என வந்திருக்க வேண்டும். பின்தான் பார்த்தேன்.மன்னிக்க.

    ReplyDelete
  6. Awesome Imma ! I am really impressed with those leaders. Yeah right !
    They planned it.They managed time so that it wont affect thier other duties towards study etc. They did an awesome job. They also did the pricing and what can i say ??!!! They took your mentoring and worked on it.

    Job well done. Please do send a commendation and recommend for any awards. I wish I could be there to congratualte them in person.

    PS: I know you dont like tamil-english. I am rushing for lunch time prep.

    ReplyDelete
  7. வாவ்வ் எல்லாமே சூப்பரா இருக்கு இமா....மாணவர்களுக்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்....

    ReplyDelete
  8. இமா ஒரு சமயம் மொத்த பர்சேஸ் பண்ண நான் வந்தாலும் வருவேன்.அனைத்தும் அருமை.பட்டர்ஃப்ளை,ஸ்டிச்ட் ஒன்,ரிப்பன் கார்ட் ,எம்போஸ்ட் எல்லாமே அழகு.போஸ்டல் டெலிவரி உண்டா?

    ReplyDelete
  9. very very cute imaa... nice creativity and imagination.. hats off!

    (we will give some credit to the teacher too for the good work :)) )

    ReplyDelete
  10. எல்லா கார்ட்ஸ் சூப்பர் அவர்களின் கைவண்னமும் சூப்பர்.
    என்ன இமா உங்களை பார்க்கவே முடியல்லை பிஸி போல.

    எம்போஸிங் கார்ட்ஸ் எல்லாம் டாப்.

    ReplyDelete
  11. எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...//hats off!// ஹேட்ஸ்-ஆப் என்று சொல்லிட்டு ஹேட்டோடயே இருந்தா எப்பூடிங்கோ சந்து? கிக் கிக்கிக்!!

    ஆன்ரி,ஆல் கார்ட்ஸ் ஆர் நைஸ்.உங்கட மாணவிகளின் டெடிகேஷனுக்கு ஜீனோவின் சல்யூட்!

    /என்ன சொல்கிறீர்கள்!!//உதுல ஆச்சரியக்குறிக்குப் பதிலாக வினாக்குறியல்லோ வந்திருக்கோணும்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வீ ஆல் ரெகமண்ட் டு கிவ் எ நைஸ் அப்ரிஷியேஷன்&அவார்ட்ஸ் டு தி கர்ல்ஸ் யா!!:)

    ReplyDelete
  12. "நான் ரொம்ப சமத்தாக்கும்..."

    அப்படியே சிவா சொல்லிகொடுத்தது போலவே .
    அழக செய்து இருக்காங்க...

    கார்டு செய்த அணைத்து மாணாக்கருக்கும்
    ஆசிரியருக்கும் நன்றி.

    ReplyDelete
  13. இமா 11 வயதாகும் பிள்ளைக்ளின் கைவண்னம் , ரொம்ப ஆச்சரியமே, எல்லா கார்டுக்ளும் மிக நேர்த்தியாக இருக்கு.
    எனக்கு உங்கள் மாணவியா வரனுமுன்னு ஆசையா இருக்கு.

    ReplyDelete
  14. ஆஹா..அருமையான கலெக்சன்

    ReplyDelete
  15. //பதினொரு வயதான இவர்கள் திறமையையும், பாடசாலைக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டி சான்றிதழுக்கு சிபாரிசு செய்யலாம் என்று இருக்கிறேன்.
    //

    இதுப்போல பாராட்டும் , சான்றிதழ்களும் அவர்களை இன்னும் திறம்பட செய்யும் என்பது உறுதி...!!

    ஆசிரியருக்கேத்த மாணவர்களும் ,மாணவர்களுக்கேத்த ஆசிரியரும் கிடைப்பது ஆச்சிரியமே..!! அந்த வகையில நீங்க குட்...பெட்டர்..பெஸ்ட்....!!!!!!!

    ReplyDelete
  16. //பதினொரு வயதான இவர்கள் திறமையையும்//

    இன்னொமொரு லியனர்டா டாவின்ஸி ...!!

    ReplyDelete
  17. பதினொரு வயதான இவர்கள் திறமையையும், பாடசாலைக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டி சான்றிதழுக்கு சிபாரிசு செய்யலாம் என்று இருக்கிறேன்.//

    கண்டிப்பா செய்துடுங்க இப்போல இருந்து அவங்களோட திறமைய ஊக்கப்படுத்துங்கள் பின்னாள் பெரிய டிசைனர்ஸ்களாக வரலாம்!

    எல்லா கார்ட்ஸ்ம் சூப்பர் டிசைன்ஸ்!

    ReplyDelete
  18. வாவ் சூப்பர்! குழந்தைகளுக்கு எங்கள் பாராட்டுக்களை தெரிவித்து விடுங்கள்.

    ReplyDelete
  19. உங்கள் அனைவரது பாரட்டுக்களையும் சேர்ப்பித்தாயிற்று. ;) இன்று காலை மாணவிகளுக்குச் சான்றிதழ்களும் கொடுக்கப் பட்டுவிட்டன. ;)

    ReplyDelete
  20. A ;) @ Priya.

    ~~~~~~~~~~

    இலா,
    //I know you dont like tamil-english.// யார் சொன்னாங்க? ;) புரியாது. அவ்வளவுதான். (தப்புத் தப்பா புரியும்.) பரவாயில்லை. ;)

    ~~~~~~~~~~

    நன்றி மேனகா. ;)

    ~~~~~~~~~~

    //போஸ்டல் டெலிவரி// ஆசியாவோட அட்ரஸ் தெரியலயே! உண்டா?

    ~~~~~~~~~~

    எல்ஸ், டிஸ்டிங்ஷன் தானே பெருசு!!
    ம். நாங்க தொப்பில்லாம் போடுறது இல்ல. ;)))
    நன்றி சந்தனா. ;)

    ~~~~~~~~~~

    தாங்ஸ் விஜி. எல்லோரையும் போலவே பிஸியும் பிஸி இல்லாமலும் இருக்கிறேன். ;)) பீஸி இல்லாட்டா பிஸி இல்லாட்டியும் வர மாட்டேன். ;)

    ReplyDelete
  21. ஓ! பப்பியும் பார்த்தாச்சா? ;) அதூ... ஹெல்மெட் பப்பி. ;)
    //வினாக்குறி// ம். ;)

    ~~~~~~~~~~

    சிவா, ? பழிவாங்கும் படலமா? ;))

    ~~~~~~~~~~

    ஜலீ... //எனக்கு உங்கள் மாணவியா வரனுமுன்னு// பாவமா இருக்கு. சோ, நோ கமண்ட்ஸ். ;)))

    ~~~~~~~~~~

    நன்றி ஸாதிகா & கவி. ;)

    ReplyDelete
  22. ஹச்சும் ஹச்... ;))
    ஐஸ் தாங்க முடியல மருமகனே. ;)
    (எனக்கு இப்ப இன்ஸ்டால்மண்ட் கட்டுற காலம்.) ;))

    ~~~~~~~~~~

    இந்தத் தடவை யாரையும் கிண்டல் பண்றது இல்லை என்கிற முடிவோட இருக்கேன். ;)

    கருத்துக்கு மிக்க நன்றி வசந்த். ;)

    ReplyDelete
  23. Looks lovely .Do drop by
    http://www.padhuskitchen.com
    when u find time

    ReplyDelete
  24. இமா... உண்மையிலேயே வெகு நாட்களுக்கு பின் வருகிறேன்... நிறைய மிஸ் பண்ணிட்டேன்னு தெரியுது :(

    வாழ்த்து அட்டைகள் ஒவ்வொன்னும் அத்தனை அழகு... செய்த குழந்தைகள் உண்மையிலேயே திறமை உள்ளவர்கள். என் பாராட்டுகளை தெரிவியுங்கள்.

    எல்லா பதிவுகளையும் பார்த்து கொண்டே இருக்கிறேன். :) - Vanitha

    ReplyDelete
  25. Padhu,

    Welcome & thanks for your compliments. ;)
    I visit your kitchen quite often. Like the way you present your dishes. All the best.

    ReplyDelete
  26. வனிதா வந்திருக்காங்க. எங்க அந்த சிவப்புக் கம்பளம்! எடுங்க. ;)

    பிஸியாக இருந்தும் வந்து பார்க்கிறீங்க. மிக்க நன்றி வனி.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா