Tuesday 16 August 2011

அழகாக இருக்கும் நீலத்தும்பி! :)

இந்த இடுகைக்கு முதலில் "பறக்க இயலாத் தும்பி" என்று தலைப்பிட்டிருந்தேன். //தலைப்பை கொஞ்சம் மாத்துங்களேன் டீச்சர்! டைட்டிலே நெகடிவ்வா இருக்கு! :- ]// என்று மகி கருத்துச் சொல்லி இருந்தார். அவர் வேண்டுகோளை ஏற்று, சொல்லப்பட்ட கருத்திலிருந்த ஒரு வரியிலிருந்து தெரிந்து இப்போது தலைப்பு வைத்திருக்கிறேன். ;)))
பிரதி திங்களும் 7ம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் homework Sheet கையில் கிடைக்கும். இப்போது homework என்பது home learning என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. 

முடிப்பதற்கு ஒரு வாரம் தவணை; மறு திங்களன்று அதிகாலை வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் இந்த வேலைக்காக இரண்டு அப்பியாசப் புத்தகங்கள் வைத்திருப்பார்கள். ஒரு புத்தகம் திருத்தத்துக்காகக் கையளிக்கப்பட்டிருக்கும் அதே வேளை அடுத்த வார வேலைகளை அடுத்த புத்தகத்தில் செய்துகொண்டிருப்பார்கள்.

கொடுக்கப்படும் வேலைகள் அனேகம் அந்தந்தக் காலத்தின் நிகழ்வுகள் தொடர்பானதாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் எட்டுக் கேள்விகள் வரை கொடுக்கப்படும். இவற்றில் தேடல்கள், ஆக்கவேலை, மனனம்செய்தல் என்று எல்லாவகை வேலைகளும் அடங்கும். 

கல்வியில் பின்தங்கிய நிலை மாணவர்களுக்கான வினாக்களும் இருக்கும்; வயதுக்குரிய அறிவுள்ளவர்களுக்கான வேலைகளும் இருக்கும்; தெரிவுப் பகுதியும் உண்டு. இறுதி வினா விசேட திறமையுள்ள மாணவர்களுக்கானது. இதைச் சிறப்பாக முடித்தால் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

எது எப்படியாயினும் - படைப்புத் திருட்டு (plagiarism) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதுபோல விபரங்களுக்கான ஆதாரங்கள் முடிந்தவரை கொடுக்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனையும் உண்டு.

சிறந்த வேலைகள் செய்திப்பலைகையில் அனைவர் பார்வைக்கும் வைக்கப்படும்.

இந்த வீட்டுக்கல்வி வேலைக்குப் புள்ளிகளும் உண்டு. தவணை இறுதியில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.  

சென்ற தவணை, இறுதி வாரத்துக்கான வீட்டுக்கல்வி பூச்சிகள் பற்றியதாகவிருந்தது. அறை எண் 16ல் ஒரு சின்னவர் செய்து வைத்திருந்த தும்பி என் கவனத்தைக் கவர்ந்தது. 

காலை இடைவேளையின் போது தும்பியை நான் பார்ப்பதற்காக மீண்டும் எடுத்ததும் கையில் ஆப்பிள், பழரசம், கிழங்குப்பொரி என்று அனுபவித்துச் சுவைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டார்கள். எல்லோரும் பாராட்டிப் பேச தும்பியின் படைப்பாளரான ஃபிஜி - இந்திய மாணவருக்கு முகம் பூரித்துப் போயிற்று. 

"புகைப்படம் எடுத்துக் கொள்ளட்டுமா?" என்று கேட்டேன்; சம்மதித்தார். கைப்பையில் துளாவ.. ;( காணோம் கருவியை. "விடுமுறை முடிந்து வந்ததும் எடுத்துக் கொள்கிறேன்," என்றேன். 

மூன்றாம் தவணை ஆரம்பித்த அன்று மதியம் வந்து நின்றார், "தும்பியைப் புகைப்படம் எடுப்பதாகச் சொன்னீர்களே!" அன்றும் கையில் புகைப்படக்கருவி இல்லை. 

இன்று எடுத்து வந்தேன்.

கடதாசியைச் சுருட்டி செல்லோட்டேப் போட்டு ஒட்டி உடலை அமைத்திருந்தார். OHPsheet பயன்படுத்தி இறகு அமைத்து அதன் மெல்லிய ரேகைகளை marker கொண்டு வரைந்திருந்தார்.  
அந்த அறையில் தன் பெயர் எழுதிய ஓர் பலகைத் துண்டினை, இப் பறக்க இயலாத் தும்பி தன் கம்பிக் கால்களால் பற்றியபடி அழகாக நிற்கிறது.

36 comments:

  1. தலைப்பை கொஞ்சம் மாத்துங்களேன் டீச்சர்! டைட்டிலே நெகடிவ்வா இருக்கு! :- ]

    க்ரியேட்டிவா செய்திருக்கார் குட்டிப்பையன்..அழகா இருக்கு நீலத்தும்பி! :)

    ReplyDelete
  2. ரொம்ப அருமை இந்த சின்ன தம்பியின் தும்பி. இந்த காலத்து பசங்களுக்கு நெறைய்ய இமாஜினஷன் உண்டு..அத ஸ்கூல் இல் உங்கள மாதிரி டீச்சேர்ஸ் நெறைய்ய என்கரேஜ் பண்ணுறாங்க Hats Off to all the teachers like you Imaa .

    சின்ன பையன் தானே ன்னு தட்டி கழிக்காமல் நீங்க போட்டோ ஞாபகமா எடுத்தீங்க பாருங்க அதுக்கும் ஒரு பாராட்டு

    ReplyDelete
  3. :)

    சொன்னதுமே மாத்தியதுக்கு நன்றி டீச்சர்! :)

    ReplyDelete
  4. :)Creative mind like teacher.
    student also.

    ReplyDelete
  5. இடுகை வெளியானதும் முதல் ஆளாக வந்து கருத்துச் சொன்னதற்கு நன்றி ராஜா. ;)

    ReplyDelete
  6. இந்த இடுகைக்கு முதலில் "பறக்க இயலாத் தும்பி" என்று தலைப்பிட்டிருந்தேன். //தலைப்பை கொஞ்சம் மாத்துங்களேன் டீச்சர்! டைட்டிலே நெகடிவ்வா இருக்கு! :- ]// என்று மகி கருத்துச் சொல்லி இருந்தார். அவர் வேண்டுகோளை ஏற்று, சொல்லப்பட்ட கருத்திலிருந்த ஒரு வரியிலிருந்து தெரிந்து இப்போது தலைப்பு வைத்திருக்கிறேன். ;)))//

    அவ்...................
    இந்த ஐடியாவும் நல்லா இருக்கே.
    நீண்ட காலத்திற்குப் பின்னர் இமா அக்காவின் ப்ளாக்கில் இன்று தான் கருத்துரை வழங்கும் பெட்டி செயற்படுகிறது.............

    ReplyDelete
  7. உண்மையில் அழகான கை வண்ணம்,
    சிறுவர்களின் வித்தியாசமான சிந்தனைக்கு ஓர் சான்றாக இப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  8. கிரீஸ்... (கெ.கி மெம்பர் என்றால் 'ஸ்' என்று முடிய வேணும் பெயர்) ;)

    //சின்ன தம்பியின் தும்பி// இதுவும் நல்ல தலைப்பாக இருக்கே!! ;)

    //இமாஜினேஷன்// முதல் இரண்டு எழுத்தும் பாருங்க கிரீஸ். அழகா இருக்குல்ல! ;))

    சின்னவங்க கூட இருந்தா நாமும் சின்னவங்களாகிருவோம். இப்ப பாருங்க... கெ.கி சேர்க்கையால எப்படி இருந்த இமா எப்படி ஆகி இருக்கேன்னு. ;))

    ReplyDelete
  9. ஷிவ்ஸ்... உங்க தங்லிஷுக்கு என்ன ஆச்சு! இந்த தடவை... 'மீ த ஃபர்ஸ்ட்டு' இல்லாம என்னமோ மாதிரி இருக்கு.

    ReplyDelete
  10. வாங்க நிரூ. _()_ ;)

    நான் ஒழிச்சு வைச்சதெல்லாம் வெளிய எடுத்து விடுறீங்கள். ;)

    //நீண்ட காலத்திற்குப் பின்னர் இமா அக்காவின் ப்ளாக்கில் இன்று தான் கருத்துரை வழங்கும் பெட்டி செயற்படுகிறது.// இல்லையே. ;) கன காலத்துக்குப் பிறகு நீங்கள் இப்பதான் பெட்டியைத் திறக்க ட்ரை பண்ணி இருக்கிறீங்கள் நிரூபன். நடுவில ஒரு மூன்று நாட்கள் நான்தான் ஒரு காரணத்துக்காக மூடி வைச்சனான். பிறகு திறந்து விட்டாச்சுது.

    என் அறுசுவைப் படைப்புகளுக்கான லிங்க் கொடுத்து இருந்தால் அந்த இடுகைகளுக்கு மட்டும் இங்க கருத்துப்பெட்டி எப்பவுமே மூடித்தான் இருக்கும். ;)

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. இமா..தும்பி அழகு,செய்த மாணவருக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  12. அருமையான திறமை

    ReplyDelete
  13. தாங்கள் ரஸித்த பறக்க இயலாத தும்பியும் பார்க்க அழகாகவே உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  14. ராதா ராணி, ஆமி.. உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா.

    அந்தச் சின்னவர் வேலை மினக்கெட்டு ரசித்துச் செய்து இருந்தார். ஒவ்வொரு பாகமும் அழகாகக் குறித்து வைத்திருந்தார். இந்தத் தும்பி... எனக்கு என் சின்னவர்கள் சின்னதாக இருக்கையில் செய்த காரியங்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்தது. :-)

    இவர்களோடு இருப்பது ஒரு ஆசீர்வாதம்.

    ReplyDelete
  16. அழ்கான ஒரு அலசல் சகோ.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  17. ஆஹா அழகாக இருக்கும் நீலத்தும்பி செய்த அச்சிறுவருக்கும் அதை பதிவிட்ட தங்களுக்கும் பாராட்டுக்கள்... இருவருக்கும் இந்த விருது மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.



    _________$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    _________$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    ___$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    _$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    $$$$______$$$$$$$$$$$$$$$$$$$$$$_______$$$$
    $$$_______$$$$$$$$$$$$$$$$$$$$$$________$$$
    $$________$$$$$$$$$$$$$$$$$$$$$$________$$$
    $$$_____$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$______$$$
    $$$____$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$____$$$$
    _$$$___$$$_$$$$$$$$$$$$$$$$$$$$_$$$____$$$
    _$$$$___$$$_$$$$$$$$$$$$$$$$$$_$$$$__$$$$
    ___$$$$__$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$_$$$$$
    ____$$$$$$$$_$$$$$$$$$$$$$$$$_$$$$$$$$$
    ______$$$$$$__$$$$$$$$$$$$$$___$$$$$$
    _______________$$$$$$$$$$$$
    _________________$$$$$$$$
    ___________________$$$$
    ___________________$$$$
    ___________________$$$$
    ___________________$$$$
    _______________$$$$$$$$$$$$
    ____________$$$$$$$$$$$$$$$$$$
    ____________$$$$$$$$$$$$$$$$$$
    ____________$$$____________$$$
    ____________$$$____໓ค໓____$$$

    ReplyDelete
  18. இங்கு அபிக்கும் இப்படியான பாடத்திட்டம் இருக்கிறது.இனி வரும் 2வாரமும் புல்வெளி,தோட்டம் வீதியோரம் என அவர் வைத்திருக்கும் லிஸ்டுக்கு தேட‌வேணும் சில பொருட்களை.ஆக்க வேலை தொடங்கிவிட்டார்.

    கைவண்ணம் மிக அழகாக இருக்கிறது.அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. தலைப்பை பார்த்தும் அவதார் படம்போலன்னு நினைச்சேன் , ஆனாலும் விவரிச்ச விதம் :-)

    ---------------- \ /
    ------------- `-.`-'.-'
    -------------- ,:--.--:.
    -------------- / | | | \
    --------------- /\ | /\
    ----------------| `.:.' |

    ReplyDelete
  20. //இப்ப பாருங்க... கெ.கி சேர்க்கையால எப்படி இருந்த இமா எப்படி ஆகி இருக்கேன்னு. ;)) //

    ஹா..ஹா.. :-)X4598

    ReplyDelete
  21. ஆஆஆஆ.... அம்பி..அம்பீ... சே..சே.. தும்பி:)).

    மகிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), அதிரா வரட்டும் அதுக்குப் பொறகூஊஊ தலைப்பை மாத்த்டலாம் எனச் சொல்லாமல் முந்திட்டா:(.

    மகி சொன்னா மட்டும்தான் தலைப்பு மாத்துவீங்களா றீச்சர்?... அதிரா சொன்னா மாத்தமாட்டீங்களோ அவ்வ்வ்வ்வ்?:)......அப்பூடியெண்டெண்டெல்லாம் கேட்டு அடம்பிடிக்க மாட்டேன் ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு, சிக்ஸ்:) வயசிலிருந்தே:)).

    ReplyDelete
  22. அவ்வ்வ்வ்வ்வ் எல்லோரும் இங்கதான் இருக்கினம்... ஜெய் என்னாது.. மீசை மாதிரித் தெரியுதே முகத்தில அவ்வ்வ்வ்வ்:)).

    மாயாஆஆஆஆஆ.. இந்தக் கப்பில கீழ என்ன எழுதியிருக்கு?.. ஏதும் திட்டுறீங்களோ எனக் கேட்டேன் சும்மா...ம்மா..ம்மா.... எக்கோ:)) ஒரு டவுட்ட்:)

    ReplyDelete
  23. தம்பி செய்த அழகுத் தும்பி நம்பி நவில்கிறேன் தங்கக்கம்பி.

    ReplyDelete
  24. //ஜெய் என்னாது.. மீசை மாதிரித் தெரியுதே முகத்தில// ;)) கிக் கிக்
    அதூ... பூஸ் தண்ணிக்குள்ள தலைகீழா சிரசாசனம்... அப்பவும் அரைக்கண் திறந்து பார்க்குது. ;)) மருமகனே!! அசத்திட்டீங்க. ;))

    நாளைக்கு ஸ்கூல்ல ஒரு முக்கியமான நாள். இப்ப கனக்க சமைக்க இருக்கு. நாளை இரவு வந்து எல்லாருக்கும் பதில் போடுறன்.

    லீவுல போற ஆட்களுக்கு வாழ்த்துக்கள். சந்தோஷமா இருக்கட்டும் விடுமுறை.

    ReplyDelete
  25. ஆஹா.. சூப்ப‌ரு..

    என‌க்கு பிடிச்ச‌ க‌ல‌ர்'ல‌ ஃப‌ட்ட‌ர்ஃபிளை த‌ம்பி?! தும்பியா.. குட்.. :)

    ReplyDelete
  26. இமா! தும்பியைச் செய்த அந்த சிறுவனை விட, அதை ரசித்து, புகைப்படமும் எடுத்து பாராட்டும் உங்களின் ரசனையான, அன்பான மனதைத்தான் பாராட்டத் தோன்றுகிறது எனக்கு!

    ReplyDelete
  27. நன்றி அயுப். ;) கமண்ட் அழகா இருக்கு. படம்தான்.. ;)) 'க்றீஸ் மனிதன்' மாதிரி இருக்கு. ;)

    ~~~~~~~~~~~~~~~~

    விருது கொடுத்தால் யாராவது மறுப்பாங்களா ராஜேஷ். நன்றி. நன்றி. இந்தக் கிண்ணத்தை அங்க கொண்டு போய் வைச்சுரட்டா?

    ReplyDelete
  28. அபிக்கு வேலை முடிஞ்சுதோ ப்ரியா? நீங்கள் பிசியாக இருந்தும் வந்து இருக்கிறீங்கள். சந்தோஷம். ;)

    ~~~~~~~~~~~~~~

    தாங்ஸ் ஜெய். இப்ப இன்னும் சத்தமா சொல்லுவேன்... //இப்ப பாருங்க... கெ.கி சேர்க்கையால எப்படி இருந்த இமா எப்படி ஆகி இருக்கேன்னு...// ;)) சும்மா சிரிக்கப்படாது. தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்.

    ReplyDelete
  29. //அப்பூடியெண்டெண்டெல்லாம் கேட்டு அடம்பிடிக்க மாட்டேன் ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு,// ம். தெரியும் அதீஸ். அ.கோ.மு மட்டும்தான் கேட்டு அடம் பிடிப்பீங்கள்.

    ~~~~~~~~~~~~~~~

    தம்பி, தும்பி, நம்பி, கம்பி.. கலக்கிட்டீங்க ஸாதிகா. ;) தாங்ஸ் ஸாதிகா.

    ReplyDelete
  30. இர்ஷாத்... இப்போதான் தெரியும் எனக்கு, இதான் ஃப‌ட்ட‌ர்ஃபிளை த‌ம்பி?! தும்பியா.. குட்.. :)))

    ReplyDelete
  31. நீங்கள் வந்தது சந்தோஷம் மனோ அக்கா. மிக்க நன்றி.

    தாங்ஸ் வசந்த். ;)

    ReplyDelete
  32. தும்பி அழகு.

    அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  33. நிச்சயம் சொல்றேன் தேன். வருகைக்கு நன்றி. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா