Tuesday, 30 August 2011

காத்திருப்பு!


இந்த ரெஸ்டோரண்ட்லதான் லஞ்ச் எண்டு சொன்னவர்.

இன்னும் ஆளைக் காணேல்ல. ;(

இங்க நல்ல காத்தா இருக்கு. சுகமாக் கொஞ்ச நேரம் இருப்பம்.

எவ்வளவு நேரம்தான் நான் காத்து இருக்கிறது!!! ;(
எங்க சைட் அடிச்சுக் கொண்டு இருக்கிறாரோ தெரியேல்ல. ;((
போய்த் தேடிக் கொண்டு வாறன்; பொறுங்கோ.

எங்க ஆளைக் காணேல்ல!! இங்கதானே இருக்கிறதெண்டு சொன்னவா!!

எங்க!!!

ஒரு வேளை!!!!! அங்கிள்தான் உரிச்சு வச்சுப் போட்டு சமைக்க குறிப்பு தேடுறாரோ!!!

பார்க்கிற பார்வையைப் பார்த்தால்... வண்டியையும் பார்த்தால்... என்னையும் பிடிச்சு ரோஸ்ட் பண்ணீருவார் போல கிடக்கு!

என்ன செய்யிறது நான் இப்ப!!!

இதென்ன!! உள்ள அவனில லைட் பத்துது. 
ஒரு வேளை!!!!
கடவுளே!!
அப்பிடி ஒண்டும் ஆகி இருக்கப்படாது. ;((

கொக்! கொக்!
எங்க எல்லாம் தேடுறது உங்கள!!
நீங்களும் உங்கட லஞ்சும். கொக்!
ஒண்டும் வேணாம்.
அந்த அங்கிளுக்குத் தெரியாம ஃபாம்ல போய்....

அங்க ஃபாமர் தாற மாஷையே சாப்பிடுவம் வாங்க.

இது பறவையூர்ல இருக்கிற பஸ் ஸ்டொப். ;)

47 comments:

  1. ஹா...ஹா... ஹா.. இமா சூப்பர் படத்துக்கேற்ற ஹப்சன்.... சிரித்துச் சிரித்துப் படித்தேன்:)). எப்பூடி இப்பூடிக் கிடைச்சுது படமெடுக்க.

    ReplyDelete
  2. //பார்க்கிற பார்வையைப் பார்த்தால்... வண்டியையும் பார்த்தால்... என்னையும் பிடிச்சு ரோஸ்ட் பண்ணீருவார் போல கிடக்கு! //

    ஹா..ஹா..ஹா... இது கிரிஸ் அங்கிளுக்குத் தெரியுமோ? ஓடிவாங்க இமா.. ஓடிவந்து கட்டிலுக்குக் கீழ ஒளியுங்க, ரெண்டு நாள்ல அவர் மறந்திடுவார், பிறகு போகலாம்:)).

    ReplyDelete
  3. பறவையூரா? அது எங்க இருக்கு?..

    எங்கட எதிர்ப்பாலார்தான் இப்பூடித் திட்டு வாங்கீனம் என்றால்... சேவலாருமோ? அவ்வ்வ்வ்வ்வ்:))))

    ReplyDelete
  4. இந்த போஸ்ட் மேல வரேல்லையே. நீங்க எப்பவும் போஸ்ட் பண்ணியவுடன், என் பக்கம் வந்து செக் பண்ணுங்க, தலைப்பு மேலே வந்திருக்கா என, வரவில்லையாயின், அப்படியே கொப்பி பண்ணி நியூ போஸ்ட்டில பேஸ்ட் பண்ணி, மீண்டும் போஸ்ட் பண்ணுங்க.. மேலே வந்திடும்.

    எப்பூடி என் கிட்னியா?:)). ஆனா பின்னூட்டம் வந்தபின் செய்ய முடியாது, அதனால உடனேயே செய்திடுங்க இனிமேல்.

    ReplyDelete
  5. //அப்படியே கொப்பி பண்ணி நியூ போஸ்ட்டில பேஸ்ட் பண்ணி, மீண்டும் போஸ்ட் பண்ணுங்க.// ஹும்!!! அதெல்லாம் ட்ரை பண்ணியாச்சு; என் உலகுக்கு சரிவரேல்ல. அதுதான் அதிராவுக்கு அழைப்பு வச்சு..

    ஒரு ட்ரிப்ல எடுத்தது. போட்டுக் குடுத்துராதைங்கோ ப்ளீஸ். ;))

    ReplyDelete
  6. ஸ்ஸ்ஸ்ஸ் போட்டுக் குடுக்க மாட்டன்... ஆனாக் காட்டிக் குடுத்திடுவனே... கொஞ்ச நாளைக்கு ஸ்கூலுக்கு நடந்தே போய்வரப்போறீங்க....:)).. கிரிஸ் அங்கிள் பார்த்தால் இதை, காரில எப்பூடி ஏத்திப்போய் விடுவார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    நான் ஆருக்கும் ஐடியாக் குடுக்கேல்லை:)).... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6....:)).

    ReplyDelete
  7. எவ்வளவு நேரம்தான் நான் காத்து இருக்கிறது!!! ;(
    எங்க சைட் அடிச்சுக் கொண்டு இருக்கிறாரோ தெரியேல்ல. ;((
    போய்த் தேடிக் கொண்டு வாறன்; பொறுங்கோ.//

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதய்யா...என பாடுதோ தோ வந்துட்டேன் ஹி ஹி ஹி

    ReplyDelete
  8. என்ன செய்யிறது நான் இப்ப!!!//

    ஒண்ணும் செய்ய வேணாம்...என் சமையல் கி. கிட்ட போ அங்க போனா எனக்கு வெஜிடபிள் பிரியாணியிலருந்து விடுதலை கிடைக்கும் அவ்வ்வ்வ்

    ReplyDelete
  9. கொக்! கொக்!
    எங்க எல்லாம் தேடுறது உங்கள!!
    நீங்களும் உங்கட லஞ்சும். கொக்!
    ஒண்டும் வேணாம்.//

    இப்படி கோவிச்சுக்கிட்டா எப்படி... காசு வேற கொண்டு வரல... ஏதோ உங்காசுக்கு ஃபுல் கட்டு கட்டிட்டு போலாம்னு வந்தா, பாதியிலயே எஸ்ஸான எப்படி.... ம்ம்ம்ம் ஏழைக்கேத்த எள்ளுருண்டை...வா கேழ்வரக பொருக்கி திண்ணலாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. athira said...
    பறவையூரா? அது எங்க இருக்கு?..//

    பறவையூரா...ம்ம்ம் தூத்துக்குடி பக்கத்துல இருக்கு நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு....அவ்வ்வ்வ்

    ReplyDelete
  11. இங்க நல்ல காத்தா இருக்கு. சுகமாக் கொஞ்ச நேரம் இருப்பம்.//

    காத்து வாங்க போனேன் நல்ல பதிவிற்க்கு படத்தை குடுத்து சென்றேன்...

    ReplyDelete
  12. அங்க ஃபாமர் தாற மாஷையே சாப்பிடுவம் வாங்க.//

    ஆஹா இப்ப தெரியுது காத்து எதுக்கு வாங்க போனாங்கன்னு வாத்து பாக்க தானா அவ்வ்வ்வ்

    ReplyDelete
  13. athira said...

    ஹா..ஹா..ஹா... இது கிரிஸ் அங்கிளுக்குத் தெரியுமோ? ஓடிவாங்க இமா.. ஓடிவந்து கட்டிலுக்குக் கீழ ஒளியுங்க, ரெண்டு நாள்ல அவர் மறந்திடுவார், பிறகு போகலாம்:)).//

    ஏன் கிரிஸ் அங்கிளுக்குத்தெரியாது... அவரு எங்கிட்ட வந்து மாயா எங்க ஆள காணோம்னு கேட்டாரே.... நான் தான் காத்து வாங்க போயிருக்காங்கன்னு சொல்லியிருக்கேன்..ஹி ஹி ஹி

    ReplyDelete
  14. athira said...
    ஸ்ஸ்ஸ்ஸ் போட்டுக் குடுக்க மாட்டன்... ஆனாக் காட்டிக் குடுத்திடுவனே..//

    ஆஹா உசாரா இருங்கோ... எட்டப்பன் பக்கத்துல தான் இருக்காங்கோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. athira said...

    எப்பூடி என் கிட்னியா?:)). ஆனா பின்னூட்டம் வந்தபின் செய்ய முடியாது, அதனால உடனேயே செய்திடுங்க இனிமேல்.//

    பின்னூட்டம் தான் போட்டுட்டீங்களே அப்பறம் என்ன வந்த பின் செய்ய முடியாது அவ்வ்வ்வ்வ்வ்வ் ... கிட்னி உண்மையிலயே பயங்கரமா வேளை செய்யுது

    ReplyDelete
  16. படங்கள் எல்லாமே சூப்பர் இமா .உங்க வீட்டு கோழி அழகா போட்டோ எடுக்க போஸ் கொடுக்குது .எங்க வீட்டு கோழி கேமராவ டார்கிட் பண்ணி கொத்த வந்திச்சு என்னால் ஒரு படம் கூட எடுக்க முடியல .அது சரி அந்த கோழி போட்ட முட்டை எங்கே எங்கே எங்கே !!!!!

    ReplyDelete
  17. angelin said...
    படங்கள் எல்லாமே சூப்பர் இமா .உங்க வீட்டு கோழி அழகா போட்டோ எடுக்க போஸ் கொடுக்குது .எங்க வீட்டு கோழி கேமராவ டார்கிட் பண்ணி கொத்த வந்திச்சு என்னால் ஒரு படம் கூட எடுக்க முடியல .அது சரி அந்த கோழி போட்ட முட்டை எங்கே எங்கே எங்கே !!!!!//

    ஆஹா எனக்கு போட்டியா நம்ம தோழி வந்துட்டாஹ ... முட்டையை எடுத்துட்டு ஓடிரு ராஜேஸேஏஏஏஏஏஏ...... முட்டைய புடுங்க யாரோ வாராஹ,... இன்னும் வேகமா ஓடு..அப்பாடா ஆரையும் காணோம்... முட்டைய உடைச்சு வாயில ஊத்திக்கடா கிளிப்பிள்ளை... அது யாரு இடையில வாய கொண்டு வாரது...ஆஹா இங்கேயுமா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  18. அருமை அருமை
    ஒரு ஷார்ட் ஃப்லிம் பார்த்த நிறைவு
    மிக அழகாகச் செய்திருக்கிறீர்கள்
    வசனங்கள் அற்புதம்
    வீட்டில் அனைவரும் ஒன்றாக வெகு நேரம்
    பார்த்து ரசித்தோம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அட அட கோழியும் சேவலும் ஒரு காதல் கதை
    அல்கஇருக்கு

    ReplyDelete
  20. அப்போ அப்போ ஒரு வசனம் பேசுதே கோழி
    நச்னு இருக்கு வசனகர்த்தா யாரோ

    ReplyDelete
  21. சிரித்துச் சிரித்துப் படித்தேன்:)). nananum

    ReplyDelete
  22. அழகழகான படங்கள். அற்புதமான கற்பனையுடன் ஒரு சிறுகதை. நல்லவேளையாக கடைசியில் கோழியும் சேவலும் ஜோடியாக சேர்ந்து போய் விட்டதில் மகிழ்ச்சி. vgk

    ReplyDelete
  23. அழகிய படங்களுடன் ஒரு அழகான ஒரு கதை வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  24. .அது சரி அந்த கோழி போட்ட முட்டை எங்கே எங்கே எங்கே !!! athu athu vanthu omlet pottu saptachu...

    ReplyDelete
  25. MAN 1:Unga friend address
    solunga?
    MAN 2: Andha Erumbu pora
    pakkam ponga.
    MAN 1:What?
    MAN 2: Yes , My friend
    is
    So Sweeeeeeeet..!

    ReplyDelete
  26. ஒரு உயிரின் மதிப்பு அது உயிரோட இருக்கும் போது தெரியாது , அது இறந்த பின் தான் தெரியும்

    உயிருடன் கோழி விலை ரூ 80
    உரிச்ச கோழியின் விலை ரூ 120

    ReplyDelete
  27. அழகிய விளக்கப் படங்களோடு கூடிய நகைச் சுவை அருமை சகோ ...வாழ்த்துகள் .நன்றி பகிர்வுக்கு....

    ReplyDelete
  28. ஹா ஹாஹா! இமா, படத்துக்கு ஏற்ற அருமையான விளக்கம்.எப்பிடிதான் இப்பிடியெல்லாம் ஐடியா வருதோ!

    ReplyDelete
  29. படங்களும் விளக்கமும் சூப்பர் இமா

    ReplyDelete
  30. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
  31. mikavum rasiththu siriththeen imaa akkaa

    ReplyDelete
  32. //http://samaiyalattakaasam.blogspot.com/2011/09/blog-post.html//


    இமா அக்கா பிஸியோ சீக்கிரம் வாங்க பிரியானி ஆறிட போகுது, இந்த பூஸார் வேறு பிளேட் பிளேட் டா உள்ளே தள்ளுகிறார்

    ReplyDelete
  33. சேவல் காத்திருப்பு அதுக்கு வசனமும் ஜூப்பரப்பு

    ReplyDelete
  34. http://imaasworld.blogspot.com/2010/05/blog-post_28.html

    இது பழை..ய கதை; புதிதாக வந்திருக்கிறவர்கள் விரும்பினால் படிச்சுப் பாருங்கோ. ;)

    ReplyDelete
  35. அதிராவை விட ராஜேஷ் மோசம்... சிரிப்புக் காட்டுறதுல. ;)) நான் கரச்சல் படாம படங்களை மட்டும் போட்டு விட்டு கதைவசனம் எழுத ராஜேஷைக் கூப்பிட்டிருக்கலாம் போல.

    //ஏழைக்கேத்த எள்ளுருண்டை...வா கேழ்வரக பொறுக்கி தின்னலாம் // ;))

    //வாத்து பாக்க// மேல ஒரு லிங்க் போட்டு இருக்கிறன் பாருங்க.

    //மாயா எங்க ஆள காணோம்னு கேட்டாரே.... நான் தான் காத்து வாங்க போயிருக்காங்கன்னு.../ கடவுளே!!! ;))))))

    //முட்டைய புடுங்க யாரோ வாராஹ,... இன்னும் வேகமா ஓடு..அப்பாடா ஆரையும் காணோம்... முட்டைய உடைச்சு வாயில ஊத்திக்கடா கிளிப்பிள்ளை... அது யாரு இடையில வாய கொண்டு வாரது...ஆஹா// நானும் கண்ணை மூடிட்டு சீனை இமாஜின் பண்ணிப் பார்த்தேன். ஹக்! ;))))))))))

    ReplyDelete
  36. அது எ//ங்க வீட்டு கோழி// இல்லை ஏஞ்சல். ஒரு 'லில்லி பாண்ட்' பார்க்கப் போனோம். அங்க இந்த ஒரு ஜோடி உலாவிட்டு இருந்தாங்க. ;)

    ReplyDelete
  37. ரமணி சார் இப்புடி காலை வாரப்படாது. ;)))

    இமாவை பப்பா மரத்துல ஏத்தி விட்டீங்க... பிறகு கொடுமை தாங்க மாட்டீங்க. பெரியவங்க எல்லாம் வரீங்க என்று நான் ரொம்..ப சிரமப்பட்டு அடக்கி வாசிச்சுட்டு இருக்கேன். ;)

    உங்கள் குடும்பத்தார்க்கும் பிடித்திருந்தது பற்றி சந்தோஷம். :) அங்கங்கே இன்னும் ஒன்றிரண்டு இப்படி இருக்கும். ஒரு தாராக் கதையும் ஒரு பூனைக் கதையும் இருக்கிறது. பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பாராட்டுக்கு நன்றி. :)

    ReplyDelete
  38. ஷிவ்ஸ்... அது.. ரெண்டுக்கும் அலகு இருக்குல்ல! அதான் அல்கா இருக்கு போல. ;) சிவாவும் அந்தப் படங்கள்ல அல்கா இருக்கீங்க, எப்புடி!!

    //வசனகர்த்தா// வேற யாரு! கோழியும் சேவலும்தான். ;))

    ReplyDelete
  39. vgk ஐயா, :) இமா கொஞ்சம் குழப்படி. சாரி. பொறுத்துக்கணும். ஸ்கூல்லயும் குட்டீஸ். இங்கயும் என் உலகுக்கு வரது அதிகம் குட்டீஸ்தான். எப்புடி நினைச்சாலும் என்னால சீரியசா இருக்க முடியல. ;)

    //நல்லவேளையாக கடைசியில் கோழியும் சேவலும் ஜோடியாக சேர்ந்து போய் விட்டதில் மகிழ்ச்சி.// ம்.. அது சேஃபா போயிரும். இமா சாப்பிட மாட்டேன்ல. இன்னொரு போஸ்ட்டுக்கு ஐடியா கொடுத்துட்டீங்க. தாங்ஸ். ;)

    ReplyDelete
  40. நன்றி அயுப், அம்பாளடியாள், ராதா ராணி, தேன் & ஜலீஸ்.

    ஸாதிகா & சித்ரா, ஃபோட்டோல சூப்பரா விழுந்திருக்கு ஸ்மைல். ;)

    ReplyDelete
  41. ஜெய் ஜோக் சுப்பர். ;)

    //ஒரு உயிரின் மதிப்பு அது உயிரோட இருக்கும் போது தெரியாது , அது இறந்த பின் தான் தெரியும் // ஒரு உறுப்பின் மதிப்பும்தான். சம்பந்தமில்லாம சொல்லல. 'எல்' போர்ட் மாதிரி திங்க் பண்றேன். ;)

    ReplyDelete
  42. தேன்.... உங்க விலாசம் ஜெய்லானி கொடுத்துட்டாங்க. வரேன் இதோ. ;)

    ReplyDelete
  43. கமல் : மறக்க மன்ம் கூடுதில்லையேஏஏஏஏஏ
    ரேவதி : மறந்துறுவென்னு சொன்னியலே..

    http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

    ReplyDelete
  44. ஹையோ!!!!!!!!!!!

    சாரி.. சாரி.. சாரி... ;(((((((
    நல்லாவே நினைப்பு இருக்கு. எப்பிடி மிஸ் ஆச்சுன்னு தெரியல. ;(

    இன்னும் இருக்கணும் மிஸ் ஆனது. ;( நைசா இந்தப் பதிலை டிலீட் ஆக்கிட்டு எஸ்ஸாகிரப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன். ;) சுட்டிக்காட்டினதுக்கு நன்றி மருமகனே.

    இருந்தாலும்.. இப்புடிப் பண்ணிட்டேன். ;((

    ReplyDelete
  45. உங்க படக்கதை சூப்பர். நினைத்து நினைத்துச் சிரிக்கிறேன்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா