Sunday, 1 April 2012

கத்தரிக்கா... குண்டு கத்தரிக்கா!!

ஒருமுறை கடையில் குட்டிக் கத்தரிக்காய்களைப் பார்த்ததும் Mahi's Kitchen இல் இருந்த வாயூற வைத்த ஸ்டஃப்ட்கத்தரிக்காய் குறிப்பு நினைவுக்கு வரவும் ஆறு காய்கள் வாங்கி வந்தேன்.

கணக்கு எல்லாம் சரிதான். குட்டி மிளகாய்களாகத் தெரிந்து கொண்டேன். எண்ணெய்... மேசைக்கரண்டிக்குப் பதில் தேக்கரண்டிதான். மகி குறிப்பில் இருந்தது போல் அல்லாமல் கொஞ்சம் உலர்வாக வந்தது.
(படத்தைப் பார்த்து விட்டு மகி கருத்துச் சொல்வார்களாம்; இமா திருத்திக் கொள்வேனாம். ) ;)
பிரியாணி எல்லாம் கிடையாது, சூடாக தனியே தட்டில் வைத்து கரண்டியால் சாப்பிட்டாயிற்று. யமி ;P நானே 3 காய் சாப்பிட்டேன். சின்னவர் இரண்டு... மற்றவர் ஒன்று.

காலநிலை மாற ஆரம்பித்து விட்டது. தோட்டத்தில் குண்டுகுண்டாகக் காய்த்த கத்தரியில் காய்கள் சிறுக்க ஆரம்பித்து விட்டன.

அந்தக் குறிப்பில் மகி சொன்னபடி எல்லாம் பொடிசெய்து தயாராக வைத்திருக்கிறேன். ஏதாவது கொறிக்க வேண்டும் என்று தோன்றும் போது... செடியில் ஒரு காயைப் பிடுங்கி.... 
யமி.. ;P

குறிப்புக்கு நன்றி மகி. ;)

26 comments:

  1. ி ;P நானே 3 காய் சாப்பிட்டேன். சின்னவர் இரண்டு... மற்றவர் ஒன்று// appo Chris annachikku nothing. Pavam.

    ReplyDelete
    Replies
    1. முதல் வேணாம் எண்டு சொல்லியாச்சு வான்ஸ். புதுசா சமையல் எண்டால் ட்ரை பண்ண விருப்பம் இல்லயாம். பிறகு... இதுக்கு இருந்த டிமாண்ட் அடுத்த செட்ல சாப்பிட வைச்சுது.

      Delete
  2. கத்திரிக்காய் பதிவு அருமை.
    50% சாப்பிட்ட இமாவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மெயின் டிஷ்ஷே இல்லாமல் சைட் டிஷ் சாப்பிட்டு இமா அரிப்பை வழவழைத்துக்கொள்ளப்போகிறார். :)பார்த்து இமா..:)

      Delete
    2. //பார்த்து இமா// ம். புதன், வெள்ளி,சனி மட்டும்தான் சாப்பிடுகிறேன் ஸாதிகா. வருகைக்கு நன்றி.

      Delete
  3. Wow...brinjals look yummy! :P how did I miss this post? Anyhow, could not read the post fully..will come in a while imma...

    ReplyDelete
  4. /படத்தைப் பார்த்து விட்டு மகி கருத்துச் சொல்வார்களாம்; இமா திருத்திக் கொள்வேனாம். ) ;)/ ஏன் இந்தக் கொலவெறி? நான் என்ன கருத்துச் சொல்ல?? கத்தரிக்காயை அப்படியே எடுத்துச் சாப்பிடலாம் போலதான் இருக்குதுங்க றீச்சர்!

    கத்தரிப்பூ எல்லாம் வைச்சு கலக்கறீங்க..BTW, ஏன் ஒரு பூவைப் பறிச்சீங்க? ஒரு காய் குறையுமில்ல? கர்ர்ர்ர்ர்ர்!

    பிறகு,எனக்கு தோட்டத்துக்கு அட்வைஸ் பண்ணின மனுசி சொன்னவர் கத்தரி காய்க்காது என்று. உங்கட வீட்டு கத்தரி செடியைப் பார்க்க ஆசையாய் இருக்கு! ;)

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கிளையில் அதிக பூக்கள் இருந்தன. ஒன்றைப் பறித்தால் மீதி பெரிதாகும் என்று நினைத்தேன்.

      //கத்தரி காய்க்காது// ம். காய்க்காதுதான். மிளகாய்க் கூட்டுல கத்தரி பூத்துவிடும். மிளகாய் அம்மா அடைகாத்து கத்தரிக்காய் வரும். ;D

      பழைய ரீசைக்கிள் பின்-லதான் நட்டு இருக்காங்க க்றிஸ். வியாபாரம் பண்ணலாம் போல காய்க்குது மகி. இப்ப பிஞ்சு எண்ணிக்கை அதிகமா இருக்கிறதாலயும் சீசன் மாறுதலாலயும் அளவு சிறுத்து இருக்கு. காய்க்க ஆரம்பித்த புதிதில் 1 காய் சமையலுக்கு அதிகம்.

      //கத்தரி செடியைப் பார்க்க ஆசையாய் இருக்கு!// வைக்கிறதுதானே! இனி அந்த மனுஷி பேச்சைக் கேட்காம நட்டுருங்க.

      Delete
  5. நல்ல ரெசிபி.ட்ரை பண்ணும்

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு _()_

      நித்தூஸ் கிச்சன்ல இருந்து.. மகீஸ் கிச்சன்ல நிழைஞ்சு இமாவின் உலகுக்கு அறிமுகமான ரெசிபி, சும்மா இல்ல. சூப்பரா இருக்கும் ட்ரை பண்ணுங்க சௌம்யா.

      Delete
  6. mee first..where is my brinjal?

    ReplyDelete
    Replies
    1. குழலினிது, யாழினிது, சிவா பேசும் மழலைத் தமிழ் அதனிலும் இனிது.

      Delete
  7. அதிக எண்ணெய் உள்ள மகியோட ரெசிப்பியும், எண்ணெய் குறைவான இமாவின் ரெசிப்பியும்,ரெண்டுமே சூப்பர்!சுவையும் நன்றாகத்தான் இருக்கும்..செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ராதாராணி. ;)
      மகி குறிப்புல எண்ணெய் அதிகமா இருக்கலைங்க, அதுதான் அளவு என்று நினைக்கிறேன். இமா வீட்ல குறைவாத்தான் சேர்ப்போம். ;)

      Delete
  8. டீச்சர் stuffed கத்தரி கலக்கிட்டீங்க. பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு. தயிர் சாதத்துக்கு சூப்பர் காம்பினஷன் போல இருக்கு?

    ReplyDelete
  9. //மகி குறிப்பில் இருந்தது போல் அல்லாமல் கொஞ்சம் உலர்வாக வந்தது// பொதுவாவே இந்த மாதிரி டிஷ் உக்கு எண்ணெய் கொஞ்சம் அதிகமா சேர்த்தா சூப்பர் ஆ இருக்கும். நீங்க கம்மியா சேர்த்ததால உலர்வா வைத்திருக்கும் ஆனா பார்த்தா ரொம்ப சுவையா இருக்கும் போல இருக்கு.

    ReplyDelete
  10. வீட்டுலையே கத்தரி காய்க்குதா உங்க வீட்டுல. ஆசையா இருக்கு ஆனா எங்கே இந்த வருஷம் ஊரெல்லாம் daffodil அழகா பூத்து இருக்கு எங்க வீட்டுல மட்டும் பூக்கவே மாட்டேங்குது ஹும்ம்ம்

    ReplyDelete
  11. //நான் என்ன கருத்துச் சொல்ல?? //

    நீங்க கருத்து சொல்ல ரெம்ப கூச்சபட்டதால :)) நானே மு.கொ. தனமா டிப்ஸ் வாரி வழங்கிட்டேன் மகி. டீச்சர் திங்கிங் நான் உன்கிட்டே எல்லாம் கேக்கவே இல்லையேன்னு :))

    ReplyDelete
    Replies
    1. //தயிர் சாதத்துக்கு// சொல்லிட்டீங்கல்ல, சாப்பிட்டுருறேன். ;)

      //daffodil// ம்... எங்க வைச்சு இருக்கீங்க? தெரிஞ்சா ஏதாச்சும் யோசனை சொல்வேன்.

      //டீச்சர் திங்கிங்// ;)) நோ திங்கிங். ;) எப்பொழுதுமே நல்வரவு. ;)

      //வீட்டுலையே கத்தரி காய்க்குதா உங்க வீட்டுல// இல்லையே! தொட்டிலதான் காய்க்குது. ;)

      //ஆனா பார்த்தா ரொம்ப சுவையா இருக்கும்// அப்போ... சாப்பிடாம பார்த்துட்டே இருக்கணுமோ! மகியும் சொல்லல; நித்துவும் சொல்லல. பா...ட் பீபிள். ;(

      (ஹும்! நல்ல பொண்ணா, அமைதியா இருக்கணும்னு நினைச்சாலும் விடமாட்டேங்கறாங்களே!) ;))))))))

      Delete
  12. தோட்டத்தில் விளைந்த கத்திரியா,ரொம்ப டேஸ்டாவே இருக்கும்,படத்தை பார்க்கும்போது நாவூறுது.

    ReplyDelete
  13. //ஹும்! நல்ல பொண்ணா, அமைதியா இருக்கணும்னு நினைச்சாலும் விடமாட்டேங்கறாங்களே!) ;))))

    நீங்களே நல்ல:)) பொண்ணு ன்னா நாங்க எல்லாம் ????? ஏன்னா நாங்க எல்லாம் உங்கள தான் பொல்லொவ் பண்ணுறோம்:))


    ////daffodil// ம்... எங்க வைச்சு இருக்கீங்க? தெரிஞ்சா ஏதாச்சும் யோசனை சொல்வேன்.//

    தோட்டத்துல தான் வெச்சு இருக்கேன். போன வருஷம் பூ பூத்திச்சு இந்த வருஷம் ஊருக்கு முன்னாடி டிசெம்பர் ல செடி வந்திருச்சு ஆனா பூ தான் பூக்கவே இல்லே!!


    //எப்பொழுதுமே நல்வரவு. ;)// நல்லா ஒண்ணுக்கு ரெண்டு தடவ யோசிச்சு தானே சொல்லுறீங்க ????


    ////வீட்டுலையே கத்தரி காய்க்குதா உங்க வீட்டுல// இல்லையே! தொட்டிலதான் காய்க்குது. ;)// ஆகா இமா பேக் டு form :)) இத இத தான் மிஸ் பண்ணினோம். ஜமாயுங்கோ.

    //மகியும் சொல்லல; நித்துவும் சொல்லல. பா...ட் பீபிள். ;(// ஐயோ நான் எதுவும் சொல்லலே. மஞ்சள் பூவு அப்புறம் எனக்கு டுடோரியல் எடுக்க மாட்டாங்க:))

    ReplyDelete
    Replies
    1. //தோட்டத்துல தான் வெச்சு இருக்கேன்.// ரொம்பவே டீ..டெய்லா பதில் சொல்லிருக்கீங்க. ;)

      //ரெண்டு தடவ யோசிச்சு// ஆமா, ஆமா, ஆமா. ;)))

      //இமா பேக் டு form...// !! எதுவுமே பேக் பண்ணல இன்னும். சனிக்கிழமைதான் யோசிப்பேன் எதை form பண்றது என்று.

      //டுடோரியல்// நிறைய மிஸ் பண்ணி இருக்கோம் போல இருக்கு இமா. ;((

      Delete
  14. வீட்டு தோட்டத்துல காய் செடிகள் வைத்து, காய் காய்த்து பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி தான் இமா. உங்க வீட்டு தோட்டத்து கத்திரிக்காய் சூப்பர். நீங்க செய்து இருக்க கத்திரிக்காயும் சூப்பர்.

    ReplyDelete
  15. யம்! செய்து சாப்பிடணும் போல இருக்கே !

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா