Thursday 19 April 2012

பழிக்குப் பழி, நட்புக்கு நட்பு

கடந்த இரு மாதங்களுக்குள் வீட்டில் பல மாற்றங்கள்; திடுக்கிடும் திருப்பங்கள். தினமும் ஏதாவது எதிர்பாராத செய்தி வரும். கவலைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், பிரார்த்தனைகள், காத்திருப்புகள், பின் பிரார்த்தனைக்கான பலன்கள்... எதுவானாலும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் என் பாட்டில் இருக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இப்போ உள்ள ஒரே சிரமம், தனிமை முன்னறிவித்தலில்லாமல் வருகிறது. அதற்கொரு 'ஷிஃப்ட்' போட்டுக் கொடுத்து தப்பான சமயம் வந்தால் சம்பளமில்லை என்று அறிவிக்கப் போகிறேன். ;)

தனிமையைப் பயன்படுத்தி ஒரு பழிவாங்கும் முயற்சி மேற்கொண்டேன். அதைப் பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை. ;) எல்லோர் குறிப்பையும் முயன்று பின்னூட்டப் பதிவு கொடுக்கையில் என் சமையலை மட்டும் முயலாமல் தவிர்த்த மகியின் சமையலறையிலிருந்து இன்று முயன்றது.... முட்டை குர்ர்ர்ர்மா ;)

தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-2 (தானாக முளைத்த செடியில் விளைந்திருந்தது.)
முட்டை-3
பச்சைமிளகாய்- 3(அ)4 (இதுவும் தோட்டத்துச் செடியில் இருந்தது.)
பூண்டு-4 பற்கள்
கொத்துமல்லி இலை-சிறிது (இலை இல்லை, பதிலாக தோட்டத்து பார்ஸ்லி இலை)
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்

கரம் மசாலா-1டீஸ்பூன் (இல்லை, பதிலாக சக்தி ஃபிஷ் ஃப்ரை மசாலா)
உப்பு

அரைக்க
தேங்காய் - 3டேபிள்ஸ்பூன் (குளிர்சாதனப் பெட்டியில் தயாராக இருந்தது "நளன் ப்ராண்ட்" அரைத்த தேங்காய்ப்பூ.)
முந்திரி-4 (காஃபி க்ரைண்டரில் தனியாக அரைத்தேன்.)
சோம்பு-1டீஸ்பூன் (பதிலாக, "நளன் ப்ராண்ட்" சீரகத்தூள்)

//தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.// விட்டேன்.

//நீங்களும் செய்து ருசித்துப் பாருங்க! :)))))// பார்த்தேன்.

//வீடியோ குக்கிங் பார்க்க விருப்பமும் நேரமும் இருந்//..த..//தால்// பார்த்தேன். அந்தக்கா வீட்டில் சமைக்கவே மாட்டாங்க போல. கிச்சன்லாம் அப்புடி பளிச். கைல உடையாம நீ..ளமா நகம் வளர்த்து பூச்சு அழகா பூசி... ஸ்டைலா விரலை விரலை அசைச்சு பேசுறாங்க. இந்த டிஷ் கூட யாராச்சும்தான் தேய்ப்பாங்க போல. புகை புகையா வருது இமாவுக்கு. ;(

சமைத்து ருசித்துச் சாப்பிட்டாயிற்று. //எடுத்த போட்டோவை எல்லாம் இங்கே போஸ்ட் பண்ணாம என்ன பண்ணறதாம்???;))))))// மகியே சொல்லி இருக்க, பகிராதுவிட்டால் எப்படி!

பி.கு
1. இருவருக்கு மட்டும் அளவான குறிப்பு.
2. குருமா வெகு சுவையாக இருந்தது.
3. படம் அழகாக எடுக்க முயலவில்லை. சாப்பிடுவதில்தான் என் கவனம் இருந்தது. ;)
4. ரசித்து ருசித்துச் சாப்பிட்டுவிட்டு நளனது பாகம் வைத்துவிட்டுக் காத்திருந்தேன். அங்கிருத்து கிடைத்த பாராட்டுக்கள் இந்தப் பூவோடும்.....

பூந்தியோடும்....

மஹிஸ் கிச்சனுக்கு அனுப்பப்படுகிறது.
(மோத்தி லட்டு! பொறுத்துக்கங்க மகி. ;( அடுத்த தடவை சூப்பரா பண்ணி அசத்திருறேன். ம்... படம் பார்க்க இமா சொதப்பினது போல் இருந்தாலும் சுவைக்குக் குறைவில்லை. "Too good Mum," இது மகன். "இப்படியெல்லாம் இனிப்பாக சமைக்கப்படாது," இது க்றிஸ். ஏஞ்சல் வீட்டிலிருந்தும் "டேஸ்டா இருந்துது," என்று செய்தி வந்தது.)
அப்போ இது!!!

பின்தொடர்வோர் அனைவருக்காவும் என் சமையலறையிலிருந்து. வருகைக்கு அன்பு நன்றிகள். ;)
- இமா

39 comments:

  1. ஆஹா !!!!!!!!!!!!!!! அருமையா இருக்கு .எனக்கு லட்டுஸ்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஏஞ்சல். நலம்தானே!
      லட்டு.. .எடுத்துக்கங்க. சூப்பரா இருக்கும்.

      Delete
  2. சூப்பர் இமா, முட்டை எங்கு இருந்து வந்ததுன்னு சொல்லவே இல்லை.மஹிக்கு பிடித்த மஞ்சள் பூவோடு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //முட்டை// கோழில இருந்துதான். ;))))

      //மஹிக்கு பிடித்த மஞ்சள் பூ// இடுகை முழுமையாகத் தட்டி முடிக்க நேரம் போதவில்லை. கிடைத்தவரை தட்டிப் பதிவிட்டுவிட்டேன். அது செபா, தன் பக்கத்து வீட்டார் வீடு மாறிப் போனபோது கொடுத்த தொட்டிச் செடி என்று, என் பிறந்தநாளன்று எனக்குக் கொடுத்தார்கள். பூக்களைப் பார்க்கும்போதெல்லாம் மஹி நினைப்பு வரும்.

      Delete
  3. நீங்க சமைத்தத யாராவது சாப்பிட்டாங்களா ?

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்.. ;) போஸ்ட் ஒழுங்கா படிக்காமல் கமண்ட் போடப்படாது ராஜா சார். குறிப்பு 'கதம்பம்' கோர்ப்பவரது. ;)))

      Delete
  4. சிறப்பு..அலுவலகத்தில் இருந்து மனையாள் வந்துவிடட்டும் தவறாமல் வாசிக்கச் சொல்லுகிறேன் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை மகிழ்ச்சி மதுமதி.

      நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. பிடித்திருந்தால் மட்டும் படிக்கட்டும். சிரமம் கொடுக்க வேண்டாம். :)

      Delete
  5. என்னப்பா இமா லட்டை காட்டி பூந்தி என்று சொல்கின்றீர்கள்????

    ReplyDelete
    Replies
    1. அது ரைமிங்குக்காக ஸாதிகா. ;) அடுத்த வரியில் மோத்தி லட்டு லிங்க் கூட கொடுத்து இருக்கிறேனே! ;)

      Delete
  6. தக்காளி-2 (தானாக முளைத்த செடியில் விளைந்திருந்தது.)
    முட்டை-3
    பச்சைமிளகாய்- 3(அ)4 (இதுவும் தோட்டத்துச் செடியில் இருந்தது.)
    பூண்டு-4 பற்கள்
    கொத்துமல்லி இலை-சிறிது (இலை இல்லை, பதிலாக தோட்டத்து பார்ஸ்லி இலை)
    மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்//வீட்டு தோட்டத்தில் கோழி வளர்த்து அது போட்ட முட்டையில் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்மா பண்ணி இருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்:)

    ReplyDelete
    Replies
    1. //கோழி வளர்த்து// ஆசைதான். நான்கு கோழிகள் வளர்க்கலாமென்று இணையத்தில் தேடிப் பார்த்ததில்... கூடு அமைக்க எங்கள் வீட்டுச் சுவரிலிருந்து தூரம் போதுமானதாக அமைந்தால் அங்கிருந்து அடுத்த வீட்டுச் சுவர் சட்டத்திற்குப் புறம்பாக சமீபமாக இருக்கிறது. ;( கைவிட்டாயிற்று.

      ஊரில் நூற்றுக்கணக்கில் வளர்த்து வியாபாரம் செய்திருக்கிறேன். பாடசாலையில் கோழி வளர்ப்பும் ஒரு பாடமாக இருந்தது.

      Delete
  7. அப்போ இது!!!..என்னதிது?சொல்லவே இல்லை?

    ReplyDelete
    Replies
    1. ;) கீழே மஹி சொல்லி இருக்காங்க. ;)))

      வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸாதிகா. மகிழ்ச்சி. :)

      Delete
  8. இமா, சூப்பரா இருக்கே குர்ர்ர்மா ( ஏதோ கொறட்டை விட்டுட்டே தட்டீனீங்க போல ). மோத்தி லட்டு நானும் செய்து பார்க்க வேண்டும். எனக்கு யாராவது நகத்தைப் பற்றி பேசினா கோபம் கோபமா வரும். எனக்கு நகம் நீளமா வளர குடுப்பினை இல்லை. சாண் ஏற முழம் சறுக்கும் என்பது போல கொஞ்சம் கஷ்டப்பட்டு வளர்த்தால் முன்பிருந்த நகமும் சேர்ந்து முறிந்துபோகுது. என் மருத்துவரிடம் கேட்டு ஒரு பிரயோசனமும் இல்லை. இப்ப மார்க்கெட்டில் "இம்ப்ரெஸ்" என்ற பெயரில் ஒட்டு நகங்கள் இருக்காம். அது தான் இனிமேல். அதை ஒட்டிய பிறகு நானும் குக்கிங் ஷோ துவங்கப் போறேன் ஆங்....

    ReplyDelete
    Replies
    1. //கொறட்டை// ;))
      //மோத்தி லட்டு// ப.கற்பூரம் போடவில்லை.
      //"இம்ப்ரெஸ்"// என்னை இம்ப்ரெஸ் பண்ணவில்லை. ;( எனக்கு... கஸ்டமைஸ் பண்ணி எடுக்க நேரம் + பொறுமை போதேல்ல. petit கூட வாங்கிப் பார்த்தேன். odd ஆக இருக்கு. கர்ர்ர்.. காசுதான் வேஸ்ட். ;( உங்களுக்கு சரியாக வரும் என்று நினைக்கிறேன் வான்ஸ்.

      //அதை ஒட்டிய பிறகு நானும் குக்கிங் ஷோ துவங்கப் போறேன்// ஹை! ;) வாழ்த்துக்கள். (சிவகார்த்திகேயன் ஸ்டைல்ல வாசியுங்கோ) அப்பிடியே.. எம்ரொய்டரியும் வேணும்.

      Delete
  9. படமும் சொல்லிச் செல்லும் விதமும்
    மிக மிக அருமை
    நீங்கள் படிக்கக் கூடாது என அடித்துவிட்ட பகுதிகளை
    நானும் படித்துவிட்டு மறந்துவிட்டேன்
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ;))))))

      மறந்ததையும் மறக்காமல் சொல்லி இருக்கிறீங்கள். ;)

      மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  10. காலை எழுந்ததும் இன்ப அதிர்ச்சி!!!! பேச்சே வரல்ல்ல்ல்லை, ஒரு காப்பி கீப்பி குடிச்சிட்டு தெளிஞ்சு(!) வரேன் இமா! எல்லா ரெசிப்பியும் அருமை!

    நன்றி,நன்றி,நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ;)))

      //எல்லா ரெசிப்பியும் அருமை! // ஹி ஹி தற்புகழ்ச்சி கூடாது மஹி. ;)

      Delete
  11. உங்களின் எழுத்துநடையை படித்து ரசித்தேன் இமா!!குருமா,லட்டு,கடைசி படத்தில் இருப்பது என்னனு தெரியல எல்லாமே எனக்குதான்...

    ReplyDelete
    Replies
    1. அது... வக்கோடா மேனகா. ;))))))

      கருத்துக்கு நன்றி.

      Delete
  12. வாவ்....சூப்பராக சமைத்து அசத்துகின்றிங்க...குருமா சூப்பர்ப்...

    ReplyDelete
    Replies
    1. கீதா... அது என் குறிப்பு இல்லை, பின்னூட்டம் மட்டுமே. ;) நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.

      வருகைக்கு நன்றி. :)

      Delete
  13. உங்க சமையல் எனக்கு வேண்டவே வேண்டாம்.
    எனக்குப் பிடிக்கலை, இமா. Sorry to say this.

    உங்கள் அண்ணனுக்குப் பிடித்ததெல்லாம் இதோ இந்த லிங்கில் உள்ளது:


    உணவே வா! உயிரே போ!!
    http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. :) இலா வேறு ஒரு இடத்தில் பகிர்ந்து கொண்ட விடயம் நினைவுக்கு வருகிறது இப்போது. ;)

      எடையை அளவோடு வைத்துக்கொள்ள சிறந்த உடற்பயிற்சி... பிடித்தவை பரிமாறப்படும்போது தலையை இடமும் வலமுமாக ஆட்டவேண்டுமாம். ;) //உங்க சமையல் எனக்கு வேண்டவே வேண்டாம். எனக்குப் பிடிக்கலை// இது போல. ;)))

      வருகைக்கு நன்றி அண்ணா. :)

      Delete
  14. /அப்போ இது!!!..என்னதிது?சொல்லவே இல்லை?/ ஸாதிகாக்கா,நான் சொல்லவா? ;))))))

    "கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்து, அதிலே கடலைமாவும் போட்டு கலந்து பூண்டு-இஞ்சி-கறிவேப்பிலை-வெண்;)காயம்,செத்தல் மிளகா நறுக்கிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுத்தால் கிடைக்கும் வடை/பக்கோடா இவற்றின் கலவை அது!" [முறைக்காதீங்க இமா, ஜூஊஊஊஊஊம் பண்ணிப்பார்த்து நானா(!) எழுதிய ரெசிப்பியாக்கும் இது! தப்பா இருந்தா மன்னிச்சு விட்டுருங்கோ!;)]

    வடை + பக்கோடா = வக்கோடா/படை , கடைசிப் படத்தில் இருக்கும் வஸ்து;)வுக்கு இந்த இரண்டில் எந்தப் பேர் வைக்கலாம் என்று வாசகர்கள்/ஃபாலோயர்ஸ் எல்லாருமா முடிவு பண்ணுவோம், எல்லாரும் ஓட்டுப் போடுங்கப்பா?! ;))

    ReplyDelete
    Replies
    1. முடி...யல! ;)))))))))

      வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
      இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத
      சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
      ஏரகத்துச் செட்டியாரே.

      ;))))))))))

      Delete
    2. ;) சூப்பர் ஜூம் மஹி.;) பெயர்... படையா! ;))) வக்கோடா நல்லாருக்கு. ;))) சோம்பேறி'ஸ் பகோடா. ;)))))

      பூண்டு - கட்டையை மட்டும் எடுத்துட்டு மீதியை தோலோடு தட்டணும். வெங்;)காயம் - பெருசா நீ..ள நீளமா காமாசோமான்னு வெட்டி... இஞ்சி + சீரகம் + மிளகு + செத்தல் (நருவல்தூள்) போட்டு மிக்சியில் ஒரே ஒரு சுற்று. கடலைப்பருப்பைத் தனியாக ஆனால் சுற்றியும் சுற்றாமலும் கொஞ்சமாக சுற்றி... ;) இவை + கறிவேப்பிலை + உப்பு சேர்த்து இருக்கிற ஈரம் வற்ற கடலைமாவு சேர்த்துச் சேர்த்து பிசிறி... பொரித்தால் சரி.

      இதுல ஸ்பெஷாலிடி க.பருப்பு முதல் பூண்டு, மிளகு, எல்லாமே முழுசா கடிபடுறதுதான். மெல்லிதாக பொரித்து இறக்கி... உடனே சாப்பிட்டுப் பாருங்க, சொர்க்கம் தெரியும். ;P தூளாக இருப்பதில் வெங்;)காயம், மிளகு தேடிச் சாப்பிடுவேன், பிடிக்கும்.

      Delete
  15. நகம் பத்தி நீங்களும் வான்ஸும் பேசுவது பார்த்தால் நல்லாத்தான் இருக்கு. :)))

    அந்தக்கா(எ.கொ.இ.இ?) ஸ்டுடியோலேதானே சமைக்கிறாங்க, கிச்சன் அப்படித்தான் இருக்கும். யாராவது தேவையானது நறுக்கி,பாத்திரம் கழுவி, கிச்சனும் க்ளீன் பண்ணினா நாமும் மேக்-அப் செய்துகிட்டு விரலை அசைச்சு வீடியோ எடுத்து (உங்களைப் போன்ற ஆட்களை) கடுப்பேத்தலாம்! !ஹிஹிஹி!

    என் நகங்கள் சுமாரா;) வளரும் இமா& வானதி! கலியாணத்துக்கு முன் வரை நானும் அப்படி அழகா பாலிஷ் போட்டிருப்பேனாக்கும்!;) [ஏன்னா அப்பல்லாம் கிச்சன் பார்ட் டைம் ஜாப் ஆக இருந்தது,ஹிஹி] இங்கே எனக்குப் பிடித்த அழகான கலரில் நெய்ல் பாலீஷ் கிடைக்காததால் நகம் வளர்ப்பதோடு சரி,நோ பாலீஷ்! ;)

    ReplyDelete
    Replies
    1. //எனக்குப் பிடித்த அழகான கலரில் நெய்ல் பாலீஷ் கிடைக்காததால்// ம்.. ஒரே ப்ராண்ட்ல 2, 3 கலர் வாங்கி கலக்கலாம். இங்க இந்தியன் ப்ராண்ட்லாம் இருக்கு. எனக்கு சின்னதுல tips & toes பிடிக்கும். இப்பவும் இருக்கா!!

      வான்ஸ் சொன்னதுபோல எனக்கும் திடீர் விபத்துகள் ஆகும். ;( கட்லட் பிடிக்கிறக்கு க்ளவ் போடாட்டா நகம் கிரிசாம்பாள் மோதிரம்தான். ;)))

      Delete
  16. படமும் நகைச்சுவைப்பகிர்வும் சூப்பரா.......இருக்கு

    நீண்ட நாட்களின் பின் வருகிறேன் எனக்கும் உங்கள் ஆரம்ப வரிகளைப்போல் .............

    ReplyDelete
    Replies
    1. எதுவும் நிரந்தரமில்லை. //ஆரம்ப வரிகள்// உட்பட. இதுவும் கடந்து போம்.

      என்ன? ஒண்டும் சாப்பிட இல்லையோ நிலா! :)

      Delete
  17. குர்மா சூப்பர்..செய்முறையை சொன்ன விதம் சூப்பரோ சூப்பர்.அது பகோடாவா...நா கார பூந்தி என்று நினைத்தேன்.பகோடாவும்(மினி வடை) புதுமையா நல்லா இருக்கு இமா.:)

    ReplyDelete
    Replies
    1. ம்.. ;) எல்லோருக்கும் என் சமையல் சிரிப்பா இருக்கு. நடத்துங்க.. நடத்துங்க. ;)))

      Delete
  18. முட்டை குழம்பு பார்க்கவே ஜூப்பராக இருக்கு

    மோத்தி லட்டு ஹ்னீபுக்கு ரொம்ப பிடித்தது’

    மொத்ததில் எல்லாம் அருமை

    ReplyDelete
  19. அந்த கடைசி தட்டை மட்டும் இந்த பக்கம் தள்ளுங்க :-))

    ReplyDelete
  20. எவ்வளவு கஷ்டப்பட்டு செய்தது, தள்ளிவிட எல்லாம் முடியாது. என் ஃபேவரிட் தட்டு உடைஞ்சு போய்ரும். ;)அன்பா நீட்டறேன்ல, சந்தோஷமா எடுத்து சாப்பிடுங்க. ஆனால் காணாமல் போகாமல் தொடர்ந்து வாங்க ஜெய்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா