Friday 13 July 2012

நியூஸிலாந்தில் உலகப் பிரசித்தி பெற்றது...

சென்ற இடுகையின் தொடர்ச்சியாக வருகிறது இது.

அது யூ ட்யூப் மூலம் கிடைத்தது.

இது என் சிந்தனையில் உதித்தது.
நான்கைந்து வருடங்களாக என் வளையல்களுக்கு அடைக்கலம் கொடுப்பவை இவைதான். பிரித்து வைக்கச் சுகமாக இருக்கிறது.
 
 L&P  - World Famous in New Zealand இந்த இணைப்பில் உள்ளவை 1970 - 1990 காலப்பகுதியில் பயன்பாட்டில் இருந்த போத்தல்கள். 

இது தற்போதையது.
 சுத்தம் செய்த போத்தல் ஒன்றின் அடிப்பாகத்தை.....
 
அதன் கடைசிக் கோட்டோடு கத்தரிக்கோலால் வெட்டிக்கொள்ள வேண்டும்.
 
இரண்டாவது போத்தலை வெட்டும் போது அதிலிருந்து ஒரு செ.மீ உயரமாக வைத்து வெட்டவேண்டும்.  கீழ்ப் பகுதியை மெதுவாக அழுத்திக் கொண்டு மூடிவிட்டால்  கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும்.
இவற்றில் எனக்குப் பிடித்த முக்கிய விடயம் இவற்றை அழகாக  ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கலாம் என்பது.

17 comments:

  1. பாட்டில் கலர் அழகா இருக்கு இமா! :)

    உங்க க்ராஃப்ட் ஐடியாஸ் பற்றி இனிமேல் பாராட்ட வார்த்தைகள் இல்லாதாதால் என்ன பண்றதுனு தெரிலை, எனி டிப்ஸ்?! ;))

    ReplyDelete
    Replies
    1. grrr. Not getting Tamil font. ;(

      bottle! m.. noted. ;D da green sprite ones r much nicer.

      tips!!! $776874654766.... ;))))

      Thanks Mahi. ;)

      Delete
    2. ரொம்ப சின்ன(!) நம்பரா சொல்லிருக்கீங்க, இதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது! இன்னுங் கொஞ்சம் பெரீஈஈஈஈய்ய நம்பராச் சொல்லுங்கோ..சிங்கிள் டிஜிட்னா கூட ஓக்கே! ;)))))

      Delete
  2. போத்தலில் பொத்தல் போட்டு, அழகாக வெட்டி, அளவாக நறுக்கி, போத்தலின் அடிப்பாகத்திற்கே
    வளைகாப்பு விழா நடத்தி மகிழும் இமாவுக்கு ஜே! ;)

    ReplyDelete
  3. ”குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படணும்” என ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

    அது போல குப்பைத்தொட்டியில் விட்டெறியப்படும் போத்தலே ஆனாலும், அது இமா கையைச் சென்று அடைய வேண்டும்.

    [இமா கையும் கு.தொ. யும் ஒன்று என்று நான் சொல்வதாக தயவுசெய்து, இமா உள்பட யாரும் நினைக்க வேண்டாம்]

    அவ்வாறு இமா கைக்குக்கிடைக்கும் போத்தல்கள், ஏதேதோ போஸ்ட்மார்டம் ஆபரேஷன்ஸ் செய்ய்ப்பட்டு, தங்க வளையல்களும், வைர வளையல்களுமாக வைத்து பத்திரப்படுத்தும், குப்பிகளாக மாறி மேலும் பல்லாண்டுகள், ஜொலிப்புடனும் மதிப்புடனும் வாழ வழிகிடைக்கும் என்று சொல்ல வந்தேன். ;)))))

    ReplyDelete
    Replies
    1. கமண்ட் போட்டுக் கலாய்க்கும் VGK அண்ணாவுக்கு _()_. ;))) சொல்றதை எல்லாம் சொல்லிவிட்டு, நினைக்க வேண்டாமா!! ;)

      //தங்க வளையல், வைர வளையல்// ம்ஹும்! பிளாத்திக்கு, சிப்பி, சோகிதான் எனக்குப் பிடிக்கும்.

      Delete
  4. தூக்கி போடற பாட்டில் வைத்து சூப்பர் ரா செய்து இருக்கீங்க...

    ReplyDelete
  5. நைஸ் ஒன் இமா... வழக்கம் போல சூப்பர். மாலத்தீவு காசு தானே வேணும்... கொண்டு வந்துருவோம், அடுத்த முறை சொல்லிட்டு வந்து ரொம்ப நேரம் இருந்தா தருவேன்... இல்லைன்னா தராம வெச்சுக்குவேன் ;) - வனிதா

    ReplyDelete
  6. //ரொம்ப நேரம் இருந்தா// ;) ம்... புரியுது, புரியுது. ;))

    தாங்ஸ் வனி.

    ReplyDelete
  7. அட சூப்பர்ங்க...வளையல் வைக்க டப்பா ரெடி பண்ணிட வேண்டியதுதான்...

    ReplyDelete
    Replies
    1. பண்ணிட்டு காட்டணும் கோமதி. ;)

      Delete
  8. தூக்கி போடற பாட்டில் வைத்து சூப்பர்...

    ReplyDelete
  9. இமா ரொம்ப ஈசியான உபயோகமான குறிப்பு
    அவசியம் செய்வேன் - நிகிலா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா