Saturday, 28 July 2012

தொடருகிறேன்... ஒரு வளையம்

தலைப்பு.... கல்கி படம் பார்த்ததன் விளைவு. ;)
வளையம்.... மஹிஸ் ஸ்பேஸ் பார்த்ததன் விளைவு.
எதற்கென்று தெரியாமல் சேமிப்பில் இருந்தது இந்தக் காகிதம்; எடுத்துக் கிழித்து மடித்தேன்.
மகி பிடித்தது போலவே பிடித்துப் படம் போடாவிட்டால், எப்படித் தொடர்பதிவாகும்!! ;))

31 comments:

  1. ஹை!!!! அழகா இருக்கு வளையம் .{கியூடெக்ஸ் டிசைனும் தான் :))))

    ReplyDelete
    Replies
    1. தாங்க்ஸ் அஞ்சூஸ். மகளின்ர பக்கம் சட்டென்று எட்டிப் பார்த்துட்டு ஓடி வந்தேன். இன்னும் 1 வாரம் வேலை அதிகம் இருக்கும். நிச்சயம் வருவேன். கைவினை வலைப்பூவானால் வராமலிருக்க என்னால் இயலாது. ;) இப்போதைக்கு... மகளுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்கோ.

      Delete
  2. அழகான பேப்பர்! மினுமினுன்னு கண்ணைக் கவரும் விதத்தில் இருக்கு. :)

    கைவிரல்களில் பூக்கள் அழகாய் இருக்கின்றன. கலக்குங்கோ! ;)

    மகிஸ் ஸ்பேஸைத் தொடர்ந்தேன்-- என்றதற்கு மனமார்ந்த நன்றிகள்! தேங்க்யூ வெரி மச் இமா! :))))

    ReplyDelete
    Replies
    1. என்ன நன்றி!! கர்ர்ர் ;))

      ஆலா நிறையப் போட்டு விட்டது எனக்கு. ;)))))

      நன்றி மகி. ;)

      Delete
  3. பேப்பரினால் கஷ்டப்பட்டு இமா செய்துள்ள வளையம் ஜோராகவே இருக்கு. வளையத்தை விட கைவிரல் நகங்களில் இட்டுள்ள சாயமும், அதில் வரையப்பட்டுள்ள பூ டிசைனும் கலக்கலோ கலக்கல், இமா.

    [எனக்கு மட்டும் உண்மையைச் சொல்லுங்கள். யாரிடமும் நான் சொல்ல மாட்டேன். கை விரல்களின் நக அழகைக் காட்டத் தானே வளையமே செய்து அதை கைவிரல்களால் ஸ்டைலாகப்பிடித்துக் காட்டி பதிவிட்டுள்ளீர்கள். ;))))) ]

    ReplyDelete
    Replies
    1. கை விரல்கள் மட்டுமல்ல, கால் நக அழகையும் முன்பே காட்டி இருக்கிறேன் அண்ணா. :)

      "கோல்டன் வெஞ்சர் காகித வளையம் பிடித்த விரல்கள்" மகிஸ் ஸ்பேஸ் பார்த்த பாதிப்பு மட்டுமே. அவர்கள் இதே போல்தான் படம் போட்டிருந்தார்கள். நகப்பூச்சு நிறம் வித்தியாசமாக இருப்பதாலும் படம் அழகாக இருப்பதாலும் வேறு எதுவும் இடுகையில் எழுதப் படாததாலும் பார்ப்பவர்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது இம்முறை.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

      Delete
  4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீஈஈஈஈஈஈ.. இது கியூரெக்ஸ்ட் க்கான விளம்பரமா இல்ல ஏதோ வளையம்போல இருக்கே அதுக்கான விளம்பரமோ?:)) இதுக்குப் பதில் மகிதான் சொல்லோணும்:)) ஆரம்பிச்சது அவதானே:)).

    றீச்சர் செயற்கை நேம்.. சே...சே... நெகம்.... சே..சேஎ... இதுவும் தப்பு நகமெல்லாம் ஒட்டுறாபோல, அழகா இருக்கு இமா, ஆனாலும் சொந்த நகத்தை பாதிக்குமாமே... சரி அதையும் விடுங்கோ..

    எப்படிச் செய்தீங்க என படிப்படியான விளக்கம் சொல்லியிருக்கலாமெல்லோ.

    நான் இன்று சூப்பமார்கட் போகும்போது கலர்கலரா கரண்டி வாங்கோணும் எனக், கலர்க் கனவுகளோடு போய், மறந்துபோய் வந்திட்டேன்ன்ன் அவ்வ்வ்வ்வ்.. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... எப்படியும் செய்வேன்.

    ReplyDelete
    Replies
    1. /அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீஈஈஈஈஈஈ.. இது கியூரெக்ஸ்ட் க்கான விளம்பரமா இல்ல ஏதோ வளையம்போல இருக்கே அதுக்கான விளம்பரமோ?:)) இதுக்குப் பதில் மகிதான் சொல்லோணும்:)) ஆரம்பிச்சது அவதானே:)).
      /

      &!!*!!**#*#*@*@@()^%$#~)
      %$#!*+~@?!*^$%
      =-`&@<..|*/:)

      :))))))))))))) அதிரா, பதில் சொல்லீட்டன், புரிஞ்சுதுல்ல?! ;)))

      Delete
    2. எல்லாம்தான் விளம்பரம் செய்யுறன் அதீஸ். ;D
      இது என் சொந்த நகம்தான் அதீஸ். ஒட்டுறது கஷ்டம் எனக்கு. பெரீ..ய சைஸ் கிடைக்காதாம். ;D

      //படிப்படியான விளக்கம்// ம். ஆகட்டும். உங்கட நகத்துக்கு இதைவிட பெரிய டிசைன் வடிவாப் போடலாம்.

      கரண்டி!! நல்ல க்ளூவா வாங்குங்கோ. இல்லாட்டி வேலை வீணாகப் போயிரும். க்ளூ கிடைக்காட்டி சொல்லுங்கோ, வேற ஐடியா தாறன்.

      Delete
    3. //படிப்படியான விளக்கம்// ம். ஆகட்டும். உங்கட நகத்துக்கு இதைவிட பெரிய டிசைன் வடிவாப் போடலாம். ///

      No.... I asked about the ~Vazhayam~

      //:))))))))))))) அதிரா, பதில் சொல்லீட்டன், புரிஞ்சுதுல்ல?! ;)))//miyavvv miyaavvvv:))

      Delete
  5. இமா, சங்கு சக்கரம் போலிருக்கு. இனிமேல் பூஸார் நகங்களை காட்டுவார். சே!! இல்லை இல்லை அவர் இப்படி ஒரு சங்கு சக்கரம் செய்வார் என்று சொல்லவந்தேன்.
    அழகா இருக்கு சக்கரம்.

    ReplyDelete
    Replies
    1. அவர்... முதலே சில இடங்களில நகம் காட்டி இருக்கிறாரே! இனி சக்கரம்தான் காட்ட வேணும் வானதி. கருத்துக்கு நன்றி.

      Delete
  6. மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்துள் மறைந்தது மாமதயானை:)))

    சக்கரத்தினால் நகங்கள் அழகுற்றதா? இல்லை
    உங்களின் நகங்களினால் சக்கரமும் அழகானதா?

    உங்கள் நகப்பூச்சு ஓவியமும் ரொம்ப அழகாக இருக்கு இமா;)) ரொம்பவே அவதானமா செயல்பட்டிருக்கிறீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு அவதானமும் இல்லை. பார்க்கத்தான் அப்படித் தெரிகிறது. வெகு சுலபம் இது.

      Delete
  7. வலையம் அழகாய் இருக்கு அதே போல அந்த கீயூட்டேக்ஸ் வித்தியாசம் பச்சையில் !

    ReplyDelete
    Replies
    1. நேசன்.... !!! பொறுங்கோ, நான் கண்ணாடியைப் போட்டிட்டு வாறன். ;)))

      Delete
  8. நல்லா இருக்குங்க...
    நன்றி ...

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  9. உண்மை தான் இமா! வளையத்தோடு சேர்ந்து நகப்பூச்சும் அதில் வரைந்திருக்கும் பூக்களும் மிகவும் அழகு!

    ReplyDelete
  10. மிக்க நன்றி அக்கா.

    ReplyDelete
  11. டீச்சர் வளையம்(நான் ஸ்பெல்லிங் கரீக்டா போட்டு இருக்கேன்:)) அண்ட் நகங்கள் அழகா இருக்கு. இங்கே நெயில் ஷாப் என்று இருக்கு. கை நகங்கள் இப்புடி அழகா கியுடேக்ஸ் அடிச்சு விட £25 !! நீங்க எப்புடி இவ்ளோ அழகா டிசைன் போட்டு இருக்கீங்க ?

    ReplyDelete
    Replies
    1. ஃப்ரீயா அடிச்சுவிடுறேன் கிரி, வாங்க. என் கை என்கிறதால 'பெருசா' எதுவும் செய்ய முடியுறது இல்லை. இதைப் பூசிட்டு... வீட்டு வேலை ஈசியா பார்க்கவும் முடியாது. 'பெரியவங்க' யாராவது கையை நீட்டினா சந்தோஷமா இருக்கும். எப்போ வரீங்க இங்க!!

      Delete
  12. ஆஹா அருமை ... நானும் வீட்டில் இதே போன்று வளையங்கள் செய்து வைத்துள்ளேன் ..மகி பதிவு பார்த்து... சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! :) மகி எல்லாரையும் பேப்பர் மடிக்க வைக்கிறாங்களா! ம்.. நல்லதுதான்.
      வருகைக்கு நன்றி விஜி.

      Delete
  13. இமா உங்க வளையம், நக ஆர்ட் ரெண்டுமே அழகா இருக்கு.... நானும் மகி ப்ளாக் பார்த்து சில 3d ஒரிகாமி வொர்க்ஸ் செய்து உள்ளேன்... நேரம் இருந்தால் என்னுடைய ப்ளாக் பக்கம் வந்து பாருங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா. ;)

      வந்தேன்; பார்த்தேன்; ரசித்தேன்; கருத்துமிட்டேன். ;) பின்தொடர்கிறேன்.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா