என் இலங்கை மாணவர் ஒருவர் (உறவினரும் கூட) முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த இடுகையொன்று என்னைக் கவர்ந்தது. கரண்டிகளும் வெற்றுப் போத்தலொன்றும் கொண்டு ஆன விளக்கு அலங்காரம் அது. கோமதி கூட சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.
மின்விளக்கின் சூட்டிற்கு ப்ளாத்திக்கு உருகி விடும் என்கிற பயம் இருந்தது. அப்படி ஆனால் என் பிரயாசை, நேரம் எல்லாம் வீணாகிவிடும்; ஒரு 'வாஸ்' செய்யலாம் என்று கரண்டிகள் சேகரிக்க ஆரம்பித்தேன்.
கிடைத்த கரண்டிகளை அவ்வப்போது வெட்டி வைப்பேன். மெதுவாக நகர்ந்துகொண்டு இருந்தது (இருக்கிறது) வேலை.
இடை நடுவே 'டெய்ரி' வைத்திருக்கும் தோழி ஒருவர் தொலைபேசியில் அழைத்து... "யோகர்ட் தொகுதி ஒன்று காலாவதியாகிவிட்டது. விநியோகஸ்தர்கள் தூக்கிப் போடச் சொல்கிறார்கள். கரண்டிகள் உங்களுக்கு வேண்டுமா?" என்றார். "நிறைய வேண்டும்," என்றேன். இவற்றைக் கொண்டு என்ன செய்தேன் என்பதை அறிய.... http://www.arusuvai.com/tamil/node/23289 பார்க்கவும்.
மின்விளக்கு அலங்காரம்தான் இன்னமும் பாதி வழியில் நிற்கிறது. ;( எங்கள் பாடசாலை சிற்றுண்டிச்சாலை ஊழியரிடம் நாளை விசாரிக்கப் போகிறேன். எனக்கு அதிஷ்டம் இருந்தால்... ;) அவர்களுக்கும் ஏதாவது காலவதியாகும். ;)

//அழகான நிலைமாலை தயார்// என்று அங்கு மாலைப் படத்துடன் காட்டப்பட்டுள்ளது.
ReplyDeleteஆனால் இங்கு இரண்டு சட்டைப் பொத்தான்கள் [பொத்தல்கள் அல்ல] போல காட்டப்பட்டுள்ளன.
ஆனால் இவை இன்னும் அழகாக உள்ளன.
சும்மாவா! இமாவால் சும்மா பின்னிப்பின்னிப் பெடலெடுக்கப்பட்டவை அல்லவா!
அது தான் ஜோராக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் vgk
பாராட்டுக்கு நன்றி அண்ணா.
Delete//ஆனால் இவை இன்னும் அழகாக உள்ளன.// அங்கு சிறிய படங்களாக வெளியாகுகிறது. இங்கு பெரிதாக, மேலும் பெருப்பித்துப் பார்க்கும் வசதியும் இருக்கிறது. அதைவிட இவை அழகாகத்தான் தெரியும். :)
ரொம்ப அழகா இருக்கு இமா ..எனக்கு பெரிய வெட்டும் உபகரணங்கள் /க்ளூ கன் இதெல்லாம் உபயோகிக்க பயம் ,இல்லைன்னா நானும் செய்வேன் :)))
ReplyDeleteம்... எனக்கும். ;) பாதுகாப்புக் கருதி, இவை எல்லாம் வீட்டில் யாராவது இருந்தால் மட்டும் செய்வேன். வேலை நேரம் யாரோடும் பேசுவது இல்லை, தொலைபேசி அழைப்பானாலும் கூட. முன்பே வீட்டாருக்குச் சொல்லி வைத்துவிட்டுத்தான் ஆரம்பிப்பேன்.
Deleteதோரணமாயிரம் சூழ வலம் செய்து...:))) ஓ..அது வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்தோ?! ;))))
ReplyDeleteநல்லா இருக்குங்க இமா! :)
வாரணம்!! ஒன்று இருக்கிறது எங்கோ. தேடுகிறேன்.
Deleteஇதோ நீங்கள் சொன்ன லிங்க்கிற்கு செல்கிறேன்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன். :) நீங்கள் சொல்லாமல் சொன்ன லிங்கிற்கு நானும் சென்றேன். :)) பகிர்வுக்கு நன்றி.
Deleteஇமா! இம்முறை உங்கள் கைவரிசை அடச்சீ! கைவேலை அதுவும் ப்ளாஸ்ரிக் கரண்டியில் அருமையா இருக்கு.
ReplyDeleteஇதில் தோரணம், வாஸ் இன்னும் வேறென்ன?.. ம்?.....
என்ன சொல்லுறீங்கள்?
// எங்கள் பாடசாலை சிற்றுண்டிச்சாலை ஊழியரிடம் நாளை விசாரிக்கப் போகிறேன். எனக்கு அதிஷ்டம் இருந்தால்... ;) அவர்களுக்கும் ஏதாவது காலவதியாகும்//
உங்களின் அதிஷ்டத்துக்காக பண்டம் காலாவதியாகும், ம்ம்.
இது நல்லாயிருக்கு!
நல்ல சிந்தனை:)))))))
//நல்லாயிருக்கு!
Deleteநல்ல சிந்தனை:)// ;))))))
super work imma.
ReplyDeleteThanks Vanathy. :)
Deleteநோஓஓஓஓஓ ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்:)) அது கருப்.. பூஊஊஊஊஊஉ என்றுதானாம் வரும், அம்மம்மா சொல்லியிருக்கிறா.
ReplyDeleteஉண்மையிலேயே சூப்பர் இமா. ஆனா நல்ல ஸ்ரோங்காக இருக்குமோ என்றுதான் சந்தேகமாக இருக்கு.
ReplyDeleteஇப்படியே கம்பியில் கோத்து பூவாக்கி பிளவர் வாசில் வைக்கலாமெல்லோ.
இன்னுமொன்று இமா, பிளாஸ்ரிக் கரண்டிகள், சூப்ப மார்கட்டில் மிகவும் மலிவாகக் கிடைக்குது, கலர் கலரா வாங்கி அசத்தலாமெல்லோ.
இது... பூஸ் பிடிச்சு ஊஞ்சலாடடுறதுக்கு இல்ல. ;))
Deleteம்... பூவாக்கினால் நிச்சயம் அழகாக இருக்கும். பட்டினை வெட்டாமல் அதில கம்பியைக் கொடுத்து கட்டி.... வாடிவிடாமல் நிற்க வைக்க கம்டேப்... இலைக்கு பச்சை கரண்டி. ம்... நடத்துங்கோ அதீஸ். வாஸுக்கு 4 பூ கூட போதும். ஒருவரும் பிடிச்சுப் பார்க்காத இடத்தில வைங்க.
//கலர் கலரா வாங்கி அசத்தலாமெல்லோ.//கர்ர்ர்... யாராவது ட்ரெய்ன் விட்டால் அசத்தலாம். ;)) வாங்கினால் எப்படி ரீசைக்கிள்!! ஆனால்... வாங்கலாம் போல இருக்கு இப்ப. கருத்துக்கு நன்றி அதீஸ்.
கரும்'பூ' -
Deleteகரும்பு போல மனதிற்கு இனிய அழகிய கைவேலைகள் -- பாராட்டுக்கள்..
சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் நன்றிகள்.
Deletesuperb... Excellent Work..
ReplyDeleteThanks for ur compliments Viji.
Delete