இரண்டாம் வகுப்பில் கிடைத்த பரிசுப் புத்தகம் ஒன்றிலிருந்து முள்ளெலிகள் எனக்குப் பரிச்சயமாயின.
'சித்திரக் கதைகள்' என்கிற அந்தப் புத்தகம் அழகழகான முள்ளம்பன்றிக் கதைகள் சிலவற்றைக் கொண்டிருந்தது. அவை முள்ளெலிகளா முள்ளம்பன்றிகளா என்று சிந்திக்கத் தெரியாத வயது அது. ஆனாலும் இந்தப் பிராணிகளுக்கு என் மனதில் ஒரு... 'மென்மையான மூலை' நிரந்தரமாகிவிட்டது அப்போதிருந்து.
ஒரு வருடம் கழித்து ஓர்நாள் உண்மையாகவே முள்ளம்பன்றியைக் கண்டேனே!
செபா பாத்திரம் தேய்க்கும் இடத்தில் விம்மும் (vim) தும்பும், ஒரு பழைய தயிர்ப்பானையில் அடுப்புச் சாம்பலும் வைத்திருப்பார். என்னைக் கண்டதும் அந்தப் பானையில் தூங்கிக் கொண்டிருந்த முள்ளம்பன்றி சட்டென்று கிளம்பி ஓடிவிட்டது. ;(
சரியாகப் பார்த்து ரசிக்கக் கூட முடியவில்லையென்ற சோகத்தோடு செபாவிடம் சொன்னேன். எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு இருப்பார் அவர். கண்ணைச் சுருக்கிப் பார்த்து, "முள்ளம்பன்றி!! அதுவும் தயிர்ப் பானையிலா!!!! ம்.. பெருச்சாளியைப் பார்த்திருப்பீங்கள்," என்றார். "புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று போயிற்று எனக்கு. ;(
நியூசிலாந்து வந்ததன்பின்னால் கண்டேன் என் அன்பு முள்ளெலிகளை. hedgehogs - அழகு ஜீவராசிகள் அவை. தத்தக்கா பித்தக்கா என்று குழந்தை தவழுவது போலிருக்கும் அவர்கள் நடை. எடுத்த படங்கள் எல்லாம் ஏதோ வைரஸ் கொண்டு போய் விட்டது அப்போதிருந்த கணனியோடு. ;(
அதை விடுங்கோ. சமீபத்தில கொஞ்சம் ஐசிங் மிஞ்சிப் போக முள்ளெலி செய்து விளையாடினன். பிறகு செபா அயலாருக்கு அனுப்பியாச்சுது. செய்முறையை அறுசுவைக்கு அனுப்பினன்.
செபா வீட்டுப் பக்கமும் முள்ளெலி இருந்திருக்கிறது.
இந்த... முள்ளெலி என்கிற சொல்லை எங்க இருந்து பிடிச்சன்!! ம்!! யோசிச்சு.... அறுசுவையில தேட... வந்ததே ஒரு பழங்கதை. ;D
L போர்ட் சந்தூஸ், மஞ்சள் மகி, அதிரா, செபா, ஹுஸைனம்மா, வாணி, ஆசியா எல்லாரும் அவரவர் செல்லங்களோட 'ட்ரெய்ன்'ல போயிருக்கிறம். ;D விரும்பினால் நீங்களும் போய் இரைமீட்டுப் பார்க்கலாம். ;)
அன்பு முள்ளெலிகளை. hedgehogs - அழகு ஜீவராசிகள் அவை. தத்தக்கா பித்தக்கா என்று குழந்தை தவழுவது போலிருக்கும் !!
ReplyDeleteஐசிங் மிஞ்சிப் போக முள்ளெலி செய்து விளையாடினன்
அழகான பகிர்வுகள்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.
Deleteவாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Deleteமுள்ளெலி மீதுதான் இமாவுக்கு எத்துனை பிரியம்.நான் சின்னவளில் மிருகக்காட்சிசாலையில் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteஇமாக்கா நலமா?
ReplyDeleteஹாய் ஜலீ. நலம். உங்களுக்கு இனிய ரம்ழான் வாழ்த்துக்கள்.
Deleteமூஞ்சுறு என்று சொல்லுவாங்களே
ReplyDeleteஅதுதான் முள்ளலியா..?
சிரிக்க வைக்கிறீங்கள் சிவா. ;))))) அஞ்சூஸ் பதில் சொல்லி இருக்கிறாங்க பாருங்க. ம்.. நீங்க அனுப்பின படம் முள்ளெலி. மூஞ்சூறுக்கு முள் இராது. சின்னதாக நீளமாக இருக்கும். வாலும் நீளம்.
Delete//
DeleteSiva sankar16 August 2012 2:52 AM
மூஞ்சுறு என்று சொல்லுவாங்களே
அதுதான் முள்ளலியா..?//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மூஞ்சூறு என்றால், சின்ன விஷயத்துக்கெல்லாம், 3 நாளைக்கு முகத்தை உம்மென வைத்திருப்போர்ர்ர்ர்:))) ஹையோ கலைக்கினம்... பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்:))
சிவா.... ;))) என்ன ஆச்சு! அதிராபேபியோட சண்டையா!! ;D
Deleteசிவா... அங்கே Little India-வில் ஏதோ ஒரு கடைப் பெயர்ப்பலகையில் Hedgehog என்று எழுதி இருந்தது. ;))
Deletebutton hole stitch embroidary போட துளை போடுவதற்கு இந்த முள் எலியின் ஒரு முள்ளைதான் உபயோகித்தேன்..ஒரு குறத்தியிடம் இந்த முள்ளை வாங்கினேன்..ஒரே மாதிரி துளை விழும்.இப்போ அந்த முள் தொலைந்ததால் அந்த வகை எம்பிராய்டரி போடுவது இல்லை..சாதுவான முள் எலி பக்கத்துல போனாலே உடம்பில இருக்கிற முள்ளை சிலிர்த்து கிட்டு நிற்குமே ...மிருக காட்சி சாலையில் பார்த்திருக்கிறேன் இமா..
ReplyDeleteஅது வேற... முள்ளம்பன்றி முள். நானும் வைச்சிருக்கிறன். நீங்கள் சொல்லுறது எல்லாம் முள்ளம்பன்றிக் கதைகள். http://www.buzzfeed.com/anteater/amazingly-adorable-porcupines
Deleteமுள்ளெலி குட்டியாக இருப்பார். தொட்டால் சுருண்டுவிடுவார். பிறகு கொஞ்சம் கழிச்சு ஒருவரும் இல்லை என்று தெரிந்தால் சட்டென்று நிமிர்ந்து ஓடி ஒழிவார். http://animals.nationalgeographic.com/animals/mammals/hedgehog/
இமா !! நான் அங்கே ட்ரெயினில் கடைசி பெட்டில ஏறிட்டேன் ..இப்ப கொஞ்சம் பிசி ..கண்டிப்பா எனது நினைவுகளையும் அதில் எழுதறேன் .
ReplyDeleteநீங்க முள் எலி என்று சொல்றது hedge hog தானே .
முள்ளம்பன்றி.... porcupine அப்படிதானே
கடைசிப் பெட்டி... ;) இந்த ட்ரெய்ன் நிரம்பி வழியுது. அடுத்த ட்ரெய்ன் ஓடத் தொடங்கின பாதியில நிற்குது. அங்க எழுதுங்கோ.
Delete//hedge hog & porcupine// ஆமாம்.
நிறைய்ய :)) சமையல் குறிப்பு போட்டு முடிச்சதும் படன் களுடன்
Deleteஎங்க வீட்டில் வளர்த்த செல்லம்ஸ் எல்லாரையும் காட்றேன் இமா விரைவில் ..
அருமை. நான் பார்த்தது இல்லை... அழகாக இருக்கிறது....
ReplyDeleteகருத்துக்கு நன்றி விஜி.
Deleteஐசிங் மிஞ்சிப் போக முள்ளெலி செய்து விளையாடினன் உங்களின் கை திறன் இதில் தெரிகிறது அருமை
ReplyDelete;) நன்றி ஃபாயிஜா.
Deleteஇமா, மூஞ்சூறு ஹிஹி.....
ReplyDeleteமுள்ளெலி சூப்பர். எனக்கு இப்படி முள்ளோடு திரியுற மிருகங்களை கண்டால் பயம். உனக்கு என்னத்தை கண்டு தான் பயமில்லை என்று நீங்கள் மனதுக்குள்ளே சிரிப்பது எனக்குத் தெரியும்.
அறுசுவை பார்த்தேன். நான் தான் மிகவும் குறைவா அங்கு பதிவுகள் போட்டு இருக்கிறேன். பூஸார் நல்லா பூந்து விளையாடி இருக்கிறார். வேறு பதிவுகளில் நிறைய கதைச்ச ஞாபகம்.
//சிரிப்பது எனக்குத் தெரியும்.// ம். ;))
Delete//மிகவும் குறைவா அங்கு பதிவுகள்// ம். ஆனால்... வாசிச்சனீங்கள் எல்லாம்.
What a beautiful creation Thank You so much for following my blog
ReplyDeleteCheers
Sonia
cardsandschoolprojects.blogspot.com
I love craft & it is my pleasure to follow your blog Sonia.
DeleteThanks for stopping by.
இமா! இங்கை முள்ளம்பன்றி என்றிருந்துதா அதுதான் வர பயந்து வரேலை;)
ReplyDeleteஇப்பவும் கனநேரம் நிக்க பயமாகிடக்கு. முள்குத்தீடுமெண்டு:))
கைவண்ணம் இங்கையும். அபாரம்! வாழ்த்துக்கள்!!!
பி.கு: எதைத்தான் விட்டு வைச்சிருக்கீங்க?
நிக்காதைங்கோ, கதிரையை எடுத்துப் போடுறன். ;)
Deleteஉங்களுக்கு இன்னும் நல்ல நேரம் வரேல்லையோ!!
நன்றி இளமதி.
//உங்களுக்கு இன்னும் நல்ல நேரம் வரேல்லையோ!!//
Deleteஅதுக்கு முதல்ல ~பாம்பு~ எல்லே வரோணும் இமா:))
வசந்த கால நதிகளிலே....
ReplyDeleteவைரமணி நீரலைகள்......
நீரலைகள் நீரினிலே....
நெஞ்சிரண்டில் நினைவனைகள்....:(
மியாவ் ..தேம்ஸ்ல குதிக்க போறீங்களா :))
Deleteநதி ....நீரலைன்னு பாடறீங்க :))))
மகி இல்லாம பூசார் தைரியமா உலாத்தறார்
;)
Deleteஎனக்கு சுண்டெலி என்றாலே பயம் நீங்களோ முள் எலியை பிடித்து சர்வ சாதராணமாக விளையாடுகிறீர்கள்.
ReplyDeleteநன்றி !
//சுண்டெலி என்றாலே பயம்// நம்புறேன் அயுப். :)
Delete//முள் எலியை பிடித்து// பாம்பும் பிடிப்போம் நாங்கள். :)))
சுவாரஸ்யமான பதிவு
ReplyDeleteஅழகாக இருக்கிறது...
மிக்க நன்றி ஜீவன்.
Delete