Sunday, 5 May 2013

வேண்டும் வரம்

வரத்துக்காக ஓர் வரம்!

வரமொன்றாய் வந்து
வாழ்வையே வரமாக்கியவனே!
குறும்புக் குழந்தையாய்,
தம்பியாய்த் தமையனாய்
தட்டிக் கேட்கும் ஆசானாய்,
பொறுப்பான மகளாய்
உற்ற தோழனாய்
சமயத்தில் தாயுமாய்
யாவுமான என் செல்வமே!

நீ இரவல் பெற்றுக் கொடுத்த
இருபத்தாறு வருடங்களும்
வளமான வசந்தம்.

திரும்பிப் பார்க்கிறேன்...
கல்லும் முள்ளுமாய்க்
கடந்து வந்த பாதை,
இன்று பச்சைப்புல் பதித்து
கரையெலாம் பூப்படுக்கை.

இனி எத்தனை முறை
நடக்க நேர்ந்தாலும்
வலிக்காது என் கால்கள்
தளராது என் உள்ளம்.

இன்றொரு வரம் கேட்கிறேன் இறையை
வேண்டும்...
இன்னும் ஈரிருபத்தாறு  வருடம்
உன்னோடு,
உனக்காக.

Many happy returns of the day Mahan. @}->--

God bless you.
- 05/05/2012

9 comments:

  1. Happy Birthday .Nephew ..May God Bless You .

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நானும் கூறிக்கொள்கின்றேன்:))))))

    ReplyDelete
  3. அன்பு மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கவிதையின் முதல் பத்தி அப்படியே என் மகளுக்குப் பொருந்தும். நல்லதொரு பிள்ளைக்கும் ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய்க்கும் என் பாராட்டுகள்.

    ReplyDelete
  4. உங்கள் மூத்தவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இமா... என்றென்றும் நலமாகவும் ஹப்பியாகவும் இருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் இமா அன்ரி,
    முதலில் உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கவிதை மிகவும் அருமையாக உள்ளது. ஒரு மகன் குறித்த அன்னையின் உணர்வுகள் அருமை + யாதார்த்தம்.

    ReplyDelete
  6. அறுவருக்கும் என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  7. பெரிய அண்ணாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நானும் கூறிக்கொள்கின்றேன் :)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகன். சொல்லிருறேன். :)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா