சாத்தாவாரி இலைக்குப் பெயர் சொல்ல முனைந்த அனைவருக்காகவும் இந்த இடுகை.
2007 செப்டெம்பரில் கான்பரா சென்றிருந்தோம். நண்பர் Royal Australian Mint -க்கு அழைத்துப் போனார். அன்று ஏதோவொரு காரணத்தால் பல பிரிவுகள் மூடி இருந்தது. இருந்தாலும் என் சின்னவர் கண்ணில் இந்த ஆல்பம் பட வாங்கிவந்தோம். என்னிடம் இருந்த நாணயங்களுக்கு அது போதாதென்று தெரிந்தது. மேலதிகமாக ஒரு refill வாங்கினோம்.
ஒரேயளவான நாணயங்கள் அவற்றுக்கான பைகளில்.
'ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்,' போல coin album ஒன்றுக்கு ஒரு தனிப் பக்கம். ;)
ஆல்பம் வைக்கும் இந்தப் பை செபாவின் அன்பளிப்பு
ஒன்றிரண்டு டோக்கன்கள் இருக்கின்றன. ;) வெலிங்டன் கேபிள் கார் மியூசியத்திலிருந்த இயந்திரத்தில் நான் அடித்தெடுத்த செப்புத் தகடும் இருக்கிறது.
இந்த அட்டைப் பெட்டி... சின்னவர் ஒரு கிறிஸ்மஸுக்கு எனக்கு வாங்கிக் கொடுத்த அன்பளிப்பு வந்திருந்த அட்டைப் பெட்டி.
2007 - South Island விடுமுறையின்போது சின்னவர் வாங்கிக் கொடுத்த notepadகள்.
28/01/2011- சென்னை விமானநிலையத்தில் வாங்கியது.
சட்டத்திலுள்ளது, அவர் லண்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது வாங்கிவந்தது.
'கலெக்டபில்ஸ்' எங்கு கண்டாலும் வாங்கிச் சேர்ப்பேன்.
'கலெக்டபில்ஸ்' எங்கு கண்டாலும் வாங்கிச் சேர்ப்பேன்.
ஒருமுறை என் சேகரிப்பைப் பார்த்த நண்பரொருவர் தனக்குத் தெரிந்த நாணய விலைமதிப்பீட்டாளர் ஒருவரை அழைத்து வந்தார். விலைமதிப்பான நாணயங்கள் என்றில்லாவிடினும் 'என் பல வருடசேமிப்பு' என்பதற்கான பெறுமதி உண்டல்லவா? அவரது அறிவுறுத்தலின்படி அப்போதிருந்து இவற்றை வீட்டில் வைப்பதில்லை.
// விலைமதிப்பான நாணயங்கள் என்றில்லாவிடினும் 'என் பல வருடசேமிப்பு' என்பதற்கான பெறுமதி உண்டல்லவா? அவரது அறிவுறுத்தலின்படி அப்போதிருந்து இவற்றை வீட்டில் வைப்பதில்லை.//ஓஹோ!! அப்ப லட்சக்கணக்குக்கு நாணயங்கள் உள்ளன என சந்தேகிக்கிறேன் இமா! ;) எங்க வைச்சிருக்கேள்...சொல்லிருங்கோ, உதவியாயிருக்கும்!ஹிஹிஹ்! ;) :)
ReplyDeleteஇதெல்லாம் பார்த்து ரசித்துட்டு நைஸா நழுவிடறேன். மீ டோண்ட் ஹாவ் திஸ் மச் பொறுமை! பை, பை! :)
//லட்சக்கணக்குக்கு நாணயங்கள் // யப், ஆனால் சொன்னேனே வீட்டுல இல்ல. ;)
ReplyDeleteOkay. Which bank???????
Deleteநல்ல கதை! ;)
Deleteஎன் பொண்ணு ஸ்டாம்ப் சேகரிக்கிறா இமா ..நான் :)))))))))வெறும் junk மட்டும் தான் .
ReplyDeleteமுக்கியமான ஒன்றினை நோட் செய்திட்டேன் :))
ஹாய் மகி :))
நான் இப்ப லாப்பிலயும் கராஜ்லயும் இருக்கிற எல்லா குப்பையும் பயன்படுத்தி முடிக்கிற வேலையில இருக்கிறன். ஆனால் புதுசு புதுசா சேர்க்கிறதை விடுறனில்லை. ;)
Delete2வது... ;)
அந்த குட்டி பேழை வாவ் அழகு !!
ReplyDeleteம்.. ;) நன்றி.
Delete//யப், ஆனால் சொன்னேனே வீட்டுல இல்ல. ;)// நல்ல கதையா இருக்கே?! வீட்டில இல்லாத ஒண்ணை என்ன ஒரு தாராளமா எடுத்து எங்களுக்கெல்லாம் வாரி வழங்கறீங்க?! கடைத் தேங்காய எடுத்து வழிப்புள்ளையாருக்கு ஒடச்ச கதையால்ல இருக்கு? ;) ;) :)
ReplyDeleteஇதெல்லாம் செல்லாது, ஆயிரம் பொற்காசுக்கு ஒரு கழஞ்சு:) குறைஞ்சாலும் ஏற்க மாட்டோம், மாட்டோம், மாட்டோம்ம்ம்ம்ம்ம்!
;))))))
Deleteநானும் ஒரு குட்டியூண்டு அளவில் நாணய சேகரிப்பும் தபால்தலை சேகரிப்பும் வைத்திருக்கிறேன். அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொள்வதிலேயே அத்தனை ஆனந்தம் எனக்கு. இவ்வளவு கலெக்ஷன் பார்த்தாலே பிரமிக்கவைக்குது. பாராட்டுகிறேன் இமா.
ReplyDelete//அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொள்வதிலேயே அத்தனை ஆனந்தம்// உண்மைதான் கீதமஞ்சரி. இணையம் வந்ததன்பின்னால் கிடைக்கிற நேரம் இங்கே எட்டிப் பார்க்கிறேன். அதான் எல்லாம் சேமிப்பாக மட்டும் இருக்கிறது. பிரித்துப் போடவேண்டும் விரைவில்.
Deleteஇணையப் பயன்பாட்டால் தபால்தலை சேமிப்பு குறைந்திருக்கிறது. ;(
பொற்கிழி! பொக்கிஷ காட்சிக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி அக்கா.
Deleteஉங்கள் சேகரிப்புக்கள் அத்த்த்தனையுமே அருமை இமா...:)
ReplyDeleteவாழ்த்துக்கள்!
சேகரிக்கும் நாணயமுடன்
சேர்ந்திருக்கும் உம்திறமை
பேருமக்கு தருதேயிங்கு
யாருண்டு இதற்கும்நிகரே...:)
;) எச்சரிக்கிறேன்... நானு கவிதை எழுதீருவேன். ;))))) சும்மா இருக்கிற சிங்கத்தை... ;))
Deleteபொற்கிழி! பொக்கிஷ காட்சிக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி விஜி.
Deleteavvvvvvvvv aththai ivvalavum pathiramaa vaichi irukeengalaa...
ReplyDeletenaa ithaei ellam eppadi katti kaappatrap porennu teriyala ...
great ..................vaalthukkal
அட! யாரப்பா இது ஒரு குட்டிப்பொண்ணு வந்திருக்காங்க!!
Delete//eppadi katti kaappatrap porennu// ம். ம். ;)))))) வரப்ப ஒரு இருப்புப் பெட்டியும் கொண்டுவாங்க.
சேகரிப்புக்கள் அனைத்தும் அழகு... அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்.
Deleteஇது போல் என் பையனும் சேகரித்து கொண்டு இருந்தான்,
ReplyDeleteமிக அருமையான கலெக்ஷன்ஸ்..
நானும் பழைய 1 பைசா, 5 பைசா எல்லாம் சேகரித்து வைத்து இருந்தேன்.
ReplyDeleteஅங்க இங்க வீடு மாறியதில் எல்லாம் எங்கே வைத்தேன்னு தெரியல
தொடர்ந்து சேருங்க ஜலீ. அது எல்லாம் திரும்ப கிடைக்கும் போது சேமிப்பில் சேர்த்துவிடலாம்.
Deletewowww...சேகரிப்புக்கள் அனைத்தும் அழகு,அருமை...:)
ReplyDelete