ஆசிரியத் தோழி ஒருவர் தனது உறுதிபூசுதலுக்கு சக ஆசிரியர் ஒருவரை sponsor ஆகத் தெரிந்திருந்தார்.
அவருக்கு மரவேலையில் ஈடுபாடு அதிகம். வித்தியாசமான இந்த சிலுவையை அன்பளிபாகக் கொடுப்பதற்காகத் தயார் செய்ய ஆரம்பித்தார். அவ்வப்போது முன்னேற்ற நிலையை அபிப்பிராயங்களுக்காக என்னோடு பகிர்ந்துகொள்வார்.
அளவான நியூஸிலாந்து ரிமு மரக் குற்றியில் குறிப்பிட்ட அந்த சிலுவையின் அளவுக்குக் குடைந்து அதனுள் படத்தை ஒட்டினார். ஒட்டுவதற்கு ஒரு வகை ஸ்ப்ரே க்ளூ பயன்படுத்தியதாகச் சொன்னார். அது கடதாசியை நனைக்காமல் சுருக்கங்கள் இல்லாமல் ஒட்ட உதவுமாம்.
பிறகு படத்தை மறைத்து வைத்துக் கொண்டு sand paper கொண்டு தேய்த்துச் சீராக்கினார். Rimu பலகைக்கு varnish கொடுக்கத் தேவையில்லை. சாதாரண சமையல் எண்ணெயைத் துணியில் தொட்டுப் பூசி தேய்த்துவிட்டால் போதும்.
இறுதி விளைவு நாங்கள் நினைத்தபடியே அழகாக வந்தது.
அழகான அந்த அன்பளிப்புக்கு பொருத்தமாக ஒரு பெட்டி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம்.
அளவான நியூஸிலாந்து ரிமு மரக் குற்றியில் குறிப்பிட்ட அந்த சிலுவையின் அளவுக்குக் குடைந்து அதனுள் படத்தை ஒட்டினார். ஒட்டுவதற்கு ஒரு வகை ஸ்ப்ரே க்ளூ பயன்படுத்தியதாகச் சொன்னார். அது கடதாசியை நனைக்காமல் சுருக்கங்கள் இல்லாமல் ஒட்ட உதவுமாம்.
பிறகு படத்தை மறைத்து வைத்துக் கொண்டு sand paper கொண்டு தேய்த்துச் சீராக்கினார். Rimu பலகைக்கு varnish கொடுக்கத் தேவையில்லை. சாதாரண சமையல் எண்ணெயைத் துணியில் தொட்டுப் பூசி தேய்த்துவிட்டால் போதும்.
இறுதி விளைவு நாங்கள் நினைத்தபடியே அழகாக வந்தது.
அழகான அந்த அன்பளிப்புக்கு பொருத்தமாக ஒரு பெட்டி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம்.
அவர்களுக்காக நான் தயாரித்த பெட்டி இது.
உள்ளே அளவாக bubble wrap துண்டு ஒன்றை வெட்டி வைத்து...
அதன் மேல் சிலுவையை வைத்து...
பொதி செய்தோம்.
இமா!..
ReplyDeleteஅன்பளிப்புப் பெட்டியும் அந்தச் சிலுவை - மர வேலைப்பாடும் அற்புதம்..!
உண்மையில் உங்களினதும் உங்கள் நண்பியினதும் கைவேலை மிக மிக அருமை!
பார்க்கும் எனக்கே மனது நிறைவாக இருக்கின்றது.!!
அதைப் பெறுபவரின் மகிழ்ச்சிக்கு எல்லை..
சொல்லில் அடங்காது.!!
வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்!
:-) வாங்க இளமதி. _()_
Deleteஒழுங்காக உலகத்தை ஓட்ட வேணும் என்று நினைச்சுக் கொண்டு இருக்க, அதிராட போஸ்ட் வந்துது. போஸ்ட் போட்டாச்சு. மாசம் ஒரு போஸ்ட்டாவது போட வேணும் என்று இருக்கிறன். பார்க்கலாம். :-)
//உங்கள் நண்பியினதும் கைவேலை// நண்பர் அவர்.
//பெறுபவரின் மகிழ்ச்சிக்கு எல்லை..
சொல்லில் அடங்காது.!!// கடையில எத்தனை பெறுமதியான பொருளாக வாங்கிக் கொடுத்தாலும் எம் கையால் செய்யும் போது அழகு என்பது ஒரு பக்கம் இருக்க அவருக்காக செலவளித்த நேரம் = அன்பு என்பது முக்கியமான விஷயம்தான். தோழியின் சந்தோஷத்தைச் சொல்ல இயலாது. :-) ஒன்றிரண்டு வருடங்களில் நம்மில் ஒருவரோ அல்லது மூவருமோ மாற்றம் பெற்று வேறு பாடசாலைகளுக்குப் போய்விடக் கூடும். இந்த அன்பளிப்பு எப்பொழுதும் எங்களை தோழிக்கு ஞாபகப்படுத்தும். எங்களை இணைத்து வைத்திருக்கும். :-)
awesome..!
ReplyDelete:-) மிக்க நன்றி அக்கா.
Deleteஅற்புதம் சகோதரியாரே
ReplyDeleteபாராட்டுக்கு என் அன்பு நன்றிகள் ஜெயக்குமார். :-)
Deleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்.
Deleteஆமாம், உங்கள் வலைப்பூவில் என்னால் கருத்து பதிவிட இயலவில்லையே! என்ன காரணம் என்று புரியவில்லை. ;(
கலைநயத்தோடு உள்ள அழகான பரிசு...... பெட்டி செய்த விதம் அருமை... வாழ்த்துகள்..............
ReplyDeleteபாராட்டுக்கு என் அன்பு நன்றிகள் அனுராதா. :-)
Deleteஆஹா மிக அருமை. உண்மையிலயே அந்தப் பெட்டி நீங்கதான் செய்ததோ இமா? யாருடைய கெல்ப்பும் இல்லாமல்?.. சூப்பர். நல்ல ஐடியாவும்கூட.
ReplyDelete//உண்மையிலயே அந்தப் பெட்டி நீங்கதான் செய்ததோ இமா?//
Deleteஹா! இது என்ன கேள்வி! அந்த லிங்கில் போய் பார்க்காமல்... கிட்னியை யூஸ் பண்ணி... தச்சுவேலை என்று நினைச்ச மாதிரி இருக்கே அதீஸ்!! ;D
//யாருடைய கெல்ப்பும் இல்லாமல்?.// இல்லாமல்தான். இதுக்கெல்லாமா ஹெல்ப் தேவை! ;)
நன்றி அதிரா. ;)
karrrrrrrrrrrrrrrrrr அப்போ இது தச்சு வேலை இல்லையா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)
Delete:-)
Deleteரொம்ப அழகாக உள்ளது இமா. நிச்சயம் பெற்றவரின் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. வாழ்த்துகள் உங்களுக்கும் தோழிக்கும்.
ReplyDelete:-) மிக்க நன்றி கீதா. எப்பொழுதும் அலுவலாக இருக்கிற நீங்கள் நேரம் எடுத்து இங்கு வந்து படிப்பது பெரிய விஷயம். சந்தோஷம் கீதா.
Deleteமிக அழகாக இருக்கு இமா.
ReplyDelete//மாசம் ஒரு போஸ்ட்டாவது போட வேணும் என்று இருக்கிறன். பார்க்கலாம். :-) // அது!!
அருமையான வேலைப்பாடு. உங்களிடம் இப்படியான சிந்த்னைப் பொறுமைக்கு நானும் டியூசன் படிக்க வேண்டும் டீச்சர்.
ReplyDeleteட்யூஷனா! :-) வாங்கோ, வாங்கோ. :-)
Deleteஇனித்திடும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் இமா!
ReplyDelete