அந்த நாட்களில் ஞாயிறு தவிர வாரம் மூன்று நாட்கள் இந்தக் கடையிலும் மூன்று நாட்கள் இப்போது வேலை பார்க்கும் பாடசாலையிலும் உத்தியோகம். தொடர்ந்து வந்த நாட்களில் பாடசாலையில் இன்னொரு செடியில் இதே புழுக்களை அவதானித்தேன்.
பிற்பாடு பல விடயங்கள் தெரிய வந்தது. செடியில் விளையும் காய்களை நீரில் போட்டால் அன்னம் போல் மிதக்கின்ற காரணத்தால் அது 'ஸ்வான் ப்ளாண்ட்'. இரண்டு வகைகள் உண்டு. இரண்டாவது வகை நெருப்பு வர்ணப் பூக்களை உடையது. இவற்றில் அன்னங்கள் உருவாவதில்லை. இரண்டிலும் எருக்கலை வித்துகள் போல் குஞ்சமுள்ள வித்துக்கள் உற்பத்தியாகும்.
இந்தத் தாவரத்தில் ராஜவண்ணத்துப்பூச்சிகள் முட்டை இடும். அவை குடம்பி நிலையில் இதன் இலையை உணவாகக் கொள்ளும்.
சொந்தமாக வீடு வாங்கியதும், பாடசாலையிலும் கடையிலும் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு நானும் செடி ஒன்றை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். முதல் வருடம் விபரம் தெரியாமல் உருவான அனைத்துப் புழுக்களையும் வளர விட அனைத்து இலைகளையும் தின்று தீர்த்து விட்டு தீடீரென்று ஓர் நாள் அனைவரும் இறங்கி புற்தரை முழுக்க ஓடித் திரிந்தார்கள். செபா அம்மா பார்த்து "என்ன இவங்கள்? சுனாமிக்குப் பயந்து ஓடுற மாதிரி ஓடுறாங்க?" என்றார்.
ரூத், இப்படியான சமயங்களில் பூசணிக்காய் ஒரு துண்டு வாங்கிக் குடலோடு கொடுக்கச் சொன்னார். புழுக்கள் விரும்பியதாகத் தெரியவில்லை. 'moth plant' (இது கொடியாக வளரும் ஓர் களை.) மேல் கொண்டு போய் விடுவேன். அதில் பால் இருக்கும். பிடிக்காவிட்டாலும் சாப்பிடுவார்கள்.
வேறு எங்காவது புழுக்கள் இல்லாமல் ஸ்வான் செடிகள் இருப்பதாகத் தெரிந்தால் அந்த வீடுகளுக்குச் சிலரைத் தத்துக் கொடுத்து விடுவதும் உண்டு.
ஒரு நாள் வீட்டுக்கு வந்த மூத்தவரது தோழர் "இமா, இவை குளவிகளைக் கவரும், பத்திரம்," என்று எச்சரித்தார். அவை கும்பிடுபூச்சிகளையும் கவர்ந்தன. புழுக்களின் எண்ணிக்கை குறைந்தமை என் கவனத்தைக் கவர்ந்தது. ;( இறுதியாக க்றிஸ்ஸும் நானுமாக ஆலோசனை செய்து சுற்றிலும் ப்ளாஸ்டிக் வலை அடித்து ஒளி ஊடுருவக் கூடிய வகைக் கூரை எல்லாம் அடித்து ஒரு பெரிய கூடு அடித்து எடுத்தோம். கிட்டத்தட்டப் ஒரு அலமாரி போல இருந்தது. இரண்டு கதவுகள், உள்ளே ஒரு தட்டு, தூங்கும் (நித்திரை கொள்ளாது.) உணவுத்தட்டு, ஸ்வான் செடிகள், பூஞ்செடிகள் என்று அழகாக அமைந்தது வீடு.
பிறகு எல்லாம் நலமாய்ப் போய்க் கொண்டிருந்தது. இந்த வருடம் ஆரம்பத்தில் ஏராளமான வண்ணத்துப் பூச்சிகள் உருவாயின. பகலில் அவை தோட்டத்தில் இருந்த நாவல் நிறப் பூச்செடியில் தேனருந்துவதும் பட படவெனக் குறுக்கும் நெடுக்கும் பறப்பதும் அழகுக் காட்சிகள்.அவற்றின் நிழலும் பறக்கும்.
நினைவு இருக்கிறதா? ஒரு முறை சொன்னேனே, சிலர் உணவு போதாமல் இறந்தமை பற்றி. இப்போதான் அறிந்து கொண்டேன். காரணம் அதுவல்லவாம்.
Ophryocystis elektroskirrha (Eo)என்கிற வகை ஒட்டுண்ணித் தாக்கம்தான் காரணம் என்பதைத் தற்செயலாக அறிந்தேன்.
இந்த வருட ஆரம்பத்தில் இணைந்த புதிய ஆசிரியை ஒருவர் 'butterfly tagging' என்று ஒன்று இருப்பதாகச் சொன்னார்.
எங்கள் பாடசாலையில் reciprocal reading என்று ஒரு செயற்திட்டம் அமுலில் உண்டு. அதற்காக ஒரு வகுபிற்குத் தெரிவு செய்யப்பட்ட கட்டுரை இது பற்றிய தகவல்களைக் கொண்டிருந்தது. இதில் மிகவும் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால், அந்தப் படங்களில் கொடுக்கப்பட்டிருந்த வண்ணத்துப் பூச்சிக் கூடுகள் நாங்கள் தயாரித்தது போலவே இருந்தன. அதே வலைகள், நிறம் கூட ஒன்றுதான்.
ஒரு படத்தில் இருந்த வண்ணத்துப் பூச்சியின் உடலில் தெரிந்த ஸ்டிக்கரில் ஓர் வலைத்தள விலாசம் தெரிந்தது, குறித்து வந்தேன். மேலும் புதிய பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.
நானும் 'டாகிங் ' திட்டத்தில் இணையலாம் என்று இருக்கிறேன்.
அதற்கு முன்... கூட்டைத் தொற்று நீக்க வேண்டும். புதிய தாவரங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். ஏற்கனவே செய்த தப்புக்களை மீண்டும் செய்யக் கூடாது. நானே பரப்பும் காரணியாக இருக்கக் கூடாது. சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.
நிறையச் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. பிடித்தால் கொடுத்துள்ள தொடர்புகளில் நுழைந்து மேலதிக விபரங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் பார்வைக்காக, இன்று பிகாசா ஆல்பத்தில் மேலும் சில படங்களை இணைத்திருக்கிறேன்.
இவ்வளவு விஷயம் உள்ளதா..பொறுமையாக நேரம் எடுத்து கொண்டு லிங்க் கொடுத்து, எங்களுக்காக பதிவு போட்டதற்கு மிகவும் நன்றிகள்...வண்னத்துபூச்சை படங்கள் அனைத்தும் சூப்பர்ப்...
ReplyDeleteWow. They are so beautiful. Please find yellow and blue / yellow and black butterflies this time. :) Thank you
ReplyDeleteWhat do you do to these butterflies immamma.
ReplyDeleteஅருமையான பதிவு இமா..பட்டாம்பூச்சிகளை இவ்வளவு பொறுமையா வளர்க்கறீங்க,அதற்கு பக்கபலமா உங்கள் குடும்பமும் இருக்கு..கட்டாயம் ஒரு நாள் உங்க வண்ணத்துப்பூச்சி தோட்டத்துக்கு வருவேன்! :)
ReplyDeleteதாங்ஸ் கீதா. ;) இதை விடவும் இருக்கு. போட்டு போரடிக்க வேணாமே என்று விட்டாச்சு. ;)
ReplyDeleteஇனி நீங்களே தேடிப் பார்க்க வேணும். ;)
இவங்க மட்டும் தான் இங்க இருக்கிறாங்க அனாமிகா. ;( அதுக்கு பட்டஃப்ளை க்ரீக் போக வேணும். படம் தேடிப் பார்த்தேன். நன்றி. ;)
மகி, //உங்க வண்ணத்துப்பூச்சி தோட்டத்துக்கு வருவேன்// வாங்கோ, வாங்கோ. ;) எப்ப வர்ரீங்க? (ம். அதுக்குள்ள இட்லி செய்யப் பழகீர வேணும்.)
வருகைக்கு நன்றி . மீண்டும் வருக. ;))
டாக்டர் இமா வாழ்க..!! வாழ்க..!! ஒரு ஆராய்சியே செஞ்சிருக்கீங்க .
ReplyDeleteரொம்பவும் பொருமை சாலிதான் நீங்க ..
தாங்ஸ் ஜெய்லானி. பின்ன, நாங்க அப்படித்தான். ஏதாவது தெரியாட்டி நாமாவேதான் ஆராய்ச்சி பண்ணுவோம். டைகரை எல்லாம் தொந்தரவு பண்ண மாட்டோம். ;))
ReplyDeleteஹா ஹா டாக்டர் இமா பொருட் பிழை விட்டுட்டாங் :)
ReplyDelete//இங்கு செஞ்சிலுவைச் சங்க op shop ல் தொண்டராக வேலை பார்க்கும் நாட்களில் அங்குள்ள தோட்டத்தில் வினோதமான ஓர் செடியை அவதானித்தேன்.// அது நீலச்சிலுவைச் சங்கம் தானே ??? ;)))
பி.கு: இவ்வளவு உழைப்பா ? சூப்பர். பாராட்டுகள் !
இம்ஸ், அழகா இருக்கு. நல்ல பொறுமையான குடும்பம் உங்கள் குடும்பம்.
ReplyDeleteநானும் வருவேன். இட்லி வாண்டாம். chef இன் சமையல் மட்டும் சாப்பிடுவேன்.
இமா! சூப்பர்! இவ்வளவு அருமையா சொல்ல பொறுமையும் வேண்டும்... புதிய முயற்சிக்குஎனது வாழ்த்துக்கள்...
ReplyDeleteசெஞ்சிலுவை சங்கம் = ரெட்கிராஸ்....
ஹைஷ் அங்கிள் எப்பவும் விவேக் நினைப்பேதானா
ஜீனோ சா தி ஆல்பம் ஆன்ரீ..நீங்கோ குடுத்திருக்க லின்க் அல்லாம் பொறுமையா படிக்கோணும்..டைம் கிடைக்கறப்ப ஜீனோ படிச்சி பாக்கும். டாங்ஸ்!
ReplyDeleteபட்டாம்பூச்சீ'ஸ் அல்லாம் அயகா இருக்கு! உங்கட கையிலே வந்து உட்கார்ந்திருக்கும் போட்டோஸ் அல்லாம் பார்த்தா ரெம்ப ஆச்சர்யமா இர்க்கு. ஒரு பூச்சிய புஜ்ஜிக்கு அனுப்புங்கோவன்,ஷீ வில் பீ சோ ஹேப்பி! ;)
அனாமிகாவுக்கு,
ReplyDelete//What do you do to these butterflies//
சுதந்திரமாகப் பறக்க விட்டுவிடுவேன். நான் வளர்க்க ஆரம்பித்த காரணம் அவற்றின் அழகு + வளரும் நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம்.
பிற்பாடு கும்பிடுபூச்சிகளும் குளவிகளும் தாக்க ஆரம்பிக்கவும் கூடு அமைத்தேன். பூச்சிகளாக உருமாறியதும் வெளியே விட்டுவிடுவேன்.
இனிமேல் வேலை அதிகம். ;) Oe பற்றி அறிந்து கொண்டதால் ஒவ்வொரு புழுவையும் தனியாக வளர்க்க வேண்டும். இலைகள் + பாத்திரங்களைத் தொற்று நீக்க வேண்டும். ஒவ்வொருவரையும் தொடும்போது தனித் தனிக் கையுறைகள் பாவிக்க வேண்டும். ஒட்டுண்ணித் தொற்று உள்ளவர்களைப் பொருத்தமான விதத்தில் நீக்க வேண்டும். ;))
அப்பா! ஒரு நொடி பயந்தே போய்விட்டேன் ஹைஷ்.
ReplyDeleteஇல்லை. அது செஞ்சிலுவைச் சங்கம்தான். ;) மிக்க நன்றி.
``````````
நன்றி வானதி. பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு கெதியா வாங்கோ. ;) 3 எலி வேணுமாம். ;))
``````````
வாங்கோ இலா. வாழ்த்துக்கு என் நன்றிகள். ;)
ம். பொறுமையா படிச்சுப் பாருங்க பப்பி.
ReplyDelete//ஒரு பூச்சிய புஜ்ஜிக்கு அனுப்புங்கோவன்,ஷீ வில் பீ சோ ஹேப்பி! ;) // ஆகட்டும்.
(கிக் கிக்) ;)))
சொற்பிழை.... பொருட்பிழை.. இரண்டும் கூட்டி... சுந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்....தரத் தமிழினில் வாழ்த்துகிறேன் இமா... தொடரட்டும் உங்கள் ஆராட்சி.
ReplyDeleteபி.கு:
இப்போ எதுக்கு அவசரமாக லைவ் ரபிக் போட்டீங்கள்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அடிக்கடி எட்டிப்பார்க்கமுடியாமல் பண்ணிட்டீங்களே... வர வர நாட்டில சுகந்திரமே.. இல்லாமல் போச்சு..(எனக்கு நானே சொல்லிக்கொண்டு போறேன்..).
//நன்றி வானதி. பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு கெதியா வாங்கோ. ;) 3 எலி வேணுமாம். ;)) //
ReplyDeleteபிள்ளைகளையும் கூட்டி வந்து... ஏன் வீணா ரிஸ்க் எடுக்கோணும். நான் மட்டும் வருகிறேன்.
//இப்போ எதுக்கு அவசரமாக லைவ் ரபிக் போட்டீங்கள்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அடிக்கடி எட்டிப்பார்க்கமுடியாமல் பண்ணிட்டீங்களே... வர வர நாட்டில சுகந்திரமே.. இல்லாமல் போச்சு..//
இன்னும் நல்லா கேளுங்கோ, அதீஸ்.
//லைவ் ரபிக்//
ReplyDeleteஅதுவா அதீஸ்! சும்மா இதில என்ன இருக்கும் என்று போட்டுப் பார்த்தன். பிறகு எடுக்க நினச்சு வந்து பார்க்க.. அட! இலங்கையில இருந்தும் ஒரு பார்வையாளர். சந்தோஷமா இருந்துது. அப்பிடியே விட்டு விட்டன். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி.. நீங்கள் அதுக்குள்ள போய் செட்டிங் மாற்றலாமாமே. பாருங்கோ.
சுந்தரத் தமிழில் வாழ்த்தினதுக்கு மெத்தப் பெரிய உபகாரம்.
//நான் மட்டும் வருகிறேன்.// ம். மூன்று பேர் பங்கும் உங்களுக்கே. ;)
ReplyDeleteமேல அதீஸுக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும். குறை நினையாமல் ஒருக்கா நீங்களே மாற்றி விடுங்கோ வாணி.
அப்ப எல்லாரும் மாத்தித் தான் சுத்திட்டு இருக்கினமா?? :))
ReplyDeleteஇமா.. பட்டாம் பூச்சி வாழ்க்கை இம்புட்டு கஷ்டமானதா? இதுக்கு என் வாழ்க்கையே பெட்டர்ன்னு தோனுது :))
உங்க முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.. அப்பப்போ அப்டேட் சொல்லுங்கோ..
சந்தனாக்கா.. க.கா.போ. ;)))
ReplyDeleteஉங்களுக்கு விருப்பம் இல்லாட்டி.. நீங்கள் அதுக்குள்ள போய் செட்டிங் மாற்றலாமாமே. பாருங்கோ.
ReplyDelete/// இமா, எல்லோருமே மாத்திடப்போகினமே:), இனிமேல் லைவ்.... க்கு வேலையே இருக்காதாக்கும்.
//அப்ப எல்லாரும் மாத்தித் தான் சுத்திட்டு இருக்கினமா?? :))/// சந்து நீங்க ஒரு அப்பாஆஆஆஆஆவி:).... பேபி அதிராவைப்போல...:).
வாணீஈஈஈ வாணீஈஈஈஈஈ.... ஆரும் எலிபற்றிக் கதைச்சவையோ???:).
ReplyDeleteவண்ணத்துப்பூச்சிப் பூங்கா போன ஞாபகம் வருகிறது. மூன்று தடவைகள் வெவ்வேறு பூங்காக்கள் போயுள்ளேன். ஒவ்வொரு தடவையும் ஒன்று அல்லது இரண்டு வண்ணத்துப் பூச்சிகள் என் கை அல்லது முதுகில் மொய்த்து விடும். கையில் என்றால் நான் அவற்றை மெதுவாகப் பறக்கச் செய்திடுவேன். முதுகில் இருக்கும் போது பின்னால் வருவபர் சொன்னதும் தான் கையை அசைத்து அதைப் பறக்க செய்வேன். அவற்றில் தான் எத்தனை வகைகள்
ReplyDeleteஅழகோ அழகு.
வாங்கோ செபாம்மா. ;) என்ன பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க முடியேல்லயோ!! ;)
ReplyDeleteஎன்ன, 'பட்டர்ப்ஃளை க்ரீக்' போன நேரம் எடுத்த உங்கட படத்தை இங்க போட்டு விடுவோமா? ;)))
எச்ச்ச்ச் உடனடியாக “டொம்” என்று போடாதீங்கோ:) மெதுவா வலிக்காம போடுங்கோ :)))
ReplyDeleteவாழ்க வளமுடன்
ஆஹா!! ம். நான் போட மாட்டனே. ;))
ReplyDeleteநோ 'டொம்'. நோ 'மெத்'. ;)
iiiiiiiii
ReplyDeletepattam pochi,patam pochi patam pochi..
padika neram ellai piragu vanthu padithukondu erukren..
varata...
ம். சரி, மெதுவா வந்து வாசியுங்க. ;)
ReplyDeleteactually enaku thamilu varathu...
ReplyDeleteonnumey puriavillai..annal konjam purinthathu..
eppdui....
கொஞ்சமாவது புரிந்தால் சரி. ;)
ReplyDelete