Monday, 5 July 2010

அப்பா செய்த மேடையில்

அப்பா செய்த மேடையில் இமா பாடிய பாடல் இது. ;)

எங்கே போறே எங்கே போறே
வண்ணாத்திப்பூச்சி?
பூங்கா தேடிப் பறந்து போறேன்
ஆடிப் பாடவே.

தூங்குகின்ற பூவை ஏனோ 
தொட்டுப் பார்க்கிறே?
தேங்கும் தேனைக் குடித்து வயிற்றை 
நிரப்பிக் கொள்ளவே.

அழகு வண்ண இறக்கை தன்னை
யாரே தந்தது?
பழக இனிக்கும் இறைவன் அன்பாய்ப்
பரிசாய்த் தந்தது.

உழவர் பயிரை உண்டு செல்லல்
உனக்கு நீதியோ?
அழகாய்ப் பலனைத் தந்து செல்வேன்
அதற்கு நானுமே.    
^^^^^^^^^^^^^^^^^^^^ 
ஒரு 'புகைப்' படம் கூட இருந்தது. ஊரில் விட்டு விட்டு வந்து விட்டேன் போல. காணோம் இங்கு. இத்தனை வருடங்கள் கழித்தும் நினைவுகள் மட்டும் புகை படியாது இருக்கின்றன. அழகான ரோஜா வண்ணச் சட்டை, ஒரு செட்டை... ;)

இதில் இமா வண்ணத்துப்பூச்சி. பாடலைக் கற்றுக் கொடுத்த என் பிரியமான ஆசிரியை திருமதி. சௌந்தரலிங்கம் அவர்கள் மூன்று வருடங்கள் முன்பு கொழும்பில் காலமானார். ;( அவரது பிள்ளைகளோடு என் தாயாருக்கு இன்னமும் தொலைபேசித் தொடர்பு இருக்கிறது.

18 comments:

 1. சிரிக்க வைக்கிறீங்கள் ஹைஷ். ;))
  போஸ்டிங் படிக்காமல் எப்ப பார்த்தாலும் என்ன 'ஐ வட', 'யூ வட'!!!
  வீட்டில வடை சுடுறதே இல்லையோ!! ;)))
  நான் இப்பதான் வடைக்கு ஊற வைச்சு இருக்கிறன். ;)

  ReplyDelete
 2. இமா, பாடல் அருமை. நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு.
  இதைப் படிக்க தான் வாணி குழுவினர் என்று அழைத்தனீங்களோ?
  குழுவில் நான் மட்டுமே இருக்கிறேன். வேறு யாராவது என் குழுவில் இணைய விருப்பம் இருந்தால் சொல்லவும்.

  ReplyDelete
 3. 3 கருத்துரைகள் என்று காட்டுகிறது. ஆயினும் எனக்கு மூன்றாவது கருத்துரை தெரியவில்லை. போட்டு இருப்பது யார் என்பதும் தெரியவில்லை. ;(

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. தாம் ஏறினால் உடைந்துவிடும் எண்டு கவலைப்படும் அளவுக்கு, அவ்வளவு கெனதியாக இருந்தீங்களோ குட்டி இமா அவர்களே? :)) (இதுக்கு குட்டி இமா தான் பதில் சொல்லணும்.. பெரிய இமா இல்ல)

  ReplyDelete
 6. அயகான பாட்டூஊஊஊஊ.

  அந்தப் பெரீஈஈஈஈய சட்டையோட எடுத்த “புகை” ப்படத்தை மிஸ் பண்ணிட்டீங்களே... இமா.

  முன்பு இப்பதிவைப் போட்டுவிட்டுப் போய்விட்டேன், இப்போ பார்க்கிறேன் காணவில்லை.. அதுதான் ரிப்பீட்டு....

  //நான் இப்பதான் வடைக்கு ஊற வைச்சு இருக்கிறன். ;) /// சத்தியமா எனக்கு வாணாம்:))).

  ReplyDelete
 7. பார்த்தீங்களோ இமா, நான் என் முதல் பதிவு போடும்போது இரு பதிவுகள் மட்டுமே இருந்தது, வாணியினது இல்லை. நான் அனுப்பிவிட்டுப் போய்விட்டேன். பின்பு வந்தேன், என் பதிவும் இல்லை வாணியின் பதிவும் இல்லை.

  அப்போ போகவில்லையாக்கும் என ஒரு ஸ்மைலி அனுப்பினேன் போனது, பின்பு 3 வது பதிவை அனுப்பினேன், அப்போ வாணியினதும் என் 3 பதிவுகளும் இருந்தன.

  முதலாவதை டிலீற் பண்ணிவிட்டு, போய்விட்டேன். இப்போ பார்க்க சந்தனாவினுடையது எனக்கு மேலே இருக்கு.... ஒண்ணுமே பிரியலே...

  ஏதோ ஆ.......வீஈஈஈஈஈ உலாவுதோ...

  பி.கு:
  நான் ஏற்கனவே “பெரியம்மா”வின் குழுவிலேதானே இருக்கிறேன்..... மீ... எஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 8. இது கூகிள் சர்வர் பிரச்சனை நான் அப்புறமா வரேன்

  :-))

  ReplyDelete
 9. இப்போதான் ஓரொரு இடமா போய்ப் படித்துட்டு வரேன்..அம்மாவும் மகளுமா கலக்கறீங்க இமா! :) இத்தனை வருஷங்களாகியும் பாடல் மறக்காமல் இருக்கே..வெண்டைக்கா நிறைய சாப்பிடுவீங்களோ?

  கேரட் பட்டாம்பூச்சியும் அழகா இருக்கு. புது கேமரா வந்தாச்சோ? ;)

  ReplyDelete
 10. எங்கே என் வட %%%%% :)

  பி.கு: இது ஏதோ வடைக்காக நடந்த உள்நாட்டு விவகாரம் போல் இருக்கு :)

  ReplyDelete
 11. அப்பாடா! ஒரு மாதிரி வாணியின் கருத்துரை இன்று கண்ணில் படுகுது.

  வேறு யாராவது வாணியின் குழுவில் இணைய விருப்பம் இருந்தால் சொல்லவும்.

  (எனக்குப் பூஸார்ட்ட 'பெரியம்மா' யார் எண்டு விளங்கேல்ல இன்னும்.)

  ReplyDelete
 12. author போஸ்டிங்கை ரிமூவ் பண்ணீட்டுச் சிரிக்கிறா. ம்.
  மிஸ் பண்ணேல்ல. அது செபா வீட்டில பத்திரமா இருக்கு. கெட்டிக்காரி. வடை வேணாம் எண்டு முதலே சொல்லிட்டீங்கள். ;)))

  //ஆ.......வீஈஈஈஈஈ// இல்லை. வீ ஆர் (we are) உலவுகிறோம். ;)

  ReplyDelete
 13. //இதுக்கு குட்டி இமா தான் பதில் சொல்லணும்.. பெரிய இமா இல்ல// ம். :)

  ReplyDelete
 14. ஜெய்லானி என்னவாவது டிப்ஸ் சொல்லுவீங்கள் எண்டு பார்த்தன், இல்லையா? ஹூம். போன் பண்ணினால் சொல்லுவீங்களோ!! இல்லாட்டி... நானே டைகர்ட்ட கேட்கிறன்.

  ReplyDelete
 15. மகி,
  இரண்டு கேள்விகளுக்கும் பதில் 'இல்லை'.

  அது சொல்லித் தந்த ஆளுக்குத் தான் பெருமை போய்ச் சேர வேண்டும். ;)

  ReplyDelete
 16. //எங்கே என் வட %%%%% :)

  பி.கு: இது ஏதோ வடைக்காக நடந்த உள்நாட்டு விவகாரம் போல் இருக்கு :)//

  இதுக்கு நான் என்ன சொல்றது!!!! ;)

  ReplyDelete