Thursday 5 August 2010

இலவச இணைப்புகள்

புதிய இணைப்புகள் பற்றிச் சொன்னேனே. இவர்கள் தான் அவர்கள்.

என்ன! படத்தைப் பார்த்ததும் Ahhh!! my!! என்று வாயில் விரல் வைக்கத் தோன்றுகிறதா!! ;)

முன்னால் முகத்தைக் காட்டுபவர் எங்கள் பழைய குட்டியர் தான். இப்போ அடையாளம் தெரிந்து கொள்வதற்காக Alfie (Alfred Pennyworth) எனப் பெயரிடப் பட்டிருக்கிறார். இவர் 2 வருடங்களும் 8 மாதங்களும் வயதானவர். இவர்தான் இருக்கும் எல்லோரிலும் அழகானவர்.

பக்கத்தில் வாலைக் காட்டி இருப்பவர் 8 வயது Meryl.

இவர்களோடு கோபித்துக் கொண்டு தனியே இருப்பவர் 6 வயது Arney (Arnold Schwarzenegger)

அல்ஃபிக்கு புது வரவுகள் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. முதல் நாளே மெரில் வலது பின்னங் காலில் ஒரு கவ்வு. சவ்வு கிழிந்து ரத்தம் வந்தது. இத்தனை நாள் அனுபவித்த சுகத்தில் பங்கு போட ஆட்கள் வந்தால் சும்மா விடலாகுமா! 

பழைய ஃபில்டர் மரித்துப் போயிற்று. புதிது தேடுகையில் ஒன்று வாங்கினால் இரண்டு ஆமை இலவசம் ;) என்று விளம்பரம் கண்டதில் இவர்கள் வந்து இணைந்து இருக்கிறார்கள்.

30 comments:

  1. ஹைஷ்1265 August 2010 at 03:38

    ஒன்று வாங்கினால் இரண்டு ஆமை இலவசம் ;)//ஒரு அர்னால்ட் வாங்கினா இரண்டு ஜூலி ப்ரீயா???

    ReplyDelete
  2. ஆ! இமா ! எனக்கு எங்க ஆமை பார்த்தாலும் உங்க நினைவு தான்....
    வடை சாப்பிட வந்தவருக்கு ஜூலி எங்க கண்ணில பட்டாள் ??? ஜூலி ஹூ?? இமா வீட்டில மெர்ரில் தானே இருக்கா??

    ReplyDelete
  3. இலா அர்னால்ட் மட்டும் Ah my இலவசம் மட்டும் அந்த ஏஞ்சலினா... செல்லமா ஜூலினு :))

    ReplyDelete
  4. ஹைஷ் அங்கிள் .. இமா பிளாகில் ஜூலிக்கு :)) லதா மாமிக்கு தெரியுமோன்னோ ??!! எல்லாமே போட்டாக்ஸ்..நோ இயற்கை அழகு.. இதுக்கா ??!!

    ReplyDelete
  5. இலா நோ ஆமை இன் பாண்டி:) அறிவு திருகோவிலில் ஆசிரியை ஆகிட்டாங்கோ:))))

    ReplyDelete
  6. ஆ.... மை இருக்கு... வட எங்க இமா? விடமாட்டோமில்ல:)

    ReplyDelete
  7. எனக்கு முன்னாலயே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இப்ப க்ளியராச்சுது ஹைஷ் அண்ணே. அண்ணி ஐடீ தாங்கோ. அவங்களுக்கும் சிலது க்ளியராக்க வேணும். ;))

    இலா... அப்பிடித்தான். விடாமல் பதிலுக்குப் பதில் கேட்க வேணும். ;)

    //வட எங்க இமா?// காக்கா ('த'கர வரிசைல வாசியுங்கோ.) கொண்டு போய்ட்டார். ;))

    ReplyDelete
  8. //ஆ மை காட் பல்ப்...! //
    அப்பாடி! ஒரு மாதிரி பல்ப் பத்த ஆரம்பிச்சு விட்டது. ;))

    ReplyDelete
  9. என்னமா பேரு வச்சிருக்கீங்க ஆமைகளுக்கு!:):)
    புதுவரவுகளுக்கு வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
  10. இமா, எனக்கு எல்லா ஆமைகளும் ஒரே மாதிரி தான் இருக்கு/ தெரியுது. நீங்கள் Alfie, Meryl, & Arnold என்று பெயர்களும், வயதுகளும் கரீட்டா சொல்றீங்க?? எப்படி???

    ReplyDelete
  11. இமா.. மெரில் கேர்ளா.. இல்லை எல்லாமே பாய்ஸ் ஆ?? ரெண்டு ஜூலிஸ் (ஐ மீன் கேர்ள் ஆமைஸ் :)) )வாங்கி விட்டிருந்தா அல்ஃபி அமைதியாயிருப்பாரல்லோ? :))))

    ReplyDelete
  12. இமா இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் . பாருங்க ஆல்ஃபி கோவிச்சுட்டு போறார். அவருக்கு ஜோடியில்லையாம். சீக்கிரமா அவருக்கு பொண்ணு பாருங்கோ :)

    ReplyDelete
  13. ஆ மை காட்--enaku pidikathu..

    ReplyDelete
  14. enaiku ennaku vadai venam
    enaiku ennaku vadai venam
    enaiku ennaku vadai venam...

    ReplyDelete
  15. இமா மாமி நெட் அல்ட் + 2 ப்ரஸ் பண்ணுறப்போ ராங்காயிருக்கும் ரீ ஸ்டார்ட் பண்ண்ணுங்கோ சரியாயிடும்

    ReplyDelete
  16. அல்பி ஏன் இவ்வளவு சிறிதாக இருக்கிறார்?
    "ஒரு கவ்வு , சவ்வு கிழிந்து..." கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது.

    ReplyDelete
  17. அப்பாடா! சரியாகி விட்டது. ;)
    உதவிக்கு மிக்க நன்றி வசந்த். @}->--

    ReplyDelete
  18. ;) பெயர் வைத்தது மகனும் ஃப்ரெண்டும். லீகல் கார்டியன்ஸ் அவங்கதான் மகி. வாழ்த்துக்கு நன்றி.

    வாணி,
    ஒவ்வொருத்தர் ஒவ்வொரு அளவு. ;)

    எல்ஸ்,
    //மெரில் கேர்ளா.// ம்.
    //எல்லாமே பாய்ஸ் ஆ??// இல்லை.
    //ரெண்டு ஜூலிஸ்// அது கிளிக்கு வைக்கிற பேர். //வாங்கி விட்டிருந்தா// பிறகு பரம்பரைகளை என்ன செய்கிறதாம்!!

    ReplyDelete
  19. கவி.. சந்தனாவுக்குச் சொன்ன பதில் பாருங்கோ. ;)

    சிவாவுக்கு வடை வேண்டாமா? ;) சாக்லட்!

    செபா,
    //அல்பி ஏன் இவ்வளவு சிறிதாக இருக்கிறார்?// அவருக்குப் பக்கத்தில இருக்கிற ஆக்கள் பெரிதாக இருப்பதால். ;)
    உங்களுக்குச் சொல்ல மறந்து போனன் என்ன! வரேக்க பாருங்க.

    ReplyDelete
  20. உங்க செல்லங்களாஆஆஆ ....மைக்கும் பிடிக்கும் ஆனா அதுக்கு மைய பிடிக்குமான்னு தெரியது..ஹி..ஹி..

    ReplyDelete
  21. அதுக்கு பிடிக்கும், பிடிக்கும்.
    வந்து ஒருக்கா கை கொடுத்துப் பாருங்க. பிடிக்கும். ;))))))))))))

    ReplyDelete
  22. //அதுக்கு பிடிக்கும், பிடிக்கும்.
    வந்து ஒருக்கா கை கொடுத்துப் பாருங்க. பிடிக்கும். ;)))))))))))) //

    ஆஹா இந்த வில்லன் சிரிப்ப பார்தாலே வயிறு கலங்குதே...ஏதோ விஷயம் இருக்கு . எதுக்கும் ஒரு 20 அடி தள்ளியே நிக்குரேன் .அதான் சேஃப்டி எனக்கு

    ReplyDelete
  23. ;) மிக்க நன்றி ஆசியா. விரைவில் வந்து பெற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  24. ஆமையை ஃபன் சிட்டியில் பார்த்த பொழுது ஏனோ மனம் இஷ்டப்படவில்லை,உங்கள் பராமரிப்பில் அழகோ அழகு.

    ReplyDelete
  25. ஆசியா ,
    சொந்த நாட்டில் இமாவின் வீட்டில் பதின்மூன்று ஆமைகளும் தோட்டத்திலே
    பொரித்த ஐந்து குஞ்சுகளும் இருந்தன. அவற்றைப் பார்த்திருந்தால் நீங்கள் அசந்து
    போய் விடுவீர்கள். அத்தனை அழகு. இமாவிற்கும் ஆமைக்குமான தொடர்பு இமா
    ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போதே ஆரம்பமாகிற்று.

    ReplyDelete
  26. நன்றி ஆசியா. ;)

    ம்.. யாரிந்த செபா!! முன்னே பின்னே தெரியாத ஆளா இருக்கிறாங்களே!!

    ReplyDelete
  27. present imma, piraku varukiReen.

    ReplyDelete
    Replies
    1. ம்.. இன்னும் 'பிறகு' ஆகவில்லையா ஜலீ! ;)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா