Wednesday, 11 August 2010

பூவுலகில் பூ(னை)வை வேண்டிக் கொண்டமைக்கு இணங்க...

பூவுலகில் பூ(னை)வை வேண்டிக்கொண்டமைக்கிணங்க தொடரும் இது, இமாவின் உலகம்.

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
இமா

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? 
ஆம் (மாதிரி) ;)
இல்லை எனில் (ஏன், ஆம் மாதிரி எனில்) பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? (என்று நான் சொல்லக் கூடாதா!! எ.கொ.வ.இ!! நான் சொல்லுவேன்.)


அறுசுவையில் இணைய நினைத்த போது அங்கு ஏற்கனவே என் நடுப்பெயரில் யாரோ இருந்தார்கள் போல. பெயர்ப்பதிவு மறுக்கப்பட்டு விட்டது.
 
ப்ளான் B - என் கிறிஸ்தவப் பெயர் - தமிங்கிலத்தில் கொடுத்தால் 'வெற்றிலை' 'புகையிலை' நிலைதான். ;) எனவே, ஏறக்குறையத் தமிழாக்கமாக ஒரு புனிதமான பெயரைத் தெரிந்து இணைந்தேன். காவற்தெய்வம் கைவிட்டார். (நன்றி சந்தனா.) ஏற்கனவே இந்தப் பெயரில் தூயாவின்ட சமையல் கட்டுக்குப் போயிருக்கிறேன்.

ப்ளான்  C - மறக்காமல் இருக்க வேண்டி இமா.
திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொன்னால் போரடிக்கும் முன்னாலயே வாசிச்சு இருக்கிற ஆக்களுக்கு. எனவே தங்கள் பார்வைக்கு - பார்க்க பின்னூட்டம். ;)

பிறகு அறுசுவையில் பிரபலமாகிவிட ;) இமாவே இன்றுவரை நிலைக்கிறது. 
  
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

இப்படி எல்லாம் கேள்வி வரும் என்று தெரிந்திருந்தால் முன்பே குறித்து வைத்திருந்திருப்பேன். ;) 

பலரது இடுகைகளை ரசித்துப் படித்திருக்கிறேன். நான் வலைப்பூ ஒன்றுக்குச் சொந்தக்காரியாவேன் என்று நினைத்ததில்லை.
வலைப்பூவுக்கு இணையாகத்தான் 'எங்கள்' வட்டத்தில் பிகாசா ஆல்பங்கள் இருந்தனவே. ;)

பிறகு... அறுசுவை சகோதரிகள் நர்மதா, அம்முலு கொடுத்த ஊக்கம் & வாணியின் உதவி. (இங்கு முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவர்கள் நினைத்தது நான் கைவினைக் குறிப்புகளாகப் போட்டுத் தள்ளுவேன் என்று. நான் இடுவதோ!!! ;) அடுத்து - வாணியம்மா சொன்னாங்க, இது ஆரம்பிப்பது சுலபம். பராமரிப்பது சிரமம் என்று. 100% உண்மை. )

இங்கு எனக்குத் தெரிந்த 'தமிழர்' மத்தியில் வலைப்பூ பற்றி எனக்குத் தான் அதிகம்! தெரிந்திருந்தது. ;) இருப்பினும் பலமுறை முயன்று தோற்றேன். ;) ட்யூடோரியல் போட்டு இரண்டு நிமிடத்திற்கு மேல் கேட்க நேரம் கிடைக்காது. எதையோ தட்டுவேன். தடையாகத் தொலைபேசி கிணுகிணுக்கும் அல்லது வாயில் மணி ஒலிக்கும்.

புலம்பல் எல்லாம் வேண்டாம், ஒரு கோடை விடுமுறையில் ஓர் நாள் பார்க்கிறேன் இடுகைகள் இல்லாமல் கண்ணில் படுகிறது... 'இது,இமாவின் உலகம்'. புத்துணர்வு பிறந்தது. மெதுவே வேலைகள் நடந்தது. புத்தாண்டு அன்று விருந்தோடு திறப்புவிழா நிகழ்த்திவிட்டேன்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலம் ஆக வேண்டி ஆரம்பிக்காததால் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. யாரும் வருவார்கள் என்றும் எண்ணியது இல்லை. அம்மா செபாவிடம் கூடத் தெரிவிக்கவில்லை. என் உறவுகள் நட்புக்களுக்கு விடயத்தைச் சொல்லாமல் தொடர்பு அனுப்பி வைத்தேன். மின்னஞ்சல் முகவரியோடு இணைத்தேன். அறுசுவையில் என் ப்ரொஃபைலில் இணைத்தேன். அது சரியில்லை என்று தோன்றவும் பின்பு நீக்கிவிட்டேன். என் பின்னூட்டங்களைப் பிடித்துக் கொண்டு அறுசுவை உறவுகள் தன்னாலேயே வந்தார்கள். 

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? 
ம்ம்ம்... ;)

ஆம். - என்றால் ஏன்?
வேறு எதற்கு! என் நட்புகள் பார்ப்பார்கள் என்றுதான். ;))
அதன் விளைவு என்ன? 
பார்த்தார்கள். அறிந்து கொண்டார்கள்.கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
இல்லை. - என்றால் ஏன்?
பார்க்க வேண்டாம் என்றுதான். ;))

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா 
இல்லை, உண்மையில் பொழுது போதவில்லை. ;( உலகம் சுற்ற வேண்டுமே. (வேகம் குறைகையில் யாராவது வந்து உருட்டி உதவுகிறார்கள்.) ;)
அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இதுவும் இல்லை. ஆரம்பித்தமைக்கான சில காரணங்கள் 

1.வலைப்பூ என்றால் என்ன, எப்படி உருவாக்குவது, நிர்வகிப்பதெப்படி என்பது போன்றவற்றை அறிந்து கொள்ள விரும்பினேன். (குட்டி மாணவர்கள் கூட வலைப்பூ வைத்து இருக்கிறாங்க. நாம் அறிந்து வைத்திருக்காவிட்டால் எப்படி?? )

2. தமிழில் உரையாட உறவாட எனக்கொரு தளம் கிடைக்கும் என்னும் எண்ணம் பிடித்திருந்தது.

3. எல்லாவற்றையும் மறந்து தொலைக்கிறேன். என் எண்ணங்களைப் படங்களோடு பதிவு செய்து வைக்கலாம் என்பது.

4. ஒரு குட்டிக் கதை சொல்லட்டுமா! ஒருவருக்கு விபத்தாயிற்றாம். வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டாராம். பார்க்கப் போன உற்றார், உறவினர், இனபந்துக்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் கதை சொல்லி நொந்து போனாராம். பிறகு... தான் விபத்துக்குள்ளான கதையை ஒலிப்பதிவு செய்து கேட்பவர்களுக்கெல்லாம் போட்டுக்  காட்டினாராம். அது போல் தேவைப்படும் போது உற்றார், உறவினர், இனபந்துக்கள் &  நட்பு வட்டாரத்துக்கு 'லிங்க்' கொடுத்து விடலாம் என்பது.


7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
வலைப்'பூ' ஒன்று, அரும்பு ஒன்று. அனைத்தும் தமிழில்!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம்...
இல்லை. ஒரு குட்டி வட்டத்தில் சுற்றத்தான் நேரம் கிடைக்கிறது. அது பாதுகாப்பான வட்டமாக இருக்கிறது. எனவே இன்னமும் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகவில்லை.
அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்? 
இல்லை. (ஆமை வளர்த்தால் ஆளுக்கு ஆகாது என்பார்களே, அது இந்த இன ஆமையைத்தான். ;) ) 
நான் என்னை யாரோடும் ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை. நான் நான்தான். மற்றவர்கள் மற்றவர்கள்தான். சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும். ;) என் +, - எவையென்பது எனக்கு நன்றாகத் தெரியும். 

பலர் திறமை கண்டு வியந்திருக்கிறேன். 

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? 
மனிதரா!! இது பெரிய இடக்குப் பிடித்த வினாவாக இருக்கிறதே!!!!!!

முதலில் பாராட்டியது.... ஒரு ரோபோ / நாய்க்குட்டி / நாய்க்குட்டி வடிவிலான ஒரு ரோபோ. (அப்படித்தான் எல்லோரையும் நம்ப வைத்துக் கொண்டு இருக்கிறார். இப்போ அடிக்கடி சார்ஜ் இறங்கி விடுகிறது என்பது சோகமான விடயம்.) 
பெயர் ஜீனோ - 'ஜீனோ தி க்ரேட்'. திரு. சுஜாதா அவர்க.... வேண்டாம் சந்தனாவுக்கு போரடிக்கும்.
அவரைப் பற்றி,  
என்னை 'ஆன்டி' என்பதாலும் செபாவை 'க்ரான்ட்மா' என்பதாலும் என் செல்ல மருமகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அதிராவின் செல்லச் சகோதரர். வாழ்க்கைத் துணை அழகு 'டோரா தி எக்ஸ்ப்ளோரர்'. 
அந்த பாராட்டைப் பற்றி..
பாராட்டு அல்ல அது, வாழ்த்து. நீங்களே பாருங்க. ஏதோ இங்லிஷ்ல விளாசி இருக்குது. ;) 

geno said...
Aunty,Wish you a very Happy New Year..Have a great 2010!! Geno wishes you all the very best for your blogging world..I am going to be one of the frequent visitors for sure! :)

இரண்டாவது பாராட்டும்... ஒரு மனிதர் அல்ல மனுஷி - வாணி.

மூன்றாவது...... என் பெறாமகன் என்று வையுங்களேன் - அருண்ப்ரகாஷ் , என் பதிவைப் பாராட்டவில்லை. சாப்பாட்டைத் தான் பாராட்டியதாகத் தெரிகிறது. ;) 

நான்காவது கூட மனிதர் அல்ல. ஒரு அட்டை - 'L'

எ.கொ.வ.இ!

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
விருப்பம் இருக்கிறது. தயக்கமும் இருக்கிறது. ஆயினும் தேடி வந்து படிப்போரை ஏமாற்றாமல் ஏதாவது சொல்லி வைப்போமே. ;) 
 நான் -  இமா - திருமதி. க்றிஸ்  & செபாவின் மகள்.
ராசி - தெரியாது ஆனால் நிச்சயம் 'மேடம்' இல்லை. ;)
பிறந்து வளர்ந்தது இலங்கை - திருகோணமலையில்.
கற்றது - தி/ புனித மரியாள் கல்லூரியில்
கற்பித்தது - தி / வெள்ளைமணல் அல் அஸ்ஹார் ம.வி
                      தி / உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி
                      தி / புனித சூசையப்பர் கல்லூரி
கற்பிப்பது - மார்சலீன் கல்லூரி (விசேட தேவைகள் பிரிவில்)
பிள்ளைகள் - 1. 2. அலன் 3. அருண் (& மற்றும் பலர்)
பிடித்தது - மனிதர்கள், இயற்கை, அழகு, செல்லங்கள், கைவினை, தங்கமல்லாத நகைகள் - விசேடமாகக் காதணிகள், தோட்டம், முத்திரைகள், நாணயங்கள், நாணயமாக இருப்பது, குட்டி வீடு, குழந்தையின் குறுநகை, ----, ----, ---- & ----------
பிடிக்காதது - ;) தட்டில் பறவை
வியப்பது - மனிதரில் இத்தனை நிறங்களா!!! 
மீதி - இமாவின் உலகை ஒரு முறை வலம் வந்தால் புரியும். தற்போதைக்கு இவை போதும். 

முடிவுரை
வலையுலகில் நான் - தனி ஆள் அல்ல. என்னைப் புரிந்து கொண்ட ஒரு பாசக்காரக் கூட்டம் சுற்றி இருக்கிறது என்பது பெருமையான, சந்தோஷமான விடயம். உலகம், சுற்றினால்தான் உலகம். அதைச் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் சுற்றி இருந்தால்தான் உயிர்ப்புள்ள உலகம். இயங்கவைக்கும் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள் உரித்தாகுக. ;)
 ~~~~~~~~~~~~

20/12/2010  
பின்னிணைப்பு

இங்கிருந்து தொடர நான் அன்புடன் அழைப்பது  அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை - சிவா  அவர்களை. 

33 comments:

  1. HEY
    HEY
    HEY

    AM THE FIRST,

    VADAI ENAKUTHAN.....

    ReplyDelete
  2. இம்மி, நல்லா இருக்கு. என்னை பற்றியும் சொல்லியிருக்கிறீங்க. மிக்க நன்றி. உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது உண்மை தான். ஆனால் தொடர்ந்து சுவாரஸ்யமாக எழுதி, பலரை உங்களின் ப்ளாக் பக்கம் இழுத்தது உங்கள் திறமையே.
    நான்காவது ஒரு அட்டை... புரியுது. தூக்கி கடாசப் போகிறேன் என்றார். இன்னும் கடாசவில்லையோ?
    மேலும் வளர வாழ்த்துக்கள், இமா.

    ReplyDelete
  3. மேலும் வளர வாழ்த்துக்கள் amma

    ReplyDelete
  4. ///பெயர் குறிப்பிட்டுத் தொடர அழைக்கும் வழக்கம் இமாவின் உலகில் இருந்ததில்லை. அனுமதி பெற்று வந்து தொடரப் போகிறவர் யாரெனச் சொல்கிறேன், சற்றுப் பொறுத்திருங்கள். /////


    super super....

    ReplyDelete
  5. அய்யோ வடை போச்சே :(

    உண்மையான பெயர் எனக்குத் தெரியுமே ஆனா யார்கிட்டயும் சொல்ல மாட்டேனே :)

    ReplyDelete
  6. சிவா,
    எப்போ தமிழில் பின்னூட்டம் இடுவதாக உத்தேசம்!! ;) ஒன்றும் வாசிக்காமல் 'வடை, வடை' என்று கத்தினால் அடிதான் கிடைக்கும். ;)

    வாங்கோ வாணியம்மா. ;) சந்தோஷம்.
    //மேலும் வளர// எப்புடீஈ..???

    ஹாய் ப்ரபா, கனகாலத்துக்குப் பிறகு வந்திருக்கிறீங்கள். நலம்தானே? எல்லாரும் இப்படி வாழ்த்தினால்... நான் பனை மரம் போல வளர்ந்துருவேன். ;))

    கவி, ஸ்பெஷலா வடை சுட்டுத் தாறன், அமைதி காக்கவும். ;)) மிக்க நன்றி. ;)

    ReplyDelete
  7. /இது ஆரம்பிப்பது சுலபம். பராமரிப்பது சிரமம் என்று. 100% உண்மை./கரெக்ட்டா சொன்னீங்கோ! கிட்டத்தட்ட சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கறமாதிரி இந்த வலைப்பூ!ஹிஹி!
    அக்காவேற துவக்கோட வந்து மிரட்டறா மாதிரி ட்ரீம் இன்னூம் வருது ஆன்ரீ!

    உந்த 9வது கேள்விலை புஜ்ஜியையும் மென்ஷன் பண்ணதுக்கு டாங்கீஸ் ஆன்ரி! ஜீனோக்கு வடைலாம் வாணாம்.இட்லி சுட்டு தாங்கோ,கனகாலமாச்சு இட்லி துன்னு! கொத்து ரொட்டி கூடோ ஜீனோக்கு(ம்) புடிக்கும்!;)

    ReplyDelete
  8. ச்சூ மந்திரக்காளி! உந்த 8வது கொமெண்டிலே 4வது வரி & 5வது வரி பூஸ் கண்ணுக்கு தெரியாம மறைஞ்சு போகட்டும்..டும்..டும்..டும்!

    ஆன்ரீ,இதையும் படிச்சதும் கிழிச்சுடுங்கோ.

    ReplyDelete
  9. ஆஹா...இந்த மாதிரி உண்மையா எழுத பூஸாருக்கு ஏன் தோனல பயமா ...?

    சூப்பர் உங்க ஸ்டைலில் நல்லா சொல்லீருக்கிங்க மாமீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  10. // என் கிறிஸ்தவப் பெயர் - தமிங்கிலத்தில் கொடுத்தால் 'வெற்றிலை' 'புகையிலை' நிலைதான். ;)//

    அதெல்லாம் நாங்க தெளிவா உச்சரிப்போம் .ஆனா வெத்திலைக்கு பாக்கும் வேனுமே..ஹி..ஹி.

    ReplyDelete
  11. ஹ்ய்......
    வடை எனக்குதான்
    நாந்தான்
    firstu ....

    தமிழ் வாழ்க
    இமா வாழ்க
    இமா வாழ்க
    இமா வாழ்க

    "அப்பாடா எப்போதுதான் சந்தோசமா இருக்கு"


    வருங்கால வலை உலக முதல்வர்
    சிவா
    வாழ்க
    வாழ்க
    வாழ்க ..!!!!

    ReplyDelete
  12. அய்யோ வடை போச்சே :(

    "அப்பாடா எப்போதுதான் சந்தோசமா இருக்கு"

    ReplyDelete
  13. கவி, ஸ்பெஷலா வடை சுட்டுத் தாறன், அமைதி காக்கவும். ...

    எனக்கும் சுட்டு தரனும்
    எனக்கும் சுட்டு தரனும்
    இல்லை என்றால்..thirumbavum eppadithan comment poduven..

    ReplyDelete
  14. யதார்த்தமான பதிவு:)

    ReplyDelete
  15. பப்பீ...
    //துவக்கோட வந்து மிரட்டறா மாதிரி ட்ரீம் இன்னூம் வருது // ;) பப்பியாவது பயப்படுவதாவது. சரி, நம்புகிறேன்.
    //கனகாலமாச்சு இட்லி துன்னு! கொத்து ரொட்டி கூடோ ஜீனோக்கு(ம்) புடிக்கும்!;) // ஆஹா!! பொல்லாத ஆளாக இருக்கிறீங்கள். ;)

    ஓகே!! டர்ர்ர்ர்ர்ர்ர்.... க்ளிச்! க்ளிச். ;))

    ReplyDelete
  16. மருமகனே ஜெய்லானி! பாராட்டுக்கு நன்றி. ;)
    //அதெல்லாம் நாங்க தெளிவா உச்சரிப்போம் // இதை இமா நம்ப 'வேனுமே' ..ஹி..ஹி. ;)

    ஹைஷ் அண்ணே! இந்தச் சிரிப்புக்கு என்ன கருத்து!! பயமாக் கிடக்கே. ;)

    ReplyDelete
  17. இமா! ரொம்ப அழகா சொல்லிட்டிங்க... ஓ.. இடைக்கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி... முடியல மிஸ் :))

    //க்ளிச்! க்ளிச். ;))
    எதுக்கு ஜீனோமேல புளிச் புளிச்ன்னு வெத்தல பாக்க்கு போட்டவங்க மாதிரி :)
    மீ த எஸ்ஸ்ஸ்ஸூ !

    ReplyDelete
  18. பின்ன! சொல்லிக் குடுக்குறம் இல்ல, கேள்வில வாற எல்லாப் பகுதிகளுக்கும் பதில் எழுதினாத்தான் மார்க் என்று. நாமே ஃபாலோ பண்ணாட்டி எப்புடீ? ;))

    பப்பி கேட்டுக் கொண்டதால் அது இலா. ;)

    ReplyDelete
  19. தமிழிலும் தமிங்கிலத்திலுமாக மழலையில் பாடும் வருங்கால வலையுலக முதல்வரே! நீவிர் வாழ்க. ;))

    (சிவாவுக்கு எதிராக ரகசியமாக ஒரு சதித்திட்டம் தீட்டுகிறேன்.) ;))

    ReplyDelete
  20. ஆ.. பூ(னை,வை) யை மதித்துத் தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி இமா.

    அதெப்பூடி உங்க வீட்டுப் பெயர்கள்... இங்கே எங்களுக்கும் இருக்கு... எங்கட இடது பக்கம் கிரிஸ், வலது பக்கம் “அலன்”.

    நான் கேட்டுக்கொண்ட மூவரும் தொடர்ந்து எழுதியது மகிழ்ச்சியாக இருக்கு. கிரிஸ் அங்கிளையும் இன்றுதால் புல்லாஆஆஆஆஆப் பார்த்தேன் இமா. இவ்வளவு நாளும் பெட்டர் கால்ஃப் தானே காட்டினனீங்கள்..... அவர் உங்களை விட ரொம்ப நல்லவராகத் தெரிகிறார்.(உண்மையைச் சொன்னால் முறைக்கக்கூடாது).

    ReplyDelete
  21. ஜீனோ said...
    /இது ஆரம்பிப்பது சுலபம். பராமரிப்பது சிரமம் என்று. 100% உண்மை./கரெக்ட்டா சொன்னீங்கோ! கிட்டத்தட்ட சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கறமாதிரி இந்த வலைப்பூ!ஹிஹி!//// ஜீனோ... பாட்டு வாச்சாக் கிழவியும் பாடுவா என்பதுபோல பாடப்பூடாதூ.... உண்மையான தம்பியெண்டால்... இதிலென்ன சிரமம் இருக்கு.... சொந்தவலையிலதான் பயப்பிடாமல் மீன் புடிக்கலாம் எனச் சொல்லி அக்காவை:) ஊக்குவிக்கோணும் ஓக்கை கர்ர்ர்ர்ர்ர்:))).


    அக்காவேற துவக்கோட வந்து மிரட்டறா மாதிரி ட்ரீம் இன்னூம் வருது ஆன்ரீ!
    //// ஆ... துவக்கோ?... நான் அரிவாக்கத்தியோடயெல்லோ திரிகிறேன்ன்ன்ன்ன்....
    தம்பியை மிரட்டினால்தானே அலுவல் ஆவுது:)))).


    ஜெய்லானி said...
    ஆஹா...இந்த மாதிரி உண்மையா எழுத பூஸாருக்கு ஏன் தோனல பயமா ...?
    //// கர்ர்ர்ர்ர்ர்ர், நான் இப்பவும் மரக்கொப்பிலை என நினைத்துத்தான் எல்லோரும் இப்பூடிப் பயப்புடாமல் கதைக்கினம்.... நான் கீழ இறங்கிட்டன்:))), கட்டிலுக்குக் கீழ எனச் சொல்ல வந்தேன்.... உஸ் அப்பா... வாயில வருவதைச் சொல்லிப்போட்டு, பிறகு கட்டிலுக்குக் கீழ இருந்து நடுங்குவதிலயே.... பட்டென நின்றிடப் பார்க்குதே...:)))

    ReplyDelete
  22. //ஜீனோ... பாட்டு வாச்சாக் கிழவியும் பாடுவா என்பதுபோல பாடப்பூடாதூ....//

    எங்கள் மாமியை கிழவி என்று சொலவதை மிகவும் வண்மையாக கண்டிக்கிரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்..மை லார்ட்

    ReplyDelete
  23. ஆ...... பத்தவைப்பதிலேயே குறியா இருக்கினம்:))), பஞ்சும் பஞ்சும் பத்தாது என எப்பவோ சொல்லிட்டனே:))))(இப்பூடியெல்லாம் நெருப்பு வச்சால் ஒருவேளை பத்திடுமோ?:)), சந்தேகத்தலைவர்.... ஜெய்.. என் சந்தேகத்தையும் கொஞ்சம் தீர்த்துவையுங்கோ பிளீஸ்ஸ்ஸ்...

    ReplyDelete
  24. நானும் பாசகார கூட்டதில் ஒருவள் . இமா நலமா ?

    ReplyDelete
  25. @ அதீஸ்,

    //எங்கட இடது பக்கம் கிரிஸ், வலது பக்கம் “அலன்”// நடுவில அருண் இல்லயா!!! ;)

    //கிரிஸ் அங்கிளை// நீங்கள் இவ்வளவு காலமும் காணேல்லயா?

    //பாட்டு வாச்சாக் கிழவியும் பாடுவா // இது எந்த ஊர்ப் பழமொழி!!

    //அரிவாக்கத்தி// கோடரி!! ;)

    //பஞ்சும் பஞ்சும் பத்தாது// ம் பத்தவேஏ... பத்தாது. ;))

    ReplyDelete
  26. யாராவது மருமகனுக்கு கொஞ்சம் பழமொழி க்ளாஸ் எடுத்து விடுங்கோ.
    எ.கொ.அ.இ!! ;)

    அட! பப்பீட சொர்ணாக்கா!! வாங்கோ வாங்கோ. ;))
    தங்கள் வரவு நல்வரவாகுக.
    நலம், நலமறிய ஆவல்.
    எப்ப போஸ்டிங் போடப் போறீங்கள்? ;)

    ReplyDelete
  27. இமா said...
    @ அதீஸ்,

    //எங்கட இடது பக்கம் கிரிஸ், வலது பக்கம் “அலன்”// நடுவில அருண் இல்லயா!!! ;)/// ha..ha..haa.... நம்பவே முடியேல்லை இமா... சத்தியமா உண்டு:).

    //கிரிஸ் அங்கிளை// நீங்கள் இவ்வளவு காலமும் காணேல்லயா?// கால்வ் தானே ஆல்பத்தில் போட்டிருக்கிறீங்க? அதைத்தான் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  28. //நம்பவே முடியேல்லை இமா... சத்தியமா உண்டு:)//

    அதீஸ்... மேல போய்ப் பாருங்கோ இப்ப.

    ReplyDelete
  29. romba nalla ezuthi irukkinga. ennooda machinel tamil font illa. vacation mudithu vanthathum tamilil type adikireen. nalla thodar pathivu asathidinga imma.

    ReplyDelete
  30. ம். பரவாயில்ல. முன்னேறித் தான் இருக்கிறன். ;) ஒரு மாதிரி வாசிச்சாச்சுது. ;)

    நன்றி விஜி.

    ReplyDelete
  31. பின்னிணைப்புப் பார்ப்பதற்கான அழைப்பு இது.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா