வராமல் இருக்கிறது எவ்வளவோ நல்லம். எங்களுக்கு வந்தாலும் கஷ்டம் தானே! அதுக்கு அவர்ட வேலைகளைப் பங்கு போட்டுச் செய்யிறது எவ்வளவோ மேல்.
என்ன பேர் எண்டு கேட்டு வைப்பீங்களோ! வி..வி.. விநயன். ;)) (நம்பாதைங்கோ)
ஆள் ரிகவர் ஆகிற காலத்தில ரிலீவரா வந்தது என்ட பழைய பொஸ் வில்ஸ்.
ஸ்கூலுக்குப் பக்கத்தில தான் வீடு. அது போக இங்கயே வேலை செய்ததால எங்கட ஒழுங்கு முறைகள் எல்லாம் அத்துப்படி. ரிலீவர் எண்டு குட்டியாக்கள் விளையாட்டு விட ஏலாது. மற்ற ரிலீவர்கள் மாதிரி இல்ல இவர். 'சைல்ட் மைண்டிங்' செய்யாமல் ஒழுங்கா சிலபஸில அடுத்ததா என்ன பகுதி படிப்பிக்க இருக்கோ அதை எடுத்துக் கொண்டு போவார். லீவால வந்த காய்ச்சல்காரருக்கு பிரச்சினை இல்லாமல் நிம்மதியா இருக்கும். பத்தாததுக்கு யாருக்கு ரிலீவ் பண்ணுறாரோ அவர்ட டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக் டியூட்டி எல்லாம் செய்வார். அதால எங்கட ஜூனியர் ஸ்கூல் ஆஸ்தான ரிலீவராக எழுதப்படாத நியமனம் இவருக்கு உண்டு. நல்ல சமையல்காரர். இவர்ட 'விஸ்கி & வோல்நட் கேக்' எங்கட வட்டாரத்தில பிரபலம்.
இப்ப கதை அது இல்ல. ஒன்றரைக் கிழமையா பள்ளிக்கு வந்தவர் நேற்று ரூத்தைக் கண்டதும் கேட்டார் 'ஹேய்! கூட்டைக் கொண்டு வந்திருக்கிறன், தரட்டா?" (இங்லிஷ்லதான் கேட்டவர். நான் சும்மா இப்பிடி மொழி மாற்றி வச்சிருக்கிறன். கண்டு கொள்ளாதைங்கோ.)
அவ ஒரு சிரிப்புச் சிரிச்சா. "என்னவாம் பொம்பிள?"
"இருக்கிறா. இன்னும் வீக்கம் வத்த இல்ல. இன்னொரு ஊசி அடிக்க வேணும் போல இருக்கு."
"அப்ப இப்ப என்ன அவசரம்? நான் கேட்டனா? "
"இல்ல, உங்களுக்குத் தேவைப் பட்டால்..."
"நான் வேணுமெண்டால் வந்து எடுக்கிறன். நீங்க கொண்டு போங்க."
"இங்க கொண்டு வந்து தரட்டா?"
"கொமன் ரூம் மேசைல வைங்க. நான் போகேக்குள்ள எடுக்கிறன்."
இதுக்குள்ள 'ஃபோட்டோ கொப்பியர்' தேவைப்பட்ட பதினைஞ்சு 'வேட் (வர்ட்) ஃபைன்டையும் ப்ரிண்ட் பண்ணி முடிச்சு இருக்க அதையும் தான் ஃபீட் பண்ணின கடுதாசியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
ரூத் இன்னம் 'கரண்ட் இவென்ட்ஸ்' ஒட்டி வச்சிருந்த கலர் A3 மட்டைகளை லமினேட்டர்ல விட்டுக் கொண்டு இருந்தா.
எனக்குப் போய்க் கேட்க வேணும் போல இருந்துது. பாதிக் கதை... விளங்காமல் மண்டைக்குள்ள குறு குறு எண்டு இருந்துது. ஆஃப்டனூன் டீ டைம் கேப்பம் எண்டு இருந்தன்.
அதுக்குத் தேவை இருக்க இல்ல. ஃபிரிஜ்ல இருந்து சலட்டையும் (சாலட்) ;) கரண்டியையும் எடுத்துக் கொண்டு மேசைக்குப் போனால்... கூடு. வில்ஸ் லவ்பேட்ஸ் வளக்கிறாரா!! சொல்லவே இல்லை!!
நினைச்சுக் கொண்டு இருக்கேக்குள்ளயே வில்ஸ் வந்தார், தன்ட பெரிய லஞ்ச் பொக்ஸோட. அதுக்குள்ள இருக்கிறது எல்லாம் இலைகுழைகளும் பழங்களும் மட்டுமே. 57 வயசாச்சுது. ஆனால் என்ட வயசுதான் மதிக்கலாம்.
நான் கேட்கலாம் என்று நினைக்கேக்குள்ள இலைகளை பாணுக்குள்ள செட் பண்ணிக் கொண்டு இருந்தவர் விளங்கின மாதிரி சொல்லுறார் "இது ரூத்ட கூடு."
"ஓ!" - கண்ணால சொன்னேன். மிச்சம் அவரே சொல்லுவார், தெரியும்.
"எங்கட வீட்டுப் பொம்பிள.."
இந்த இடத்தில வந்திட்டா ரூத். கண்ணில அப்பிடி ஒரு சிரிப்பு. அது நக்கலா, நையாண்டியா, வேற என்னவோ ஒன்றா!!!!!
பிஸ்கட் ஒன்று எடுத்துக் கொண்டு முன் கதிரைய இழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தா. எனக்கு வேண்டியது கிடைச்சுது.
"தெரியுமா பகிடி! மிஸ்டர். வில்ஸிட பூனைக்குட்டிக்குக் கால் பூனைக்குட்டி போல வீங்கிக் கிடந்துது. நான் போய்ப் பார்த்தன்." பிஸ்கட்டை டீயில தோய்ச்சுக் கொண்டு "தொட்டுப் பார்க்க ஒன்றும் தெரிய இல்ல." (இப்ப வாய்க்குள்ல பிஸ்கட்.) இவ கதை சொல்லுற விதமே தனி.
இன்னும் சிரிப்பு முடியேல்ல "கூட்டைக் குடுத்தன், வெட்டிட்டக் (vet) கொண்டு போகச் சொல்லி..." (லவ் பேட் கூட்டையா!!! )
கோப்பைய வலக்கையால உருட்டிப் பார்த்துக் கொண்டு ஒரு 'ஹிக் ஹிக்' சிரிச்சார். பிறகு பேச்சு வர இல்ல. தனக்குள்ள, தன்ட சிரிப்புக்குள்ள அப்பிடியே அமிழ்ந்து போனா.
கொஞ்ச நேரம் கழிச்சு பொறுக்க ஏலாமல் வில்ஸ் தொடர்ந்தார். "வெட் காலைத் தடவித் தடவிப் பார்த்தும் ஒண்டும் தெரியாமல் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க... Guess what!"
போச்சுடா! இவரும் சஸ்பென்ஸ் வைக்கப் போறாரா என்று இதுக்குள்ள சாப்பிடக் கூடி இருந்த ஆறு பேருக்கும் டென்ஷன்.
"காலுக்குள்ள ஒரு பூனைப்பல் இருந்துது. யாரோடயோ சண்டைக்குப் போய் கடி வாங்கி... ஒரு பல்லுப் புதைஞ்சிருந்துது." அவருக்கே சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்துது.
சிரிக்கத் துவங்கினால் எங்கட கூட்டம் நிறுத்தாது. போன நாலு பிள்ளைகள் நின்று ஆச்சரியமாய்த் திரும்பிப் பார்த்தாங்கள். ;)
ரூத் முடிச்சா " பிறகு என்ன! ஒப்பிரேஷன் தான். இப்ப ஷேவ் பண்ணின காலும் பந்தமுமா இருக்கிறா அம்மையார்."
"பாவம் பல்லுப் போன பூனை."
இப்ப இதுதான் சூடான தலைப்பு இங்க. ;)
இங்க இருக்கிறது....
.....எங்கட பக்கத்து வீட்டு பிப்ஸ்க்விக் தான், படம் போட வேணுமே!
ஐ.... வட, ரோல்ஸ், கட்லட், பூஊஊஊஊஉஸ் எல்லாமே எனக்குத்தான்....
ReplyDeleteபடம் மட்டும்தான் பார்த்தனான் போட்டுப் பிறகு வாறன்... பல்லுப் போனால் சொல்லுப் போச்....:))).
ReplyDeleteஜஸ்ட் மிஸ்ட் இருங்க படிச்சிட்டு வரேன்
ReplyDelete//57 வயசாச்சுது. ஆனால் என்ட வயசுதான் மதிக்கலாம்.//
ReplyDeleteஅப்ப உங்களுக்கு 70 ஆகுதாஆஆஆஆ ..ஹி..ஹி.. சொல்லவே இல்ல க்கி..க்கி..
//"பாவம் பல்லுப் போன பூனை." //
ReplyDeleteபல் போனால் சொல் போச்சி . அப்ப சவுண்டு எப்படி வருது...யாவ்.....யாவ்...ன்னா?
அப்ப நீங்க ஸ்கூலில் வேலை பார்க்காமல் அரட்டைதான் ஓடுதா..அவ்வ்வ்
ReplyDeleteஇமா! பல்லு போன பூனைக்கதை கண்டு ஒன்னும் சொல்லாம போக முடியலை.... இதுக்கு தான் பூஸ் அடிக்கடி கர் சொல்லக்கூடாது( மாரல் ஆஃப் த ஸ்டோரி :))...
ReplyDeleteஆகா.... தாடி நரைச்சாலென்ன....
ReplyDeleteமீசை நரைச்சாலென்ன.... ஆசை நரைக்கவில்லையே.... கொஞ்சம் மாத்தி...
பல்லுப் போனால் என்ன.... சொல்லுப் போனால் என்ன.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கூட வருமே...:).
ஜெய்லானி said...
அப்ப நீங்க ஸ்கூலில் வேலை பார்க்காமல் அரட்டைதான் ஓடுதா..அவ்வ்வ்
///// மீ ரூ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஜெய்லானி said...
ஜஸ்ட் மிஸ்ட் இருங்க படிச்சிட்டு வரேன்
//// எப்போ எதை மிஸ் பண்ணாமல் இருந்திருக்கிறீங்க..... அதுக்கெல்லாம் யோகம் வேணும்... பேபி.. ஐப்போல:).... ஆ,,, சுடச்சுட வட, சூப்பரோ சூப்பர்.... இலா இந்தாங்கோ பிச்சுப் பிச்சுத்தாறேன், மிளகாய் பார்த்துச் சாப்பிடுங்கோ..
எங்க வீட்டுப் பூனைக் குட்டிகளில் ஒன்றின் பெயர்.. "பல்லு..." அதற்குச் சின்ன வயசிலேயே ஒரு பல் உடைந்து வெளியில் தொங்கியதால் அந்தப் பெயர்..
ReplyDelete//... ஆ,,, சுடச்சுட வட, சூப்பரோ சூப்பர்.... இலா இந்தாங்கோ பிச்சுப் பிச்சுத்தாறேன், மிளகாய் பார்த்துச் சாப்பிடுங்கோ//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்..இதென்ன அக்கிரமம் உங்களுக்கு அடுத்து நாந்தான் நிக்கிரேன் எனக்கு தராம என்னை தாண்டி அப்புரமா அவங்களுக்கா..??அவ்வ்வ்வ்..அவ்வ்..அவ்வ்
ம். எல்லாமே அதிராக்குத்தான். ;)
ReplyDeleteஜெய்லானி,
//இருங்க படிச்சிட்டு வரேன்// இது என்ன, ஜன்னலால பஸ் சீட் பிடிக்கிற மாதிரி! ;)
70 இல்லை 84. உலகத்தில வரிக்கு வரி கொமண்ட் போடுறீங்கள். டீவீயில இன்ஸ்டோல்மண்ட்ல பதில் போடுறீங்கள். ;)
ரெண்டு பேரும் கவனிக்க. ;) ரூத் லமினேட் பண்ணிக் கொண்டு இருந்தவ. வில்ஸ் போட்டோகொப்பி பண்ணிக் கொண்டு இருந்தவர். நான் அசைன்மண்ட் குடுத்திட்டு அவங்கள் எழுதிக் கொண்டு இருக்கேக்க இது. அதிரா மாதிரி. ;) மாமியார் தலையில கையும் வேலிக்குப் புறத்தால காதும்.
மிச்சக் கதை... நான் 'லஞ்ச் ப்ரேக்' எண்டு சொன்னது கவனிக்க இல்லையோ!
இலா, //மாரல் ஆஃப் த ஸ்டோரி// ;)))
ReplyDeleteபத்திரமா லீவு முடிச்சுக் கொண்டு வாங்கோ.
வாங்கோ பிரகாஷ். நல்வரவு.
ReplyDelete'பல்லு'க்குப் பல்லு எப்படி உடைந்தது என்று சொல்ல மறந்து போனீங்கள்.
ம். இன்னும் யார் யாரெல்லாம் சத்தம் போடாமல் வாசிக்கினம் என்று தெரியேல்ல. ;)
இமா, பாவம் பூஸார் ( எங்கட பூஸார் அல்ல ).
ReplyDelete//இன்னும் யார் யாரெல்லாம் சத்தம் போடாமல் வாசிக்கினம் என்று தெரியேல்ல. //
நானும் சத்தம் போடாமல் தான் வாசிப்பேன். நாங்கள் எல்லாம் வளர்ந்திட்டோம் அல்லவா சத்தமா படிச்சா நல்லாவே இருக்காது.
;)
ReplyDeleteஇந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.
ReplyDeletehttp://cookeryindexer.blogspot.com/
//உலகத்தில வரிக்கு வரி கொமண்ட் போடுறீங்கள். டீவீயில இன்ஸ்டோல்மண்ட்ல பதில் போடுறீங்கள். ;)//
ReplyDelete:-)))))))))))))))
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.
ReplyDeleteலவ் பேர்ட்ஸ் வளர்த்தது "biiz" பீஸ்
வளர்த்தது எல்லாம்.
நன்றி. பழையனவற்றை ஞாபகப்படுத்தியதற்கு.
அய்யோ எனக்கு வடை பிஸ்ஸா பர்கர் எதுவுமே இல்லையா :(((((((((
ReplyDeleteபாவம் இந்த ரவுடி பூஸ்! ஆனா எங்கட பூஸ் அப்பாவி எப்பவும் மரத்து மேல இருந்துதான் அட்டாக் பண்ணும் அம்புட்டு அப்பாஆஆஆஆஆவி
அன்பு பிரபா,
ReplyDeleteஎன் இடுகை பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. ;)))
'இமா உலகத்தில' விளம்பரத்துக்கு ஃபீஸ் உண்டு தெரியுமா? ;)))
~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு ;) @ ஜெய்லானி.
~~~~~~~~~~~~~~~~~~~
பீஷ்.. ம். ;))
~~~~~~~~~~~~~~~~~~~
ஆவியோ கவி! அதுதான் முருங்கை மரத்தில இருக்கிறதோ!! ;)
பிரதமர் (ஒரு மரியாதைதான்) ;) எல்லாம் சாப்பிடுவீங்கள் எங்களுக்குத் தராமல். ;)உங்களுக்கு எதுக்கு வடை கவி?
வந்தேன் வந்தேன்
ReplyDeleteஎன்ன இது சிறு பிள்ளைதனமா கேள்வி எல்லாம் கேட்டுக் கொண்டு பாருங்கோ யாருமே சரியா பதிலே சொல்லவில்லையே
//பல்லுப் போனால்// பொக்கை வாய் :)))
இமா வடை சே எப்ப பத்தாலும் இதே நினைவா இருக்கு “விடை சரியா?”
//பல்லுப் போனால்// பொக்கை வாய் :)))
ReplyDeleteதங்களைப் பற்றியா சொல்கிறீர்கள்!! அப்போ சரியாகத் தான் இருக்கும். ;)
:)))))
ReplyDeleteஇமா,உங்க கொலீக்காலை,ச்சீ,ச்சீ,கொலீக் வீட்டுப்பூனை காலை, பூனைச்சண்டைல இன்னொரு பூனை கடிச்சு வைச்சுட்டது.அப்ப அந்தப்பூனையின் பல்லு ஒடஞ்சு,இந்தப்பூனையின் காலிலே புதைந்துவிட்டது.கரெக்ட்டா புரிஞ்சுகிட்டிருக்கேனா இமா?
ReplyDeleteயப்பா..உங்கட தமிழப் புரிஞ்சுக்க 3-4 முறை படிக்கவேண்டியதாப்போச்சு.ஹிஹிஹி!
///இன்னும் யார் யாரெல்லாம் சத்தம் போடாமல் வாசிக்கினம் என்று தெரியேல்ல. //
ReplyDeleteநானும் சத்தம் போடாமல் தான் வாசிப்பேன். நாங்கள் எல்லாம் வளர்ந்திட்டோம் அல்லவா சத்தமா படிச்சா நல்லாவே இருக்காது. /ஹஹ்ஹா..ஹா!சூப்பர் வானதி!
இமா,நானும் சத்தம் போடாமத்தான் வாசிப்பேன்.:)
இத்தால் உலகத்தார் சகலருக்கும் அறியத் தருவது என்னவெனில்... இன்று முதல் மகி இமா உலக அஸிஸ்டண்ட் ட்ரான்ஸ்லேட்டராக நியமிக்கப் படுகிறார். ;)
ReplyDeleteவாழ்த்துகள் மகி :)
ReplyDeleteவாழ்க வளமுடன்
பி.கு: மகி இமா வேண்டும் என்றே கொஞ்சம் ஆமை பாஷையும் கலந்து பேசுவாங்க :)))
//பி.கு: மகி இமா வேண்டும் என்றே கொஞ்சம் ஆமை பாஷையும் கலந்து பேசுவாங்க :))) //
ReplyDeleteடிரான்ஸிலேட்டருக்கு ஆமை பாஷை தெரியுமா..??
அதுதான் தெரியலை :((
ReplyDelete/டிரான்ஸிலேட்டருக்கு ஆமை பாஷை தெரியுமா..?? //அதுதான் தெரியலை :(( / ஆமை மொழியெல்லாம் எனக்குத் தெரியாது ஜெய் &ஹைஷ் அண்ணா! ஆனால்,கவலை வேண்டாம்.இன்னொரு வழி இருக்கு.
ReplyDeleteஎன் ப்ரெண்ட் ஒருத்தங்களுக்கு இந்த ஆமை பாஷை நன்றாகத் தெரியும்.அவங்க உதவியோடு எப்படியாஆஆஆவது(!!) மொழிபெயர்த்துடறேன்..அதுவும் இல்லாம,எனக்கும் மேலே ஒரு சீனியர் ட்ரான்ஸ்லேட்டர் இருக்காங்களே!!
:):)
:)
ReplyDelete;)
ReplyDelete