Sunday 21 August 2011

ஒரு முதல் முயற்சி

அறுசுவையில் இம்முறை திருமதி. செண்பகா பாபு அவர்கள் தண்ணீரில் ரங்கோலி போடக் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அழகாக இருக்கிறது.

என்னால் செய்து பார்க்கும் ஆவலை அடக்க இயலவில்லை. எப்போ கடைக்குப் போய் எப்போ எல்லாம் சேகரித்து! ஹும்! பொறுமை இல்லை எனக்கு. தவிர... இந்திய மொழிகளில் தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது. சென்றவாரம் கோலப்பொடி தேடிப் போய் நொந்து வந்தேன். ;) மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

இருப்பதைக் கொண்டு சமாளித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த கண்ணாடி டிஷ் வாஸ்து பாட் (pot) ஆகிற்று.

கலர்ப்பொடி... சொல்லமாட்டேன். ;))

செண்பகா செய்து காட்டிய அளவுக்கு இல்லை என்றாலும்; முதல் முயற்சிக்குப் பரவாயில்லை என்று தோன்றியதால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு இது போதும். சில தவறுகள் குறித்து வைத்திருக்கிறேன். அடுத்த தடவை சரிசெய்துவிடுவேன்.

மிக்க நன்றி செண்பகா & அறுசுவை. ;)

29 comments:

  1. தண்ணீர் கோலம்
    அருமை ...

    ReplyDelete
  2. எப்படி இப்படி எல்லாம் யோசிப்பாங்களோ :)
    very nice and creative.

    ReplyDelete
  3. hio hio marntutpoiteney..

    me the firstu...

    ReplyDelete
  4. எனக்கும் பார்க்கப் பார்க்க சந்தோஷமா இருக்கு சிவா. ஹால்ல ஒரு ஸ்டூல்ல வச்சு இருக்கிறேன். வீடே பளிச்சென்று ஆன மாதிரி இருக்கு.

    ம். 1st, 2nd, 3rd எல்லாமே சிவாதான். ;)

    ReplyDelete
  5. இதற்கு வரும் பாராட்டுகள் எல்லாம் செண்பகாவைத்தான் போய்ச் சேரும். அவங்கதான் காட்டிக் கொடுத்தாங்க. ;)

    ReplyDelete
  6. நீரில் கோலம் அழகு.சிம்பிள் ஆனாலும் முதல் முயற்சியைஅப்பாராட்டத்தான் வேண்டும்.வாழ்த்துக்கள் இமா.

    //கலர்ப்பொடி... சொல்லமாட்டேன். ;))// ம்ஹும்..சொல்லத்தான் வேணும்..:-)

    ReplyDelete
  7. தாங்ஸ் ஸாதிகா. இப்போ போட முடியும் என்று நம்பிக்கை வந்தாச்சு. இனி ப்ராக்டிஸ் பண்ண வேணும். ;)

    //சொல்லத்தான் வேணும்.// ;)

    ReplyDelete
  8. இமா... அருமை அருமை!!! குட்டி குட்டி டிசைன் பார்க்க கண்ணாடி பார்த்திரத்தில் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. நான் சிரியாவில் வைத்திருந்ததும் கண்ணாடி பவுல் தான். பூக்கள், மெழுகு வைப்பேன். உங்களோடதை பார்த்ததும் எனக்கு ஆசை வந்துட்டுது செய்து பார்க்க. வெரி கியூட். ஆனா கோலப்பொடிக்கு பதில் என்ன பயன்படுத்துனீங்கன்னு அவசியம் சொல்லனும்.... ரகசியமா எனக்கு மட்டுமாவது :) - வனிதா

    ReplyDelete
  9. கை வலிக்கு பிறகு இமா எப்பவோ திரும்ப எழுத ஆரம்பிச்சுடீங்க? நான் தான் விடுமுறை முடிச்சு லேட்-ஆ வந்திருக்கேன். கோலம் ரொம்ப அழகா வந்திருக்கு. கலர் பொடி என்னவென்று நான் யூகிக்கவா? அரிசி மாவு, கேசரி கலர், காபி பவுடர் / காம்ப்ளான் பவுடர்.

    ReplyDelete
  10. நீங்க பாராட்டினது ரொம்ப சந்தோஷம். ஆனா அருமைல்லாம் இல்ல வனி. சும்மா போட்டுப் பார்த்தேன்.

    பிஸ்னஸ் சீக்ரட்லாம் பப்ளிக்ல சொல்லப்படாதாம். ;)

    ReplyDelete
  11. ஆஹா! சித்ரா வாங்க, வாங்க. கை.வ.பி, கை.வ.மு எல்லாம் இல்ல. அது கூடவே இருக்கு. கூடாம இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்கிறேன். ;)
    நல்ல நல்ல ஐடியால்லாம் கொடுக்கறீங்களே. ;) தாங்ஸ் சித்ரா.

    ReplyDelete
  12. இமா, இது தண்ணீரின் மேல் போட்டிருக்கிறது என்று நீங்கள் சொன்னதினால்தான் தெரிகிறது - ஃபோட்டோவில்; நேரில் பார்த்தால் சொல்லாமலே தெரியும் இல்லியா?

    ReplyDelete
  13. பார்க்கப் பளிச்சுனு அழகாகவே உள்ளது.
    பொறுமை+ரசிப்புத்தன்மை+கற்பனா சக்தி
    உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    vgk

    ReplyDelete
  14. தண்ணீரில் ரங்கோலி ...கலக்கீட்டிங்க

    ReplyDelete
  15. தண்ணீர் கோலம் ...கலக்கீட்டிங்க

    ReplyDelete
  16. இமா..தண்ணீர் கோலம் முதல் முயற்சியே அழகு.வொயிட் சிமெண்ட்,இல்லையென்றால் கார்ன் ப்ளாரில் கலர் சேர்த்து போட்டீங்களோ!

    ReplyDelete
  17. பெரிதுபடுத்திப் பார்த்தால் தெரியும் ஹுஸைனம்மா. ;)

    தாங்ஸ் ஆமீஸ். ;)

    ReplyDelete
  18. vgk சார்,

    உங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  19. கலங்காம கவனமா போட்டிருக்கேன்; கலக்கிட்டேன், கலக்கிட்டேன்கறீங்க. ;) தாங்ஸ் ராஜேஷ் & அயுப்.

    ReplyDelete
  20. நன்றி ராதா. சொல்கிறேன் பொறுங்க. ;)

    ReplyDelete
  21. இமா அக்கா வீட்டில் அடுப்படியில் உள்ல மாவுமாவு மசாலாக்கள் தான்
    அருமை

    ReplyDelete
  22. ஓ நீங்க சொல்லிடீங்கலா

    கமெண்ட் போட்டதும் தான் பார்த்தேன்

    ReplyDelete
  23. சப்பாத்தி மாவு + கலர் சாக்பீஸ் கலவைதான் இது ...ஹா..ஹா.. எங்கிட்டேயேவா ??? :-)))

    ReplyDelete
  24. ஜலீ கெட்டிக்காரி. ;)

    ஜெய்.. சாக்பீஸ் நீரை உறிஞ்சிக் கொள்ளாதா? வாக்ஸ் க்ரையான்ஸ் சொல்றீங்களா? ட்ரை பண்ணிப் பாக்குறேன்.

    லீவுல இருந்தும் கமண்ட் போட்ட மகிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ். ;)

    ReplyDelete
  25. இமாவின் உலகத்துக்கு , தண்ணீரில் ரங்கோலியும் மெருகூட்டுகிறது.வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  26. க்றிஸ்மஸ் அன்று, சப்தமில்லாமல் வந்து வாழ்த்திப் போன ராஜாவுக்கு நன்றி & புத்தாண்டு வாழ்த்துக்கள். ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா