Friday, 20 January 2012

என் சின்ன மகன்


 ஓவ்வொரு வருட இறுதியிலும் வீட்டை ஒருமுறை முழுமையாகச் சுத்தம் செய்வது வழக்கம். சென்ற வருடம் ஊருக்குச் சென்றிருந்ததால் சில இடங்கள் தொடப்படாமல் அப்படியே கிடந்தன. இவ்வருடம் எப்படியாவது சுத்தம் செய்யலாம் என்று ஆரம்பித்து, பலவருடங்களாகத் தேங்கிக் கிடந்த பாடசாலைக் காகிதங்களைப் புரட்டி தேவையற்றவற்றை வீசிக்கொண்டிருந்தபோது.... கண்ணில் பட்டது இது. கூடவே இன்னும் சில.

நாம் நியூசிலாந்து வந்து இறங்கிய ஆரம்பகாலம், எப்போதும் பரபரவென்று இயங்கிப் பழகி இருந்த எனக்கு பொழுதுபோகவில்லை; கிறுக்கி வைத்திருக்கிறேன்.


பார்த்ததும் சந்தோஷத்தோடு சின்னவர் சொன்னார் இது தன் உருவம் என்று. வரைந்த தேதி 28/02/2000. (அப்போது சின்னவருக்கு 10 வயதும் 7 மாதங்களும் நடந்துகொண்டிருந்தது.) அரை மணி நேரம் எடுத்திருப்பேன் வரைய. மீண்டும் touchup செய்யவில்லை. கைவிரல்கள் அமைப்பாக வரவில்லை. சரிசெய்ய முயலவில்லை அப்போதும், இப்போதும். அவரது சிரிப்பு மட்டும் அப்படியே வந்து ஒட்டிக் கொண்டிருக்கிறது. ;)

பழுப்பு நிற மீழ்சுழற்சிக் காகிதத்தில் வரைந்தமையாலும் வரைந்து பல வருடங்கள் ஆகிவிட்டமையாலும் தெளிவு குறைவாக இருக்கிறது. இனிமேலாவது உள்ளது உள்ளபடி இருக்கட்டும் என எண்ணி ஸ்கான் செய்தேன்.
- இமா

24 comments:

  1. இமா, சூப்பரா இருக்கே. ஓவியர் இமா வாழ்க. எனக்கும் இந்த கை விரல்கள் வரவே வராது. சொறி, சிரங்கு வந்தவன் போல கொடுமையா இருக்கும் நான் வரையும் கைகள். இப்ப "எஸ்" இடம் இருந்து கற்றுக் கொள்கிறேன். அவர் மிகவும் தத்ரூபமா வரைவார்.

    ( ஆயா, வடை எல்லாம் ஜெய்க்கு கொடுத்திடுங்கோ. அவர் பாவம்.)

    ReplyDelete
    Replies
    1. இந்த பயம் இருக்கட்டும் ஹி..ஹி.. நான் என்னைய சொன்னேன் :-)))).

      Delete
  2. உங்க மகன் அழகா சிரிக்கிறார் இமா,ஓவியமும் அழகாய் இருக்குது. கை விரல்களை நீங்க சொல்லாவிட்டால் நான் கண்டிப்பாக கவனித்திருக்க மாட்டேன். :)

    ReplyDelete
  3. வணக்கம் டீச்சர்,
    பத்து வருடங்களுக்கு முன்னர் வரைந்த ஓவியமா? நம்பவே முடியலை றீச்சர்.
    சின்ன மகன் அழகாகத் தான் இருக்கார்.

    ReplyDelete
  4. ஆஆஆஆஆஆஆஆஆ... கரைச்சுப்புட்டினமே:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    முகம், சின்ன மகனின் முகச் சாயலுக்கு கிட்ட கொண்டு வந்திட்டீங்க... உண்மையிலயே அழகு.. இப்பவும் முயற்சிக்கலாமே... ஆரம்ப முயற்சியாக ஒரு “பூஸ்” வரைஞ்சால் என்ன?:)))

    ReplyDelete
    Replies
    1. சபாஷ்......நான் சொல்ல வந்தது நீங்க முந்திட்டீங்க ..ஓகே.. ஓவியத்தில் முக்கியமா கவனிக்க வேண்டியது இது யாருடைய சாயலில் இருக்கு என்பதுதான்.

      ஒரு ஓவியரின் வெற்றியே இதுதான் :-))).

      Delete
    2. //ஆரம்ப முயற்சியாக ஒரு “பூஸ்” வரைஞ்சால் என்ன?:))) //

      மறதி நெ 2 :

      உடைஞ்ச பிளேட்டை அதுக்குள்ளே மறந்த பூஸுக்கு வல்லாரை லேகியம் பார்ஸல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஹா..ஹா.... :-)))

      Delete
  5. //ஓவியர் இமா// ஒரு காலத்தில் அதுதான் என் லட்சியமாக இருந்தது. 14 வயசுல... ஸ்கூல்ல பெஸ்ட் ரிசல்ட், ஊர்ல 3 வது வந்து போட்டு ஓவியம் படிக்கவிருப்பம் எண்டு சொன்னது செபாவுக்கே காதில விழேல்ல. அப்ப அமைதியா இருப்பன், ஒண்டும் கதைக்க மாட்டன். இன்னும் கொஞ்சம் பிடிவாதம் பிடிச்சு படிச்சிருக்கலாம். எப்பவும் நினைச்சு வருத்தப்படுற விஷயம் இது. டான்ஸ், பியானோ, சங்கீதம், ஓவியம்... எல்லாமே கனவாப் போச்சுது. ;((

    இப்பவும் ஏதாவது வரையுறதுதான் ஆனாலும் ஒரு முழுத் திருப்தி வாறேல்ல. யாராவது "வடிவா இருக்கே" எண்டு சொன்னால் மேல சொன்ன ஏக்கம் வந்து... சந்தோஷம் காணாமல் போயிரும். (புலம்பினது நீங்கள் உங்கட பிள்ளைகளுக்குக் கொஞ்சமாவது செவிசாய்ப்பீங்கள் என்கிற நம்பிக்கையிலதான், வேற ஒண்டும் இல்ல. வான்ஸ் வீட்டில ஒரு மிகத் திறமையான குட்டி ஆட்டிஸ்ட் இருக்கிறார் எண்டு தெரியும்.)

    I was born to love. I was born to be an artist. ஹும்! வாழ்க்கைல பாதிக்கு மேல கடந்தாச்சுது.

    இந்த அளவுக்காவது என் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியுது என்றால்... பாபுதான் பிரதான காரணம். அறுசுவை இல்லாட்டி இமாவை உங்கள் ஒருவருக்கும் தெரிஞ்சிருக்காது.

    Thanks Babu. @}->-- ;)

    ReplyDelete
  6. வான்ஸ்.. //கை விரல்கள் // நன்றாக வரையக் கூடிய நிறையப் பேரின் ஓவியங்களை உன்னிப்பாகக் கவனித்தீர்களானால் விரல்கள் சரியான அமைப்பாக இராது. இதைப் பற்றிக் கவலையாக நினைக்க வேண்டியது இல்லை. நான் சொல்லாவிட்டால் பலர் அந்தக் கைகளைப் பார்த்தே இருக்க மாட்டா(டீ)ர்கள். ;) (நிச்சயம் சொல்லாமலே கவனிப்பார்... சந்தனா.) ;) MISS U CHANTHUUS. ;(

    கையில் ரப்பர் இல்லாமல் வரைந்த... கிறுக்கல். ;) நான் முதல் நாள் வரைந்து போட்டதன் பின் இதனைச் சரிசெய்யவில்லை. முயன்றிருந்தால் அழகாக வந்திருக்கும். அப்போ வலைப்பூ இல்லை. பகிர்ந்துகொள்ள யாரும் இல்லை. விட்டுவிட்டேன். அந்த இடம் வராமல் crop செய்து போட்டிருக்கலாம் நான். ;))

    வானதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //உங்க மகன் அழகா சிரிக்கிறார் இமா// ம்.. அருண் என்கிற பெயர் இருக்கிற எல்லோரும் அழகா சிரிப்பாங்களாம் மகி. ;) அவங்க திருமதிகள் இன்னும் அழ..கா சிரிப்பாங்க. ;)

    ReplyDelete
  8. கடமை அழைக்கிறது. ;) பின்னேரம் வாறன் நிரூ & அதீஸ்.

    ReplyDelete
  9. மிக மிக அருமையாக வரைஞ்சிருக்கீங்க இமா ,படத்தை ஃபிரேம் போட்டு வைங்க இமா உங்க வருங்கால மருமகளுக்கு ப்ரேசண்டாக தரலாம் .
    என் கண்களில் பட்டது அந்த பாதமும் குதிங்க்காலும் .தத்ரூபமா இருக்கு .

    ReplyDelete
  10. ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    :D:D:D:D:D:D:D
    ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    ஹாஹாஹாஹாஹா
    :D:D:D:D:D:D:D

    ....ஏன்,ஏன்,ஏன்??எல்லாரும் மயங்கி விழறாங்க இமா?? நான் சிரிப்பது அழ....................கா இருக்குன்னு சொல்லச்சொல்லுங்கோ!!!
    இப்படிக்கு
    திருமதி.அருண்

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை பகல்ல பார்த்தேன் இல்லாட்டி இந்த சிரிப்புக்கு ’அருந்ததி’டோய்ன்னு அலறிகிட்டே ஓடியிருப்பேன் அவ்வ்வ்வ்வ்வ் :-)))))))

      Delete
  11. Ha...haa..imma, nobody has commented after mine! :D

    ReplyDelete
    Replies
    1. மேலே போட்டிருக்கேனே அதுதான் காரனம் போல ஹா.ஹா... :-)))))))))))))))))))

      Delete
    2. வேணாம்,மறுபடி சிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சிருவேன்,எச்சரிக்கிறேன்! :-))))))))

      Delete
    3. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))))))))))))))))))))))

      Delete
  12. இமா, நீங்க இந்தப்படத்தை மிகவும் கேஷுவலாக அரை மணியில் வரைந்து எங்கோ தூக்கிப்போட்டுவிட்டதாகச் சொன்னாலும், மிகவும் அழகாகவே வரைந்துள்ளீர்கள். குறையொன்றும் இல்லை. எனக்கு மிகவும் நிறைவாகவே உள்ளது.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் உங்கள் vgk

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது அண்ணா, நன்றி.

      Delete
  13. நான் சிறுவயதில் வரைந்த எவ்வளவோ படங்களை யார் யாரோ ஆசையுடன் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.
    சிலவற்றை நானே அலட்சியமாக பாதுகாக்காமல் இருந்து விட்டேன். கிடைத்த ஒருசில படங்களை மட்டும் ஜூலை 2011 முதல் வாரத்தில் ஒரு பதிவில் காட்ட முடிந்தது.

    அவற்றையெல்லாம் தொலைத்தது என் துரதிஷ்டமே.

    இப்போது நவீன வசதிகள் இருப்பதால் புகைப்படம் எடுக்கவோ, பதிவில் கொண்டுவரவோ மிகவும் எளிமையாக உள்ளது.

    நானும் தேடித்தேடிப்பார்க்கிறேன். மேலும் ஏதாவது புதையல் உங்களைப்போல எனக்கும் கிடைக்குமா என்று.

    என் இமாபோல நான் என்ன அதிர்ஷ்டம் செய்தவனா, அவைகள் புதையலாக எனக்கு இப்போது திடீரெனக் கிடைப்பதற்கு! ;))))))

    உங்களுக்குள் மிக நல்ல திறமை ஒளிந்துள்ளது. தொடர்ந்து வரையுங்கள். அவற்றைப் பதிவிடுங்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  14. அழகாய் வரையறீங்க இமா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ஆசியா.

      Delete
  15. ரொம்ப அழகாக வரைந்து இருக்கிறார் சின்னவர்

    இதை பார்த்ததும் என் பெரிய பையன் ஞாபகம் தான் வருது

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா