Sunday, 15 January 2012

தாமதமானாலும்....

வாழ்த்துகிறேன் ;)

ஹும்! கருத்துப் பெட்டியின் / பெட்டகத்தின் இந்த அமைப்புப் பிடிக்கேல்ல. கூகிளார் தந்த பிறந்தநாள் பரிசு என்று நினைக்க முடியேல்ல. சிவப்பு நிறம்... எழுதுறதுக்கு இல்லை; திருத்துறதுக்கு மட்டும்தான் பாவிப்பன். கர்ர். ஆனால் இப்ப திருத்திறதுக்கு நேரம் போதேல்ல + என்ன செய்யுறது எண்டும் தெரியேல்ல. மெதுவாகப் பார்க்கிறன், அதுவரைக்கும் என்னோட பொறுத்துப் போவீங்கள் எண்டு நம்புறன். 

மடிக்கணனியார் குட்டி நித்திரைகொண்டு நேற்று இரவுதான் எழும்பி இருக்கிறார். பிறகு நான் நித்திரையாப் போனன். கனபேரோட தொடர்பு விட்டுப் போச்சுது. ஒருவருக்கும் பொங்கல் வாழ்த்தும் சொல்ல முடியேல்ல. ஆனால் இமா மனதுக்குள்ள சொன்னனான், ம். நல்ல சந்தோஷமாக் கொண்டாடி இருப்பீங்கள். 

இப்ப தாமதமானாலும்... சொல்லிப் போட்டுப் போறன்... 
பொங்கல் கொண்டாடும் / கொண்டாடிய அனைவருக்கும் 
என் மனமார்ந்த
தைத்திருநாள் வாழ்த்துக்கள். 
அன்புடன்
இமா

11 comments:

  1. லேட்டா சொன்னாலும் வாழ்த்து வாழ்த்து தான் :-)

    ReplyDelete
  2. ;) ஆனா... தேதி சரியாகத்தான் விழுந்து இருக்கு ஜெய்.

    ReplyDelete
  3. ஆஃபீஸ்ல பாஸ் இல்லியா!! ;)

    ReplyDelete
  4. வணக்கம் டீச்சர்,
    நல்லா இருக்கிறீங்களா?
    என் வலையில் கருத்துப் பெட்டியில் எந்த ப்ராப்ளமும் இல்லை.
    ஆனாலும் நீங்கள் உங்க ப்ளாக் டெம்பிளேட்டை மாத்தினால் கருத்துப் பெட்டியினை மாற்ற முடியும் என நினைக்கிறேன்.

    உங்களுக்கும், பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  5. நீங்கள் mind பண்ணவில்லை என்றால், கமெண்டின் கலரை மாற்றலாம்.
    go to dashboard> template> /
    Layout > Template Designer>
    இங்கே வந்ததும், உங்க இடது கைப் பக்கத்தில Advanced அப்படீன்னு ஒரு option இருக்கும்.
    அதில பார்த்தீங்க என்றால் Post Footer அப்படீன்னு ஒரு option இருக்கும். அதன் மூலமா கமெண்டிற்கு விரும்பிய கலரை மறுபடியும் மாற்ற முடியும். மாற்றி வலது பக்க மேல் மூலையில் Save கொடுக்கனும்.

    ReplyDelete
  6. தாமதமாக வந்தாலும் பிறந்தநாள் கேக் ,எடுத்துகிட்டேன் .இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் இமா

    ReplyDelete
  7. ஹாய் நிரூபன்! :) இமா நலம். தாங்களும் நலம்தானே! (டீச்சர்!! கர்ர்... நங் நங் நங்) ;)))

    //ப்ளாக் டெம்பிளேட்டை மாத்தினால் கருத்துப் பெட்டியினை மாற்ற முடியும் என// நானும் //நினைக்கிறேன்.// ;) ஆனால்... "மாற்றாமல்" மாற்ற வேண்டும் எனவும் நினைப்பதால் நேரத்திற்காகக் காத்திருக்கிறேன். 5 நிமிடத்திற்கு மேல் இங்கு வரக் கிடைக்க மாட்டேன் என்கிறது நிரூபன், விரைவில் பார்க்க வேண்டும். பாடசாலை ஆரம்பித்தால் இயலாது.

    //பொங்கல் வாழ்த்துக்கள்// மிக்க நன்றி.

    //mind பண்ணவில்லை// க்ர்ர் ;E ;) u r mos..t welcome. ;)
    //கமெண்டின் கலரை மாற்றலாம்.// அதையேதான் நினைத்திருந்தேன், நேரம்தான் பிரச்சினை. ;( ஆனால் இப்போது உங்கள் உதவியால் சுலபமாகத் தெரிகிறது. அடுத்த இடைவேளையில் நடாத்திவிடுகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  8. மிக்க நன்றி ஏஞ்சல். ;)

    ReplyDelete
  9. நிரூபன்... அங்க கொமண்ட்டுக்கு நிறம் மாற்ற வழியில்லையே! மிச்சம் எல்லாம் இருக்கு. இது மட்டும் இல்லை. ;(

    ReplyDelete
  10. இமா அக்கா, ஒரு ஐந்து நிமிசம் கொடுங்கோ,

    ReplyDelete
  11. http://www.southernspeakers.net/2012/01/change-blogger-comment-font-size-and.html

    இந்த இணைப்பில விரிவாகச் சொல்லியிருக்காங்க.
    ஒரு தடவை முயற்சி செய்து பாருங்க.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா