24/12/2011 - மதியம் கிறிஸ்மஸ் மரம் வைத்துக்கொண்டிருந்தோம். விருந்தினர் வந்தனர். அவர்கள் சென்றதும் தேநீர்க் கோப்பைகளை எடுத்து வைப்பதற்குள்... மேலே சாண்டலியரில் இருந்து ஒரு தூக்கணம் விழுந்து 3 துண்டாகிப் போனது சோசர். ;(
அழகாக உடைந்திருந்ததைத் தூக்கிப் போட மனதில்லை.
துண்டங்களைப் பொருத்திப் பார்க்க அதிரா தெரிந்தார். ;) செரமிக் பெய்ன்ட் கொண்டு வரைந்தாயிற்று.
பூனைக்கு எத்தனை மீசை!!
யாரும் பதில் சொல்லவில்லை. ;(
24 (12+12) என்று தெரியவந்தது; அதுவும் முகத்தை விட நீளமாக இருக்குமாம். அத்தனை வரைந்தால் அழகாக இராது என்று தோன்றிற்று. 3 சோடிகள் மட்டும் வரைந்தேன்.
செவிகளை இப்படி வைத்தால்!!
கடைசியில் hot glue கொண்டு இப்படி ஒட்டியாயிற்று. பொருத்தமாக stand ஒன்றும் கிடைத்தது.
"மியாவ்வ்!"
மியாவ் படம் கீறி வைத்தால் எலித்தொல்லை இராதாமே! உண்மையா!!!
நீங்க பெரிய ஆளுங்க ...
ReplyDeleteஉடைந்த தட்டைப் பூனையாக்கவும்,
ReplyDeleteகிழிந்த குடையை யானையாக்கவும்
என் அன்புக்குரிய இமாவால் மட்டுமே முடியும்!;)))))
வாழ்த்துகள்.
பாராட்டுகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
பிரியமுள்ள vgk
:) cute!
ReplyDeleteso cute..
ReplyDeleteபேபி அதிரா (vida)போல அழகா இருக்கு ...
ReplyDeleteஎப்படி இருந்த அதிரா
ReplyDeleteஇப்படி ஆகிடங்கலே
என்ன ஒரு கை வண்ணம்
ம் சூப்பர்
//துண்டங்களைப் பொருத்திப் பார்க்க அதிரா தெரிந்தார். ;) //
ReplyDeleteஇது மியாவ் போல தெரியுதே ஹி..ஹி..... :-)))
//மகி said...
ReplyDelete:) cute!
//
மஞ்சள் கலரை பார்ததும் நீங்க இதைதான் சொல்லுவீங்கன்னு நினைச்சேன் ஹா..ஹா.. :-)))
//நீங்க பெரிய ஆளுங்க ... // யாரது என் உயரத்தை கிண்டல் பண்றது!! க்ர்ர்ர்ர் ;)
ReplyDeleteம்.. அந்த "பூட்டி வைக்கிற மென்பொருள்" முன்பே படித்துவிட்டு வந்துவிட்டேன் ராஜா சார். நான்தான் ரகசியமாகப் பின்தொடர்கிறேனே! ;)
//கிழிந்த குடையை யானையாக்கவும்// ம்.. எனக்கு வேணும்! ;))
ReplyDeleteதாங்க்ஸ் அண்ணா. ;D
மஹீ... சிரிக்கப்படாது. அழகா இல்லைன்னா சொல்லிரணும். ;)
ReplyDeleteஉங்க வீட்டுக்கும் பூசார் வந்திருக்காராமே, உண்மையா!!
அதிரா எப்பவும் போல அழகாத்தானே இருக்காங்க சிவா! !!!
ReplyDelete@ ஜெய்..
ReplyDelete//மியாவ் போல தெரியுதே// ஆமாம், அதே.
//மஞ்சள் கலரை பார்ததும்// ஓஹோ! அதுவா விஷயம்! ம்! ;)
ஜெய்... "உயரமான வெளிச்சம்" இருக்கு, பார்க்கலயா!! ;)
ம்யாவ்..என்று நான் சொல்லும் அளவிற்கு உங்களது கை வண்ணத்தில் உருவான மியாவ் அழகு.. அருமை..
ReplyDeleteகொக்கரக்கோ
ரொம்ப அழகா இருக்கு இமா,இப்படிலாம் யோசிக்க உங்களால் மட்டுமே முடியும்..பாராட்டுக்கள்!!
ReplyDeleteஇமாவின் கற்பனை திறனே அலாதிதான்.வெகு அழகு இமா.
ReplyDeleteயாரது என் உயரத்தை கிண்டல் பண்றது!! க்ர்ர்ர்ர் ;)//
ReplyDeleteஇமா..நமது முதல் சந்திப்பிலேயே இதைப்பற்றித்தான் பேசினோம்.அதெல்லாம், ஞாபகத்துக்கு வந்து புன்னகையை வரவழைக்கின்றது.
இமா ரொம்ப அழகாக இருக்கு.. உங்களின் கற்பனை திறனுக்கு ஓர் பெரிய சல்யூட்... கீரேட் இமா
ReplyDeleteமதுமதி... நான் "மியாவ்" என்றால் "கொக்கரக்கோ" என்கிறீர்கள். :) ம்... விரைவில் வருகிறேன். வருகைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி மேனகா & ஃபாயிஜா. ;)
ReplyDeleteஸாதிகா... ;)))) நாங்கள் பலமுறை நினைத்துச் சிரித்திருக்கிறோம். ;)
ReplyDeleteகிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது உங்களைச் சந்தித்து.
இமா, இது பூஸாரை விட அழகோ அழகு. உங்கள் கற்பனைத் திறனுக்கு என் வாழ்த்துக்கள். இந்தப் பாராட்டுக்களை எல்லாம் படிச்சுப் போட்டு திரும்ப தட்டுகளை உடைக்க கூடாது.
ReplyDeleteநல்ல கற்பனை இமா சூப்பர் ஆ இருக்கார் பூனையார்
ReplyDeleteஅங்கு விட இங்கு தான் பூஸார் அழகாக் இருக்கிறார்,
ReplyDeleteஇமா அக்கா
மிக்க நன்றி வானதி, சௌம்யா & ஜலீலா.
ReplyDeleteமிக்க நன்றி ஆசியா.
ReplyDeleteஇமா... சோ ச்வீட் :) அதிராவை விட மியாவ் ரொம்ப அழகு ;) அப்படி தானே ?? அது பாருங்க அந்த தட்டு எப்படி பெர்ஃபெக்ட்டா உடஞ்சிருக்குன்னு... நான் உடைச்சா இவ்வளவு அழகா உடய கூட செய்யாது ;( - வனிதா
ReplyDelete//அந்த தட்டு எப்படி பெர்ஃபெக்ட்டா உடஞ்சிருக்குன்னு...// ம்.. அதான் எப்பிடின்னு புரியல!! ;) ஒரு சின்னத் துகள்கூட எக்ஸ்ட்ராவா இருக்கல. சரியா 3 துண்டு. ;))) ஆனா... உடையுறப்ப போனசா அருமையா ஒரு 'க்லிங்' போட்டது.. இசை அது. ;)
ReplyDeleteவணக்கம் நண்பரே தங்களின் பதிவை வலைச்சரத்தில் பதித்துள்ளேன்
ReplyDeleteநன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_04.html
மிக்க நன்றி தென்காசிப்பைங்கிளி.
ReplyDeleteதங்கள் வலைப்பூ பார்த்தேன். படங்கள் கவிதைகள் அனைத்துமே அழகு.