Monday, 7 May 2012

மீண்டும் ஜீனோ!

தொண்ணூறுகளின் நடுப்பகுதி என்பதாக ஞாபகம், மாணவிகளோடு சேர்ந்து வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்காக பாட்ஜ்ஜுகள் (badges) செய்து கொண்டு இருந்தேன். அதற்காக இரண்டு வித்தியாசமான நீலச்சாயல்களில் கம்பளி நூல்கள் தேவைப்பட்டன. கூடவே இருந்த அழகிய ரோஜா வர்ண நூல்கண்டு, 'வாங்கு' என்றது.

சில காலம் பெட்டியில் கிடந்தது. பிறகு என் குட்டி மருமகளுக்காக...

இந்த நாய்க்குட்டியைச் செய்தேன். பென்சிலில் சுற்றுவேன் என்பதைத் தவிர எத்தனை சுற்றுக்கள், என்ன அளவு என்பதெல்லாம் இப்போ நினைவுக்கு வரவில்லை. மீண்டும் ஒரு தடவை முயன்று பார்க்கவேண்டும்.

அப்போது எப்படியோ ஒரு ஜோடிப் பொம்மைக் கண்கள் கிடைத்திருக்கின்றன. மூக்கு... அது வானொலிப் பெட்டியோ தொலைக்காட்சிப் பெட்டியோ எதனோடோ கூட வந்த தட்டையான கருப்புக் கம்பி; நாய்மூக்கு வடிவத்தில் முறுக்கி வைத்தேன்.

மருமகள் விளையாடி முடித்த போது....
...இந்த நிலையில் ஒரு பெட்டியில் கிடந்தவர், அவர்கள் தேசம் விட்டுப் புறப்பட்டதும் மீண்டும் என்னிடம் வந்து சேர்ந்தார்.

நானும் ஒரு நாள் புறப்பட்டு வந்துவிட்டேன்.

மூன்று வருடங்கள் கழித்து ஊருக்குப் போயிருந்த போது பழைய பொருட்களுடன் ஒரு கொட்டிலில் கிடந்தார். குளியலொன்று கொடுத்து மீட்டு வந்தேன்.

இங்கு வந்தும் நேற்று வரை என் புதையல்கள் நடுவே இப்படியேதான் இருந்தார்.

மீண்டும் முழுமைபெற்று இதோ உங்கள் முன் – ஜீனோ தி க்யூட், ஸ்வீட் & க்ரேட். ;)

எங்காவது ஒழிந்திருந்து ஜீனோ பார்க்கும் என்கிற நம்பிக்கையுடன்....
- ஆன்டி 
ஹை!!!!!!
ஜீனோ அரைக்கண்ணால பார்க்குதே! ஆன்டி கண்டுட்டேனே!
ஹி! ஹி!
பௌ! பௌ! ;)))

41 comments:

  1. ஜீனோ லுக்ஸ் கியூட் .

    ஓடியாங்கோ மியாவ் ஜீனோ வந்திட்டார்

    ReplyDelete
    Replies
    1. ;) "பப்பி, பப்பி பாய்ந்து வா!" என்று எல்லோருமா கூப்பிடுங்கோ. நான் கேட்டா... ஜீனோ - நிலாவுக்குப் போயிருக்காம் என்குது. ;(

      Delete
    2. என்னதூஊஊஊ மூனுக்குப் போயிருக்கிறாரோ? எதுக்காம்?:)

      Delete
    3. கர்ர்ர்.. Why this கொ.வெ! எவ்வளவு கஷ்டப்பட்டு வர வைச்சிருக்கிறன், துரத்தப் பாக்குறியளே அதீஸ்.

      Delete
    4. ஆஆஆஆஆ பபபபச்சைப்பு இங்கினவோ இருக்கிறார்... இது தெரியாமல் ஆளைக் காணேல்லை என உண்ணாவிரதம் தொடங்கப் பார்த்தமே... நல்லவேளை.. அஞ்சூஊஊஊ ஓடிப்போய்ப் புட்டும் பொரித்திடித்த சம்பலும் சாப்பிடுங்கோஓஓஓஓஒ:)).

      ஊ.கு:
      ஜெய்லானி8 May 2012 1:25 AM
      பௌ! பௌ! ;)))///

      அதெப்பூடி இமா, உங்கட இளைய மருமகனும் இப்போ குரைக்கத் தொடங்கிட்டார்ர்ர்:)))) ஒண்ணுமே பிரியுதில்ல எனக்கு:))

      Delete
    5. ஒருவேளை!!! இவர்தான் அவரோ!! ;)))

      Delete
    6. //ஒருவேளை!!! இவர்தான் அவரோ!! ;))) //

      ஆ.... மாமீஈஈஈ க்கும் இப்போ கொயப்பம் க்கி..க்கீஈஈஈ :-))))

      Delete
    7. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஜீனோவை சேவ் பண்ணப் பார்க்கிறீங்களோ?:)) எங்கிட்டயேவா?:))... ஃபிளவரும் பப்பியும் எப்பூடி ஒண்ணாகலாம்:)))

      Delete
  2. ரோஸ் கலரில் ஜீனோ அருமையாக உள்ளது இமா.

    ஓர் உயிரற்ற ஜீவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது மிகவும் வியப்பாக உள்ளது.

    ஜீனோ என பெயர் கொடுத்துள்ளதும் அருமை. சுஜாதாவை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

    முதல் படத்தில் உள்ள ஜீனோ தான் அழகாக உள்ளார்.

    மூன்றாமவர் இரண்டாமவரை விட பரவாயில்லை.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி அண்ணா.

      //ஜீனோ என பெயர் கொடுத்துள்ளதும் அருமை. சுஜாதாவை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.// பெருமைகள் அனைத்தும் ஜீனோவுக்கே.

      //முதல் படத்தில் உள்ள ஜீனோ தான் அழகாக உள்ளார்.// மற்றவர்களது டாஷ்போர்ட்டில் தெரிந்துவைக்கும் என்பதால் அழகான படம் முதலாவதாகப் போட்டு இருக்கிறேன்.

      Delete
  3. ஜீனோ மயில் அனுப்பி இருக்கு,
    //என்ன செய்வதுன்னு பிரில..நீங்க வேற ஜீனோ0ஜீனோ0ஜீனோ-ன்னு கூவிக்கூவி கூப்டறேள்..அவ்வ்வ்வ்வ்! ஜீனோ இஸ் சோ கன்ஃப்யுஸ்ட்.....கர்ர்ர்ர்ர்ர்
    கிர்ர்ர்ர்ர்ர்
    வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    விவ்வ்வ்வ்வ்வ்வ்// காரணம் சிலது சொல்லி இருந்தது, எனக்கும் சரியென்றே தோன்றுகிறது. ஆனாலும்... நம்பிக்கையோடு - ஆன்டி ;)

    ReplyDelete
  4. /ஜீனோ மயில் அனுப்பி இருக்கு, காரணம் சிலது சொல்லி இருந்தது, எனக்கும் சரியென்றே தோன்றுகிறது. ஆனாலும்... / இதான் எங்கப்பா குதிருக்குள்ளே லேது-என்பதா ஆன்ரீ?? வவ்வ்வ்.வ்வ்வ்...வ்வ்வ்!

    மொதலாவதா நீங்கோ ஒரு பிங்க் கலேர் பப்பீ பொம்மே-வைக் காட்டி "ஜீனோ ஜீனோ, ஓடி வா!!" என்றதை ஜீனோ வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கடிக்கிறது, ச்சீ,ச்சீ,கண்டிக்கிறது. அதெப்பூடி ஒரு பாய் (இது வேற boy) -க்கு பிங்க் கலர் குடுக்கலாம்?!கர்ர்ர்ர்ர்ர்ர்...வவ்வ்வ்வ்வ்..வ்வவ்வ்!

    ரெண்டாவதா ஜீனோக்கு மெமரி சிப் மாத்திட்டாங்க. அதனாலே இப்பம் ஜீனோ கிட்டத்தட்ட 2 கால் மனுஷர்;) மாதிரியே டிங்க் பண்ணுது..ஜீனோவின் வழக்கமான எழுத்துநடே;) மாறிப்போச்சுது. ஸோ,இப்பம் மறுக்கா மறுக்கா இங்ஙனயெல்லாம் வந்தா கோணைகோணையாதான் ஜீனோ எயுதும்.அதான் பரில்லா!

    பிறகு, நீங்க அடிராக்காகிட்ட false lead எல்லாம் குடுக்கறீங்கள்,நல்லவேளை அக்கா கிட்னிய ரிப்பேர் பண்ண பாய் கடையில குடுத்திருக்கறதாலை டிங்க் பண்ணாம மேக்கப் பண்ணிட்டு கதிரைக்கடியில ஒளிச்சிட்டாங்கோ..அதுவே கிட்னிய ஊஸ் பண்ணி டிங் பண்ணிருந்தா என்னாகும்?? நனைக்கவெ பயம்மா இர்ர்கு...ஆஆஆஆஆஆஆ!

    கடைசிப் படத்திலை இருக்கற பப்பீஸ் கிழவி ஆகிட்டினம் போல? ஒண்ணறை கண்ணுதான் இருக்கு, மீதி அரைக்கண் எங்கை ஆன்ரி? ப்ளாஷிலே ஒளிச்சிட்டீங்களா? ஹாஹாஹா! அடுத்த தபா படம் எடுக்கச் சொல்லோ ஜீனோக்கு ஒரு கோல்(call) போடுங்கோ..ஜீனோ வில் டீச் யூ ஹவ் டு ஹேண்டில் எ டிஎஸ்எல்ஆர் கமரா,டீக் ஹை?!

    ஓக்கே...மறுக்கா மறுக்கா கூவினாலும் வர ஜீனோவுக்கு டைமிருக்குமா தெரிலே. ஸோ, எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதைங்கோ,ப்ளிஸ்.
    இருந்தாலும் உந்த மொதப் படத்திலை இருக்கற பப்பீஸ் அயகா இருக்கிறாங்கோ..புஜ்ஜி பார்க்காத நேரம் ஜீனோ ஓடியாந்து சைட் அடிச்சுக்கினு போகும், பத்திரமா வையுங்கோ பிங்க்க்க்க்க்க்கி-ய....என்ன்ன்ன்ன்ன்ன??!

    ReplyDelete
    Replies
    1. ஹை! வரமாட்டேன்னுட்டு நான் ஸ்கூல் போனப்புறம் பப்பீஸ் வந்திருக்கே! ;) திருட்டுப் பப்பி. ;D

      இப்பவும்... மீ சேயிங்.. //எங்கப்பா குதிருக்குள்ளே லேது// ஹி ஹி. ;)))

      //அதெப்பூடி ஒரு பாய் (இது வேற boy) -க்கு பிங்க் கலர் குடுக்கலாம்?!// அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க! ஹ்ம்! இருந்த பெய்ன்ட்லாம் பூஸ், திக்கா பூஸு பூஸுன்னு பூஸி முடிச்சுட்டாங்க. இது... அவங்க பூஸி மீதம் வைச்ச ரூஜ். ;(

      //ஜீனோக்கு மெமரி சிப் மாத்திட்டாங்க.// ம்.. எங்க வரீங்கன்னு புரியுது. ;)

      //அடிராக்காகிட்ட false lead எல்லாம் குடுக்கறீங்கள்// பின்ன! நிஜ லீடை கொடுத்துட்டா அவங்க புடிக்குள்ள ஜீனோ மாட்டிக்குமே! பரவால்லயா பப்பீஸ்!! ;))) இதுன்னா அறுத்துட்டு ஓடிரலாம்ல! ;)

      //அடுத்த தபா படம் எடுக்கச் சொல்லோ// சொல்றேன் நானு. எனக்கு ராவைலதானே நேரம் கிடைக்குது. தூக்கக் கலக்கத்துல படம் எடுத்துவைச்சு.. ;( இப்புடி ஆகிருது. அதீஸ் பொறுமை இல்லாம எனக்கு கமண்டினாலுங்கற பயத்துல குட்டியா கிடைச்ச காப்ல மீ பப்ளிஷ்ட்.

      தேடிப் பார்த்தேன், காமரால ஹாண்டில் காணம்ப்பா. ;(( நீ....ளமா ஒரு ஸ்ட்ராப்தான் வைச்சிருக்காங்க. ;(

      டோரா... வேர் ஆ யூ!!! பப்பீஸ் இங்கே சைட் அடிக்கிங். ;))))))))

      Delete
    2. ஜினோ.. வெல்கம் ஜீனோ.. ஜீனோவின் பெயர் பார்த்ததும் எவ்ளோ சந்தோசமாக இருக்குது தெரியுமோ.... என்னாது தேட வேண்டாமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அப்பப தேடிட்டேதான் இருப்போம்ம்ம்ம்:)))

      Delete
    3. //இருந்த பெய்ன்ட்லாம் பூஸ், திக்கா பூஸு பூஸுன்னு பூஸி முடிச்சுட்டாங்க. இது... அவங்க பூஸி மீதம் வைச்ச ரூஜ். ;(//

      சிரிச்சு சிரிச்சு முடியலே இமா ஐயோ ஐயோ !!

      Delete
    4. மியாவ்வ்வ்வ்வ் :)))

      Delete
  5. //ஜீனோ அரைக்கண்ணால பார்க்குதே! ஆன்டி கண்டுட்டேனே!
    ஹி! ஹி!
    பௌ! பௌ! ;)))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஜீனோவுக்கு அரைக்கண் எனச் சொன்னதை ஜீனோவின் பாசமான பேபி சிஸ்டர்(அது நாந்தேன்:)) வன்மையாகக் கண்டிக்கிறேன்ன்ன்...:))))


    அஞ்சூஊஊஊஉ.... ஜீனோ என் பக்கத்துக்கு வந்திட்டார்ர்ர்.
    பூ..பூ.. இனிப்பூஊஊஊஉ எடுக்க.... சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே.. சந்தோசம் அதிராக்குப் பொங்குதே:))....

    டாங்ஸ்ஸ்சூ இமா.. ஜீனோவை அழைத்து வந்தமைக்கு...

    ReplyDelete
    Replies
    1. என்னாதூ! வன்மையாகக் கண்ணடிக்கிறீங்களோ!!!!

      //டாங்ஸ்ஸ்சூ// எனக்கெதுக்கு அதீஸ்? மனமிரங்கி வந்ததுக்கு ஜீனோவுக்குச் சொல்லுங்கோ!

      Delete
  6. பிங் ஜீனோப் பப்பி சூப்பர்:)).. நானும் ஒன்று முயற்சிக்கோணும்... சொக்ஸ்ல:)) ஆசை நிறைய இருக்கு ஆனா நேரம் இடங் கொடுக்காதாம்...

    இன்றுகூட அப்பப்ப நோட்பாட் மூலம் என் பக்கத்தை எட்டிப் பார்த்துப் பின்னூட்டம் போட்டேனே தவிர இத்தலைப்பைக்கூட காணாமல் விட்டுவிட்டேன்...

    ஜீனோவின் மெயில் பார்த்ததும் தான் பதறியடிச்சு ஓடினேன்.. ஜீனோ பின்னூட்டம் போட்டிருக்கிறார்... வியாளமாற்றம்தான்:))

    ReplyDelete
    Replies
    1. ம்.. முயற்சியுங்கோ... லேடிபக் முயற்சித்தது போல. ;)

      //ஜீனோவின் மெயில்// அட! நல்ல வி.மாற்றம்தான். ;)

      Delete
    2. வியாளமாற்றம்தான்:))// ஸ்பெல்லிங் ஸ்பெல்லிங் டீச்சர் விடாதீங்க :))

      Delete
    3. அதுக்குப் பின்னால டபுள் ஸ்மைலி இருக்கு. இது சும்மா.. பூஸ் விடுற காமெடி. ;))

      Delete
    4. றீச்சருக்கு டவுட் வந்து, கிட்னியை ஊஸ் பண்ணி:)) வி.மாற்றம் எனப் போட்டுவிட்டா.. இது கீரிக்கு வியங்கெல்லை:)))... உஸ்ஸ் யப்பா இனிமேல் ள வுக்கெல்லாம் ய தான் போடப்போறேன்:)))

      Delete
  7. ஹாய் ஜி னோ

    முதலில் கண்கள் கருப்பா இருக்கு
    அப்புறம்
    வயசு ஆகிட்டு அதனால் கண்கள்
    வேற கலர் ஆகிட்டு போல

    ReplyDelete
    Replies
    1. இல்ல, கலர் கான்டாக்ட் லென்ஸ் போட்டுவிட்டிருக்கேன்பா. ;)

      Delete
  8. ம் ஒரு சிலருக்குத்தான்
    இப்படி எல்லாம் கைவினை பொருட்கள்
    தத்ருபமாக முடியும்
    அந்த முதல் ஜினோ சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. தாங்ஸ் ஷிவ்ஸ். ;)

      Delete
    2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) இது எப்ப தொடக்கமாக்கும் “ஷிவ்ஸ்”?:)) ஹவ் இஸ் இட்?:))

      Delete
    3. அதூ.. நீங்கள் பயணம் போயிருந்த காலத்தில இருந்து. ;)

      ஊ.கு - புதுப் பொன்னி பெயர் தெரியுமோ அதிரா!! ;D

      Delete
  9. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் இமாவை பிரிந்து திரும்பி இமாவிடமே ஜீனோ வந்திடிச்சா..அதை குளிப்பாட்டி புது அழகை கொண்டு வந்துட்டீங்க..மருமகன் தான் கண்ணாமூச்சி காட்டறார்..

    ReplyDelete
    Replies
    1. //அதை குளிப்பாட்டி// ம். அதுக்குச் சரியான கள்ளம் குளிக்க. கட்டி வைச்சுத்தான் வார்த்துவிட்டனான். ;))

      //20 வருடங்களுக்கு மேல் இமாவை பிரிந்து// இல்லீங்க. இமா விடுமுறைல போனாலோ பப்பி லீவுல போனாலோ கூட எப்புடியாச்சும் 'சாட்ல' குரைச்சுரும். ;))

      Delete
  10. பழைய பொம்மைக்கு உயிர் கொடுத்து எதனை நாடி பதிவிட்டீர்களோ அது நடந்து விட்டது.உங்கள் ஜீனோ ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது இமா.

    ReplyDelete
    Replies
    1. //அது நடந்து விட்டது.// ஆமாம் ஸாதிகா. பப்பீஸுக்கு மிக்க நன்றி.

      Delete
  11. ரொம்ப அழகான பப்பி இமா. சூப்பர் ஆ செஞ்சு இருக்கீங்க. இத போல சின்ன ball ஸ்கூல் இல் படிக்கும் போது ஆர்ட் அண்ட் கிராப்ட் இல் செஞ்ச ஞாபகம் உண்டு. இத்தன வருஷம் கழிச்சும் பப்பிய பத்திரமா வெச்சு இருக்கீங்க சூப்பர் டீச்சர்.

    ReplyDelete
  12. ஒளிந்திருந்த ஜீனோவை உங்க பிங்கி கூட்டியாந்திடுச்சு இமா.இருந்தாலும் பிங்கி ரொம்ப் அழகு.அதைக் கண்டு தான் ஜினோ புஜ்ஜுக்கு தெரியாமல் ஓடிவந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  13. ஹி! ஹி! ஜீனோ இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததை டோராபுஜ்ஜியிடம் போட்டுக் குடுத்துரலாமா ஆசியா! ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா