Monday, 14 May 2012

இதன் பெயர் பின்னூட்டமா!

இமா தன் பாட்டிற்கு ஏதோ தான் செய்கிறவற்றை புகைப்படமாக்கிப் பகிர்ந்து கொண்டால்....
:))))) - என்றொரு சிரிப்பு!

//சின்னப்புள்ளைகளுக்குப் பாடம் நடத்தி நடத்தி நடத்தி நடத்தி...நீங்களும் சின்னப்புள்ளையாவே ஆகிட்டீங்கனு நினைக்கிறேன் இமா!// திரும்பவும் நீளமாக ஒரு கண்ணடிப்பு. ;)))))))

//நாய்க்குட்டி,காரு,இனி அடுத்து என்னது?!! டெடி பேர்...//

இதன் பெயர் பின்னூட்டமா!!
~~~~~~~~~~~~~~~~~~
இதோ... அந்தப் பின்னூட்டத்திற்கு ஓர் பின்னூட்டம் -

கடந்த சில வருடங்களாகப் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் தோழி ஒருவர், பாதியில் நிறுத்தி வைத்திருந்த கரடிப்பொம்மை ஒன்றை என்னையே தைத்து முடித்து எடுத்துக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டார்.

அவர் வாங்கியபோதே கரடி முகம் தயாராக இருந்திருக்க வேண்டும் என்று பெட்டியிலிருந்த செய்முறைகளிலிருந்து தெரியவந்தது.  தேவையான மீதித் துண்டுகள் வெட்டித் தயாராக இருந்தன. தேவையான அளவு பஞ்சும் ஒரு தையலூசியும் பொருத்தமான நிற நூலும் தேவையானபடி வைத்திருந்தார்கள்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தைத்து வந்தேன். அது எப்படி மகிக்குத் தெரியும்!!

வேலை சுலபம்போல் தெரிந்தாலும் சுலபமாக இருக்கவில்லை. நாமே ஆரம்பம் முதல் செய்வதாக இருந்தால் சிந்தித்துச் செயற்படலாம். ஒருவர் ஆரம்பித்ததை இன்னொருவர் முடித்து வைப்பது சிரமம். ;(

இதன் நடுவே நண்பர் ஒருவர் பேச்சுவாக்கில் பூசை நேரம் இமா கரடியை நினைக்கப் போகிறேன் என்பது போல் ஏதோ சொல்லி வைக்க, ஞாயிறு பூசைக்குப் போகுமுன் முடித்துவிடலாம் என்று முழுமூச்சாய் முடித்துவிட்டேன்.

வேலையை முடித்துவிட்டுப் பார்த்தால் ஆரம்பம் முதல் படிப்படியாக எடுத்து வைத்திருந்த படங்கள் காணாதுபோயிருந்தன. ;(

முழுமையான Teddy உங்கள் பார்வைக்கு.

45 comments:

  1. "காக்கை உட்கார பனம்பழம் விழுந்த" கதையாக இருக்கிறது இமா! :) நீங்க நிஜமாலுமே டெடிபேர் செய்யறீங்கனு எனக்குத் தெரியாது. இருந்தாலும் இந்த டெலிபதி கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு,இல்லையா? ;)

    இனிமேல் நான் என்னன்னு பின்னூட்டம் போடுவேன்? நினைச்சாலே பயமா இருக்குதே? ....அவ்வ்வ்...வ்வ்!

    ReplyDelete
    Replies
    1. ;))
      //இனிமேல் நான் என்னன்னு பின்னூட்டம் போடுவேன்?//
      //நினைச்சாலே பயமா இருக்குதே?// என்று. ;D

      Delete
    2. //இனிமேல் நான் என்னன்னு பின்னூட்டம் போடுவேன்? நினைச்சாலே பயமா இருக்குதே? ....அவ்வ்வ்...வ்வ்!
      ///

      ”பின்னூட்டம்” எனப் பின்னூட்டம் போடுங்க மகி? இது கூடவா தெரியாது கர்ர்ர்ர்ர்ர்:)) அலோபதி:)))

      Delete
    3. //பின்னூட்டம்” எனப் பின்னூட்டம் போடுங்க மகி? இது கூடவா தெரியாது கர்ர்ர்ர்ர்ர்:)) அலோபதி:)))//

      மஞ்சள் பூ இந்த கமெண்ட் பார்த்து பேச்சு மூச்சில்லாம இருக்காங்கன்னு கேள்விபட்டேன்

      Delete
    4. //மஞ்சள் பூ இந்த கமெண்ட் பார்த்து பேச்சு மூச்சில்லாம இருக்காங்கன்னு கேள்விபட்டேன்//

      ம்.. பச்சைப்பூவைப் பாருங்க, சிரிக்கிறாங்க. ;)

      Delete
  2. டெடி சூப்பர் இமா.
    ஒரு சில நேரம் எனக்கும் இப்படி எடுத்த படங்கள் கானாமல் போய்விடும்.ஆமாம் மகி நீங்க எப்ப பழமொழி பாட்டியானீங்க,இப்பதான் வானதிக்கு நீங்க எழுதிய பின்னூட்டத்தில் பழமொழி பார்த்தேன்,அதற்குள் இங்கொன்று.

    ReplyDelete
    Replies
    1. ;) அவங்கல்லாம் திருவள்ளுவர் வம்சம். முன்னொரு காலம் குறள் குறளா போட்டுத் தாக்கிட்டு இருந்தாங்க 'அங்க'.

      நன்றி ஆசியா.

      Delete
  3. டெடி ரொம்ப அழகா இருக்கான் இமா .
    பிரவுன் அல்லது /ப்ளூ நிற ரிப்பன் கட்டியிருந்தால் boy :)))))


    //படிப்படியாக எடுத்து வைத்திருந்த படங்கள் எல்லாம் காணாதுபோயிருந்தது. ;( ///


    மொபைலிலா படம் எடுத்தீங்க ? அப்படீன்னா try searching the whole gallery /
    சில நேரம் புதிய படங்கள் டிலீட் ஆன பழைய படங்கள் பிளேசில் சேவ் ஆகியிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இல்ல, காமராலதான். எங்க சேவ் ஆச்சுன்னு தெரியல. தேட நேரம் பத்தல. ;((

      Delete
    2. அந்த மெமரியை பிடிச்சு கம்ப்யூல போட்டு ஹிட்டன் ஃபோல்டரில் தேடினால் அப்படியே கிடைக்கும் .ஆனா ரீ சேவ் செய்யும் போது அட்ரிபியூடில் ஹிட்டன் பாக்ஸை அன் செக் செய்யனும் :-)

      Delete
    3. ;)) நானு... எந்த சிப்ல, எந்த மெமரி ஸ்டிக்லன்னு தெரியலைங்கறேன். முதல்ல என் மெமரியை பிடிச்சு... கம்ப்யூல இல்ல, வாஷிங் மெஷின்ல போடணும் ஜெய். ;))

      Delete
  4. Asiya Akka, did I say some pazhamozhi - in Vanathy's?!..I don't remember! ;)

    Some times the talking n writings comes in a flow you see?! hihihihi...

    ReplyDelete
  5. நான் நம்ப மாட்டேன்ன்.. நான் நம்ப மாட்டேன்ன்.. உது போன தடவை கிரைஸ் சேர்ஜ் போனபோது முன் கடையில வாங்கி வந்தவ:)))..

    ReplyDelete
    Replies
    1. உங்கட ஆட்களுக்குத்தான் அங்க எங்க டெடி கடை இருக்கு எண்டு தெரியும். ;)

      Delete
  6. ஆஆஆஆ சொல்ல மறந்திட்டேன்ன்.. சொல்லாமல்போனா றீச்சர் அடிப்பா:)))..

    ரெடி பெயார் சூப்பர் இமா... ஆனா தலையின் அளவுக்கு.. கை கால்.. கொஞ்சம் இன்னும் நீளமாக இருந்திருக்கலாமோ எனத் தோணுது....

    ReplyDelete
    Replies
    1. ம். உண்மைதான்.

      Delete
    2. //ஆஆஆஆ சொல்ல மறந்திட்டேன்ன்.. சொல்லாமல்போனா றீச்சர் அடிப்பா:)))..//

      அது அந்த பயம் இருக்கணும் வெரி குட் டீச்சர் எல்லாரையும் ஒரு கன்ட்ரோல் ல முக்கியமா பூஸ:)) கன்ட்ரோல் ல வெச்சு இருக்கீங்க

      Delete
  7. Replies
    1. கணக்கு வாத்தியார் கூட அமையல! ;)

      Delete
  8. என்ன பின்னோட்டம் போடுவது என்று
    தெரியாதா காரணத்தால்
    பின்னோட்டம் போட்டு விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ம்.. ரிவர்ஸ்ல ஓடிட்டீங்க. ம். பார்த்து யார் மேலயும் ;) முட்டிக்காம ஓடினா சரி சிவா.

      Delete
  9. பிரவுன் அல்லது /ப்ளூ நிற ரிப்பன் கட்டியிருந்தால் boy :)))))

    பாரா இது புதுசா இருக்கே
    ம் ஒரு விசியம் கற்றுக்கொண்டேன்
    நன்றி அஞ்சு அக்கா
    அண்ட் இம்மா

    ReplyDelete
  10. கரடியார் அழகு.

    ReplyDelete
  11. டெடி ரொம்ப அழகாக இருக்கு இமா.

    ReplyDelete
    Replies
    1. தாங்ஸ் வான்ஸ், ராஜா & ஸாதிகா.

      Delete
  12. /”பின்னூட்டம்” எனப் பின்னூட்டம் போடுங்க மகி? / பூஸ் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?
    பின்னூட்டம்---ஒரு தரம்
    பின்னூட்டம் --- இரண்டு தரம்
    பின்னூட்டம் --- மூணு தரம்!

    பின்னூட்டம்ம்ம்ம்ம்ம்ம்!

    //ஆனா தலையின் அளவுக்கு.. கை கால்.. கொஞ்சம் இன்னும் நீளமாக இருந்திருக்கலாமோ எனத் தோணுது....//ஆமாம்,அதிரா சொன்னபிறகு எனக்கும் அப்படித்தான் தோணுது! ஆனா ரெடிமேட் கரடில இருக்கறதைத்தானே தைக்கமுடியும் அதிரா?!

    ReplyDelete
    Replies
    1. இது என்ன பாயாசமா!! பின்னூட்டம் போடச் சொன்னா ஏலம், கறுவா, கராம்புல்லாம் போடுறாங்க.

      //ரெடிமேட் கரடில இருக்கறதைத்தானே தைக்கமுடியும் அதிரா?!// அதானே! பூஸ் கி.ஃபெய்லியர். ;))))))

      Delete
    2. பின்னூட்டம்---ஒரு தரம்
      பின்னூட்டம் --- இரண்டு தரம்
      பின்னூட்டம் --- மூணு தரம்//

      இத பார்க்காம மகி பேச்சு மூச்சு இல்லாம இருக்காங்கன்னு போட்டுட்டேனே :)) கோர்ட்டுல டவாலியா இருந்திருப்பாங்களோ :))

      Delete
  13. //முழுமையான Teddy மட்டும் உங்கள் பார்வைக்கு.// ;)))))

    வேலையை முடித்துவிட்டுப் பார்த்தால் ஆரம்பம் முதல் படிப்படியாக எடுத்து வைத்திருந்த படங்கள் எல்லாம் காணாதுபோயிருந்தது. ;(((((

    ReplyDelete
  14. Imma's ;)smile is very contagious Anna. ;))))

    ReplyDelete
  15. ரொம்ப கியூட்டா இருக்கு இமா டெடி. உங்க பசங்க அண்ட் பேர பசங்க (future) ரொம்ப கொடுத்து வெச்சவங்க. பாட்டி கையால டெடி ந்குறது எத்தன பேருக்கு கிடைக்கும்:)) எனக்கு ஒரு டெடி பார்ஸல் ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. What is your point Girija? You mean to say you're a grand daughter to Imma?
      Lol!

      :D :) ;)

      Delete
    2. garrrrrrrr Mahi. ;)) அவலை நினைச்சு உரலையும் இடிக்கறீங்க. ;)

      Delete
  16. //இதன் பெயர் பின்னூட்டமா! //

    இதுக்குதான் நான் போஸ்டே போடுறதில்லை ..அப்புறம் எப்படி பின்னுட்டம் வரும் ஹி..ஹி... :-)))))

    ReplyDelete
  17. //your comment will be visible after approval. //

    ##### இது இருக்கும் போது அதுப்போல commentகளை வெளியிடாமல் இருக்கலாமே :-) ######

    ReplyDelete
  18. நேர்த்தியாகத் தான் முடித்திருக்கிறீர்கள்... அருமை..

    ReplyDelete
    Replies
    1. _()_ நல்வரவு

      கருத்துக்கு நன்றி சுதா.

      Delete
  19. hi imma this is rekha from indiantastyfoodrecipes.blogspot.com

    loved ur blog.. tamil la oru blog ah paarkum pothey romba santhosama iruku.. very glad to be ur follower:)

    If u ve time visit my blog..

    ReplyDelete
  20. வருகைக்கும் பின்தொடர இணைந்துள்ளமைக்கும் என் நன்றி ரேகா.

    நிச்சயம் நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.

    ReplyDelete
  21. வாவ்... வெரி கியூட் டெடி இமா. ரொம்ப அழகா செய்திருக்கீங்க... :) - வனிதா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா