ஒரே ஒரு ஊரில் ஒரு பூனை இருந்ததாம். அதற்கு ஜீனோ குலைக்குமா, குரைக்குமா என்பதில் சந்தேகம் வந்ததாம்... ;)
ம்... இங்கே இருக்கும் ஜீனோ - பொம்மை ஜீனோ; குரைக்காது.
எப்பொழுதும் இந்த மேசைக்கு....
'ஐவி' இலைகளையும் சில திராட்சைக் குலைகளையும் வைத்துத்தான் அலங்கரிப்பேன்.
'ஈரலிப்பு உறிஞ்சி' இயற்கை இலைகளை விரைவில் உலரவைத்துவிடுவதால் அடிக்கடி மாற்றும் வேலை இருந்தது.
'ஈரலிப்பு உறிஞ்சி' இயற்கை இலைகளை விரைவில் உலரவைத்துவிடுவதால் அடிக்கடி மாற்றும் வேலை இருந்தது.
சிரமத்தைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை $ கடைப்பக்கம் போகும் போதும் எட்டிப் பார்ப்பேன், செயற்கை திராட்சைக் கொடி கிடைக்கிறதா என்று. ஒருமுறை 'ஐவி' கிடைத்தது. வாங்கி வந்தேன். குலைகுலையாக முந்திரிக்காய் காண, வாங்கிக் கொள்ளும் ஆசை வந்தது.
சமீபத்தில் திராட்சைக் கிளை கொண்டு ஒரு தூணை அலங்கரித்திருத்திருந்தார்கள்; விசாரிக்க, உள்ளே இருந்து ஐந்து துண்டுகள், 10 $ என்று எடுத்து தந்தார்கள். அவற்றில் மூன்று மட்டும் போதுமாக இருந்தது எங்கள் மேசைக்கு.
இவற்றுக்கு மேலதிகமாக... பச்சைக் கம்பியும் பயன்படுத்தியிருக்கிறேன்.
கிடைத்த தொட்டியில் அளவுக்கு 'ஈரலிப்பான பாலைவனப்பசுஞ்சோலை' ஹி ஹி இனியும் யாராவது தமிழ் கேட்பீங்களோ!! வெட்டி வைத்து நிரப்பி... செடியை!! நட்டு!!... ;)
பச்சைக் கம்பியை எழுதுகோலில் சுற்றி...
கொடிச்சுருள் (இணையத்தில் தேடிப் பிடித்த சொல் இது.) செய்து...
கம்பியும் பசைநாடாக்களும் அங்கங்கே கட்டுவேலைக்குப் பயன்பட்டன. உண்மையில் இவற்றை கொடிச்சுருள் செய்யவே எடுத்து வைத்திருந்தேன். பிற்பாடு வெளிர்பச்சைக் கம்பி கண்ணில் படவும் மனது மாறிவிட்டது. ம்!
உள்வீட்டில் செயற்கையான இயற்கை!! இந்த மேசையில் ஒரு கோப்பை தேனீரோடு அமர்ந்தால் எந்த வேலையானாலும் ரசனையாக முடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பின்னிணைப்பு
'எட்டுமா இது!'
'செல் --- போதவில்லை. நாளைக்காலை முதல் வேலையாக நிலாவைக் கொண்டு அதிக வலு செல் ஒன்று பெற்றுக்கொள்ள வேண்டும்.'
' அட! அது என்ன!! குருவித் தம்பதி குடியிருக்கிறதா அங்கே!!'
"சிப் சிப்!"
"ஹாய் ஜீனோ!"
"ஹாய் ஜீனோ!"
"ஹாய்! இது என்ன வார்த்தை! என் மெமரியில் இல்லையே!!"
"அது.. ஒரு வகை விசாரிப்பு."
"பழம் வேணுமா உனக்கு? பிடுங்கிப் போடட்டுமா?"
"ம்! நிறையப் போடு."
'இதிலிருந்து வீட்டிலேயே ஜேவ் தயாரிக்கலாமா என்று நினைவாக நிலாவை விசாரிக்க வேண்டும்... நாளை.'
"ஜீனோ! தயவு செய்து போகிறபோது நாற்காலி எல்லாம் சரியாக்கிவிட்டுப் போகிறாயா? இமாவுக்கு ஒழுங்கில்லாமலிருந்தால் பிடிக்காது."
"ஒரு அற்ப சிட்டுக்கு அடிபணியவேண்டிய தேவை எனக்கில்லை. அன்பாகக் கேள் செய்கிறேன்."
"சரி, அன்பாக"
'சர்... சர்ர்.... டமார்... டர்ர்ர்ர்ர்ர்'
"போதுமா!"
விசுக் விசுக் என்று நடந்து போகிறது ஜீனோ
வவ்
வ
வ்
.
.
.
மிக அழகான வேலைப்பாடு இமா... வார்த்தையே இல்லை, உங்க க்ரியேட்டிவிட்டியை பற்றி சொல்ல. சூப்பர். - வனிதா
ReplyDeleteநல்ல வேலைப்பாடு இமா... உங்க க்ரியேட்டிவிட்டியை பாராட்ட வார்த்தை இல்லை. அழகு... - வனிதா
ReplyDeleteநன்றி வனி. ஒரு தடவை சொன்னாலே 100 தடவை சொன்ன மாதிரி. இப்போ 200. ;D
Deleteஒரே ஒரு ஊரில் ஒரு பூனை இருந்ததாம். அதற்கு ஜீனோ குலைக்குமா, குரைக்குமா என்பதில் சந்தேகம் வந்ததாம்... ;////
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர் ரொம்ப நல்ல பூனை இருந்திச்சாம் எனச் சொல்லோணும்:)).. ஜீனோ பூனையைப் பார்த்துக் குலைக்க மாட்டார்ர்.. அது குருவியைப் பார்ட்த்து அல்லது ஆமையைப் பார்த்து மட்டுமே:))
எல்லாம் சரிதான், ஆனா ஏன் ஜீனோ பப்பி உடுப்பில்லாமல் இருக்கிறார்... அதுதான் ஒரு டவுட்டு இப்போ:))..
அதுசரி கம்பி என்பது தமிழ்ச் சொல்லோ?:)) இல்ல ஒரு டவுட்:))..
"சிப் சிப்!"=== ஓ இது குருவிப் பாஷயோ...
ம்... ரொம்ப நல்ல பூனை இருந்திச்சாம். ;))) சரிதானே அதீஸ்! ;)
Deleteகேள்வி கேட்காமல் நீங்களே சரியான சொல்லைச் சொல்லுங்கோ பார்ப்பம். ;)
இல்ல நான் மாட்டேன், முடிஞ்சா ஜீனோவை வந்து சொல்லச் சொல்லுங்கோ:))
Deleteஅதீஸ்.... ஒரு முக்கிய அறிவிப்பு.....
Delete////ஜீனோ உங்காத்து குவ்வி பறிச்சி பொத்து- பொத்துன்னு போட்ட திராச்சையெல்லாம் கலெக்ட் பண்ணிண்டு போய் நிலா கிட்ட குடுத்து
ஜேவ் செய்து குடிச்சி, மப்பாகி மயக்கம் போட்டுருச்சு////
////கிக்கு ஏறிப் போச்சி..ஜீனோக்கு. ஹேங்க் ஓவர் தெளிஞ்சு ஜீனோ வரும்.//// --- இப்படி... டோரா புஜ்ஜி மெயில் அனுப்பி இருக்கிறாங்க. ;(((((
ஊ.கு
டோரா தமிழில குற்றம் கண்டுபிடிக்கப்படாது; தமிழ் தெரியாது அவங்களுக்கு.
முன்பு பார்த்த அலங்காரம், அழகாக இருக்கு:))
ReplyDelete//"ஜீனோ! தயவு செய்து போகிறபோது நாற்காலி எல்லாம் சரியாக்கிவிட்டுப் போகிறாயா? இமாவுக்கு ஒழுங்கில்லாமலிருந்தால் பிடிக்காது."//
ஒரு நினைவு... இங்கு ஒரு ஃபமிலி, கணவருக்கு எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டுமாம்:)) அதனால எப்பவும்.. எல்லாமே அடுக்கி அடுக்கி.. ஒரு சிறிய துரும்பு, தூசிகூடக் காண முடியாது அப்படி இருக்கும் வீடு... ஒரு பேப்பர் படித்தாலும் உடனேயே ஓடிப்போய் அவ்விடத்தில் வைத்திட வேண்டுமாம், கட்டிலில் அல்லது மேசையில் இருப்பின்.. அது ரீசைக்கிள் பின்னுக்குள் போய்விடுமாம்:))
காணவில்லை எனில், மனைவி நேரே ரீசைக்கிள் பின்னுக்குத்தான் ஓடுவாவாம்:))
அதுக்கு என் கணவர் நகைச்சுவையாகச் சொல்வார்... அது வீடல்ல “மியூசியம்”:)) வீடென்றால் கொஞ்சம் அப்படி இப்படியும்தான் இருக்க வேணும் அப்பத்தான் சுகந்திரமாக உலாவலாம் என:))
முதல் வரி... ஆமோதிக்கிறேன். அடிக்கடி மாற்ற நேரம் போதாமல் இருக்கிறதே. ;( மறந்துவிட்டால் அதைப் போல அசிங்கம் வேறு இல்லை. அதனால் இந்த ஏற்பாடு.
Deleteவிடுமுறையில் மீண்டும் இயற்கைக்கு மாற்றலாம் என்றிருக்கிறேன். ;)
நிச்சயமாக எங்கட வீடு 'மியூஸியம்' போல இருக்காது அதீஸ். அளவோட இயல்பாக இருக்கிற 'வீடு'தான். ஆனால் ஒழுங்காக இருக்க வேணும். வீட்டில் இருக்கக் கிடைக்கிறது 5 மணித்தியாலம் கூட இல்லை. எல்லாரும் குப்பையாக வைச்சு என்னை க்ளீன் பண்ண எதிர்பார்த்தினம் எண்டால்.... இப்பிடி இங்க வர எனக்கு நேரம் கிடைக்காது. ;D
அது தவிர... இங்க வீட்டுல பார்த்து மனசில பதியிறதுதான் எப்பவும் இருக்கும். மகன் வீட்ட போய்ப் பார்க்கேக்க சந்தோஷமா இருக்கும் எனக்கு. வடிவா வைச்சு இருக்கிறார். வருங்கால மருமகள் என்னைப் போலவே சிரமமில்லாமல் இருப்பா. ;)
வருங்கால மருமகள் என்னைப் போலவே சிரமமில்லாமல் இருப்பா. ;)//
Deleteநானும் இதுக்குத்தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். காலையில் பெட் ஸ்ப்ரெட் சரி பண்ணுவது முதல் டிரஸ் கழட்டி துவைக்கும் பாஸ்கெட் இல் போடுவது, சாப்பிட்ட ப்ளேட் அண்ட் க்ளாஸ் ரின்ஸ் பண்ணி வைப்பதுன்னு ன்னு சின்ன சின்னதா பழக்கி இருக்கேன். ஊருக்கு போகும் போது என் மாமியாரே ஒன்பது வயதுக்கு நல்லா பழக்கி இருக்கே அப்படின்னு செர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க :))
/என் மாமியாரே ஒன்பது வயதுக்கு நல்லா பழக்கி இருக்கே அப்படின்னு செர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க :))/ அப்ப, டாக்டர் அம்மா டாக்டருக்கு இதெல்லாம் பழக்கிவிடலையாமா? ;)))
Deleteகுட் ஜாப் கிரிஜா! :)
அட! இது செய்தி எனக்கு! ;D மேல வைங்கோ மகி. ;D)
Delete//"ஒரு அற்ப சிட்டுக்கு அடிபணியவேண்டிய தேவை எனக்கில்லை. அன்பாகக் கேள் செய்கிறேன்."///
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. சிப் சிப் என அன்பாகத்தானே கேட்கிறது குருவி:)).. அது போதாதாமோ?:)) இதுக்கே இப்பூடி முறுக்கிட்டுப் போறார்:)) நாங்கள் எல்லாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறோமாம்:)) என உந்த ஜீனோப் பப்பிக்குச் சொல்லுங்கோ இமா:))
இல்ல நினைக்காததையும், யோசிக்காமல் செய்யும் திறமை ஜீனோவுக்கே உண்டு:))
Deleteஅது ப்ரோக்ராம் பண்ணி இருக்கிறது அப்பிடி, நான் என்ன சொல்லுறது!! தான் நினைச்சதைத்தான் செய்யும் ஜீனோ. ;)
Deleteஅதீஸ்... பதில் இடம் மாறிப் போச்சுது. யோசிக்காதைங்கோ. ;))
Deleteமிகவும் அழகான கொத்துக்கொத்தான திராக்ஷை அலங்காரம். சூப்பராக இருக்கு இமா. எனக்கும் இமாவுடன் ஒரு கப் டீ அதே மேஜையில் அமர்ந்து, எல்லாவற்றையும் ரஸித்துக்கொண்டே சாப்பிடணும் போல ஆசையாக உள்ளதே. ;)))))
ReplyDeleteசீ..சீ.. இந்தப்பழம் புளிக்கும் என்று நினைத்துக் கொள்கிறேன். வேறென்ன செய்ய?
//இமாவுக்கு ஒழுங்கில்லாமலிருந்தால் பிடிக்காது."//
அடிக்கடி டீச்சரின் இந்த பயமுறுத்தல் வேறு. ;(
;))) தாராளமா வாங்கோ. எப்ப வரீங்க அண்ணா? முன்னாலேயே சொல்லிருங்க. லிஸ்ட் பார்த்து ஸ்வீட்லாம் வாங்கி ;) வைக்க வேணும் இமா. ;)
Delete///செல் --- போதவில்லை.////
ReplyDeleteஆஆ... ஓடிவாங்கோ செல் என்பது ஆங்கிலம்:)) எங்கிட்டயேவா:))
ம்.. ஜீனோ மட்டும் தமிழோ!! இது வேற காலத்துக் கதை. அப்பிடித்தான் இருக்கும். ;)
Deleteஅப்போ ஜீனோ.. இங்கிலீசுப் பப்பியோ? அப்போ ஏன் உடுப்புப் போடவில்லை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))
Deleteஅது..... பப்பி வந்து சொன்னால்தான் தெரியும் அதீஸ். ;)
Deleteசேம் சேம் பப்பி சேம் ......
Deleteபசைநாடாக்களும்... கொடிச்சுருள் /////
ReplyDeleteஎன்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈஈஈ.. எனக்கு இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகிடுவேன் எனப் பயமா இருக்கே:))..
இதைவிட அஞ்சுவின். யவழ ரமள தபல எவ்ளோ பெட்டர்:))))
;)))))))))) x 438766987685 ;))
Delete//இதைவிட அஞ்சுவின். யவழ ரமள தபல எவ்ளோ பெட்டர்:))))//
Deleteஅஞ்சு என்ன பூஸ் இங்கே வந்து தபலா மிருதங்கம் ன்னு என்னமோ சொல்லுறாங்க :))
அவங்க... ஃப்ரெஞ்ச் வகுப்பில தபலாவும் படிக்கிறாங்களாம் கிரீஸ். ;)
Deleteஅழகா அலங்கரித்து இருக்கீங்க இமா .பப்பி அழகா உக்காந்திருக்கார் .அந்த கருந்திராட்சைக்கொத்து உண்மையான பழங்கள் போலவேயிருக்கு :))
ReplyDeleteஅஞ்சூஸ்... அது... பப்பி இல்ல, ஜீனோ. அவர் அழகுதான் எப்பவும். ;)
Deleteநல்ல அலங்காரம் இமா! நல்லாவே பொழுதைப் போக்கறீங்க! :))))
ReplyDelete;D
Deleteம்ம்ம்:))
Delete!! ம்!! @@@@
Deletemeeeeeeeee thee firstuuuuuuuuuuuuu....
ReplyDeleteஅட அது உண்மையான திராட்சை போல அல்லவே இருக்கிறது.
ReplyDeleteமிக நேர்த்தியான அலங்காரம்
என்ன சொல்ல நீங்க கைய வச்ச அது மண் ஆனாலும் பொன் ஆகி விடுகிறது
அழகு... என் வேலை இல்லை. பொருள் எல்லாம் சும்மாவே அழகா இருந்துது. நான் அலங்கரிச்சது மட்டும்தான் சிவா.
ReplyDelete"ஜீனோ! தயவு செய்து போகிறபோது நாற்காலி எல்லாம் சரியாக்கிவிட்டுப் போகிறாயா?/////
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ஜீனோவை வா, போ என மருவாதை இலாமல் கூப்பூடப்பூடாது சொல்லிட்டேன்ன்ன்ன்:)))
மூன்று எழுத்தார் எல்லாம் கண்ணாடிக்கு வெளியில இருந்து பார்க்கிற ஆட்கள். இ மா கூப்பிடலாமாம். ;) 'தயவு செய்து' கூப்பிட்டு இருக்கிறது குருவி; அந்த மரியாதை போதாதா! இப்ப ஜேவ் மயக்கத்தில இருக்குதாம் ஜீனோ. கால்ல விழுந்து கூப்பிட்டாலும் வராது. ;)))
Deleteமேஜை ரொம்ப அழகா இருக்கு டீச்சர். பைவ் ஸ்டார் ஹோட்டல் இல் வைக்கலாம் போல இருக்கு. மீண்டும் மீண்டும் உங்கள் திறமையை கண்டு வியக்கத்தான் முடிகிறது.
ReplyDeleteஅவங்க இதைவிட அழகான பொருள்லாம் வைச்சு இருப்பாங்க. இது மலிவுவிலை க்ராஃப்ட். ;D
Deleteதாங்ஸ் கிரீஸ். ;)
Deleteகலை உணர்வு அதிகம் உங்களுக்கு இருப்பதால் வீடும் ரொம்ப அழகா ரம்மியமா இருக்குமுன்னு நெனைக்குறேன் டீச்சர் சரி தானே ?
ReplyDeleteஹி! ஹி! நினைக்காதீங்க கிரீஸ். ;)) கலையுணர்வு ரொம்ப அதிகமா இருக்கும் போது... மேசை குப்பையா இருக்கும். கம்மியா இருக்கும்போது ரம்மியமா இருக்கும். ;)
Deleteமிகவும் ரொம்ப அழகா இருக்கு டீச்சர் ...
ReplyDeleteஎன்னை எல்லாம் குட்டிடாதிங்கோ .....
மீ பாவம் ....
ம்.. குட்டமாட்டேன், வாசிக்கிற மாதிரி இப்பிடியே ஒழுங்கா எழுதுங்கோ கலை. ;)
Deleteவாவ்வ்வ்வ் ரொம்ப ரொம்ப அருமையா இருக்குங்கம்மா.
ReplyDelete_()_ வந்தனம் ;) சந்தோஷம் நீங்க வந்தது. மிக்க நன்றி.
Deleteகமண்ட் மாடரேஷன் போட்டு இருக்கிறேன் ஸ்வர். ;) 2 கமண்ட் இருந்துது. ;)
ReplyDeleteஒரு தொங்கும் திராட்சைத் தோட்டத்தை இவ்வளவு அழகாக அமைத்துள்ளீர்களே, அழகோ அழகு, வர்ணிக்க வார்த்தையில்லை இமா.
:))