Tuesday 10 July 2012

கூலா ஒரு கோலா

ஒரு தோழியும் நானுமாக யூ ட்யூபில் ஒரு முக்கிய ட்யூடோரியல் பார்த்து, இணையத்தில் தூய தமிழில் (புரியாவிட்டால் பரவாயில்லை. மீதியைத் தொடர்ந்து படியுங்க.) கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த வேளை.. . சுவாரசியமாக தொலைபேசியில் இருவர் பேசுகையில் cross talk வருவது போல் குறுக்கிட்டது இந்த ட்யூடோரியல்.


பேசிக் கொண்டே... அரைக் கண்ணால் பார்த்து வைத்தாலும், மனதை விட்டு அகல மறுத்து உள் மனதில் உட்கார்ந்திருந்திருக்கும் போல. 

நாளை குப்பை சேகரிப்பு நாள், அதற்கான ஆயத்தமாக வீட்டின் பின்னாலிருந்த பின்னை (bin) ;) முன்னால் உருட்டி வந்து வைக்கும் வேளை விழித்துக் கொண்டது மனது. "திறந்து பார்!" என்றது. திறந்தேன். உள்ளே மூன்று வெற்று கோக் போத்தல்கள்.

ஹ்ம்! காசா பணமா! ஒரு முறை முயற்சித்துப் பார்ப்போம் என்று முயன்றதில்...
காசு போட ஒரு டப்பா!!

ராதாராணி கொடுத்த விருதைக் கொண்டாட ஆளுக்கொரு மிட்டாயாவது கொடுக்காவிட்டால் எப்படி!
நீங்களே பிரித்து ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியைக் கட்டி வைத்துவிட்டுச் செல்லுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நன்றி ராதா.

இது எனக்கு. ;)

31 comments:

  1. ஆஹா! இமாவா கொ க் கா!

    அந்தக்காணொளி அருமை, இமா.

    பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. குப்பையிலிருந்தே எடுக்கப்பட்டாலும், இமாவின் கைத்திறன் + அபார மூளையினால் அது கோபுர உச்சிக்கே போய் அமர்ந்து விட்டதே.

    காசுகளைப் போட்டதனால் அதன் மதிப்புக் கூடிவிட்டதே!

    இதுதான் VALUE ADDED CONCEPT என்பதோ?
    மிக்க மகிழ்ச்சி இமா.
    நானும் இதை செய்து பார்க்க உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா. //அபார மூளை// இது இரவல் மூளை. ;) //காசு// அவை இங்கு புழக்கத்தில் இல்லாத நாணயங்கள் மட்டுமே. உள்ளே இருப்பது வெளியே தெரிவதால் எனக்குப் பிடித்திருக்கிறது. இனிமேல் கிடைக்கும் போத்தல் எல்லாம் இப்படி ஆகப் போகிறது. முன்பு இன்னொரு வகை செய்வேன். அதையும் விரைவில் பகிர்கிறேன். செய்து பாருங்கள் அண்ணா.

      Delete
  3. இமா..மிக்க நன்றி..! ரெண்டு மாசத்துக்கு முன்பு இந்த பெட் பாட்டில் கிராப்டை நான் செய்து பார்த்துட்டேன் ..ஊசி,நூல் போட்டு வைத்திருக்கிறேன்..நல்லா இருக்கு.பாட்டில் திறந்து மூடும் போது டப்,டப்னு ஒரு சத்தம் வருது..அதுதான் எனக்கு பிடிக்கலை.:)

    ReplyDelete
    Replies
    1. திட்டாதீங்க. ;) //பாட்டில் திறந்து மூடும் போது டப்,டப்னு ஒரு சத்தம் வருது..அதுதான் எனக்கு பிடி//த்தது. ;)))

      Delete
  4. முதல் ஆளா நானே மிட்டாய் எடுத்து கொண்டேன்.விருதை பெற்று கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஆஅ ஆ :)) கூலா கோலா செய்முறை தரபோரீங்கன்னு ஓடி வந்தேன்
    நெக்டோ ஒரு கப் ப்ளீஸ் :))
    சூப்பர் ஐடியா இமா பகிர்வுக்கு நன்றி .bye one get one free போட்டிருக்காங்க வாங்கி செய்றேன் .ச்வீட்டுக்கும் தேங்க்ஸ் :))

    ReplyDelete
    Replies
    1. நெக்டோவா!! அதெல்லாம் சொல்லி புகை வர வைக்கப்படாது அஞ்சூஸ்.
      இன்னும் கண்ணாடியோடவா திரியுறீங்கள்!! விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்ன்ன். ;)

      Delete
  6. நன்றாக இருக்கிறது.வீடியோவைப் பார்த்து செய்து பார்க்கிறேன்..நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ம்... சுலபம்தான், செய்து பாருங்கள். உதிர்ந்து கொட்டும் பட்டன்கள், நினைவாக வைக்க வேண்டிய துண்டுக் காகிதங்கள் என்று நிச்சயம் எதையாவது போட்டு வைக்க உதவும்.

      Delete
  7. அழகா இருக்குது இமா!

    பி.கு. இவ்வளவு கோக் குடிக்கப்படாது, உடம்புக்கு நல்லதில்லை! ;)

    ReplyDelete
    Replies
    1. எப்போவாவது கொஞ்சம் 0 கோக் மட்டும் குடிப்பேன். ம்... ஆகட்டும், விட்டுரலாம். ;)

      Delete
  8. me the first எனக்குதான் அந்த கிப்ட்........
    பி.கு. இவ்வளவு கோக் குடிக்கப்படாது, உடம்புக்கு நல்லதில்லை! repeatuuu

    ReplyDelete
  9. hi ima
    cant understand tamil but the given youtube link helped me and love the idea so much..will try for sure..thank you so much for sharing the link..

    ReplyDelete
    Replies
    1. :) u r welcome Leela.

      //cant understand tamil// Was aware of that. A birdy told me lo...ng ago.

      I have a feeling.. I am going to end up with a whole lot of little containers like these. They r transperent... ideal storage for most of my crafty bits.

      Thanks 4 following.

      Delete
  10. சூப்பர் ரா இருக்கு... உடனே செய்து பார்க்க கோக் பாட்டில் தேடிட்டு இருக்கேன்....

    ReplyDelete
    Replies
    1. ;) தேடுங்க, தேடுங்க. க்ராஃப்ட் என்கிறதை விட... பிரயோசனமான பொருளாக இருக்கு ப்ரியா.

      Delete
  11. வழமைபோல நல்லாயிருக்கெனச் சொல்வதா? உண்மையில் நல முயற்சி எனச் சொல்வதா... அழகு.. நன்று.

    முன்பு ஊரில் சேலைன் போத்தல்களை வெட்டி மக்றம் என செய்தவர்கள், பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் சீலிங்கில் தொங்கும். அது ஒரு காலம்.

    அப்பவே நானும் செய்யவேணும் என நினைத்ததுண்டு... இப்பவும் எல்லாம் நினைப்பதுண்டுதான்...

    நினைப்பதற்கு காசா பணமா நினைத்துக்கொண்டே இருக்கிறேன்....

    ஒரு பழமொழி கண்ணதாசனின்....
    ”கையிற்கு எட்டாத கனியானாலும், நினைவுக்கு எட்டாமல் போய் விடுமோ?”...

    முயன்றால் கையுக்கு எட்டும், ஆனா கடுமையாக முயல்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. //சேலைன் போத்தல்// நானும் தேடுறன் அதீஸ். இப்ப... அதுவும் இங்க!! ;) ப்ளேன் செய்வினம், வடிவா இருக்கும். நான் சேலைன் போத்தல் மாட்டுற வலை... இடியப்பம் போல இருக்குமே.. அதில கேட்டின் செய்து வைச்சிருந்தன். கமரா எல்லாம் இருக்கேல்ல அப்ப. இப்ப நினைக்க ஆசையா இருக்கு. //அது ஒரு காலம்.// ஹ்ம்!

      Delete
  12. வீட்டின் பின்னாலிருந்த பின்னை //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  13. //நீங்களே பிரித்து ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியைக் கட்டி வைத்துவிட்டுச் செல்லுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கி//

    கர்ர்ர்ர்ர்ர்ர் பிரிச்சுக் கட்டுவதற்கெல்லாம் பொறுமை வேணும்:)) அதனால நான் அப்பூடியே எடுத்துச் செல்கிறேன்.

    ReplyDelete
  14. பார்த்ததும் செய்துட்டேன்... :) பிடிச்சுது. ரொம்ப பிடிச்சுது. உள்ள பைசா போட்டு வெச்சிருக்கேன். நாளை படம் அனுப்பறேன் இமா. தேன்க்ஸ் ஃபார் ஷேரிங். - வனிதா

    ReplyDelete
    Replies
    1. படம் வேணாம். அது உள்ள மாலே பைசாதானே! அதை மட்டும் அனுப்பினா போதும். நானும் சந்தோஷமா //தேன்க்ஸ் ஃபார் ஷேரிங்.// சொல்வேன். ;))

      நன்றி வனி. ;))

      Delete
  15. Cool idea Imma 👌👌
    would love to try this for my lil girl 😄😄

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா