Friday 30 August 2013

முதல் முதலாய்...

   தொடருமுன்...

முதல் முதலாயிட்ட இடுகை இது

அது தொடர்பான மேலதிக விபரங்கள் இங்கே 

 

புத்தாண்டுக்குப் பட்சணங்கள் தயாரிப்புக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தோடு சிரத்தையாகத் தயார் செய்த இடுகையை முதலாம் தேதியானதும் வெளியிட்டுவிட்டு ஆர்வத்தோடு இமாவின் உலகத்தில் போய்ப் பார்த்தால்... ;) வலையுலகுக்கு அன்று Thursday, 31 December 2009 என்றது. ஆனாலும் பரவசத்துக்குக் குறைவில்லை. கடைசியில்... சாதித்துவிட்டேன். ;D

சுருக்கமாக ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால்....

குட்டிப்பெண் ட்ரிக்ஸியை பஞ்சுக் குவியலாய் அணைத்து வீட்டுக்கு எடுத்து வந்து மெத்தென்று இறக்கிவிட்ட முதல்நாள் சந்தோஷம் அது.
 

மலைப்பு!

எனக்கொரு வலைப்பூ!!
மனசுக்குள்... மத்தாப்பூ ;)

 

பாதி நாள் அந்த சந்தோஷத்தை யாருக்கும் சொல்லாமல் எனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு... திறந்து பார்ப்பதும், மூடுவதுமாக... page view அன்றே சதம் அடித்திருக்கும். ;))) மனது பூரித்துப் பூரித்து பெரீ..ய பூரி ஆகி வெடித்துவிடும் போல இருந்தது. சந்தோஷம் கூட வேதனைதான் இல்லையா! அந்த வேதனை தாங்க முடியாமல் ஜீனோவுக்கும் அருணுக்கும் மட்டும் விபரம் எதுவும் சொல்லாமல் இணைப்பை அனுப்பிவிட்டு உட்கார்ந்திருந்தேன்.
பிறகு... வாணிக்கு.

முதல் இடுகையின் கீழ் கருத்துச் சொல்லி இருக்கும் நட்புக்களில் பலர் நட்புக்கள் என்பதை விட என் பிள்ளைகள் என்பேன். காணாமற் போயிருப்பவர்கள், வலையுகிற்கு மட்டும்தான் காணாமற் போனவர்கள்; இமாவின் உலகிற்கு இன்றும் வேண்டப்பட்டவர்கள்தான். Miss you Chanthoos. ;( 

பிறகு தொடர்ந்த மாதம், தினம் ஒரு இடுகை அதாவது... தை மாதம் இருபத்தேழு நாட்கள் இருந்திருந்தால். ;) பிறகு... மெதுவே குறைந்தது.... ஆர்வமல்ல. பொறுப்புகள் கூடி இருக்கிறது. தினப்படி நிகழ்வுகளில் எதற்கு முக்கியத்துவம் என்று யோசித்து வரிசைப் படுத்தி நிகழ்த்தி வர பிற்போடப்படும் விடயமாக என் உலகம் ஆகிவருகிறது. மெதுவாகவெனிலும்... சுற்றும். ;)

வலைமீட்டுப் பார்க்கிற சந்தோஷத்தைக் கொடுத்த
இளையநிலா... என்றும் இனிது பொழிக! 

என் வாழ்த்துக்கள்.

8 comments:

  1. வாவ்... இவ்வளவு விரைவா சூப்பரா உங்கள் முதல் பதிவு அனுபவம்...:)

    சுகமான வேதனைகள் வரிசையில் இதுவும்...:)

    அருமை உங்கள் பதிவும் பகிர்வும் இமா!

    ஹா.. இது தொடர் பதிவு.. சங்கிலித்தொடராம்...
    கெதியா இணையுங்கோ சங்கிலியில் வேறை யாரையும்..:)

    ReplyDelete
  2. உங்க முதல் பதிவில் இனிப்புக்கொடுத்த மாதிரி இப்பவும் இனிப்புக் கொடுக்கணும் ஆம்மா :-))

    முதன்முதலில் இடுகையிட்ட பரவச அனுபவம் அருமை.

    ReplyDelete
  3. முதல் பதிவின் சந்தோஷம் என்றும் நிலைக்கட்டும்.

    ReplyDelete
  4. ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால்" மிக அருமை.

    ReplyDelete
  5. :) நன்னா அனுபவிச்சு வலைப்பூவை உருவாக்கி, அந்த அனுபவத்தை இத்தனை நாள் கழிந்த பின்னும் அப்படியே நினைவில் வைச்சு மீண்டும் அனுபவிச்சு எழுதிருக்கேள்! :) படிக்க ரொம்ப நன்னார்க்கு, கேட்டேளா? :)))

    என்னையெல்லாம் ஆராவது இதை தொடரச்சொன்னா திருவிழால காணாமப் போன குழந்தை கணக்கா திருதிரு-ந்னு முழிக்க வேண்டியதுதான்! ;))) ஐ டோண்ட் ஹாவ் எனி சச் ஃபீலிங்க்ஸ் லைக் யூ இமா..உங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையா இருக்கு! ;)

    முதல் பதிவில என்ர கமெண்ட்லாம் இல்லை போல இருக்கு, இப்பவாவது ஒரு கருத்தைப் பதிச்சு வைக்கிறேன். ;) :) அங்க இருக்க பண்டம்லாம் இப்ப ஒரு பார்ஸல் போட்டு அனுப்பிவிடவும். நன்றி!

    ReplyDelete
  6. எனக்கொரு வலைப்பூ!!
    மனசுக்குள்... மத்தாப்பூ ;)

    ஆனந்தப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  7. மலரும் நினைவுகள் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

    ReplyDelete
  8. ஆவ்வ்வ்வ் இரைமீட்டல் பதிவு அருமை... ஓம் சந்து எங்க போனாவோ.. ஜீனோ பப்பி என்ன ஆச்சோ.. இப்படிப் பலர்.. இமாவின் இரு மருமக்களும் காணாமல் போய் பலகாலம் ஆச்ச்ச்ச்ச்ச்:))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா