Tuesday 2 January 2018

நாட்கள் நகருதே!

அப்பாவுக்கு இப்போது 86 வயது. ஓய்வு ஓய்வு இல்லத்தில் பரபரப்பாக‌ இருக்கிறார். சுவாரசியமான‌ மனிதர். எப்பொழுதும் எதையாவது வெட்டுவதும் ஒட்டுவதுமாகப் பொழுது போகிறது. :-)

நான் பிரதி புதனும் அங்கு சென்று வருவேன். அன்று எனக்கு வேலைக்குப் போகும் அவசியம் இல்லை. என் நாத்தனாருக்கு திங்களன்று வேலையில்லை. ஞாயிறு காலை பூசை முடிந்ததும் நானும் க்றிஸ்ஸும் சென்று அப்பாவைப் பார்த்து வருவது வழக்கம். இந்த‌ நாட்களில் எம் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். நாங்கள் செல்லும் போது, தான் ஓய்வாக, தயாராக‌ இருக்க‌ வேண்டும் என்று நினைக்கிறார். 

இன்று சென்ற‌ போது கண்டது இது.
http://3.bp.blogspot.com/-3E9HtOfdqF0/WkyC4yrJwOI/AAAAAAAASkE/ZvyTglKGzM0FKaJRqtUsmwlrQLi3SQ3wQCK4BGAYYCw/s1600/20180103_131336-781732.jpg
முன்பே தம்பி சொல்லியிருந்தார், அப்பா நகர்த்தி நாளைக் காட்டக் கூடியதான‌ ஒரு அமைப்பைச் செய்து வைத்திருக்கிறார் என்று. நாட்களைக் கணக்கு வைப்பது அவருக்குப் பிரச்சினையாக‌ இருந்திருக்க‌ வேண்டும். அதற்குத் தீர்வாக‌ இந்த‌ அமைப்பைக் கண்டுபிடித்திருக்கிறார். :-)

அவர் புகைப்படத்தைக் காட்டியதும் எப்படி தினங்களை தட்டச்சு செய்திருப்பார் என்று வியந்தேன். எங்கோ இருந்து வெட்டி ஒட்டியிருக்க‌ வேண்டும் என்று புரிந்தாலும் எப்படி இத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார் என்று புதினமாக‌ இருந்தது.

அங்கு சென்று நேரில் பார்த்ததும் புரிந்துவிட்டது. அவர்களுக்கு வாரம் தோறும் அந்தந்த‌ வாரத்துக்கான‌ நிகழ்ச்சி நிரல் ஒன்று வழ‌ங்கப்படும். அதிலொன்றை அளவாக‌ வெட்டி எடுத்திருக்கிறார்.

(இது செபாவின் இல்லத்திலான‌ கடைசி வாரத்திற்கான‌ நிகழ்ச்சி நிரல். இருந்ததோ 16, 17 & 18ல் பாதி நாள். அதற்குள் நேர்த்தியாக‌ நான்காக‌ மடித்து வைத்திருந்தார்.)

தேதிகளின் மேல் வட்ட‌ வடிவ‌ 'ஸ்டிக்கர்களைப் பாதியாக‌ வெடி ஒட்டியிருக்கிறார். மறுபக்கம்... கடதாசித் துண்டுகளை ஒட்டி எழுத்துக்களை மறைத்திருக்கிறார். ஞாயிறு! அது சென்ற‌ மாதத்து நாட்காட்டியிலிருந்து வெட்டப்பட்டிருகிறது.

முழுக் கடதாசியையும் வெண்பலகையில் (இது காந்தக் கண்ணாடியிலானான‌ பலகை. ஓய்வு இல்லத்தில் ஒவ்வொரு அறையிலும் ஒன்று இருக்கும்.) ஒரு வட்டக் காந்தத்தால் ஒட்டி விட்டு, இன்னொரு வட்டக் காந்தத்தின் மேல் அம்புக்குறியை வர்ண‌ ஸ்டிக்கர் கொண்டு ஒட்டி வைத்திருக்கிறார்.
இனி அன்றன்று காலை ஒரு முறை காந்த அம்புக்குறியை நகர்த்தினால் போதும்.

நாட்காட்டியிலும் கடந்து போன‌ நாட்கள் அடையாளமிடப்பட்டிருக்கின்றன‌.

5 comments:

  1. அடடா... இந்தக் கைவேலைக் கைங்கர்யம் எங்கிருந்து உங்களுக்கும் வந்தது என்று "நதி மூலம்"தெரிந்துகொண்டேன்..:)

    ஆஹா.. என்ன ஒரு கிறியேட்டிவிட்டி மைண்ட் உங்க அப்பாவுக்கு!
    அதுவும் இந்த வயதிலும்!.. க்ரேட்!!!
    தன்னைத் தானே மகிழ்வாக வைத்து அடுத்தவரையும் மகிழ்விக்கும் குண இயல்பு எல்லோருக்கும் இருப்பதில்லை.
    மனம் குளிந்து போனேன் இமா! வாழ்காலம் முழுவதும் இப்படியே அவர் இருந்திட நானும் பிரார்த்திக்கின்றேன்!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. Amazing great idea! Thanks for sharing it with us imaa

    ReplyDelete
  3. super man nice creativity. this age he is very active well prayers to him

    ReplyDelete
  4. போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா