Monday 4 April 2011

ஃபீஜோவா ஃபான்டெய்ல்

ஹலோ ஃபான்டெய்ல்!!
என் வீட்டுத் தோட்டத்தில், இப்படி ஒரு ஃபீஜோவாச் செடியில் 
இப்படிப் பூத்து...
(கீழிருந்து பார்த்தால் இலைகள் இப்படித் தெரியும்.)
  
இப்படிக் காய்த்து.... 
இப்படி என் சமையல் மேடையில் வந்து இருந்தவற்றை....
 இப்படி வெட்டி வைத்துச் சாப்பிட்டாயிற்று. 
யம்.. யம் ;P

ஒழுங்கற்ற அமைப்போடு இருந்த ஒன்று இப்படிப் பறவையானது.
 
 இது.. ஃபீஜோவா அல்ல, பொஹுடுகாவா - நியூஸிலாந்து கிறிஸ்மஸ் மரம்.

29 comments:

  1. ஆரம்பிச்சுட்டாய்யாஆஆஆஆ ஆரம்பிச்சுட்டாஆஆஆஆ..:))))

    இதை நாங்க கொய்யாத காய் எண்டுதான் சொல்றனாங்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்....

    ReplyDelete
  2. இலையிலே கைவண்ணம் கண்டேன்

    ReplyDelete
  3. நிலாமதி said...
    இலையிலே கைவண்ணம் கண்டேன்
    /////
    நோப்.... நிலாமூன், இது கையிலே காய் வண்ணம்... கெள இஸ் இட்?:))))))))))))))))))))))))))))))) *12.

    ReplyDelete
  4. ஃபிஜோவா ஃபான்டெய்ல் நிஜ பறவை போலவே அழகா இருக்கு இமா! :)
    பழமும் கொய்யாப்பழம் போலவே இருக்கு. பச்சைகலரா இருந்தா நாங்க காய்-னு சொல்லுவோம்,இது பழுத்தாலும் இதே நிறமா?

    ReplyDelete
  5. இது கொய்யா இல்லை அதீஸ்... ஃபீஜோவா. ;) நிறைய வித்தியாசம் இருக்கிறது.

    எப்பவும் பச்சைக்கலர் தான் மஹி. இப்போ நினைவு வருகிறது, ஊரில் வீட்டில் இருந்த கொய்யாப்பழங்களும் வெளியே பச்சையாகத்தான் இருந்தன. சில இனங்கள்தான் நிறம் மாறும் போல.

    ReplyDelete
  6. அக்கா செல்லோயானா ஹஹஹாஹாஹஹா

    நல்லா பேரு வைக்கிறாங்க டீச்சர்

    அக்காமாலா, கப்ஸி மாதிரி இருக்கு ஆவ்வ்வ்வ்

    ReplyDelete
  7. தலைப்பைப் பார்த்து பயந்தே போயிட்டேன்.. இந்தச் சின்னப் புள்ளைய இப்புடியா பயமுறுத்துவது? :))

    பறவை செம க்யூட் :))

    ReplyDelete
  8. லேபிள் :-என் சமையலறையில்,

    ஒன்னும் புரியலையே எனக்கு ...!! அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. //பச்சைகலரா இருந்தா நாங்க காய்-னு சொல்லுவோம்,இது பழுத்தாலும் இதே நிறமா? //

    மஹியக்கா....தேங்காய் பழுத்தாலும் மஞ்சள் கலரா இருக்குமே ..அதை என்னன்னு சொல்வீங்க ஹி.ஹி. ...!! :-))))) எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    ReplyDelete
  10. //ஒழுங்கற்ற அமைப்போடு இருந்த ஒன்று இப்படிப் பறவையானது.//

    அப்படி வராட்டி இங்கே படமா வருமா..??? இல்ல நீங்கதான் விட்டுடூவீங்களா...ஹா..ஹா.. யாரோ பாத்திரம் எடுக்கும் சத்தம் கேக்குது எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  11. டீச்சர்.....டீச்சர்.....மேலே உள்ள தலைப்புக்கு தமிழ்ல என்ன பேரூஊஊஊ...ஹி..ஹி.. :-))

    ReplyDelete
  12. தமிழ்ல..!!!! ;)))))))

    fijoa visirivaal. ;)))))

    ReplyDelete
  13. //மஹியக்கா....தேங்காய் பழுத்தாலும் மஞ்சள் கலரா இருக்குமே ..அதை என்னன்னு சொல்வீங்க ஹி.ஹி. ..//என்னது???அக்காஆஆஆஆஆஆவா??!! இந்தக் கொடுமய கேக்க ஆளில்லையாஆஆஆஆஆஆஆ!

    நான் கொய்யாக்காய்-பழத்தை சொன்னனுங்க் செந்திலண்ணா![இது ஏதோ படத்திலே செந்தில் கவுண்டமணிகிட்ட கேப்பாரே,அதேதானே ஜெய்அண்ணே?]
    :))))))))))

    ReplyDelete
  14. superb .how does it taste (Guava or amberella? )

    ReplyDelete
  15. புகைப்படங்கள் அத்தனையும் அழகு என்றாலும் பறவை கூடுதல் அழகு இமா!

    ReplyDelete
  16. craftworks அம்மா + creative அம்மா = இமா அம்மா... :)

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

    ReplyDelete
  17. அம்பரெல்லா போல இராது; கிட்டத்தட்ட கொய்யாப்பழம் போலதான் இருக்கும் ஏஞ்சலின்.

    ReplyDelete
  18. மிக்க நன்றி அக்கா. தனியே இருக்கும் போது இப்படி ஏதாவது செய்யத் தோன்றும். ;))

    ReplyDelete
  19. அருண்மகன்... இங்கு போடும் பதிவு எதுவும் கமண்ட்ஸ் கணக்கில் சேராது. ;) 'உள்ளேன் அம்மா' சொல்ற மாதிரி இருக்கு. குழப்படி. ;)))

    ReplyDelete
  20. யாரது சிரிக்கிறது! ;)

    ReplyDelete
  21. உங்களது craft works அனைத்தும் அருமை.
    எனக்கு ஒரு ஹெல்ப் தேவை.
    மெட்டல் ஒட்டுவதற்கு (ஜ்வல்லரி க்ராஃப்ட்) என்ன glue பயன் படுத்தனும்?glueவின் பெயர்,எங்கு கிடைக்கும்?என்று தயவுசெய்து சொல்லுங்களேன்

    ReplyDelete
  22. zumaras,

    நீங்கள் எந்த விதமான வேலை செய்யப் போகிறீர்கள் என்பது தெரியாததால் பொதுவாகவே பதில் சொல்கிறேன். ப்ரொஃபெஷனல் ஜ்வல்ரி மேக்கிங் வேலைகளுக்கு க்ளூ பயன்படுத்தக் கூடாது என்று சொல்லுவார்கள். ஹாபிக்கு என்றால் பரவாயில்லை.

    உலோகம் ஒட்டுவதற்கு அல்லது உலோகத்தில் வேறு எதையாவது ஒட்டுவதற்கு க்ளூ பயன்படுத்தினால் ஒட்டு தற்காலிகமானதாகத்தான் இருக்கும். அழகாக இருக்கும்; ஆனால் அதிக காலம் நீடிக்காது. உலோகத்தின் தன்மை காரணமாக எப்போ சந்தர்ப்பம் கிடைக்கிறதோ... உரிந்துவிடும்.

    உலோகத்தை வளைத்து அல்லது க்ளிப் செய்து கொள்ளுவதுதான் நிரந்தரமானதாக இருக்கும். அல்லது வளையங்கள் பயன்படுத்த வேண்டும். அல்லாவிடில் கம்பி கொண்டு கவர்ச்சியாகக் கட்டிவிடவேண்டும்.

    ஒட்டப்பட வேண்டிய இரண்டு பகுதிகளும் உலோகமாக இருந்தால் வெல்டிங் செய்யலாம். இதற்கென்றே வெல்டர் இருக்கிறது. விலை அதிகமாக இருக்கும். ஹாங்காங்கில் எங்கே கிடைக்கும் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. நிச்சயம் கிடைக்கும்.

    ஹாபி மாதிரி செய்வதானால்.. சோல்டரிங் செட் போதும். இது சாதாரணமான சோல்டரிங் அயர்ன் போல இருக்கும். (துணியில் பூக்கள் செய்வதற்கான டூல் செட்டில் இதற்கான பகுதியும் இருக்கும். wood burning set இல் கூட இந்த ஃபிட்டிங் இருக்கும்.) அதற்கான கம்பியை உருக்கி ஒட்ட வேண்டும். க்ராஃப்ட் சப்ளைஸ் எங்காவது விசாரித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  23. நாளை முடிந்தால் இன்னும் விபரம் தேடித் தருகிறேன்.

    இதைப் பாருங்கள்... http://www.orionjewelrywelders.com/learn-to-weld-jewelry.php

    ReplyDelete
  24. Hi zumaras,

    என் பதில் பார்த்தீர்களாவென்று தெரியாததால் மேலும் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டேன். படித்துப் பாருங்கள்; தொடர்பைத் திறந்து பாருங்கள். வேறு விபரம் வேண்டுமானால் கேளுங்கள் சொல்கிறேன்.

    ReplyDelete
  25. மிக்க ந்ன்றி
    தாமதித்து பதில் தந்தமைக்கு வருந்துகிறேன்.நான் எங்கு கேள்வி வைத்தேன் என்பதை மற்ந்து விட்டேன்,
    நான் ஹாபியாகத்தான் செய்து பார்க்கிறேன்.நீங்க் கொடுத்த லின்க் போய் பார்த்து பின் வருகிறேன்.உடன் பதிலுக்கு மீண்டும் ந்ன்றி

    ReplyDelete
  26. hi sis Ima
    நான் ஹாபியாகத்தான் பார்க்கிறேன்
    நீங்க கொடுத்த லின்க் ப்ரொஃபெஷனல் ஜ்வல்ரி மேக்கிங் வேலைகளுக்கு சரியாகும் என நினைக்கிறேன்
    நீங்க சொன்ன soldering set/wood burning tool பற்றி கூடுதல் விள்க்கம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்,soldering gun பற்றி தெரியும்.
    2.wood craft ம் பழக ஆசை.ப்லை உட் போன்ற மெல்லிதான பலகைகளை வெட்டுவதற்கு எதை பயன்படுத்தல்லாம்?
    நிறைய கேள்விகள் கேட்கிறேனே?ஃப்ரீ டைம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்க காத்திருக்கிறேன்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா