Saturday, 2 April 2011

என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்!!

என் சின்னவர் மட்டும் பயன்படுத்தும் மின்னழுத்தி இது. அவருக்கு செபா கொடுத்த அன்பளிப்பு.  ஒரு நாள் 'எரிந்த அடையாளம் வந்துவிட்டது,' என்று  சொன்னார்.

இந்தப் பொருளைக் கண்டுபிடித்து வாங்கி வந்தேன்.
எந்தப் பயனுமில்லை. ;((

ஆனால் கோடை வரவும், அது வைத்திருந்த இடத்தில் உருகி (melt) :) மேசையெல்லாம் பிசுபிசுத்துப் போய் இருந்தது. ;(
ஊரில் இருந்த காலத்தில் ஓர் நாள் பேச்சு சுவாரசியத்தில் கவனியாமல் நான் சூட்டோடு துணியை அழுத்திவிட அங்குள்ள அழுத்தியில் கரி படிந்து விட்டது. சோகமாக நான் பார்க்க அண்ணா உடனே "ஒரு பனடோல் போட்டா சரியாகீரும்," என்றார்.
தலைவலியா இது, பனடோல் போட்டுச் சரியாக்க!!

இங்கு வந்தபின் சின்னவர் மோசமாகக் கெடுத்துக் கொண்டார் அழுத்தியை. தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்கிவிடலாம். அதற்கு முன்...

இப்படி இருக்கிற அழுத்திக்கு அண்ணா சொன்ன மாதிரி பனடோல் போட்டுப் பார்த்தால் என்ன!!
குட்டி மாத்திரையைச் சூடு வாங்காமல் கையில் பிடிப்பது தான் கஷ்டம். 
ஒரு குறடு எடுத்துப் பிடித்துக் கொண்டேன்.
மாத்திரை அழுத்தியின் சூட்டில் தானும் உருகி கறையையும் உருக்கி விட்டது. ஒரு துணியால் அழுத்தித் துடைத்ததும் போயே போச். ;)

36 comments:

  1. பெனடால போட்டு தண்ணீர் குடிக்கனுமா..??? ஐ மீன் ..அது ஸ்டீம் பிரஸா இருந்தா எனன் செய்யுறது ..!! :-)))

    ReplyDelete
  2. இதுல படம் எதுவுமே கண்ணுக்கு தெரியலயே....ஒரு வேள எனக்கு மட்டுமா இந்த சோதனை அவ்வ்வ்வ்

    ReplyDelete
  3. தண்ணி இல்லாம முழுங்கணும். ;)) இதுவும் ஸ்டீம் ப்ரஸ் தான்.

    யாருக்காச்சும் போஸ்டிங் படிச்சுட்டு 'ஒண்ணுமே சொல்லாம' போய் இருப்பீங்க போல. அதான் கண்ணு தெரியல. ;)

    ReplyDelete
  4. இமா... படம் ஒன்னுமே தெரியலயே ;( - Vanitha

    ReplyDelete
  5. பொதுவாகவே நீங்கள் “தமிழில்” எழுதும் சில வார்த்தைகள் புரியாவிட்டாலும், “படம் பார்த்து கதை சொல்” ரீதியில் பதிவின் படங்களைப் பார்த்துத் (தோராயமாக) புரிந்துகொள்வேன். இந்தப் பதிவுல, படமே இல்லியா, “மின் அழுத்தி”ன்னா என்னன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் புரிஞ்சுகிட்டேன்!! ஆனா, உருகினது என்னன்னுதான் பிடிபடமாட்டேங்குது. ;-(((

    ReplyDelete
  6. படம் ஒண்ணுமே தெரியலையே இமா
    மின் அழுத்தி என்றால் என்ன ஒரு வரியில் விளக்கவும்

    ReplyDelete
  7. ஆ ..... நான் எழுதின கமெண்டும் என் கண்ணுக்கு தெரியல .

    ReplyDelete
  8. உங்க எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ்ல கருப்பா கறை பிடித்துவிட்டது,அதை போக்க 'என்னமோ'(ஏதாவது மெழுகு போன்ற பொருளோ?) வாங்கிவந்து வைத்திருக்கீங்க,அதுவும் பயனில்லாமல் உருகிப்போச்சு.

    ஊருக்கு போனபோது அயர்ன் பாக்ஸ் கறை போக பனடோல் மாத்திரை மருத்துவம் தெரிந்துகிட்டு வந்திருக்கீங்க. அதாவது சூடான அயர்ன் பாக்ஸ்லே மாத்திரைய அழுத்தி தேய்த்து,ஒரு துணியால் துடைத்தால் கறை நீங்கி பளிச்,பளீச்!!! -----அப்பாடி,என்னமோ ஒரு கெஸ் பண்ணிட்டேன்,மின்அழுத்தி வேற ஏதாச்சுமா இருந்தா எல்லாரும் இந்த கமெண்ட்டை படிச்சிட்டு கிழிச்சு போட்டுருங்கப்பா! ;) :)

    ReplyDelete
  9. ஹைய்யோ!!!!!!!!!!!!
    எங்க போச்சு படம்லாம்!!!!!!!!
    யாரோ சுட்ட்டுட்டாங்க. ;((((((((((((((

    நேத்து ஜெய்லானிக்குப் பதில் போடுறப்ப செக் பண்ணேன்ன்... இர்ருந்துச்சு. இப்ப க்கண்ண்ணாடி போட்டூம் எனக்கே தெரியல.

    கூகிள்ல ஏதோ இருக்கு. நாஅன் தட்ட்டாட்த எழூத்தெல்லாம் அடீக்குது பாஅரூங்க. நேத்தே இப்படித்தான்ன் த்ஹட்டிச்சு. நாந்தான்ன் ஏஎடிட் பண்ணிஅப் ப்போஒட்டேஎன்.

    சாரி க்ர்ர்ர்ர் சரி, நான் போஸ்டிங்கை வாபஸ் வாங்கிக்குறேன் ஈப்போதைக்கு. மீஇண்டும் எல்ல்லாம் சரியாஅனட்தும் இதேஎ போஸ்ட் வரும்.

    ReplyDelete
  10. ரசித்தேன் ஹுஸைனம்மா. ;)) ஆமாம்.. அட்து இஸ்திரிப் பெட்டி தான். உருகினது... இப்ப என் மனசு. டொய்ங். ;((( படன்லாம் வேற ஏதோ குணம் வந்து ஒட்டு மொத்தமா டிலீட் பண்ணிட்டேன். ;(( ரெகவர் பண்ன முடியுமான்னு பார்க்கணும்.

    சாரி, ஜெய் & வனி. ;(

    ஏஞ்சலின்.. மின்னழுத்தி இஸ் இஸ்திரிப்பெட்டி. இல்ல. ஒரு வரில விளக்க முடியல.. நிறைய வரி வரியா கோடு போட்டாதான் விளக்க முடிஞ்சுது. ;)))) குழம்பாதீங்க என் பதிலைப் பார்த்து. படம் வந்தா புரியும் தன்னால. ;))

    ReplyDelete
  11. மஹீ... என்னமோ நிஜமாவே கிண்டல் பண்னி சிரிக்கிறீங்கன்னு நினைச்சேன். இப்ப எனக்குமே கண்னு தெரியல. மருமகன் ஏதாச்சும் சாபம் விட்டு இருப்பாங்க போல. ;((( சாரி ஜெய். ;( (உங்கள மாதிரியே இமாவையும் தட்ட வைக்கிறார் கூகுளார். ;(((

    //அப்பாடி,என்னமோ ஒரு கெஸ் பண்ணிட்டேன்,மின்அழுத்தி வேற ஏதாச்சுமா இருந்தா எல்லாரும் இந்த கமெண்ட்டை படிச்சிட்டு கிழிச்சு போட்டுருங்கப்பா! ;) :) // சுப்பர் கெஸ். ஆனா ஒரு டவுட்டு! இது உண்மையா கெஸ்தானா! இல்ல அனுபவம் பேசுதா!! எல்லாம் விளக்கி என் வேலையைக் குறைத்த மகிஅருண் அவர்களுக்கு ஒரு @}->--

    ReplyDelete
  12. திரும்பப் போட்டு இருக்கிறேன். இப்பயாச்சும் தெரியுதா மக்கள்ஸ்!!! யாராச்சும் வந்து சொன்னா நல்லாருக்கும். கஷ்டப்பட்டு ரீசைக்கிள் பின்ல இருந்து ரெகவர் பண்ணி இருக்கேன்.

    ReplyDelete
  13. ஆஆஆஆஆ.....நாலு பெனடால் போட்டிருக்கீங்களாஆஆ.......இப்போ கண்ணூ நல்லா தெரியுதூஊஊஊஊஉ :-)))))))))))))

    ReplyDelete
  14. //கஷ்டப்பட்டு ரீசைக்கிள் பின்ல இருந்து ரெகவர் பண்ணி இருக்கேன்.//

    மாமீஈஈஈ...குப்பை தொட்டியில ரெண்டு விரலை விட்டா போதுமே.இல்லாட்டி எட்டி ஒரு உதை விட்டா எல்லாமே ஈஸியா வந்துடுமே..ஹி...ஹி.... எதுக்கு ரொம்ப கஷ்டம்..!! :-))))

    ReplyDelete
  15. //Labels: மனதோடு மழைக்காலம் //

    ஓ....இஸ்திரிபெட்டிக்கு ஜல்பு பிடிச்சி டேப்பிளட் போட்டதோ....ஹா..ஹா...:-))

    ReplyDelete
  16. ம். கட்டிலுக்குக் கீழ இருந்து எட்டிப் பாக்குறாங்க. ;)) தாங்க்ஸ் மருமகனே. 5 ;)

    //கஷ்டப்பட்டு// அது ச்சும்மா. ஆனா.. அங்க போனதுலதான் தெரிஞ்சுது எத்தனை 'பொக்கிஷங்கள்' அங்க இருக்கு என்று. ;))

    ReplyDelete
  17. ;))) இப்ப பாருங்க ஜெய். ;))

    ReplyDelete
  18. வாவ். பேட்டன்ட் பண்ணுங்கோ இந்த மெதட்டுக்கு இமாம்மா.

    அதுசரி, டவுட்டு கந்தசாமி / நம்ம சந்தேகப் புகழ் ஜெய்லானி, உங்கள் மருமகனா? அப்பா நான் பேத்தியா. ஹாஹா ஹா. சும்மா தான்.

    ReplyDelete
  19. nice experiment and nice tips too. Say Thanks to your brother.

    ReplyDelete
  20. இமா... இப்போ படமெல்லாம் நல்லா தெரியுது. மேட்டர் அப்பவே புரிஞ்சது. இப்போ படம் பார்த்ததும் தெளிவா இருக்கு... இவ்வளவு நல்லா சுத்தம் ஆகுதே!!! நானும் முயற்சி செய்ய போறேன், பழைய அயர்ன் பாக்ஸில். நல்ல ஐடியாக்கு நன்றி இமா. - வனிதா

    ReplyDelete
  21. நன்றி இமா .
    to be honest .. மீள் சுழற்சி என்ற வார்த்தையே நான் உங்களிடம் இருந்து தான்
    (சுட்டு ) கற்றுக்கொண்டேன் .
    sssssss cape

    ReplyDelete
  22. ///ஜெய்லானி said...
    ஆஆஆஆஆ.....நாலு பெனடால் போட்டிருக்கீங்களாஆஆ.......இப்போ கண்ணூ நல்லா தெரியுதூஊஊஊஊஉ :-)))))))))))))
    ///
    ஆஆ... பனடோல் போட்டது மாமி, கண்ணு தெரிவது மருமகனுக்கு....... மியாவ்..மியாவ்....

    ReplyDelete
  23. கனகாலத்துக்குப் பிறகு உலகத்தில சின்னச் சின்னச் சிரிப்புகள் எட்டிப் பார்க்குது. ;)

    ReplyDelete
  24. awesome invention i guess. i cd have saved many many steam iron if had know this :(

    ReplyDelete
  25. பரவாயில்ல அருமையான் கண்டுபிடிப்பு

    ReplyDelete
  26. வருகை தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். ;)

    ReplyDelete
  27. aahha super tips am going to try it.

    ReplyDelete
  28. super amma:)

    நானும் முயற்சி செய்ய போறேன், பழைய அயர்ன் பாக்ஸில் :)

    ReplyDelete
  29. இமா, இது எங்கட வீட்டிலை தாளிக்கிற சட்டி போல கிடக்கு. நீங்க இல்லாத நேரம் மகன் இதிலை ஏதாவது பொரிக்கிறவரோ!!!! ( இதை வீட்டிலை சொல்லிப் போடாதீங்கோ. ஒக்கி)

    ReplyDelete
  30. முயற்சி செய்து பாருங்க சௌம்யா. அதுக்காக ஒரு அயன் பெட்டியைக் கருக்காதைங்கோ. ;))

    ம். ப்ரபாம்மா கெட்டிக்காரி. ;)

    //தாளிக்கிற சட்டி// ;)) இன்னும் சிரிச்சு முடியேல்ல. ம். ஷேட் பொத்தான் எல்லாம் பொரிக்கிறவரோ தெரியேல்ல.;))

    ReplyDelete
  31. இன்று உங்கள் குப்பைத் தொட்டியை நான் கிளறிப் பார்த்துவிட்டேன்... :)
    எல்லாம் அருமை..உங்கள் திறமையே திறமை!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா