Saturday, 19 March 2011

சின்னச் சின்ன(வரின்) ஆசை - 3

முத்து மு(த்)து ஆசை

ஊரில் போய் இறங்கி இரண்டு
நாட்களில் சின்னவர் சொன்னார், "ஒரு பாம்பு பார்க்க வேண்டும், பார்த்து நாளாயிற்று," என்று.

நாளாயிற்று, பாம்பு மட்டும் கண்ணில் படக் காணோம்.
பெரியப்பா வீடு பெரிய தோட்டம். நாங்கள் 'தோட்டத்துக்குப் போறோம்,' என்றால், பெரியப்பா வீடு போகிறோம் என்பது சொல்லாமல் புரியும் உறவினர்க்கு.

போனோம், அங்கும் மகன் பாம்பு பார்க்கும் ஆசையைச் சொல்ல 'நேற்றுக் கூட ஒன்று அடித்தோமே,' என்றார்கள்.
மழையில் தீ நடுவில் அணைந்து இருந்தது. ;)

அடுத்து... ஒரு யானை மேல் போக வேண்டும் என்றார். கண்டிக்குப் போகும் போது தம்புல்லையில் யானைகளைக் காணோம். எல்லாம் உலாப் போய் விட்டன போலும். திரும்ப வரும்போதோ ஊரே வெள்ளமெடுத்துக் கொண்டிருந்தது. யானைகளுக்கெல்லாம் விடுமுறை.

கடைசி நாள்.. விளாம்பழத்தைச் சாப்பிட்டு முடித்து எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றுக் கிளம்பி வாகனத்தில் ஏறியதும், கூட வந்த உறவினர் கூட்டம் சின்னவரை ஓட்ட ஆரம்பித்தது... "விளாம்பழ ஆசை மாதிரி யானை ஏறும் ஆசையும் கடைசி நேரத்திலதான் நிறைவேறுமோ!"

மழை முற்றாக விட்டிருக்கவில்லை. எனவே மூன்று மணி நேரம் முன்னால் கிளம்பி வந்திருந்தோம்.
யானை தங்கும் இடத்தை அண்மிக்கவும் 'நேரம் இருக்கிறது, முடிந்தால் முயற்சிக்கலாம்,' என்று தோன்றிற்று. யானைகளைத் தான் காணோம். எல்லாம் வெள்ளை வெளேரென்று யாரையாவது ஏற்றிக் கொண்டு தெருவோடு நடை பயின்றன. எதுவும் ஓய்வாக இல்லை.

கடைசித் தரிப்பிடத்தை நெருங்கினோம். இதை விட்டால் இனிக் கிடைக்காது என்றார்கள். யானை இல்லை. விசாரித்தால் 'வேலை முடியும் தறுவாய், இறுதி உலாவில் இருக்கிறார்,' என்றார்கள். இனிப் பொறுத்தால் எப்படி! பயணப்பட வேண்டுமே!! கிளம்பலாம் என்று மனம் சோர்ந்து புறப்பட...
அட! யானை வருது...

வாகனத்தின் உள்ளே இருந்து எடுத்ததால் படம் மங்கலாக இருக்கிறது. 

 வாகனத்தைத் திருப்பினோம். யானை களைப்பாக இருக்கிறார் என்றார்கள். பணத்தையும் விட விரும்பவில்லை அவர்கள். குட்டி உலா ஒன்று ஒப்பந்தமாயிற்று.


மு(த்)து... சிங்களப் பெயர், அதே கருத்து. முத்துப் போல் அழகாக இருக்கிறாரா? ;)
முதலில் விருப்பமில்லாமல் அரை மனதோடு ஆடி அசைந்து கிளம்பினார். ஒவ்வொரு அடியையும் 'தொப் தொப்' என்று வேண்டாவெறுப்பாக வைத்தார். பாவமாக இருந்தது. ஒரு குழந்தை மேல் ஏறி இருக்கும் உணர்வு... மனதை என்னவோ செய்தது; இறங்கி விடலாமா என்று இருந்தது. ஏறும் போதே சொன்னார்கள்.. அவரது நடு முதுகில் கால் வைக்க வேண்டாம் என்று. முள்ளந்தண்டு அசைவதை ஒவ்வொரு அசைவிலும் உணர்ந்தோம்.

வழியில் புல்லைப் பிடுங்கிச் சுவைத்துக் கொண்டு நின்று விடுவார். பாகன் சொன்னால் புறப்படுவார். பாகனிடம் எங்கள் புகைப்படக் கருவி இருந்தது. இடையில் ஓரிடத்தில் நின்று அழகாக துதிக்கையைத் தூக்கி ஒரு 'போஸ்' கொடுத்தார். (அந்தப் படங்கள் இங்கு இல்லை - என் முதுகு தெரியவில்லையே.)

தன் தரிப்பிடத்தை அண்மித்ததும்  குட்டியருக்கு வந்ததே ஒரு சந்தோஷம்.. பாருங்கள் பின்னங்காலை.. கடகடவென்று ஓட ஆரம்பித்தார். (முன்னங்கால் கழுத்தோடு சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்தது.) 

நாங்கள் இறங்கிய பிறகு அவர் அம்பாரி எல்லாம் இறக்கி வைத்து முதுகை மசாஜ் செய்து விட்டார்கள். நாங்களும் தொட்டுத் தடவி ஒரு 'தாங்க்யூ' சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

வாழ்வில் இன்னொரு முறை யானைமேல் ஏற மாட்டேன், பாவம் அது. முத்து இன்னமும் ஒரு குழந்தையாகத் தான் என் நினைவில் இருக்கிறார். 

முத்துவைப் பற்றி உலாவின் போது பலதும் விசாரித்தோம். (விடுமுறை முடிவில் ஏற்பட்ட எண்ணத் தடங்கலில் எல்லாம் மறந்து போயிற்று.) ஒவ்வொரு முறை நான் கேள்வி எழுப்பவும் மகன் தடுத்து "It's a HE Mum," என்பார். என்னால் பெண்ணாகத் தான் பார்க்க முடிந்தது முத்துவை.

 தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன! 

20 comments:

 1. அம்மா... கட்டுரை முழுவதும் உங்கள் அன்பு தெரிகிறது... :)

  // தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன! // - இது வழக்கம் போல அம்மா டச்... :)

  புகைப்படங்கள் எல்லாம் அருமை... முத்துவும் அருமையாக இருக்கிறார்...

  என்றும் உங்கள் அருண் பிரசங்கி

  ReplyDelete
 2. இமா... யானை சூப்பர். நானும் இதுவரை சவாரி போனதில்லை... ஏனோ ஒரு பயம். :) ஆனால் தளி (ஒசூர் பக்கம் ஒரு ஊர், ஒசூர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊர் ;) ஹிஹீ) பக்கம் சாலையிலேயே நிறைய பார்க்க முடியும். பார்த்திருக்கேன். ஒற்றையாக நின்றாள் பஸ் கூட திரும்பிடும்... அத்தனை பயம். - Vanitha

  ReplyDelete
 3. //எல்லாம் வெள்ளை வெளேரென்று யாரையாவது ஏற்றிக் கொண்டு தெருவோடு நடை பயின்றன//

  ஏன் யானை பேய்களையா ஏற்றிச்சென்றது றீச்சர்?

  ReplyDelete
 4. //தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன! //

  ஃபினிஷிங் டச்சிங் மேடம்!

  ReplyDelete
 5. முதல் படத்தை கடைசியாப்போட்டிருக்கலாமே இமா?!! இப்படி டாஷ்போர்டுல பயங்காட்டறீங்களே?! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  யானை அழகா இருக்கிறது.சென்ட்டி வேறு தூள் பறக்குது.;) சும்மா தமாஷுக்கு சொன்னேன்,அழகா எழுதி இருக்கீங்க.

  ReplyDelete
 6. "தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன!"

  எங்க அம்மா கூட உங்கள மாதிரிதான் ஆண்,பெண்,அக்றிணை உயர்திணை
  எதா இருந்தாலும் "வாங்கடி என் செல்லம்"இப்படிதான் கூப்பிடுவாங்க .
  CONCLUSION --- MOMS ARE SAME EVERYWHERE

  ReplyDelete
 7. தென்னம்பட்டையைக் கண்ணிலே கண்டு நாளாகிவிட்டது இமா..

  பாம்பு :(

  // பாவமாக இருந்தது. ஒரு குழந்தை மேல் ஏறி இருக்கும் உணர்வு... மனதை என்னவே செய்தது; இறங்கி விடலாமா என்று இருந்தது.//

  ம்ம்..

  //குட்டியருக்கு//

  யார்... அந்த கருப்பு பேக் அணிந்தவரா? :))

  ReplyDelete
 8. இமா, இது என்ன அநியாயம்?? பாம்பு பார்க்க போனாராம் மகன், உறவினர் சொன்னாராம் நேற்று தான் ஒன்று அடிச்சேன் இன்று இன்னும் இல்லையாம். கடவுளே! ஏதோ டீ குடிக்கவில்லை என்று சொல்றாப் போல ஈஸியா சொல்லிப் போட்டார் பெரியப்பா. முதலே இந்த பா.....பு க்கு பயந்தே இந்தப் பக்கம் வருவதில்லை. இனிமேல் எச்சரிக்கை என்று ஏதாவது போடுங்கோ இம்ஸ்.

  யானை அழகோ அழகு. உங்க பினிஸிங் டச்சும் சூப்பர்.
  ( எனக்கு இன்னும் நடுக்கம் போகலை. நான் வாறன் )

  ReplyDelete
 9. //வாழ்வில் இன்னொரு முறை யானைமேல் ஏற மாட்டேன், பாவம் அது.// அது யானை செஞ்ச புண்ணீயமா ஹா..ஹா.. :-))))))))))

  ReplyDelete
 10. நான் யானை வரும் மணிசத்தம் கேட்டாலே ரெண்டு தெரு தள்ளிதான் நிப்பேன் அவ்ளோஓஓஓஓஓஓஓ பயம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 11. @ Immamma,
  /// தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன! // - இது வழக்கம் போல Imma அம்மா டச்... :)//

  Repeattu.

  @ Jailani,
  /நான் யானை வரும் மணிசத்தம் கேட்டாலே ரெண்டு தெரு தள்ளிதான் நிப்பேன் அவ்ளோஓஓஓஓஓஓஓ பயம்ம்ம்ம்ம்ம்ம் //
  ha ha ha ha.

  ReplyDelete
 12. //இமா, இது என்ன அநியாயம்?? பாம்பு பார்க்க போனாராம் மகன், உறவினர் சொன்னாராம் நேற்று தான் ஒன்று அடிச்சேன் இன்று இன்னும் இல்லையாம். கடவுளே! ஏதோ டீ குடிக்கவில்லை என்று சொல்றாப் போல ஈஸியா சொல்லிப் போட்டார் பெரியப்பா. //

  I am happy. Vanathi acca got tensed now. yahoo. he he.

  ReplyDelete
 13. /// தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன! // - இது வழக்கம் போல Imma அம்மா டச்... :)//

  Repeattu.

  double repeatu...

  ReplyDelete
 14. ஒரு முறை சர்கஸுக்கு போனேன். அதில இருந்து இனி விலங்குகளை வைத்து சர்கஸ் என்றால் போவதில்லை. பாவம் அதுகள் ! சில கற்பனைகளும் ஒப்பீடுகளும் மனசில் வந்து போனது.

  கடைசி வரி :)

  ReplyDelete
 15. இமா! ஐ யாம் ஹியர்!!! எனக்கு ஏ ஏ கிடைச்சிருக்கே :)
  அடுத்த பதிவில பின்னூட்டம் குடுக்கமுடியலை. ஹனிபீ வேக்ஸ் ஷீட்ஸ் எங்க கிடைக்கும் அதில வாசனையா இருக்க என்ன செய்ய.. எனக்கு சென்டட் கேண்டில் ரொம்ப பிடிக்கும் :) பிளீஸ் சொல்லுங்க

  ReplyDelete
 16. அழகான பயண கட்டுரை.. படிக்க சுவரசியமாக இருக்கு

  ReplyDelete
 17. இமா யானை பயணம் சூப்பர்,சிறு வயதில் ஏறி இறங்கியது நினைவு வருது,
  அறுசுவையில் நான் கருத்து தெரிவிக்க முடியலை,உங்க பீஃப் கேசரோல்,ஸ்டஃப்ட் கறி மிளகாய் செய்து பார்க்கனும்,ரொம்ப பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 18. முதலில் இலாவுக்கு என் வாழ்த்துக்கள். @}->--
  // ஹனிபீ வேக்ஸ் ஷீட்ஸ் // க்ராஃப்ட் சப்ளைஸ்ல கேட்டுப் பாருங்க. கட்டாயம் கிடைக்கும். வாசனை... தன்னால தேன் வாசனை இருக்கும். ஜன்னல் பக்கம் வைக்காதீங்க, தேனீ உள்ள வந்துரும். ;)

  //சென்டட் கேண்டில் // ம். அது வேற மெத்தர்ட். என்னட்ட 'கான்டி தர்மாமீட்டர்' இல்ல. (வாசனையும் எனக்கு பிரச்சினை. ) மீதி எல்லாம் இருக்கு. முடிஞ்சா நாளை பார்க்கிறேன். 'அங்க' வரக்கூடும். ஆனால் நம்பாதீங்க. ;))

  ReplyDelete
 19. நன்றி ஃபாயிஜா & ஆசியா. ;)

  ReplyDelete