Tuesday 8 March 2011

மனதோடு மழைக்காலம் - 2


மச்சாள் வீட்டில் பழைய ஆல்பங்களைப் புரட்டிக் கொண்டிருந்த சமயம் இவை கண்ணில் பட்டன.  கூட அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சின்னவர் சொன்னார் "Superb Mum, you made this didn't you?" ஆமாம், நான் செய்ததுதான். சந்தோஷமாக இருந்தது படத்தைக் காண.

1992 அல்லது 93 ஆக இருக்கவேண்டும்; மருமகள் முதல்நன்மைக்காகச் செய்தது. அப்போ அங்கு உதவிக்குப் புத்தகங்களோ இணையமோ இருக்கவில்லை. மனம் போன போக்கில் செய்தது இது.

பட்டர் கேக் & பட்டர் ஐசிங்
இலைகளும் மகரந்தங்களும் செயற்கைதான்.
அட்டையில் பல்லுகள் போல் வெட்டி வைத்து பைபிள் முகப்பில் இழுத்து விட்டேன். அதே போல் சிறிதாகப் பல்லுகள் வெட்டி தாள்கள் வரைந்தேன்.
புக்மார்க் - பேப்பர் ரிபன்.
குருசினைச் சுற்றி உள்ள நீள்சதுர பார்டர் வெள்ளி அட்டையில் வெட்டி எடுத்தது.
பூக்கள், மீதி ஐசிங் எல்லாம் 'ஸ்டார் நொசில்ஸ்' கொண்டு வைத்தேன்.

செபமாலை வைப்பது சிரமமாக இருந்தது நினைவு வருகிறது. ஒரு இடத்தில் ஆரம்பித்து மணிகள் வைத்துக் கொண்டு வர.. தேவையான இடத்தில் முடியாமல் மீதம் வரும் போல் தோன்றிப் பயமுறுத்தியது. ;) ஒரு மாதிரி வளைத்து நெளித்துக் கொண்டுபோய் அழகாக முடித்துவிட்டேன்.

அப்போ இருந்ததை விட இப்போ படத்தைப் பார்க்க இன்னும் அதிக சந்தோஷமாக இருக்கிறது.
படத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தவர்களைப் பாராட்ட வேண்டும்.

அங்கு இருப்பவர் என் மருமகள், இப்போ மணமாகி கனடாவில் இருக்கிறார். அந்தச் சட்டை.. மாமி தைத்தது. அழகாகத் தைப்பார். அவர் எனக்கு மட்டும்தான் எதுவும் தைத்துக் கொடுத்தது இல்லை என்று அடிக்கடி சொல்வேன். ஹும். ;(

கேக் போர்ட்... என் தந்தையார்தார்  ஊரில் கேக் செய்யும் எல்லோருக்கும் கேக் போர்ட் செய்து கொடுப்பார். ஆசிரியர், இளைப்பாறியதன் பின் அவரது பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்றாக மாறி இருந்தது. இதில் அவருக்கு நல்ல வருமானமும் வந்தது.
ஆனால் இங்கு உள்ளது என் சமையலறைக்காக அப்பா செய்து கொடுத்த பாண் வெட்டும் பலகைதான். அதுதான் சரியான அளவாக இருந்தது. தேயிலைப் பெட்டியில் ஒட்டிவரும் வெள்ளிக் கடதாசியை ஒட்டி எடுத்தேன்.

18 comments:

  1. எனக்கு தான் முதல்
    பீஸ் கேக்

    ReplyDelete
  2. கடதாசி என்றால் .அலுமினியம் foil தானே
    அந்த ஜெப மாலை அவ்வளவு அழகாக வந்திருக்கு
    fantastic and fabulous

    ReplyDelete
  3. இமா,நீங்கள் நேரில் விவரித்து.பதிவிலும் படிக்கும் பொழுது இனிமையாக இருந்தது.நீண்ட காலம் சென்ற பின் நம் கைவண்ணங்களை எதிர்பாரா விதமாக நேரிலோ,புகைப்படத்திலோ காணும் பொழுது மன கொள்ளும் உவகை சொல்லி மாளாது.

    ReplyDelete
  4. எங்கே இத்தனை நாளா கானோமுன்னு நினைச்சிருந்தா ..பழைய நினைவுகளா .....சும்மா கலக்குறேள்.. மாமீஈஈ..

    ReplyDelete
  5. //அவர் எனக்கு மட்டும்தான் எதுவும் தைத்துக் கொடுத்தது இல்லை என்று அடிக்கடி சொல்வேன்.//

    ஒரு வேளை அப்போ யானை குட்டி மாதிரி குண்டா இருந்திருப்பீங்களோ..ஹி..ஹி...(( எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் )) :-))

    ReplyDelete
  6. முதல் படம் கேக் மாதிரியே தெரியல ரியல் புக் மாதிரியே இருக்கு :-))

    ReplyDelete
  7. எடுத்துக்கங்க அஞ்சலின். ;) ஆமாம், அலுமீனியம் ஃபாயில்தான். பாராட்டுக்கு நன்றி.

    ~~~~~~~~~~

    நன்றி சாரு. ;)

    ~~~~~~~~~~

    ;) ஸாதிகாவுக்கு மட்டும் என்னமோ ஒரு லக் வேலை செய்து இருக்கு. ;))
    இங்க நான் நன்னாரி சிரப் தேடிக் கொண்டு இருக்கிறேன். ;))

    ReplyDelete
  8. ஜெய்...
    //சும்மா கலக்குறேள்.. மாமீஈஈ// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;))
    //யானைக் குட்டி மாதிரி // ம். ஒரு காலம் இருந்தது அப்படியும். ஒரு காலம் ஆமைக்குட்டி. ;)
    கடைசி கமண்டுக்கு நன்றி.

    ReplyDelete
  9. பைபிள் போலவே இருக்கு கேக்! இவ்ளோ அழகா கேக் செய்து எப்படி கட் பண்ண மனசு வரும் இமா? அதான்,அத்தி பூத்த மாதிரி கேக் செய்தாலும் நான் ஐசிங் பக்கமே போறதில்ல.(குப்புற விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டவே இல்ல!!)

    ///யானைக் குட்டி மாதிரி // ம். ஒரு காலம் இருந்தது அப்படியும். ஒரு காலம் ஆமைக்குட்டி. ;) /எப்பவாவது மனுஷக்குட்டியா இருந்தீங்களா/இருக்கீங்களா??!! ;)

    ReplyDelete
  10. மூக்குக்கும் உதட்டுக்கும் நடுவுல கொஞ்சூண்டு ஐசிங் பூசிட்டு விழுந்தா மண் ஒட்டும். ;))
    ம். இருக்கேன், எப்பவும்.. செபாவுக்கு. ;)

    ReplyDelete
  11. //1992 அல்லது 93 ஆக இருக்கவேண்டும்// - இமா அப்பவே நீங்க கேக் செய்யும் அளவுக்கு பெரிய ஆளா இருந்திருக்கீங்க. நான் உங்க மருமகள் போல் குட்டி பாபா'வா பள்ளிக்கு போயிட்டு இருந்தேன் ;(

    ஆனாலும் நீங்க ஒரு புத்தக லுக்கை கொடுக்க எடுத்த ஆயுதங்கள் [அட்டையில் பல்லுகள், பல்லுகள் வெட்டி தாள்கள்] பிரமாதம். எப்படி தான் இப்படிலாம் தோணுதோ!!! கொஞ்சம் யோசனைகளை கடனா தாங்கோ இமா... :) - Vanitha

    ReplyDelete
  12. ஹாய் இமா...,கேக் செய்வதில் நீங்கள் மிகுந்த கைதேர்ந்தவராக இருந்திருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது.1992 லிருந்துன்னா... எம்மாடி சும்மா சொல்ல கூடாது நல்ல திறமைங்க...
    பராட்டுக்கள் இமா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  13. அட! ப்ரபா வந்திருக்காங்க. ;)) எப்பிடி இருக்கீங்க? நலம்தானே?

    வனி, வட்டி எவ்வளவு தரீங்க என்று சொன்னால் கடன் தரேன். ;)

    தாங்ஸ் அப்சரா. ;)

    ReplyDelete
  14. //வட்டி எவ்வளவு தரீங்க // - செய்யும் பொருளையே பரிசா தாரேன் இமா. சரியா? - Vanitha

    ReplyDelete
  15. வாவ். இங்க பட்டர் கேக் கிடைக்கிறது சரியாக கஷ்டம். ஸ்பொஞ் கேக் லேயர் கேக் என்டு பாத்திரம் கழுவுற ஸ்கொஞ்சை சாப்பிட பீலிங்க. இன்டைக்கு என்ட வயித்தெரிச்சலை கிளப்புறதென்டு முடிவெடுத்த மாதிரி ஒரே சாப்பாடு படங்கள். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். செபமாலை மிகவும் அழகாக இருக்கு இமாம்மா.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா