ஊரில் இருக்கும் போது இப்படி ஒரு அச்சாறு போட்டு வைப்பேன். குறிப்பு என்று எதுவும் கிடையாது. என் கண்ணும் மனதும் சொல்கிறது தான் எதற்கும் அளவு. என் அதிஷ்டம், ஒரு பொழுதும் கெட்டுப் போனதில்லை; நன்றாகவே இருக்கும்.
இங்கு வந்து இதெல்லாம் மறந்து போய் விட்டது. மிளகாய் விலை அதிகம், சின்ன வெண்காயமும் கிடைப்பதில்லை.
மிளகாய்... சென்ற வருட அறுவடை தேவைக்கதிகமாக இருக்கவும் மூத்தவர் இந்த அச்சாறு செய்வதைப் பற்றி நினைவு படுத்தினார். அவருக்கு மிகவும் பிடிக்கும்.
இப்போ நான் சாப்பிடுவது இல்லை. நேற்றுத் தான் பார்க்கிறேன்... பெரிய சாடி முற்றாகத் தீர்ந்து போய் இருக்கிறது. இது ஒன்றுதான் மீதம்.
'குறிப்பு இருக்கும் என்று வந்தேன், ஏமாந்தேன்' என்று யாரும் சொல்லக் கூடாது. ;)
இம்முறை விடுமுறையில் சென்ற காரணத்தால் தோட்டம் போடவில்லை. இந்த வருட இறுதியில் அச்சாறு செய்கிற போது மறக்காமல் அளவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
//'குறிப்பு இருக்கும் என்று வந்தேன், ஏமாந்தேன்' என்று யாரும் சொல்லக் கூடாது. ;)//Am not a big fan of oorugai! so its okay! ;)
ReplyDelete//'குறிப்பு இருக்கும் என்று வந்தேன், ஏமாந்தேன்' என்று யாரும் சொல்லக் கூடாது. ;)//
ReplyDeleteஅடுத்த பதிவில் அச்சாறு எப்படிச் செய்வது என்பது பற்றி விளக்குவீர்கள் என நினைக்கிறேன்.
பார்வைக்கு மோர் மிளகாய்/ உப்பு மிளகாய் போல இருக்கிறதே?
ReplyDeleteஇப்படி அச்சாறு படத்தைக்க்காட்டி குறிப்பு போடாமல் நாவூர செய்து விட்டீர்களே:(அளவு தெரியாவிட்டாலும் தேவையான பொருட்கள்.செய்முறை மட்டும் போடுங்கள்.எங்கள் கண்ணும் மனது சொன்ன மாதிரி அளவீட்டில் அச்சாறு செய்து சாப்[பிடுகின்றோம்.
ReplyDeleteதயிர்/மோர் சாதமும் ஸ் ஸ் ஸ் அச்சாருவும் .
ReplyDeleteவெஜிடபள் சான்ட்விச் அச்சாருவும் .....ம்ம்ம்ம்
என்னென்ன சேர்க்கணும்னு சொல்லுங்க அதை வெச்சு
செய்து பார்க்கிறேன்.
ம். விளங்குது மகி. நீங்கள் தான் விதவிதமாகச் சமைப்பீங்களே; உங்களுக்கு எதுக்கு ஊறுகாய்!
ReplyDeleteஇன்னும் குருவிக் கூடு பற்றி நான் கேட்டதுக்குப் பதில் சொல்லேல போல. ;)
//அடுத்த பதிவில் அச்சாறு எப்படிச் செய்வது என்பது பற்றி விளக்குவீர்கள் என நினைக்கிறேன். // நினைக்காதைங்கோ, விளக்க மாட்டேன்ன்ன். ;)))
ReplyDelete(அந்த வேலையை யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் குறிப்புப் போடுற ஆட்கள்ட விட்டாச்சு.)
அதிஷ்டத்துக்கும் அச்சாறுக்கும் என்ன சம்மந்தமோ?
ReplyDelete//இந்த வருட இறுதியில் அச்சாறு செய்கிற போது மறக்காமல் அளவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.//
ReplyDeleteஏன் உங்க அதிஷ்டத்துமேல நம்பிக்கையில்லையா ?
மேசையில இருக்கிறதைப் பார்க்கக் கூடாது நிரூபன். அது ஸ்டைலுக்கு வச்சு இருக்கிறன். போத்தல்ல இருக்கிறது மோர் மிளகாயா!! க்ர்ர்ர்ர்ர்ர் ;))
ReplyDeleteஸாதிகா அக்கா இதைவிட நல்லா பண்ணுவாங்க, எனக்குத் தெரியுமே. ;)
ஏஞ்சலின், எனக்கு ப்ரெட்ல மாஜரின் தடவி மேல அச்சாறு மிளகாய் பூசி டோஸ்டட் சான்விச்சாக சாப்பிடப் பிடிக்கும்.
ம்.. ஒரு சம்பந்தமும் இல்ல வசந்த்.
ReplyDeleteஎனக்கு அதிஷ்டத்தில் எல்லாம் எப்பவும் நம்பிக்கை கிடையாது. அது சும்மா எழுதினது. நடக்கிறது தன்ட பாட்டில நடக்கும். நாங்களும் எப்பவும் கவனமாக இருக்க வேணும்.
இது... அளவுக் கணக்கு எனக்கு நல்லாத் தெரியும், சரி வருது.
அளவு கட்டாயம் குறிச்சு வைக்கத் தான் வேணும், ஏன் எண்டால்... ;) யாராவது குறிப்புக் கேட்டால் அளவு சொல்ல முடியாமல் இருந்தால் நான் சொல்லுறதை நம்புவினமா!! ;) ஏதோ கடையில வாங்கி லேபிளைப் பிச்சுப் போட்டுப் படம் எடுத்தன் எண்டு நினைக்க மாட்டினமோ! போத்தல் வேற ரெடிமேட் ஊறுகாய்ப் போத்தலா இருக்குது. ;))
கமண்ட் சொன்ன எல்லாருக்கும் ஒரு பெரீ...ய கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;((((((((((((((
ReplyDeleteதலைப்பில எழுத்துப் பிழை இருந்து இருக்குது. அதைப் பார்க்காம குறிப்புக் கேட்கிறீங்கள். (இப்ப மாத்தீட்டன். ) ஒரு VIP ரகசியமாக எட்டிப் பார்த்து வந்து பிழையைச் சுட்டிக் காட்டுமட்டும் எனக்குத் தெரியேல்ல.
ரெசிப்பி போடாட்டிலும் காரியமில்லை. ஏனென்னறால் எனக்கு அச்சாறு பிடிக்காது. நானும் சில ரெசிப்பிகள் அளந்து போடுவதில்லை. என் அம்மா திட்டுவார்கள். சும்மா ஒரு குத்து மதிப்பா போடுங்கோ என்று அம்மாக்கு சொல்வதுண்டு.
ReplyDelete//அச்சாறு // - You mean "ஊறுகாய்” ?? ;) - வனிதா
ReplyDeleteமீ தி பிர்ச்டு
ReplyDeleteநானும் 'குத்து மதிப்பா' தான் போடுறனான் வான்ஸ். ;) யாரவது குறிப்புக் கேட்டால் மட்டும் அடுத்த தரம் சமைக்கேக்க ஒருக்கா கவனிச்சுப் பார்த்துக் குறிச்சு வைப்பன்.
ReplyDeleteவனீஸ்.. //You mean "ஊறுகாய்” ??// ம். அந்தக் கண்ணடிக்கிற ஸ்மைலியைப் பார்த்தால் வேற ஏதோ மீனிங்ல எழுதி இருக்கிற மாதிரி இருக்கே!! ;))) ஊறுகாய் போல தான் இதுவும்.
ரெஜிஸ்டர்ல சிவாக்குட்டிக்கு ப்ரசண்ட் போட்டாச்சு. ;)