Monday, 18 April 2011

ப்ரொமீலியாட்ஸ்

இங்கு வந்த முதல் வருடம்... கணவர் வேலையொன்றில் இணைந்து, குழந்தைகளும் பாடசாலையில் சேர்ந்து விட்டதும் முதல் முறையாக பகற்பொழுதுகளில் தனிமையில் விடப்பட்டேன். அதற்கு முன்பு எப்பொழுதும் இல்லாத தனிமை, அயலாரையும் தெரியாது. நாடு புதிது, வீடு புதிது, இங்கு நிலவிய அசாத்திய அமைதியும் புதிதாக இருந்தது.

வேலைக்குப் போக அரசு அனுமதி இல்லை என்ற நிலையில் மௌன்ட் ஈடன் செஞ்சிலுவைச்சங்கக் கடையில் தொண்டராக இணைந்துகொண்டேன்.
 2004 ல் இப்போ இருக்கும் வீட்டை வாங்கிக் குடிபெயர்ந்தோம். அந்தச் சமயம் கூட வேலை செய்த ஓர் தோழி கொடுத்த அன்பளிப்பு இந்த ப்ரொமீயாட்களின் ஆரம்பம்.

இரண்டு வீடுகளுக்குப் பொதுவான இடம் இது. இதுவரை வெள்ளைக்கற்கள் பரவி இருந்தது. சமீப காலமாக 'ஸ்னோ ட்ராப்ஸ்' ஆக்கிரமிப்பு அளவுக்கதிகமாக இருக்கவும் அவற்றை நீக்கி மீண்டும் 'வீட்மற்'றைச் சரி செய்து... என்ன வைக்கலாம்!! அழகு ப்ரொமீலியாட்ஸ்.

இடையில் இருக்கும் குட்டிச் செடி பெயர் மறந்து போயிற்று. (நினைவு வரும்போது வந்து பெயரை இணைக்கிறேன்.) அது பக்கத்து வீட்டுக் காமினி க்றிஸ் (இவர் தெலுங்கர், கணவர் தாய்லாந்துக்காரர்) வீடு மாறிப் போகையில் கொடுத்தது. அழகாக ஓர் பூப் போலவே வளர்ந்திருக்கும்.

ப்ரொமீலியாட் ஒரு அன்னாசிக் குடும்பத் தாவரம்

முழு நேர வேலை கிடைத்ததன் பின்னாலும் விடுமுறைக் காலங்களில் கடைக்குப் போய் உதவி வந்தேன். நான் மட்டும் அல்ல, முக்கிய நாட்கள் மற்றும் வேலை அதிகம் உள்ள நாட்களில் என் முழுக் குடும்பமும் அங்கே இருப்போம். இன்று என் தோழிகள் யாரும் அங்கில்லை. முதுமை அனைவரையும் வீட்டோடு இருத்தி விட்டது. இருக்கும் யாரையும் தெரியவில்லை; முன்பு போல் நினைத்த பொழுது போவது என்பது சங்கடமான காரியமாக இருக்கிறது.

அங்கு போய் வந்த அடையாளமாக என்னிடம் உள்ளவை இந்த ப்ரொமீலியாட்களும் சில புகைப் படங்களும்  முப்பத்து மூன்றாவது வருட விழாவன்று ஐந்தாண்டு சேவைக்காக எனக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமும் தான்.  பத்திரமாக வைத்திருக்கிறேன் அனைத்தையும்.
இதை விட... கடை தொடர்பான பல நினைவுகள் மனதில் இருக்கிறது. என் தோழிகள் என்னை மறந்தது போல் நான் அவைகளை மறக்குமுன் எங்காவது பதிந்து வைக்க வேண்டும். ;(

29 comments:

  1. தாவரங்களுடன் ஐக்கியமாகிய உங்கள் ஓய்வு நேரங்களைப் பற்றியும், புகுந்த நாட்டில் அல்லது புதிய நாட்டில் எப்படி உங்கள் பொழுதுகளைப் பயனுள்ளதாகக் கழித்தீர்கள் என்பதையும் பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்.

    இந்த தாவரப் பெயர் புதுமையாக இருக்கிறதே.

    ReplyDelete
  2. ப்ரொமீலியாட் அழகா இருக்கு எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. பகிர்வு அருமை இமா.ப்ரொமீலியாட் பார்க்கவே கண்கொள்ளாகாட்சியாக உள்ளது.

    ReplyDelete
  4. அந்த அன்னாசித் தயாவரம்(இது கரெக்ட்தானே இமா?:)) இங்கும் இருக்கு? பூக்காதெல்லோ? .

    என்னாது தோழிகள் மறந்துவிட்டார்களோ உங்களை அதெப்பூடி? நாங்க மறக்க மாட்டோம் இமா:((((.

    வந்துட்டுதோ?..... வந்துட்டுதோ?... அதுதான் இமா, குட்டித்தாவரத்தின் பெயர் நினைவு வந்திட்டுதோ எனக் கேட்டேன்....

    ReplyDelete
  5. வீட்டிலயும் க்றிஸ்... பக்கத்து வீட்டிலயும் க்றிஸோ?... .... இட்ஸ் ஓக்கே..

    இருந்தாலும் க்றிஸ் அங்கிளை அதிகம்தான் வேலை வாங்குறீங்க இமா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    எனக்கொரு சந்தேகம் “கிரிஸ்” என்பதுதானே சரியான தமிழ்? தமிழில் முதல் எழுத்துக்கள்... க் இல ஆரம்பிக்கலாமா?

    ReplyDelete
  6. என்ன இமா.... கார் கலர் மாறிப்போச்சூஊஊஊ?:)))).

    ReplyDelete
  7. //சரியான தமிழ்?// ம். ;)) அப்ப... கிரிச் எண்டுதான் எழுத வேணும். 'கிரீ..ச்' மாதிரி இருக்கு. சிரிக்க வைக்காதைங்க அதீச். ;))
    இதை வீட்டில சொன்னால் எனக்கு அடிதான் விழும். ;))

    என் பேரே தமிழ் இல்லையே அதீச். பாதி லத்தீன் பாதி ஆங்கிலம்; அதையும் நறுக்கி... ;))

    எத்தனை பேர் வட எழுத்தில தொடங்கிற தமிழ்ப் பேர் வச்சிருக்கிறம். செயா, செயனாதன், செயம் எண்டு எல்லாம் எழுதினால் அதுக்கு மட்டும் பூசாருக்குச் சந்தேகம் வராதோ!! ;))

    பேர்.. என்ட சிக்னேச்சர் மாதிரி, இப்பிடியே இருக்கட்டும்.

    - இமா க்றிஸ் ;)

    பி.கு
    பரவாயில்ல, மருமகன் லீவில போன குறைக்கு நல்லா இட்டு நிரப்புறீங்கள். ;))))

    ReplyDelete
  8. //புகுந்த நாட்டில்// ரசித்தேன். ;)
    //தாவரப் பெயர்// ஆரம்பத்தில் அடிக்கடி மறந்து வைக்கும். யாராவது இதற்கென்ன பெயர் என்றால் நினைவு வராது.
    (அதிரா இன்னும் பேர் மெய்யெழுத்தில தொடங்கினதைக் கவனிக்க இல்ல, காட்டிக் குடுத்துராதைங்கோ நிரூபன்.) :))

    ReplyDelete
  9. ;) நன்றி ஏஞ்சலின் & ஸாதிகா.

    ReplyDelete
  10. அதீஸ்..
    //பூக்காதெல்லோ?// லின்க் பாருங்கோ.
    //தோழிகள்// அவ்வளவு யங் எல்லோரும். ;)
    //வந்துட்டுதோ?// ;(
    //பக்கத்து வீட்டிலயும் // மட்டும் இல்ல, வேலையிலயும் இருக்கினம்.
    நான் ஒருவரையும் வேலை வாங்கேல்ல. ;)
    அதீஸ் தலைப்பு வாசிக்கேக்க கண்ணாடி போடேல்லயோ!! ;)
    //கார் கலர்// 'கார்காலத்தில' மறைமுகமா சொல்லி இருக்கிறது இதுதான். உங்களுக்கு விளங்கேல்ல. ;)

    ReplyDelete
  11. நான் கேட்க நினைச்சதை அதீச் கேட்டுப் போட்டா. நான் சும்மா படங்கள் & கிறிச் அண்ணாச்சி ஓடி ஓடி வேலை செய்வதை பார்த்திட்டு போறேன்.

    ReplyDelete
  12. வாழ்க வளமுடன்..

    ப்ரொமீலியாட்சைச் சொன்னேன் :))

    ReplyDelete
  13. அழகாக இருக்கின்றது...

    ReplyDelete
  14. //நான் சும்மா படங்கள் & கிறிச் அண்ணாச்சி ஓடி ஓடி வேலை செய்வதை பார்த்திட்டு போறேன். // ம். ;)))

    சிவாக்குட்டீ... நேற்று ஆப்சண்ட் ஆக இருந்ததுக்கு எங்க லீவ்நோட்??

    எல்ஸ்.. குழப்படீ. ;))))

    நன்றி கீதா ஆச்சல்.

    ReplyDelete
  15. மண்ணின்மீது பச்சை வலைத் துணி விரித்திருக்கிறதோ இமா? எதற்காக? மணல் பறக்காமலிருக்கவா? ஒவ்வொரு செடி நடும்போதும் வெட்டி நடுவீர்களா? விரிவாய்ச் சொல்லுங்களேன்.

    இங்கே 2 வாரங்களாக பேயாக மணல்காற்று!! ஒரு வழியாகிவிட்டோம், தோட்ட மணலை அள்ளிக் கொட்டி கொட்டி!! தோட்டத்தில் பாதி இடத்தை இப்படித்தான் துணிபோட்டு மூடி வைத்திருக்க்றேன்!! இருந்தும்... :-((((((

    ReplyDelete
  16. ப்ரொமிலியாட்சைவிட, அந்தப் பச்சைப்பூ (செடி) கொள்ளை அழகு!!

    ReplyDelete
  17. ஹுஸைனம்மா,

    அது weedmat. பச்சையாகத் தான் இருக்கும் என்று இல்லை. வேறு நிறங்களிலும் இருக்கும். சிலது நெருக்கமாகப் பின்னி இருப்பார்கள்.

    தேவையான இடத்தில் இந்தப் பாயை விரித்து ஓரங்களில் தரையோடு சேர்த்து அடித்து விட வேண்டும். இதற்கென்றே அரை அடி உயர ப்ளாஸ்டிக் ஆணிகள் விற்கிறார்கள். 'ட' வடிவ ஆணிகளும் பெரிய U வடிவ ஆணிகளும் இருக்கின்றன. தேவைக்கேற்ப தெரிந்து கொள்ளலாம்.

    கீழே வளரும் தேவையற்ற தாவர வேர்கள் இந்தப் பாய்க்குக் கீழே பரவி இருக்கும். இதற்கு மேலே தூளாக்கிய மரப்பட்டை / சிப்பி / பரற்கற்கள் / வெள்ளைக்கற்கள் என்று போட்டு வைப்பார்கள். களைகள் வளர்வதற்கு இவை உகந்ததாக இராது அல்லவா? அதையும் மீறி மேலே வளர ஆரம்பிக்கும் களை வித்துக்களின் வேர்கள் பாயை ஊடுருவிக் கீழே செல்வதற்குள் அழித்து விடலாம்.

    இடையில் செடி நடுவதாக இருந்தால் பாயில் ஒரு X வடிவம் வெட்டிவிட்டு அதனுள் செடியை நடலாம். (அப்படித் தான் நட்டிருக்கிறோம்,) பாயைத் திரும்ப மூடிவிட்டு மேலே சீராக்கி விட வேண்டும். ஊற்றும் நீர் பின்னல் இடைவெளியூடாக செடிக்குப் போய்விடும்.

    மணல் பறக்காமலிருக்கவும் இந்த மாதிரிப் போடுவார்கள். கடற்கரைகளில் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. ஹுஸைன்... கீழே இருப்பவற்றைப் பாருங்க. கொஞ்சம் ஐடியா கிடைக்கும். வேற ஏதாவது வேணுமானா கேளுங்க, சொல்றேன்.

    ஏற்கனவே செடி இருக்கிற இடத்துல கூட போடலாம். உங்களுக்கு களைப் பிரச்சினைக்கு என்று இல்லைதானே! செடி வரும் இடத்தில் மாட்டில் பொருத்து வருவது போல் வைத்து அங்கங்கே பின் பண்ணி விடுங்க.

    http://www.ehow.com/how_7711918_lay-weed-mat.html

    http://www.weedgunnel.com.au/specifications.html

    http://www.permathene.co.nz/index.php?main_page=index&cPath=50

    http://www.google.com/search?q=weedmats+images&hl=en&prmd=ivns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=GFitTeTyC5TCsAOyiN2SAw&ved=0CBgQsAQ&biw=1280&bih=619

    ReplyDelete
  19. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதாரது “ச்” “ச்” என, என் பெயருக்கு முத்தம் கொடுப்பது:)கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    ”நியூ”வையும் “அமே”வையும் உடனடியாக பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகும் படி மேன்மை தங்கிய, பெருமதிப்புக்கும் அன்புக்கும் பாத்திரமான(அது நானேதான்) ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விட்டிருக்கிறார்:).

    நாங்க அரபுத் தமிழர்.. சே..சே.. எல்லாம் தடுமாறுது மரபுப் தமிழர் பரம்பரையாக்கும்.... ழ, ள தொடங்கி ச், ஸ் வரைக்கும் கரீட்டா எழுதுவம்:).

    தமிழ்ச் சொற்கள், பெயர்கள் மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கப்படக்கூடாது(ஆரும் குறுக்க பேசப்புடா..:)).. முறைச்சால் வாள் எடுப்பம், உறுமினா கத்தி தூக்குவம்... உஸ் என்றால் மர உச்சிக்கே போயிடுவம்... ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்:).

    S =ஸ்
    Ch = ச்
    Sh = ஷ்.... இப்பூடித்தான் வரும்... ம்ஹூம்ம்ம்ம்ம்ம்...

    திருநெல்வேலிக்கே சொக்கலேற்ரோ? பிரித்தானியாவுக்கே தமிழோ?:) ஆங்.....

    இல்ச்சூ.... இல்ச்சூஊஊஊஊஊஊஊ (அது நான் இல்ஸ் ஐக் கூப்பிட்டேன்:)).... சேவ் மீ பிலீச்ச்ச்ச்ச்:))(இது வேற சேவ்:))... வர வர கட்டில் வாடகைக்கே வருமானம் போதாமல் இருக்கே:) அவ்வ்வ்வ்வ்..... இனிப் பேசாமல் மாமரத்தில தான் இருக்கப் பயகோணும்:).

    ReplyDelete
  20. ப்ரோமிலியாட்ஸ் தாமரைப்பூ மாதிரி இதழ்கள் மாதிரி பச்சையில பார்க்கவே அழகா இருக்கு இமா ( 104 தடை உத்தரவினால் பேர் சொல்லும் ஸ்டூடண்ட் ரெண்டு வாரத்துக்கு)

    கிறிஸ் கிரிக்கெட் கிறிஸா ? ஹ ஹ ஹா :)))

    ReplyDelete
  21. //தாமரைப்பூ மாதிரி இதழ்கள் மாதிரி பச்சையில// க்ர்ர்ர் மாறிப் பார்த்துட்டீங்கள் வசந்த். மற்றதுதான் ப்ரொமீலியாட்.

    ReplyDelete
  22. :(

    அது என் தவறில்லையே இன்னது ப்ரோமிலியாட்ஸ் இன்னது பெயரில்லா செடின்னு சொல்லாதது இமாவோட மிஸ்டேக் ஆதலால் மதிப்பெண் இழந்துவிட்டேன் :(

    :(

    ReplyDelete
  23. ;) ம். குட்டிச்செடி பற்றி ஒரு வரி சொன்னதால் புரிந்திருக்கும் என்று தவறாக நினைத்துவிட்டேன்.

    அங்க இருக்கிற லின்க் தட்டினால் அழகழகாக நிறைய விதமான ப்ரொமீலியாட் படங்கள் இருக்கும், பாருங்க.

    ReplyDelete
  24. ஸ்னோ ட்ராப்ஸும் அழகாத்தானே இருக்கு? ஏன் அதை எடுத்துட்டு இது? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!! அதனுடனே இதையும் வளர்க்க முடியாதுங்களா இமா? :)

    ReplyDelete
  25. இந்தத் தயாவரம்:) பாத்திருக்கேன்,பேர்தான் தெரியாது..நானும் வசந்த் மாதிரி என்ன செடின்னு தெரியாமயே ரெம்பநேரம் பார்த்து..அப்புறமா கிட்னிய யூஸ் பண்ணி கண்டுபிடிச்சேன்.ஹிஹிஹி!

    ReplyDelete
  26. ட்ரைவ் வேல காத்து வீசி ஸ்னோ ட்ராப்ஸ் இஷ்டத்துக்கு வளவு முழுக்க வளர ஆரம்பிச்சுது மகி. கண்ட்ரோல் பண்ணச் சிரமமாக இருந்தது. அதான்.. ;(
    //நானும் வசந்த் மாதிரி// ஹும் ;( எல்லாரும் அதே கூட்டம். தப்பு என் மேல தான். சாரி.;))

    குட்டித் தாவரம் / தயாவரம் ;) / பச்சைத் தாமரை = Echeveria (ஆனால் எந்த விதம் என்று தெரியவில்லை. எல்லாம் ஒன்றை ஒன்று பார்த்த மாதிரி ஆயிரத்தெட்டு விதம் இருக்கு.)

    ReplyDelete
  27. இமா, விளக்கமான விளக்கங்களும், சுட்டிகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. செடிகள் முழுமையா வளரும்வரை இந்த மாதிரி இங்கு கிடைக்கும் பச்சை வலைத்துணி வாங்கிப் போடலாம்னு நினைக்கிறேன். ஆனா, அதிலயும் சில பிரச்னைகள் இருக்கு. முதல், செலவு இரண்டாவது பெரிய செடிகளைச் சுற்றியுள்ள இடத்தில் புல்/கீரை வளர்க்கலாம்னு ஐடியா இருக்கு. அதனால் யோசித்துச் செய்யவேண்டும்.

    நன்றி இமா.

    ReplyDelete
  28. இப்போ தான் முதல் முறை கேள்விபடுகிரேன் ப்ரொமீலியாட் பற்றி அழகா இருக்கு

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா