என்னைப் பாதித்த ஒரு விடயம்; பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.
பெரிதாக ஒன்றும் இல்லை; சின்னது என்றும் இல்லை.
ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே மின்னஞ்சலை அனுப்புவதாக இருந்தால்...... ஒருவர் மின்னஞ்சல் மற்றவருக்குத் தெரியுமாறு அனுப்ப வேண்டாமே.
எனக்கு சிலகாலம் முன்பு ஒரு மின்னஞ்சல் வந்தது. இப்போ சிரமமாக இருக்கிறது. ஒன்றா! இரண்டா! எத்தனை மின்முகவரிகள்!! எண்ணவில்லை - ஒரு நூறு இருக்கும். அத்தனை பேருக்கும் என் முகவரி தெரிந்து... அவர்கள் அனுப்பிவைக்கும் போது, அவர்களுக்கும் தெரிந்து.... அவர்களிடமிருந்து மின்னஞ்சல் பெறுபவர்களுக்கும் தெரிந்து....
குறிப்பிட்ட சகோதரருக்கு இனிமேல் இதுபோல் வேண்டாம் என்று செய்தி அனுப்பினேன். புரிந்துகொண்டார்; பதிலும் அனுப்பினார். பின்னர் அவரிடமிருந்து பொது மின்னஞ்சல்கள் எதுவும் வரவில்லை. ஆனால் அவர் ஆர்வக்கோளாறாய் ஆரம்பித்து வைத்த சங்கிலி இப்போ என் மதிட்சுவரில் விருட்சமாய் வளர்ந்து விடுவேன் என்று பயமுறுத்துகிறது. ;(
காலையில் வேலைக்குப் போகுமுன் செய்திகள் இருக்கிறதாவென்று பார்க்க வந்தால்... யாரோ யாருக்கோ அனுப்பி இருக்கும் செய்தி எனக்கும் வந்திருக்கும்.
சில செய்திகள் அந்த நாளையே பாதித்துவிடுகிறது. என்னைப் போலவே சிரமப்படும் யாராவது தங்கள் மின்முகவரியை நீக்கி விடுமாறு செய்தி அனுப்பி இருப்பார்கள். அது எனக்கு இல்லாவிட்டாலும்.... எனக்கு வருகிறது; சங்கடமாக இருக்கிறது.
எப்போவாவது திட்டிக் கூட ஒரு மின்னஞ்சல் வரலாம். இனி எதுவும் செய்ய இயலாது... அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ;(
முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ID, பிறந்த தேதி, குடும்ப விபரம் எல்லாம் தனிப்பட்டவர் சொத்து. சொந்தக்காரர் அனுமதியின்றி இன்னொருவருக்குக் கடத்துவது சரியல்ல என்பது என் அபிப்பிராயம்.
என் மின்னஞ்சல் முகவரி எல்லோருக்கும் தெரியவேண்டும் என்று விரும்பி இருந்தால் நானே இமாவின் உலகிலோ, 'ஃபேஸ்புக்' பக்கத்திலோ கொடுத்திருப்பேனே.
நாம் எம் நட்புவட்டத்துக்கு உதவியாக இருக்கிறோமோ இல்லையோ, உபத்திரவமில்லாமல் இருப்பது முக்கியம்.
ஒரே செய்தியைத் தனித்தனியே அனுப்புவது நேரம் எடுக்கும் என்று நினைத்தால் மற்றொரு சுலபமான வழி இருக்கிறது.
பெறுநர் விலாசம் - உங்களுடையதாக இருக்கட்டும். (உங்களுக்கு முதற்பிரதி வரும்.) Add Cc தெரிந்துகொள்வதற்குப் பதில் Add Bcc தெரிந்துகொள்ளுங்கள். அங்கு அனுப்பவேண்டிய அனைவர் மின்னஞ்சல்களியும் ஒன்றாகப் பதிந்துகொள்ளுங்கள்.
ஒருவர் மின்னஞ்சல் மற்றவருக்குத் தெரியாது.
தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். ;)) அதற்குக் கூட மருந்து இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு!!!!!!!
//நாம் எம் நட்புவட்டத்துக்கு உதவியாக இருக்கிறோமோ இல்லையோ, உபத்திரவமில்லாமல் இருப்பது முக்கிய//
ReplyDeleteகூகிள் மெயில் ஆக இருந்தால்வேண்டாத MAILS ஸ்பாம் செஞ்சுருங்க ,
இல்லை என்றால் வேறு ஒரே வழி புதிய மெயில் அக்கவுன்ட் துவங்கி விடுங்கள் .எனக்கும் FORWARDED MAILS நிறைய வரும் .தொல்லைதான் .
உண்மையான விடயமே. ஆனா நான் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை... ஒருவேளை இன்னும் ஏதும் தொல்லை வராமையாலோ என்னவோ. தெரியாதோர் மெயிலெல்லாம் உடனேயே டிலீட்தான்.
ReplyDeleteஇதில் இன்னொன்று எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம், இதை 6 நபருக்கு 7 நாளைக்குள் அனுப்ப வேண்டும், இல்லையெனில் அது நடக்கும் இது நடக்கும்...etc..
நான் இதுவரை அப்படியான மெயில்களை, எனக்குப் பிடிக்காததை அடுத்தோருக்குச் செய்வதில்லை, ஆரம்பம் பார்த்ததுமே புரிந்திடும், உடனேயே டிலிட் பண்ணிடுவேன்.
மு.கு:
இதுவரை நட்புக்களிடமிருந்து, இப்படியான ஒரு மெயிலாயினும் எனக்கு வரவில்லை, வந்ததெல்லாம்.. உறவினரிடமிருந்தே.
மு.கு:
ReplyDeleteஇதுவரை நட்புக்களிடமிருந்து, இப்படியான ஒரு மெயிலாயினும் எனக்கு வரவில்லை, வந்ததெல்லாம்.. உறவினரிடமிருந்தே.//
பின்குறிப்பு
எனக்கு யாரிடமும் இருந்தும் மெயில் வர வில்லை
அதனால am ஹாப்பி happy...:)
இந்தப் பிரச்சினைக்கு!!!!!!!
ReplyDelete///
நல்ல கம்ப்யூட்டர் டாக்டரை பாக்கவும்
டொன் வொர்ரி
மேலே குறிப்"புட்டு" உள்ளபடி முகவரியை மாற்றிவிடுங்கள்
இதில் இன்னொன்று எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம், இதை 6 நபருக்கு 7 நாளைக்குள் அனுப்ப வேண்டும், இல்லையெனில் அது நடக்கும் இது நடக்கும்...etc..//
ReplyDeleteஹஹஹா அட எது எல்லாம் விட
நீங்க மில்லியனர் அப்படின்னு ஒரு மெயில் வரும் பாருங்க .
அதுதான் டாப்பு..
நீங்க முதலில்15% இருப்பு கட்டவேண்டும் பிறகு மீதி 85%தொகை அவர்கள் குடுப்பார்கள்..
//நாம் எம் நட்புவட்டத்துக்கு உதவியாக இருக்கிறோமோ இல்லையோ, உபத்திரவமில்லாமல் இருப்பது முக்கியம்.// ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க இமா.
ReplyDeleteநல்ல பகிர்வு.அனாமத்துக்களை உடனே அகற்றிவிடுவேன்..
ReplyDeleteஏஞ்சலின்,
ReplyDelete//கூகிள் மெயில் ஆக இருந்தால்// எந்த மெய்ல்லையும் இருக்குது இந்தப் பிரச்சினை. //வேண்டாத MAILS ஸ்பாம் செஞ்சுருங்க// ;)) இது அதையும் தாண்டிப் புனிதமானது. ;))) அந்த லிஸ்ட்ல இருக்கிற மிச்ச ஆட்கள்டது வருதே. ;) எப்பிடியும் என்ட ID மற்ற ஆட்களுக்குப் போறதை இனித் தடுக்க ஏலாது போல. ;))) இது 'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" ஸ்மைலி. ;)
//புதிய மெயில் அக்கவுன்ட் துவங்கி விடுங்கள்// அது எல்லாம் யோசிக்காமல் இருப்பமா? இருக்குது வேற. சரிவராது. இதை அழிக்க வேணும்; இமாவின் உலகைக் கைவிடவேணும்; விடட்டோ!
//நான் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.// நான் கதைக்கிறது வேற அதிரா. நீங்கள் சொல்றது எது எண்டு விளங்குது. //தெரியாதோர் மெயிலெல்லாம் உடனேயே டிலீட்தான்.// இங்க வாறதே இல்ல. இது அதையும் தாண்டிப் புனிதமானது. ;))) அறணை எறும்பு பிடிக்கிற மாதிரி வேலை. ;)))) பிடிக்கப் பிடிக்கப் புத்துக்க இருந்து புதுசு புதுசா வருது. ;)
ReplyDeleteகாலம்பிற எழும்பி முக்கியமான மெய்ல் இருக்கோ எண்டு பார்த்தால்... பாவம், என்னைப் போல 'கர்ர்' ஆகிறவங்கள் யாருக்கோ சொல்லுற 'கர்ர்' எனக்குச் சொல்லுற மாதிரி இருக்கும். ;) என்னையும் அந்தக் கூட்டத்தில ஒரு ஆள் என்றுதானே நினைப்பினம் என்றும் கோவமா இருக்கு. இதுதான் முழுவியலம். ;) பிறகு அந்தத் தாக்கத்தில நான் யாருக்கும் 'கர்ர்ர்' சொல்லீரக் கூடாது என்று கவனமா இருக்க வேணும். ;)
இப்ப மட்டும் நான் நினைக்கிற ஆள் எனக்கு முன்னால மாட்டினால் நேசம் எல்லாம் ஒரு சைட்ல கொஞ்ச நேரம் தள்ளி வச்சிட்டு கதிரைல இருத்தி ;) கோவமா 'நங் நங் நங்' என்று மூன்று செல்லக்குட்டு வச்சிட்டு பிறகு நேசமாகிருவன். ;)))
//இதை 6 நபருக்கு 7 நாளைக்குள் அனுப்ப வேண்டும்// அது பிரச்சினை இல்லை எனக்கு. எனக்குத்தான் நம்பிக்கையே இல்லையே. தெரிஞ்சு கொண்டே அனுப்பினால் க.கா.போ தான். அவங்களுக்குத்தான் நட்டம்; சங்கிலி முறியும். ;) அதே நேரம் 'வருமுன் காப்போம்.' என்று நேசமாக 'இப்பிடிச் செய்யாதைங்கோ' என்று சொல்லியும் விடுவன். இது ஏதோ அனுபவிக்க வேணும் எண்டு இருக்கு எனக்கு. ;)
//இதுவரை நட்புக்களிடமிருந்து, இப்படியான ஒரு மெயிலாயினும் எனக்கு வரவில்லை// எனக்கும்தான். ஒரு நல்ல உள்ளம் பயனுள்ள தகவல் என்று அனுப்பின ஒரு விஷயத்தில என் ஐடீ பலருக்கும் தெரிஞ்சதில வந்த சிரமம் இது. கிடைக்கிறது கொஞ்ச நேரம். இதில களைபிடுங்குற வேலை. நெட்டுக்கு ஒரு ரிலாக்சேஷன் என்று வந்து இப்ப டென்ஷனா இருக்கு. ;) வரவே பிடிக்கேல்ல. ஒரே 'கர்ர்' ஆக இருக்குது. ஒருக்கால் வெளிய கொட்டினால் சரியாகிருவன் எண்டு நினைச்சு இதையெல்லாம் எழுதியாச்சுது. ;)
//மேலே குறிப்"புட்டு" உள்ளபடி முகவரியை மாற்றிவிடுங்கள்// சிவா!!!!!! எனக்குத் தெரியாதா அது! காம்ப்ளான் குடிச்சுக் குடிச்சு... முன்னேறிட்டீங்க. ;)))))))
ReplyDelete//அனாமத்துக்களை உடனே அகற்றிவிடுவேன்.// நானும்தான் ஆசியா. ஆனால் இது அகற்ற இயலாத் தொந்தரவு. ;)) புற்றீசல். சமாளிக்கலாம்.
ReplyDeleteஅன்பிற்குரிய இமா அக்கா,
ReplyDeleteமுதலில் என்னை மன்னிக்கவும், என்னால் தானே இப்படியான தவறு நிகழ்ந்தது.
சே...ஆர்வக்கோளாறில் உங்கள் மின்னஞ்சலையும் சேர்த்து அனுப்பி,
உங்கள் காலை வேளையின் தொடக்க நாளிகையினையும் அல்லவா வீணடிக்கும் படி செய்து விட்டேன்,
சிறியோர்கள் தவறு செய்தால், பெரியோர்கள் பொறுத்தருள்வது இயல்பு தானே.
என்னை மன்னித்தருளவும்.
இன்னோர் பணிவான வேண்டுகோள்.
அவ்வாறு மின்னஞ்சல் அனுப்புவோரிடம், உங்கள் மெயில் முகவரியினை இணைத்து அனுப்ப வேண்டாம் என்று ஒரு மெயில் அனுப்ப முடியாதா?
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, நம்மால் பிறருக்கு தெரிந்தோ தெரியாமலோ எந்த விதத்திலும் தொல்லை தராமல் இருப்போம், இனிமேலாவது.
நல்லதொரு பதிவு கொடுத்து, வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்ட தங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. எல்லோருக்குமே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
vgk
இதற்காக உங்களுக்கு ஏன் டென்ஷன்!! பேசாமல் இருந்து விடுங்கள். அவர்களாகவே அனுப்புவதை நிறுத்திக் கொள்வார்கள்.
ReplyDeletecorrecta sollenga...
ReplyDeleteAdding the maildids to CC or BCC is a good way to send when they send mails in chain order...But many people don't do it...
;) நான் ஏதாவது சொன்னனா நிரூ?? ;) தொப்பி அளவெண்டு எடுத்துத் தலையில மாட்டினால் நான் ஒண்டும் செய்யேலாது. ;)
ReplyDelete//என்னால் தானே..// அதுசரி. ;) வேற ஒருவரும் இப்பிடி அனுப்பமாட்டினமே!
என்னை //பெரியோர்கள்// லிஸ்ட்ல சேர்த்ததுக்கு தாங்ஸ்ஸ்ஸ். ;)) பொறுத்தாச்சுது. மன்னிச்சாச்சுது. பறவாயில்ல நிரூபன். இதிலயும் ஒரு லாபம் இருக்கு. எல்லாம் ஒரு பாடம்தான்; அனுபவம்தான். இதை வாசிக்கிறவங்கள் கவனமா இருப்பினம்.
ஒண்டு மட்டும் சொல்லுறன்... ;) இது தொடர்பாக 'இமாக்கா' 'டிங் டிங்' எண்டு 'நாற்று' பக்கம் ஏதாவது எழுதினீங்கள் எண்டு வையுங்கோ.. ;)) பிறகு கண்ணக்கட்டிக் கோவம்தான். ;))) இதோட விட்டுவிட வேணும். இனி நானே பார்த்துக் கொள்ளுறன்.
ஐயோ...
ReplyDeleteஇமா அக்கா,
நான் நாற்றில் அப்படி ஏதும் எழுத மாட்டேன்,
என்னாலும் இப்படி ஓர் சங்கடம் உங்களுக்கு வந்திச்சு அதான் இவ் இடத்தில் நான் விட்ட தவறினையும் சொன்னேன்.
ஹா...ஹா...
சீரியஸ் ஆகிட்டீங்க போல இருக்கே
//அவ்வாறு மின்னஞ்சல் அனுப்புவோரிடம், உங்கள் மெயில் முகவரியினை இணைத்து அனுப்ப வேண்டாம் என்று ஒரு மெயில் அனுப்ப முடியாதா?//
ReplyDeleteமாட்டேன். முன்பே நன்கு யோசித்து... வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
எனக்கு அனுப்பினால்... ஸ்பாம்.
எனக்கு அனுப்பாமல் வந்தால்... அமைதி.
பாதிக்கப்பட்டது நான் மட்டும் இல்லையே. நானும் சிலருக்கு மனஉளைச்சலைக் கொடுப்பவளாக இருக்கவிரும்பவில்லை.
//இதற்காக உங்களுக்கு ஏன் டென்ஷன்!!// ;) கடைசில ஒரு பழமொழி போட்டிருக்கிறன், வாசிக்கேல்லயா அப்துல் காதர்! ;)
ReplyDelete//பேசாமல் இருந்து விடுங்கள்.// அவங்களோட பேசாமல்தான் இருக்கிறன். //அவர்களாகவே அனுப்புவதை நிறுத்திக் கொள்வார்கள்.// அப்பிடித்தான் நானும் நம்பிக் கொண்டு இருக்கிறன்.
//Adding the mail ids to CC// !!!! இம்முறையில் ID தெரியும் கீதா.
ReplyDeleteஇதை அழிக்க வேணும்; இமாவின் உலகைக் கைவிடவேணும்; விடட்டோ!//
ReplyDeleteno !!!no!!no!!!
இந்த ஏழு நபருக்கு அனுப்புங்கள் மற்றும் மில்லியனர் ஆக வேண்டுமா ரோலக்ஸ் வாச் என்று பல மெயில் வரும் நான் சப்ஜக்ட் பார்த்தே ஓபன் செய்யாமல் டிலீட் செய்து விடுவேன் .
ReplyDeletevgk Sir,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. :-)
பலமுறை சிந்தித்து எழுதிய இடுகை இது. யார் மனதையும் நோகடித்துவிடக் கூடாதே என்கிற பயம் ஒன்று இருந்தது. :-)
//no !!!no!!no!!!// ;) மீயும் நோ ஏஞ்சல். ;)
ReplyDeleteநீங்க இதற்கு ஏதாவது மாற்றுவழி இருக்கா எனப்பாருங்க. அதற்காக இணையத்தை
ReplyDeleteவிடவேண்டாம்.இது எங்களுக்கும் ஒரு பாடம்.நீங்க இதை பகிர்ந்தது நல்லதொரு
விடயம். நன்றி.
ஒரு பெரிய கமெண்ட் இதுக்கு எழுதினேன். கூகிளார் கோச்சுகிட்டு அதை குழப்படியாக்கிட்டார். மறூபடி டைப் பண்ண சோம்பல். ஆனாலும், என் ஆதரவைத் தெரிவிச்சுக்கணும்னு இந்தப் பின்னூட்டம்!! (பாதிப்பு அப்படி - எனக்கும்!!)
ReplyDelete'ஆதரவுக்கு' நன்றி ஹுசைனம்மா. ;)
ReplyDeleteஆறுதலாவும் இருக்கு... நான் தனியாக இல்லை என்றுதான். ;)
தாங்ஸ் அம்முலு. ;)
மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
ReplyDeleteநன்றி
தாங்கள் கூறும் வழிமுறைகளைப் முயற்சித்துப் பார்க்கிறேன்