Friday 13 January 2012

வலையுலக உறவுகளுக்கு நன்றி ;)

Have a feast! ;)


வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எங்கும் என் பிறந்ததேதியை வெளியிட்டதில்லை. ஆனாலும் சிலர் எப்படியாவது மோப்பம் பிடித்துவிடுகிறார்கள். ;) சென்ற வருடம் 'அமைதியாக இருக்கவேண்டும்,' என்று சிவாவை எச்சரித்திருந்தேன். இம்முறை வேலைப்பழு... மறந்துவிட்டது. என்னிடம் திருத்ததிற்காக வந்திருந்த இடுகையை அவசரமாக ஒரு பார்வை பார்த்துத் திருத்தி அனுப்பிய பின்பும்.... "எடிட் பண்ணிட்டுப் போடுறேன்," என்று சிவா சொன்னதன் கருத்து இதுதான் என்று இடுகை வெளியானதும்தான் புரிந்தது. ;))

வேண்டாம் என்று தோன்றினாலும்... சந்தோஷமாக இருந்தது / இருந்தேன் என்பதை மறுக்கமாட்டேன். ;)
  • 'என் பக்கம்' முகப்பில் பளபள பட்டாம்பூச்சியும் அழகு தங்க ரோஜாச்செண்டுமாக வாழ்த்திட்டு மகிழ்வித்த அன்புத்தோழி அதிரா
  • அதிகாலை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தி மகிழ்வித்த வலையுலகத்தோழி அம்முலு
  • 'டிஸ்கி' போட்டு வலையுலகுக்கெல்லாம் என் பிறந்தநாளை பறைசாற்றி வைத்த செல்லக்குட்டி சிவா ;) & அங்கு வாழ்த்தியோர்
  • ARUSUVAI-யில் அமைதியாகப் பதிவிட்டு வாழ்த்திய மயில்
  • நிலாவுக்கு உதவியாக இருந்ததுபோலவே... எப்போதும் ரகசியமாக எனக்கும் உதவியாக இருந்து ஆலோசனைகள் உ(கு)ரைக்கும் ஜீனோ ;)
  • தொலைவிலிருந்தாலும் மறவாமல் நினைவு வைத்து வாழ்த்துச் சொன்ன அன்புமகன் அருண்
  • கருத்துப் பெட்டியில் வாழ்த்துரைத்தோர்
  • 1,2,3 சொல்லி வாழ்த்தியவர்கள் - முக்கியமாக VGK அண்ணா
  • மின்னஞ்சலில் வாழ்த்தியோர்
  • முகப்புத்தகத்தின் மூலம் அமைதியாக வாழ்த்தியோர்
  • வேறு யாரையாவது விட்டிருந்தால்.... (அவர்கள் அது தற்செயலாக நிகழ்ந்தது மட்டுமே, என்று கொள்ளுமாறு வேண்டி....)
அன்பு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
_()_




ஃபோட்டோக்கள் எவையும் நான் எடுத்தவை அல்ல. 

27 comments:

  1. ஹை..நாந்தான் ஃபஸ்டூஊஊ :-))))

    ReplyDelete
  2. முதல்ல காரத்திலிருந்து ஆரம்பிச்சு ஸ்வீட்டில முடிக்கலாம் ... ஆப்பம் ...

    ஆ.....பர்த்டே சமையல் ஆப்பம் .....
    நூடுல்ஸும் ...பிரமாதம் ....
    இந்த போட்டோ மட்டும் போதும் ..ஹா..ஹா..ஹா...

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!! இன்று போல் என்றும் வாழ்க :-)

    ReplyDelete
  4. ;))) பாட்டு நல்லாருக்கு மருமகனே. ;) ஒரு நிமிஷம் கண்ணை மூடி... அந்த பாட்டு செட்டப்ல... ஜெய் முகத்தை வச்சு கற்பனை பண்ணிப் பார்த்தேன். ஹிக்! முடீ..யல. ;))))

    //நூடுல்ஸும்// !! [_00_] ;) சீனிச்சம்பல்!! ம்.
    பிட்டு, வட்டிலப்பம் எல்லாம் செய்தேன். படத்துல காணோம், எடுத்தது நான் இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. முழுசா விழுங்கியதால முட்டை தொண்டையில அடைச்சிகிட்டதால மீதி பாட்டு மிஸ்ஸிங்...மத்தது கண்ணுக்கு தெரியல :-))

      Delete
  5. நல்ல பகிர்வு.கேக் ஊட்டுவது செபா அம்மாவிற்கா?வாவ் ! எம்மி ஃபுட்ஸ்.

    ReplyDelete
  6. செபா ஆன்டியை இப்ப தான் பாக்குறேன்...

    வாழ்த்துக்கள் இமா

    ReplyDelete
  7. இமாம்மா, எனக்கு இந்த போட்டோ ரொம்ப பிடிச்சிருக்கு. உணர்வுபூர்வமா இருக்கு.

    ReplyDelete
  8. டீச்சர் தங்களுக்கு இச் சிறியேனின் இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

    ReplyDelete
  9. மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா. படங்களை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. செபா ஆண்ட்டி தானே பக்கஹ்தில்... உங்களை போலவே இருக்காங்க. அறுசுவையில் வாழ்த்துக்களை பார்க்கலயோன்னு வருத்தப்பாட்டேன்... பார்த்தீங்கன்னது மகிழ்ச்சியா இருக்கு :) அழகு... கேக்கும் கேக் வெட்டும் இமாவும். - வனிதா

    ReplyDelete
  10. மன்னிக்கவும் எனது பிந்திய பிறந்த நாள்வாழ்த்துக்கள்

    .......என்றும் வேண்டிய யாவும் கிடைத்து வாழ்க

    ReplyDelete
  11. //இன்று போல் என்றும்// ;) தாங்க்யூ.
    //முட்டை// ம்... சூப்பர் கண் ஜெய். ;)

    ReplyDelete
  12. பதிலுக்கு நன்றி ஆசியா, ஆமினா, நிரூ (சிறியேனா!! ;) ) நிலா & all for good - அறுசுவை உறுப்பினர் என்று மட்டும் புரிகிறது; பெயர் தெரியவில்லை!

    ReplyDelete
  13. மிக்க நன்றி வனி.

    //செபா ஆண்ட்டி தானே// ம். ;)

    //அறுசுவையில் வாழ்த்து// !!!
    நான் சென்றிருந்த நேரங்களில் கண்ணில் படவே இல்லையே!! நேற்றுத்தான் என் கைவினைக் குறிப்பின் கீழ் பதில் கொடுக்க முடிந்தது. அப்போதும் எதையும் காணவில்லை. கண்டிருந்தால் நிச்சயம் பதில் சொல்லி இருப்பேன். இப்போ உடனே போய்ப் பார்க்கிறேன். அறியத்தந்தமைக்கு நன்றி. நான் இங்கு குறிப்பிட்டிருப்பது வேறு, 'அறுசுவை' அல்ல, 'ARUSUVAI' ;)

    //அழகு... கேக்// நன்றி வனி. குறிப்பு அனுப்பலாம் என்று நினைத்தேன், படம் எடுக்க உதவிக்கு ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. நானே எடுக்கிறேன் என்று காமராவைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ;(

    ReplyDelete
  14. கண்டுபிடிக்க இயலவில்லையே வனி!! எந்த இழை? லிங்க் கொடுக்க இயலுமா??

    ReplyDelete
  15. பிறந்தநாளுக்கு வாழ்த்த முடியவில்லை என்றாலும் பறக்கு நாளெல்லாம் பிறந்த நாட்களே என்றெண்ணி இன்று வாழ்த்த வந்திருக்கும் என் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்,
    வாழ்வில்
    என்றும்
    வளமாய்
    நலமாய்
    மகிழ்வாய்
    வாழ
    அன்புடன் வாழ்த்துகிறேன்...
    பிறந்தநாளை சொன்னால் அனைவருக்குமே கேக் பார்சல் அனுப்ப வேண்டுமே என்று பிறந்தநாளை குறிப்பிடாமல் இருக்கும் கஞ்சூஸ் இமா... இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க...

    ReplyDelete
  16. இன்னிக்குதான் நிதானமா;) இந்தப்பக்கம் வந்திருக்கேன். விருந்து சூப்பரு!:P

    உருண்டை கட்லட் சைவக்கட்லட் தானே? அது ஒரு அரை டஸன்,ஆப்பம் +ஆனியன் கறி 6செட்,அவிச்சுப் பொரிச்ச முட்டை 2, அப்புறம் ஃபாயில் பேப்பர் போட்டு எதோ ஒண்ணு ஒளிச்சு;) வைச்சிருக்கீங்களே அதும் சேர்த்து பேக் பண்ணிக்குங்க. அந்த கேக்கை கட் பண்ணி ஒரு துன்டு எல்லாம் தந்தா நல்லால்ல,அதனால திராட்சைக்கொத்தும் இலையும் கசங்காம அயகா:) pack பண்ணி எடுத்துகிட்டு நியூஸீ. ஏர்போர்ட் வந்துருங்க,நாங்க இதோ வந்துட்டேஏஏஏஏஏ இருக்கோம்!:)

    கடைசி படம் பார்க்க கொஞ்சூண்டு(!) பொறாமையா இருக்குது! :D

    ReplyDelete
  17. 1. வனி த்ரெட் கண்டுபிடிச்சு தாங்க் பண்ணியாச்சு. ;)

    2. நன்றி தவமணி. என் பிறந்தநாள் அன்றைக்கு ஒவ்வொரு வருஷமும் பிஸியா இருப்பீங்க. லேட்டாவே வந்து வாழ்த்துங்க, வெய்ட் பண்ணுவேன். ஆனா... //கஞ்சூஸ் இமா...// சொன்னதுக்கு கர்ர் ;) இன்னும் 4 வருஷம் கழிச்சு உங்களுக்கு பழிவாங்கல் இருக்கு. ;)

    3. மஹி... //ஃபாயில் பேப்பர் போட்டு எதோ ஒண்ணு ஒளிச்சு// ம்.. குளாய்ப்பிட்டு ;) காயாம இருக்கட்டும்னு.. ;)
    //திராட்சைக்கொத்தும் இலையும்// அது ப்ளாஸ்டிக்னு தான் நிறையப் பேர் நினைச்சுட்டிருக்காங்க மகி. நீங்களாச்சும் சாப்பிடக் கேட்டீங்களே. அப்பா! மனசு நிறைஞ்சு போச்சு. ;)
    //நியூஸீ. ஏர்போர்ட்// எதூ!! Auckland! Christchurch! Wellington!
    //நாங்க இதோ வந்துட்டேஏஏஏஏஏ இருக்கோம்!:)// haa!! எப்போ வரீங்க! சொல்லாம வந்துட்டுப் போனா டூ விட்டுருவேன். ம். ஏர்போர்ட் வரேன், பார்சல் தரமாட்டேன். வீட்ட வந்துதான் சாப்பிடணும் நீங்க. திருவாளர்ட்ட சொல்லி வைங்க, இமா வீட்ல முழுப்பேர் சொன்னாத்தான் ஏன்னு கேட்கணும்னு. ;)))

    ம்... புரியுது.

    ReplyDelete
  18. avvv mee romba late...happy birthday to you..and advance happy birthday 2013 also..

    ReplyDelete
    Replies
    1. ;) இந்த போஸ்ட் போடக் காரணமே சிவாதான். இல்லாவிட்டால் அமைதியாக இருந்திருப்பேன். லேட் இல்லை சிவா. நீங்கதான் எல்லாம் பப்ளிக் ஆக்கிட்டு மன்னை போய் ஹாயா இருந்துட்டீங்க. ;)))) அட்வான்ஸ் விஷஸ்!! ஹ்ம்! குழப்படி. ;))

      Delete
  19. super a erukku.............imma

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;)
      யார்ப்பா இது! என் பேர் போட்டுட்டு வரது!! அறுசுவைல இருக்கிற இன்னொரு இமாவா? இல்ல... சக்தி!!

      Delete
  20. super a erukku

    ReplyDelete
  21. மிகவும் அருமை பாக்கும் போதே நாக்கில் எச்சில் ஊருது

    ReplyDelete
  22. சக்தி... ;))))))) வேற பேரே கிடைக்கலயா!! குழப்படி! ;)

    ReplyDelete
  23. இமா!... பார்க்கும்போது கண்கள் குளமாகியது.

    நான் நானாக இல்லாதிருந்த சமயம் உங்கள் பதிவு இங்கு வந்திருக்கிறது. எதையும் கவனிக்கவில்லை.

    என் அம்மா மிகுந்த நோயோடு போராடிய நேரம் அது...:(

    கண்ணுக்குக் குளிர்ச்சி! மனநிறைவு தரும் பதிவு இமா!

    என்றென்றும் என் அன்பு வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு!

    மன்னிப்புக் கோரி பதிவை அங்கு இணைத்தமைக்கும் நன்றி கூறுகிறேன்!

    வாழ்த்துக்கள் என்றென்றும் உம்மோடு!

    ReplyDelete
  24. Wonderful birthday party memories Imma.
    Amazing food preparation :) Tempting too :-)
    You look exactly like Seba Aunty :))
    Where was your dad ?
    I love that cake deco, especially the golden grapes

    I pray God to bless you with many more healthy years ahead :)
    Stay Blessed

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா