Sunday 14 July 2013

ஃபீஜோவா தயாரிப்புகள்

ஒரு வகையில் இரு வகைகளில் தொடர் பதிவு இது. ;))

1. என் வீட்டுத் தயாரிப்பு; ஃபீஜோவா வரிசையில் அடுத்து வருகிறது.
2. ஸாதிகாவின் கண்டுபிடியுங்கள்!! இடுகையையுடன் சிறிது தொடர்பு உள்ளது. 

இடுகையைத் தயார் செய்துவிட்டுப் பார்த்தால் ஸாதிகாவின் இடுகை வெளியாகி இருந்தது. ;) அவர்கள் பதில் சொல்லும் வரை என்னுடையதைப் பின்போட்டேன்.

ஃபீஜோவா ரோல் அப்
 
நன்கு கனிந்த ஃபீஜோவா பழங்களின் சதைப்பகுதியைச் சுரண்டி, சிறிது பழுப்புச்சீனி & கறுவாத்தூள் சேர்த்து 'லெதர் ரோல் அப்' ஆக்கி பாக்கட் செய்து வைத்திருக்கிறேன்.

வாழைப்பழம், ஆப்பிள் போலவே ஃபீஜோவாவும் காற்றுப் பட்டால் கறுத்துவிடும். அந்த நிறமும் சீனி, கறுவா நிறமும் சேர்ந்த நிறம் இது.

கலவையை டீஹைட்ரேட்டர் தட்டில் ஊற்றி, பிரிக்க முடியும் அளவு உலர்ந்ததும் பிரித்து, வெயில் கிடைத்த போது வெயிலிலும் மீதி அவணிலுமாக உலரவைத்தேன்.

'ரோல் அப்' இனிப்பும் புளிப்புமாக நன்றாக இருக்கிறது. இப்போ ஃபீஜோவா காலம் முடிந்துவிட்டாலும் என்னால் சுவைக்க முடிகிறது.
 
கடிக்கும் பதத்தில் இருந்த பழங்களில் வற்றல் போட்டேன். சுவையில் நேத்திரங்காய் சிப்ஸிற்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

19 comments:

 1. ஃபீஜோவா ரோல் அப் பார்த்ததுமே எடுத்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.உங்கள் ஊர் பனம்பழம் பினாட்டு ஞாபகம் வருது.சிப்ஸும் சூப்பர்.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது ஒரு பார்சல் பிளீஸ்.:)

  ReplyDelete
  Replies
  1. பனாட்டு இப்ப உள்ள ஃரூட் ரோல் அப் எல்லாத்துக்கும் முன்னோடி. எவ்வளவு காலமா இருக்கு!

   அடுத்த முறை இந்தியா!!! ம்.. அடுத்த சீசனுக்கு பார்சல் பண்றேன். இப்ப இருக்கிறது குறைவா இருக்கு. சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் ஆகிரும். ;)

   Delete
 2. என்னுடைய இடுகை வரும் வரை பொறுமை காத்திருந்ததற்கு மிக்க நன்றி தோழியே.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்.. நோன்பு காலம், குழப்பிட்டேன். சாரி. ;(

   Delete
 3. இதைப்பார்க்கும் முன்னரே பதிவை படித்து கருத்தும் சொல்லிட்டேன்:)

  ReplyDelete
  Replies
  1. இது 'அங்க' வரவேண்டிய கருத்தா ஸாதிகா! ;)

   Delete
 4. இந்த பழத்தினை பார்த்தால் எங்க ஊர் கொய்யா போல் உள்ளதே.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், செபா பாஷையில் சொன்னால்... கொய்யாப்பழத்தின் சக்களத்தி. ;)))

   Delete
 5. இந்தக் காயை (பெயர் நினைவில்லை) எங்கள் ஊர் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் ஒரு தடவை வாங்கியதோடு சரி.பார்க்க கொய்யா மாதிரியே இருந்தது.ஆனால் நல்ல புளிப்பு.அதன் பிறகு ஃப்ரீ சாம்ப்ளில் ஒரு துண்டு எடுப்பதோடு சரி.இனி இந்தக்காயை அங்கு பார்த்தால் உங்க ஃபீஜோவா ரோல் அப்பும், வற்றலும் நினைவுக்கு வரும்.

  ReplyDelete
  Replies
  1. ஃபீஜோலாவா!

   //நல்ல புளிப்பு// நிறைய வகை இருக்கு. நான் வளர்க்கிறது இரண்டும் இனிப்பான வகைகள்.

   Delete
 6. வற்றல் சூப்பரா இருக்கு...!

  ஃபீஜோவா - நம்மூரில் என்ன பெயர்...?

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் கொய்யா!! ;)

   கையைக் கொடுங்க தனபாலன். உங்களுக்கு ஒரு பெரிய தாங்க்ஸ். உங்களுக்காக தேடப் போய் கிடைத்த விபரம்... இந்தியாலயும் பெயர் ஃபீஜோவாதான். வளரும் இடங்கள் - கோடைக்கானல், நீலகிரி, உத்தரப்பிரதேசம், பீகார். ஆதாரம் - http://theindianvegan.blogspot.co.nz/2012/10/all-about-feijoa.html

   Delete
 7. ச்சீ...ச்சீ...இந்தப் பயம்;) புளிக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்! :))))) [இதுவரை பார்த்தே இராத, இனிமேல் (இப்போதைக்கு) பார்க்கவும் இயலாத ஒரு காய்&பழத்தை வைத்து ரெசிப்பி வேறு போட்டால் என்னதான் கருத்து சொல்றது போங்க!! ;)))))]

  //இந்தக் காயை (பெயர் நினைவில்லை) எங்கள் ஊர் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் ஒரு தடவை // சித்ராக்கா, உங்கூருல இதுவும் கிடைக்குதா? அவ்வ்வ்வ்வ்! எனக்கு இங்கே ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் பாத்த மாதிரியே இல்லை! ஒருவேளை சீஸனல் காயாக இருக்குமோ என்னமோ!

  ReplyDelete
  Replies
  1. சீசனல் காய்தான். அங்கு கிடைக்கும் நிச்சயம். விளைச்சல்ல முதல் இடத்துல இருக்கிறது நியூசியும் பிரேஸிலுமாம். சட்டென்று கனிந்துவிடும் என்பதால் அனேகம் பயிராகும் இடத்திலிருந்து தூர இடங்களுக்கு விற்பனைக்கு எடுத்துப் போக மாட்டார்கள்.

   Delete
  2. "ச்சீ...ச்சீ...இந்தப் பயம்;) புளிக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்! :)))))"______ உண்மைதான் மகி.இனிப்பைவிட புளிப்புதான் அதிகமாகத் தெரிந்தது.கொய்யா மாதிரியே இருக்கவும் ஒருவேளை இது 'இந்த ஊர் கொய்யா'வோ என வாங்கினேன்.

   இதையும் ஒருசிலர் பை நிறைய வாங்கிட்டு போறாங்க.ஒருவேளை இதுமாதிரி 'ஃபீஜோவா ரோல் அப்' செய்வாங்களோ என்னவோ!

   Delete
  3. //புளிப்புதான் அதிகமாகத் தெரிந்தது.//
   தப்பான சாம்பிள் கிடைச்சிருக்கு உங்களுக்கு.
   //பை நிறைய// ஆமாம், சாப்பிட ஆரம்பிச்சா சாப்பிட்டுட்டே இருக்கலாம். அவ்ளோ ருசி இது. ரோல் அப், சிப்ஸ் எல்லாம் நான் சும்மா பண்ணினது. பழமா இருந்தா ப்ளேட் ப்ளேட்டா சாப்பிடுவேன். ;)

   Delete
  4. அடுத்த தடவை மார்க்கெட்டில் பார்த்தால்_____ ("சாப்பிட ஆரம்பிச்சா சாப்பிட்டுட்டே இருக்கலாம். அவ்ளோ ருசி இது")_____இதை நம்பி வாங்கிவிடுகிறேன்.

   Delete

 8. வணக்கம்!

  சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்

  திண்டுக்கல் கொய்யா!

  சுவையான பதிகள்!
  இயந்திர வேகத்தில் இயங்கும் எனக்கும்
  இனிப்பை அளித்தது!

  உங்கள் எழுத்தில் மனமொன்றி
  உவந்து படித்தேன்! உண்மையிலே
  எங்கள் எழுத்தை வெல்லுகிற
  ஏற்றம் கண்டு வியக்கின்றேன்!
  பொங்கல் இனிக்கும்! இமாஇங்குப்
  போடும் இடுகை மிகஇனிக்கும்!
  திங்கள் ஒளிபோல் உன்னாக்கம்
  திசைகள் யாவும் பரவுகவே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

 9. வணக்கம்!

  உங்கள் எழுத்தில் மனமொன்றி
  உவந்து படித்தேன்! உண்மையிலே
  எங்கள் எழுத்தை வெல்லுகிற
  ஏற்றம் கண்டு வியக்கின்றேன்!
  பொங்கல் இனிமை! இமாஇங்குப்
  போடும் இடுகை மிகஇனிமை!
  திங்கள் ஒளிபோல் உன்னாக்கம்
  திசைகள் யாவும் பரவுகவே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா