Thursday 18 July 2013

அரளி காத்த இமா!

செந்தீயின் நாப்போல செழுந்தளிர்கள் ஈன்று
திருமாலின் நிறம் போலப் பசிய தளை பொதுளி
மங்காத நெடுந்தெருப் போல கிளைகள் பல ஓச்சி
நடுக் காட்டில் ஓர் இலவம் மரம் வளர்ந்ததன்றே! (றேயா றோவா!! யாரவது சொல்லுங்க.) ;))
மஞ்சு தொட வளர்ந்த அந்த இலவமரமதனில்
மரகத மாமணி போலப் பசுமை நிறம் வாய்ந்த
கொஞ்சு மொழிக் கிஞ்சுக வாய் அஞ்சுகம் ஒன்றினிதே
குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்ததன்றே!

கர்ர்ர்... மீதிப் பாடல் நினைப்பு வர மாட்டேன் என்கிறது. தெரிந்தவர்கள், மேலே உள்ள வரிகளில் பிழை இருந்தால் சொல்லுங்கள். அப்படியே மீதியையும் சொல்லி உதவுங்கள்.

சித்ராசுந்தரின் பொழுதுபோக்குப் பக்கங்கள் - அரளிப் பூ / பட்டிப் பூ என்று ஒரு இடுகை. அதன் கீழ் கருத்துகளில் 
//சிலர் கோபத்தில் அரளி விதையை..... /// 
//அது வேறு இது வேறு.// 
//பொன்னரளி// அது இது என்று பேசிக் கொண்டு இருந்தோம். இப்போதும் இருக்கிறோம். 

காலையில் அது நினைப்பு வர என் செடியில் உள்ள காய்கள் பழுத்திருக்கிறதா என்று போய்ப் பார்த்தால்.... ஐயஹோ!! என்ன கொடுமை இது! 
இ.கா.கி ஆனேனா நான்! ;((
காற்று ஜோ... (பன்னர்கட்டா ஜோ இல்லை இது.) என்று வீச, மரம் தலையை ஆட்டு ஆட்டு என்று ஆட்ட, ஹாயாக காயிலிருந்து ஒவ்வொரு வித்தாகக் கழன்று, சுழன்று, கொக்கு பறபற, கோழி பறபற மயிலே பறபற, அரளியே பற... என்று பறந்துகொண்டிருந்தது.
ஓடிப்போய் காமராவை எடுத்து வந்தால், சுட முடியாமல் காற்று செடியை அசைத்தது.
ஒரு வழியாக படம் எடுத்து... காயையும் கவர்ந்தாயிற்று.
காய் / கனி
காய்ந்த கனி
குட்டி பாரசூட்... நட்டுப் பார்க்க வேண்டும்.
பூக்கள் - படம் கண்ணில் படமாட்டேன் என்கிறது. கிடைக்கும் போது இங்கு சொருகி விடுகிறேன்.

நன்றி _()_

25 comments:

  1. haaaah! seeing this just now! :)))

    ReplyDelete
    Replies
    1. நேற்றே போட்டிருப்பேன். பூக்கள் படம் தேடித் தேடிக் களைத்து இன்று அது இல்லாமலே போட்டாயிற்று. ;(

      Delete
  2. என்ன கலர் அரளி வைச்சிருக்கீங்க இமா? காய் கனி அளவுக்கெல்லாம் சாதா அரளிய நான் கவனிச்சதில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. மென்சிவப்பு &... கடும் மென்சிவப்பு. ;))
      வெள்ளை நட்டேன், வரவில்லை. பின்வீட்டு வேலியில் இருக்க வேண்டும். கேட்டுப் பார்க்க வேண்டும்.

      Delete
  3. உங்கட பாட்டு இப்பதான் கேள்விப்படறேன். ஸோ பிழைதிருத்தமெல்லாம் நோ வே! பாடல் நன்றாக உள்ளது!

    ReplyDelete
    Replies
    1. என் பாட்டு! எ.கொ.ம.இ!! ;))

      அதிரா வந்தால் மிச்சப் பாட்டு சொல்லுவா. இளமதி, ப்ரியாவுக்கும் தெரிஞ்சிருக்கும். அது நாலாம் வகுப்பு தமிழ்மலரில இருந்த இலவு காத்த கிளி பாட்டு. ;) யார் எழுதினது என்றும் மறந்து போனன். ;( பார்ப்போம்.

      Delete
  4. நன்றி, நன்றி, நன்றி தனபாலன். :-)

    ReplyDelete
  5. அரளியின் ஆவலில் அற்புத வார்ப்பு
    பிரளி இமாதரும் ஈர்ப்பு!

    அருமையான பதிவு இமா!

    // இளமதி, ப்ரியாவுக்கும் தெரிஞ்சிருக்கும். அது நாலாம் வகுப்பு தமிழ்மலரில இருந்த இலவு காத்த கிளி பாட்டு//
    நாலாம் வகுப்புப் பாட்டாஆஆஆ விளங்கிடும்...:)
    கவி படிச்ச ஞாபகம் மட்டும்தான் இப்ப இருக்கு. நல்ல பாட்டு அது. எல்லாம் போச்சு...:(

    அழகிய பதிவு. ரசித்தேன். வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
    Replies
    1. ம் ம் பிரளி எண்டுறீங்கள் இமாவை ;)))

      இன்னும் ரெண்டு பேர் இருக்கிறாங்கள். லேட்டா வந்தாலும் சொல்லுவாங்கள் எண்டு நினைக்கிறன்.

      நன்றி இளமதி.

      Delete
  6. எங்கள் வீட்டு செடியிலும் காய்த்திருக்கிறது! விதை இல்லாத செடி என்று நினைத்திருந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. போன வருடம் தான் செடியில் முதல் முறையாக காய்களை அவதானித்தேன். பிறகு காய்ந்த கோதுகள்தான் கண்ணில் பட்டது. இம்முறை கொஞ்சம் அதிகமாகக் காய்த்திருக்கிறது. சரியான சந்தர்ப்பத்தில் சித்ரா அவர்களின் இடுகையும் வர, சில காய்களை சேமிக்க முடிந்திருக்கிறது. நட்டுப் பார்க்கப் போகிறேன். :-)

      வருகைக்கு என் அன்பு நன்றிகள் சுரேஷ்.

      Delete
  7. "கொக்கு பறபற, கோழி பறபற மயிலே பறபற, அரளியே பற... என்று பறந்துகொண்டிருந்தது"______அது தானா பறக்கற வரைக்கும் விட்டு வைத்திருக்க மாட்டேன். நானே ஊதி விட்டிருப்பேன். நல்லா பொழுது போகும், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்றும் சொல்லாதவரை.

    இலவங்காயின் பஞ்சைக்கூட விட்டு வச்சதில்லன்னா பாத்துக்கோங்க‌.

    ReplyDelete
  8. "கொக்கு பறபற, கோழி பறபற மயிலே பறபற, அரளியே பற... என்று பறந்துகொண்டிருந்தது"______அது தானா பறக்கற வரைக்கும் விட்டு வைத்திருக்க மாட்டேன். நானே ஊதி விட்டிருப்பேன். நல்லா பொழுது போகும், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்றும் சொல்லாதவரை.

    இலவங்காயின் பஞ்சைக்கூட விட்டு வச்சதில்லன்னா பாத்துக்கோங்க‌.

    ReplyDelete
    Replies
    1. //நானே ஊதி// ;)) எனக்கும் பிடிக்கும். இதுவே பயந்து பயந்து பண்ணினது, எங்க ஸ்டூல் காலை வாரி விட்டுருமோன்னு. ;))

      Delete
  9. இங்கு காய், கனியெல்லாம் வரவிடுவதில்லை.அதற்குள் ட்ரிம் பண்ணி விடுகிறார்கள்.ஆனாலும் ஒன்றிரண்டு இல்லாமலா போய்விடும். இனி கவனிக்க வேண்டும்.

    அரளிவிதைன்னா பெரிய கொட்டை மாதிரி இருக்கும்னு நெனச்சேன்.காய்ந்த கனிகளைப் பார்ப்பதற்கு குட்டிகுட்டி porcupines கூட்டமாக ஓடுவதுபோல் உள்ளது.படங்கள் எல்லாம் 'பளிச்'னு வந்திருக்கு. கோடையில் பூக்களை படம் எடுத்து போடுங்கோ.

    ம்ம்...இந்தப் பாடலை படித்ததாகவே நினைவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //அரளிவிதைன்னா பெரிய கொட்டை மாதிரி இருக்கும்// அதேதான். அது பொன்னரளி.

      இது உங்க வீட்ல இருக்கிற பிங்க் அரளிஸ்.

      Delete
  10. அரளி காய்த்துப் பார்த்திருக்கிறேன். காய்ந்துவெடித்துப் பார்த்ததில்லை. இமா உபயத்தால் பார்த்தாயிற்று. நன்றி இமா. தலைப்பு அருமை. வாசிக்கும்போதே சிரிப்பு வருகிறது.

    ReplyDelete
  11. குட்டி பாரசூட்ஸ்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :))

    ReplyDelete
  12. அரளியே .....பற..........பற....:) இமாக்கு ரொம்ப பிடிக்கும்போலும்.
    ரசனை.

    ReplyDelete
  13. ஹைய்யோ.. ஜூப்பராயிருக்கு இலவம் பாராசூட்.

    ReplyDelete
  14. பாராசூட் உவமை :)) ரசித்தேன்

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா