காலையில் கோவிலுக்குக் கிளம்பும் அவசரத்தில் கண்ணாடியை எடுக்க மறந்து போனேன். திரும்பக் கதவைத் திறக்க முயன்றால் இயலவில்லை. ;( கண்ணாடி இல்லாமலே போய் வந்தாயிற்று.
திறக்கவே இயலவில்லை. பூட்டை மாற்றலாம் என்றால்... அது அறையின் உட்பக்கமிருந்துதான் மாட்டினோம். உள்ளிருந்துதான் மாற்றவும் வேண்டும். பிறகு ஹாச்ஸா (hacksaw), க்ரைண்டர் (இது சமையலறை க்ரைண்டர் இல்லை) எல்லாம் கொண்டு ஒரு பாதியை தீப்பொறி பறக்க அறுத்து, திருகி, மீண்டும் மறு பாதியை அறுத்து... நெம்பி...
திறக்கவே இயலவில்லை. பூட்டை மாற்றலாம் என்றால்... அது அறையின் உட்பக்கமிருந்துதான் மாட்டினோம். உள்ளிருந்துதான் மாற்றவும் வேண்டும். பிறகு ஹாச்ஸா (hacksaw), க்ரைண்டர் (இது சமையலறை க்ரைண்டர் இல்லை) எல்லாம் கொண்டு ஒரு பாதியை தீப்பொறி பறக்க அறுத்து, திருகி, மீண்டும் மறு பாதியை அறுத்து... நெம்பி...
ஒரு விதமாக துண்டு துண்டாகப் பிடுங்கி எடுத்தோம்.
புதிய பூட்டும் வாங்கி வந்தாயிற்று. பழைய துவாரம் சிறிதாக இருந்தது.
பெரிதாக்க... புகை மண்டலம்.
கதவின் மறுபக்கம்
மதியம் வேலை முடிந்தது.
புகை அடையாளங்களைச் சுத்தம் செய்தேன். ஆனால் ஆங்காங்கே வாள், சுத்தியல் தட்டுப் பட்ட அடையாளங்கள் நிறையவே இருக்கின்றன. கதவை ஒரு முறை பெய்ன்ட் செய்ய வேண்டும் போல இருக்கிறது.
கோடை வரும் வரை அப்படியே இருக்கட்டும்.
மறதியால்...!
ReplyDeleteமறதியால் வந்த வினை இல்லை தனபாலன். கையில் கைப்பையில் சாவி இருந்தது. நான்கு பேரிடமும் இதற்கான சாவிகள் உள்ளன. பூட்டு முதல் நாளே உள்ளே உடைந்து இருக்கவேண்டும். அன்று பூட்டியதும் பூட்டிவிட்டது. ;)
Deleteதச்சர் வேலை எல்லாம் க்றிஸ் அண்ணாவுடையதா?ம்ம்...இமாவுக்கு இந்தவேலைகளுக்கான செலவு எல்லாம் ரொம்பவும் மிச்சம்:)
ReplyDeleteஉங்கள் வீட்டி புது லாக் நன்றாக உள்ளது.வாழ்க வளமுடன்!
//புது லாக் நன்றாக உள்ளது.வாழ்க வளமுடன்!// அவ்வ்!! ஸாதிகா!!!! ;))))
Delete//தச்சர்// மேசர், மெக்கானிக் இன்னும் பல டைட்டில் இருக்கு ஸாதிகா.
பூட்டு மாற்றும் வேலையை நீங்களே செய்திட்டீங்களோ!!! படங்களுடன் தெளிவா இருக்கு. முக்கியமா, என்னென்ன சாவியெல்லாம் வச்சிருக்கிங்கன்னு பார்த்தாயிற்று.
ReplyDeleteஅதனால டாலர் போய்ட்டு போவுதுன்னு ஒரு ஃப்ளைட்டை பிடிச்சு நேரா வந்து.......ஓ ஓ.. கடைசி படத்தில் சாவியை எடுத்திட்டிங்களா? அதனாலென்ன, தட்டிட்டாப் போச்சு.
//மாற்றும் வேலை// ஆரம்பத்தில் மாட்டின வேலையே நாங்கள் செய்ததுதானே.
Delete//சாவி// ;) //ஃப்ளைட் புடிச்சு வந்து// என்ன சாதிப்பீங்க சித்ரா! வீடு நிறைய முத்திரை, சிப்பி, கலர் பேப்பர், க்ளூ இத்யாதிகள் மட்டுமே இருக்கும். ;))
So you got a new lock. Wonderful!!!!!
ReplyDelete//Wonderful!!!!!// not sure VaanS.
Deleteஅனுபவம் புதுமை
ReplyDeleteஆமாம். :-)
Deleteபுதுமையானாலும் 'அனுபவம்'
பூட்டு மாற்றும் பரபரப்பான வேளையிலும் அழகாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளீர்களே... முக்கியமான தருணங்களில் இப்படியாகிவிட்டால்... எவ்வளவு கஷ்டம். அனுபவப் பகிர்வுக்கு நன்றி இமா.
ReplyDeleteவாணவேடிக்கையெல்லாம் படம் எடுக்க முடியவில்லை. அப்போ காமரா அறையினுள்ளே இருந்தது. :-)
Delete//முக்கியமான தருணங்களில்// கதை எழுதலாம் போல இருக்கே! :))
ஒவ்வொருவருக்கும் விபரமாகப் பதில் சொல்ல நினைக்கிறேன். எல்லாவற்றையும் இணைத்து இன்னொரு இடுகையாகவே போட்டுவிடலாம் போல இருக்கிறது. நேரம் அமைந்தால் எழுதுகிறேன்.
mee the first to open the comment..lock...
ReplyDeleteம்... இப்ப எதுக்கு தலைல அடிச்சுக்கறீங்க!! ;))
Delete4mm steel பிட் டிரில் செய்தால் போதும் 30 செகண்டில் பூட்டு கையோடு கழண்டு வந்திடும் . :-) . (( உங்க ஊர் போலிஸ்ல மட்டும் காட்டி கொடுத்திடாதீங்க ஹி..ஹி.. ))
ReplyDelete;)))))) ம்... அவசரத்துல சொல்ல மறந்துட்டேனா! அதுல்லாம் ஒர்க் அவுட் ஆகல பாஸ். சூப்பர் லாக் போல. ;) பிட் நீளத்துக்கு துளை துளையா ஆனது தவிர வேற எதுவும் ஆகல. பிறகு ஹாக்ஸா ட்ரை பண்ணி அதுவும் முடியாம க்ரைண்டர்ல போய் நின்றோம்.
Deleteலாக் சேஞ்ச்- லைவ் டெமோ சூப்பரப்பு! :) ஆனா இங்கல்லாம் இப்படி ஆனா ரெம்ப கஷ்டம் இமா! உங்க வீட்டில பரவால்லை, கார்பென்டர் 24/7 இருக்கிறார்! நாங்கள்லாம் அபார்ட்மெண்ட்ல இருக்கமோ, பொழைச்சோம்! தனிவீடுன்னா ஒரு $200 கழண்டுருக்கும்! ;) :)
ReplyDelete//லைவ் டெமோ// அது அரை உயிர் டெமோ. ;)
Deleteஅங்க ஒவ்வொரு ரூமுக்கும் லாக் இருக்கா!! கட்டாயம் பதில் சொல்லுங்க. சீரியஸ் கேள்வி இது.
//$200// அது மட்டுமா! ;) வரும் ஆள் மூலம் தப்பான ஆட்களுக்கு வீட்டு மாப் போய்ரலாம். டைம் புக் பண்ற வாக்குல எங்க வீடு எப்போல்லாம் ஆளில்லாமல் இருக்கும் என்கிற விபரமும் போய்ரும். சட்டப்படி லைசன்ஸ் உள்ள ஆள்தான் செய்ய வேண்டும் என்று இல்லாத வேலைகள் எல்லாம் முடிந்தவரை நாங்களே செய்வது பாதுகாப்பாகத் தெரிகிறது மகி.
//அங்க ஒவ்வொரு ரூமுக்கும் லாக் இருக்கா!! // ஒவ்வொரு ரூமுக்கும் கைப்பிடியுடனே சேர்த்த லாக் இருக்கும் இமா. சாவி போட்டு பூட்டி திறக்கும் லாக் மெயின் டோருக்கு மட்டுமே! :)
Delete//வரும் ஆள் மூலம் தப்பான ஆட்களுக்கு வீட்டு மாப் போய்ரலாம். டைம் புக் பண்ற வாக்குல எங்க வீடு எப்போல்லாம் ஆளில்லாமல் இருக்கும் என்கிற விபரமும் போய்ரும்.// அதெல்லாமும் இருக்கிறது. அகால நேரத்தில இப்படி ஆகிவிட்டா சரி செய்ய வரும் ஆட்கள் அதுதான் நேரம் என்று முடிந்த அளவு பணம் கறக்கப் பார்ப்பாங்க. சமீபத்தில் டிவி-யில் ஒரு ப்ரோகிராமில் கூட காட்டினார்கள்.
//வேலைகள் எல்லாம் முடிந்தவரை நாங்களே செய்வது பாதுகாப்பாகத் தெரிகிறது மகி.// ஹிஹ்ஹி...ஹி! நீங்க சொல்வது சரிதான் என்றாலும், இப்படியான வேலைகளுடன் எல்லாம் 0% கூட சம்பந்தமே இல்லாத ஸாஃப்ட்வேர் என்ஜினியர்களைக் கலியாணம் செய்தவங்க என்ன செய்யலாம்?! ;)))))
மறதியால் அவதி ............பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete//மறதியால்// இல்லை நிலாமதி. அது உடையும் காலம் வந்தாச்சு. உடைஞ்சு போச்சு. கதவு திறந்திருக்கும் போது உடைந்திருந்தால் ஹாயாக மாற்றி இருப்போம். இது கொஞ்சம் சாலஞ்சிங் ஆக இருந்தது. எல்லாம் அனுபவம்தான். :-)
Delete