Wednesday 3 July 2019

அன்பளிப்புப் பொதி ஒன்று!

இந்த அன்பளிப்புப் பொதியைத் திறப்பதற்கு, கடதாசியைக் கிழிக்க வேண்டியதில்லை. பார்க்க முழுமையாகத் தெரிந்தாலும் உண்மையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய விதமாக அமைத்திருக்கிறேன்.

படத்தைப் பார்த்தால் புரியும். நான்கு பக்கங்களிலும் நாடாக்கள் மேல் மூடியில் உள்ள நாடாக்களோடு பொருந்துவதாகத் தெரியும் விதமாக வைத்து செலோடேப் போட்டிருக்கிறேன். பரிசைப் பெறுபவர்கள் பொதியை மீண்டும் பயன்படுத்தலாம்.

விளம்பரத்திற்காக காப்பிப் பொதியோடு இலவசமாகக் கிடைத்த சிவப்பு நிறக் கிண்ணங்கள் வந்த பெட்டிகளை வீசாமல் வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் மேலே பொதியாகக் காட்சி தருவது.
ஒன்றின் மேல் மூடியில் சின்னதாக ஒரு துளை செய்து உள்ளே சணல் உருண்டையைப் போட்டு வைத்திருக்கிறேன். தேவையான போது சணலை சிக்காமல் எடுக்கலாம்.

3 comments:

  1. Superb..! உங்களை இனி பாராட்ட வார்த்தை தேடவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தேடுங்கோ! தேடுங்கோ! :-)
      விடாமல் தொடர்ந்து எல்லா இடுகைகளையும் வாசித்து பின்னூட்டம் தாறீங்கள். என் அன்பு நன்றிகள் ப்ரியா.

      Delete
  2. நல்ல ஐடியா. நானும் செய்யப் போறேனே

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா