Sunday, 7 July 2019

நெல்மணி தூவாது ஓர் வாழ்த்து

என் மச்சாள் வீட்டிலிருந்து பல வருடங்கள்  முன் வந்த வாழ்த்து இதழ் இது. பதினாறு, பதினேழு வருடங்களாக என் சேமிப்பில் இருக்கிறது. இடைக்கிடையே எடுத்து ரசிப்பேன். எப்போ அந்த விபத்து நேர்ந்தது என்பது நினைவில் இல்லை. ;( ஒரு துளி நீர் சிந்தி நிறம் கலந்திருக்கிறது. ஆயினும்… அழகு குறையவில்லை. 

இலங்கையில் இந்த வகை அட்டையை 'பிரிசில் போட்' என்போம். காவி நிற அட்டையில் எல் மணிகளால் பூக்கள் ஒட்டி, அதன் மீள் சிவப்பு நிறம் தீட்டி சிரிதே சிறிது மினுக்கம் கொடுத்திருந்தார். கோடுகள், இலைகள், எழுத்தெல்லாமே கையால் வரையப்பட்டிருந்தன.

சமீபத்தில் எடுத்துக் பார்த்த போது சில நெல்மணிகளைக் காணோம். உதிர்ந்திருக்க வேண்டும். பேட்டியின் அடியிலும்  கிடைக்கவில்லை. முழுவதாகக் காணாது போகும் முன்… இங்கே. 

2 comments:

  1. சிம்பிளா அழகா செய்திருக்காங்க. நெல் மணிக்கு அழகா வர்ணம் பூசி ஒட்டியிருக்காங்க. பிர்சில் போட் பல நினைவுகளை (பாடசாலை)கொண்டு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. இங்க அரிசியில கூட நெல் கிடைக்காது. ;( கோதுமை மணியை வைச்சு ஒட்டிப் பார்த்தன். வடிவா இல்லை.

      :-) இப்ப பிரிஸில் போடை விட 'காட் ஸ்டொக்' வாங்குறது வசதி. சின்னனா இருக்கிறபடியா மடியாது.

      வருகைக்கு மிக்க நன்றி ப்ரியா.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா