Friday, 5 July 2019

பாம்பு பொம்மை


பழைய காலுறை ஒன்றைப் பாம்பாக மாற்றியிருக்கிறேன். விரல்கள் வரும் இடம் தலையாக வர வைத்து நீளத் தீரையாக வெட்டித்த தைத்தேன். நாவுக்கு ஒரு சிறிய சிவப்பு நிறுத்த துணி, கண்களுக்கு சின்னதாக இரண்டு கருப்பு மணிகள், வாலுக்கு நூலைச் சுற்றிக் கட்டினேன். பல காலமாக மழையிலும் வெயிலிலும் இருந்ததில் தைத்த நூல் இற்றுப் போயிற்று போல; ஓரிடத்தில் பிரிந்து போய் பஞ்சு எட்டிப் பார்க்கிறது. 

இன்று குப்பைக்குப் போகப் போகிறார் பாம்பார்.  

3 comments:

  1. ஆ...பாஆஆம்பு கெதியா குப்பைக்கு அனுப்புங்கோ. நான் டிவியில் வந்தால் கூட பார்க்கமாட்டேன். ஊரில் இருகும்போது சாரைப்பாம்பு பார்த்துபார்த்து பயம்.
    ஆனா உண்மையான பாம்பா இருக்கு உங்க படத்தை பார்க்க...

    ReplyDelete
  2. உண்மையான பாம்பு போல தெரியுதா? நன்றி ப்ரியா.அதை ட்ரிக்ஸிக்கு விளையாடக் குடுத்திட்டன். :-)

    ReplyDelete
  3. நிஜ பாம்பு போலவே இருக்கு. அழகு

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா