Sunday 22 April 2012

சமீபத்திய அறுவடை

கடந்த சில வருடங்களாகத் தோட்டம் துரவு! எல்லாம் க்றிஸ்தான் பார்க்கிறார். எனக்கு வெய்யில் ஒத்துவரவில்லை. (வேலையில் இருந்து தப்பிக்க ஒரு காரணம் வேண்டாமா! ;)  ) இவருக்குச் செடிகளைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அதுவும் இங்குள்ள வகைகள் பற்றி அறிவு பூச்சியம்தான். நான் நட்டு வைப்பவற்றை களை என்று பிடுங்கி வைக்கிறார்.

ஒரு (அறு)சுவையான கதை சொல்கிறேன், கேளுங்கள்.முன்னொரு காலம் செந்தமிழ்ச்செல்வி மணத்தக்காளி என்கிறாரே என்று 'அறுசுவை' உதவியோடு ஆராய்ந்து.. கண்டுபிடித்து.. ஆசையாய் நானும் வளர்த்தேன் மணத்தக்காளி. எனது ஊர்ப் பக்கம் இவை களையாகவும் கண்டதில்லை.
இங்கு வந்த ஆரம்பத்தில் ஒரு நாள் என் இரண்டு புத்திரர்களையும் நடை கூட்டிப் போகையில் ஒரு கேரளத்துப் பெண் தோழியாகக் கிடைத்தார். அவ்வப்போது தெருவில் சந்தித்துக் கொள்வோம். தமிழ் பேசுவார். ஒரு மகள் இருந்தார். பேசிக் கொண்டே நடப்போம். பிள்ளைகள் சைக்கிளில் அல்லது 'ஸ்கேட் போர்டில்' முன்னால் போவார்கள். இவர் ஒரு 'மந்தகாளி' பற்றிச் சொன்னார். எனக்கு மனசிலாகவில்லை.

ஆனாலும் நடைபாதை ஓரம் ஒரு செடியில் காய்களை யாரோ கொத்தாக நறுக்கிய அடையாளம் தெரிவதைப் பார்த்து யோசித்திருக்கிறேன், சமைக்க எடுத்துப் போய் இருப்பார்களோ அல்லது மருந்து மூலிகையா என்று. செடிகள்... கத்தரி, மிளகாயை எல்லாம் நினைவு வர வைக்கும். பழங்களோடு உள்ள செடிகளில் சிட்டுக்கள் வேட்டையாடுவதையும் அவதானித்திருக்கிறேன்.

செல்வியம்மா எல்லாவற்றையும் மீண்டும் மனக் கண்முன் நினைவு வர வைத்தார். எங்கள் வீட்டிலும் சில நாட்கள் கவனியாது விட்டால் இவை வளர்ந்திருக்கும். நான் சிட்டுக்கள் சாப்பிடுமே என்று விட்டுவைப்பேன். கிறிஸ் பிடுங்கி வைப்பார்.

மணத்தக்காளிக் கீரையில் என் முகம் தெரிகிறது என்று ஒருமுறை செல்வி சொன்னார். ;) எனக்கு இங்கு அவர் முகம் தெரிந்தது; கண்டு பிடித்துவிட்டேன். ;) கூடவே என்ன சமைக்கலாம் எப்படிச் சமைக்கலாம் என்பதெல்லாம் அறிந்து... செடி சடைத்து வளர ஆரம்பித்தது. (இப்போ க்றிஸ் சொல்லிவிட்டுப் பிடுங்குகிறார்.)

தக்காளி & கத்தரி வகை என்பதால் ஒவ்வாமை ஏற்படுமோ என்று முதலில் பயந்து பின்னர் ஒரு விடுமுறையில் கீரை, பருப்புப் போட்டு சமைத்தாயிற்று. பிறகு அடிக்கடி தொடர்ந்தது என் சமையல். என்னவென்றே தெரியாமல் வீட்டார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். (முன்பே சொல்லி இருந்தால் நஞ்சோ என்று சந்தேகித்திருப்பார்கள்.)
தோட்டத்தில் உலாவுகையில் பழத்தைப் பிடுங்கிச் சாப்பிடுவேன். ஒரு நாள் அறுசுவையில் கொடுத்து இருந்த முறையைப் பார்த்து வற்றல் போடலாம் என்று எண்ணி... ஒரு கூடையும் கத்தரியும் எடுத்துக் கொண்டு வேலையில் இறங்கினேன். ஒரு கூடை நிரம்பிற்று. தலைக்கு மேல் இருந்த கிளையில் சிட்டொன்று நான் எப்போ விலகுவேன் என்று பார்த்திருந்தது. சிறிது தள்ளி கிறிஸ் எதையோ மீள்நடுகை செய்து கொண்டிருந்தார்.

கூடைக் காயை மேசையில் கொட்டி விட்டு ஒரு தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்து விட்டு திரும்ப வந்தேன் வேலையைத் தொடர. என்ன மாயம்! செடிகளைக் காணோம். ;( 
சிட்டு இப்போ வேறிடத்தில் நின்று சப்தித்தது. மணலில் செடிகளைப் பிடுங்கியமைக்கான அடையாளம்... தோட்டக்காரரிடம் கேட்டால் மீள் நடுகையாம், மிளகாய் நடப் போகிறாராம். ;( பாவம் சிட்டு.

நல்ல வேளையாக பிடுங்கிய செடி குப்பைத் தொட்டிக்குப் போகாமல் குவியலாய்க் கிடந்தது. மீதிக் காய்களையும் வெட்டி எடுத்துக் கொண்டேன். பிறகு வெயிற்காலம் போய் விட்டதால் டீஹைட்ரேட்டரில் காய வைக்கவேண்டியதாகிற்று.

அது... பழைய அறுவடை.

இவ்வருட அறுவடை...
ஒருமுறை "கிண்ணத்தில் மணத்தக்காளி பிடுங்கி வைத்துச் சாப்பிடுகிறேன்," என்றேன் தோழியிடம்ம். ;) "அவ்வளவு பழம் இருக்கிறதா?" என்றார்.

இனிய உளவாக இன்னாத கூறல்...

இருப்பக்

கவர்ந்தற்று. ;))

39 comments:

  1. //கூடைக் காயை மேசையில் கொட்டி விட்டு ஒரு தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்து விட்டு திரும்ப வந்தேன் வேலையைத் தொடர. என்ன மாயம்! செடிகளைக் காணோம். ;( //

    அடடா! இமா பாவம்!!

    இனிய உளவாக இன்னாத கூறல்...
    குறளில் விடுபட்ட கனி மற்றும் காய்களை
    படத்துடன் காட்டியுள்ளது
    பார்க்கவே அழகாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete
  2. ஒரு நாள் அறுசுவையில் கொடுத்து இருந்த முறையைப் பார்த்து வற்றல் போடலாம் என்று எண்ணி... ஒரு கூடையும் கத்தரியும் எடுத்துக் கொண்டு வேலையில் இறங்கினேன். //

    எனக்கு வெய்யில் ஒத்துவராது என்ரு ஒதுங்கீகொண்டது போல் கத்தி பிடிக்கவும் ஒத்துவராது என்ரு ஒதுங்கி இருந்தால் வேலை மிச்சமாகி இருக்குமே ஹி ஹி ஹி

    மணத்தாக்காளி வற்றலை பொரித்து கீரைக்கூட்டுடன் சாப்பிட்டால் ஆஹா..அருமையாக இருக்கும்..வற்றல் வகைகளிலேயே மணத்தக்காளி வற்றல்தான் விலை அதிகமாகும்.

    ReplyDelete
    Replies
    1. //கத்தி பிடிக்கவும் ஒத்துவராது// அட! இது நல்ல ஐடியாவா இருக்கே! ;)

      //மணத்தக்காளி வற்றல்தான் விலை அதிகமாகும்.// பாட்டில்ல இருக்கிற ஸ்டாக் தீருமட்டும் காய்களைப் பறவைக்கு விட்டு இருக்கிறேன். கூட்டமா வந்து உட்காருவாங்க செடியில.

      ம்... கூட்டா பிஸ்னஸ் ஆரம்பிச்சுரலாமா ஸாதிகா? ;D

      Delete
  3. இந்த கீரையை மிளகு தக்காளி கீரை என்றும் கூறுவார்கள் .வாய் புண்ணிற்கும்,குடல் புண்ணிற்கும் நல்ல மருத்துவ குணம் இந்த கீரைக்கு உண்டு இமா..நெய்யில் இதன் வற்றலை வறுத்து சாப்பிடுவார்கள் ,

    ReplyDelete
    Replies
    1. மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி ராதா.

      Delete
  4. ஆற்றல் மிகுந்த வத்தல்
    ம் இனிய உளவாக மனத்ததக்காளி .காய் கவர்ந்தற்று
    ...rightu.

    ReplyDelete
  5. ஹும்...குடுத்து வைச்ச இமா!! திருக்குறளுக்கே சப்ஸ்டிட்யூட் பண்ணும் அளவுக்கு அறுவடை செய்யறாங்க! :)

    நல்ல படங்கள் இமா! [ஐ மீன், அழகாத் தெளிவா எடுத்திருக்கிறீங்கள்! சிட்டுதான் கொஞ்சம் மேஏஏஏஏஏஏலே உட்கார்ந்திருச்சு! ;)]

    ReplyDelete
  6. ;) இன்னும் இருக்கு. அளவுக்கதிகமா வற்றல் போட்டு என்ன ஆகப் போகுது. தொடர்ந்து கிடைக்கிற விஷயம். இப்போ சிட்டுக்களும் நானும் பழமாவே சாப்பிடுறோம்.

    ReplyDelete
    Replies
    1. மஹீ.... எப்புடி இமாவோட பர்ட் ஃபீடர்! சூப்பர்ல!! ;)))

      Delete
  7. /எப்புடி இமாவோட பர்ட் ஃபீடர்! சூப்பர்ல!! ;)))/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்! குர்ர்ர்ர்ர்ர்! ;)))

    ReplyDelete
  8. மணத்தக்காளியை இன்னுமா மறக்கேல்லை?:). இங்கிருக்கும்போது வாங்க வேணும் என எண்ணினனான், கனடா போனதும் அடியோட மறந்திட்டேன், சே... தேடிப் பார்த்திருக்கலாம், கிடைத்திருக்கும், மறந்தே போனேன்.

    ReplyDelete
  9. மணத்தக்காளிப் பழத்தையும் சமைப்பதோ? காய்தானே பாவிப்பினம்?...

    ஏன் இமா, அந்தக் குருவியாருக்கு, உங்கட கட்டிலுக்குக் கீழ ஒரு குட்டிக் கூடு கட்டிக் கொடுக்கலாமெல்லோ? சும்மா எல்லாத்துக்கும் கிரிஸ் அங்கிளைக் குறை சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

    மீஈஈஈஈஈஈ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...

    ஊசிக்குறிப்பு:
    உங்கட ரெண்டு மருமகன்களும் எங்க இமா? ஒருவர் மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தார், இப்போ அவரையும் ஆரோ கடத்திப் போட்டினம்ம்ம்ம்ம்ம்.... நான் சி ஐ டி ஆட்களுக்குத் தகவல் கொடுக்கப்போறேன்:)).

    ReplyDelete
    Replies
    1. பழம் சாப்பிடலாம் அதீஸ். ஊர்ல ஜாம்பழம் சாப்பிடுற மாதிரி இங்க இது சாப்பிடுறன். ;)

      //கட்டிலுக்குக் கீழ ஒரு குட்டிக் கூடு// ம்... பிறகு... ஒரு பூச்சட்டியில மணித்தக்காளி வளர்த்து அறையில வைக்கலாம். ;)

      ஊ.கு. பதில்
      மருமகன் 1. இப்பவும் மாறுவேஷத்தில நகர்(உலக)வலம் வாறார், எல்லார்ட்ட காதிலையும் பூ. ஆனால்... நீங்கள் மனது வைத்தால்... என்ன வேண்டுமானாலும் நடக்கும் அதீஸ். ;)
      மருமகன் 2. வதனநூலில், நாட்டாமை 'காணவில்லை' அறிவிப்புப் போட்டிருக்கிறார். அதிராவும்//சி ஐ டி ஆட்களுக்குத் தகவல் கொடுக்கப்போ//றாங்க என்று சொல்லி இருக்கிறன். க.கா.போ என்று இருக்கிறார் ஆள். ;)

      Delete
    2. மருமகன் 1.. மாறு வேஷத்தில உலா வாறாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) எனக்கு டவுட்டு டவுட்டா வருதே:))) காலுக்குள்ளால எல்லாம் எலி ஓடுறமாதிரி இருக்கே:)))... ஆனா என் பக்கம் வந்தால் நான் கையும் களவுமாப் பிடிச்சிடுவன்....

      இது பிடிக்க முடியேல்லை.... அடுத்த தலைப்புக்கு ஒருக்கால் வரச்சொல்லுங்கோ இமா:))).. பேசி நாளாச்சு:(((.

      Delete
    3. பச்சைப்பூ மருமகனுக்கு என்ன ஆச்சோ? இப்போ வியாழன் மாறியிருக்கு, இனி வந்திடுவார்:)))

      Delete
    4. //என் பக்கம் வந்தால் நான் கையும் களவுமாப் பிடிச்சிடுவன்.// ஹிக்! இத்தனை வருஷமாப் பிடிக்காத நீங்கள் இனிப் பிடிக்கப் போறீங்களா! அது புத்திசாலி பப்பி. தானா நினைச்சால் ஒழிய பிடிக்க ஏலாது.

      //இது பிடிக்க முடியேல்லை.// ம். ;)
      //அடுத்த தலைப்புக்கு ஒருக்கால் வரச்சொல்லுங்கோ இமா:))).. பேசி நாளாச்சு:(((// சரி, நான் ஏற்பாடு செய்யுறன் இப்பவே. ஆனால் வாறதும் வராததும் பப்பீஸ் இஷ்டம். வந்தால் சந்தோஷம்.

      Delete
    5. ஹை.. ஜீனோ பப்பி வரப்போவதை நினைக்க, இப்பவே எனக்கு ஷை...ஷை ஆஆஆ வருது:)) நான் ஓடிபோய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கட்டே இமா?:)))

      Delete
    6. no...pe! ;(

      அங்க குருவிக்கூடு இருக்கு. ;)

      Delete
    7. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அப்போ பூஸுக்கு “ஒரு கல்லில ரெண்டு மாங்காய்”:))

      Delete
    8. ///மருமகன் 2. வதனநூலில், நாட்டாமை 'காணவில்லை' அறிவிப்புப் போட்டிருக்கிறார். அதிராவும்//சி ஐ டி ஆட்களுக்குத் தகவல் கொடுக்கப்போ//றாங்க என்று சொல்லி இருக்கிறன். க.கா.போ என்று இருக்கிறார் ஆள். ;)//

      ஆ....மாமீஈஈ போட்டு குடுத்திட்டீங்களே அவ்வ்வ்வ் :-)))

      //பச்சைப்பூ மருமகனுக்கு என்ன ஆச்சோ? இப்போ வியாழன் மாறியிருக்கு, இனி வந்திடுவார்:))) /// ஒரே ராசியில இப்பிடி ஒரு கஷ்டம் இருக்கோ ஹா..ஹா... :-)))))))

      Delete
    9. ஆ....மாமீஈஈ போட்டு குடுத்திட்டீங்களே அவ்வ்வ்வ் :-)))

      திஸ் இஸ் ஸோ ரோங்க்...ஜீனோஸ் கமிங் ஒன்ஸ் அபான் எ டைம்ஸ்!

      //ஜீனோ பப்பி வரப்போவதை நினைக்க, இப்பவே எனக்கு ஷை...ஷை ஆஆஆ வருது:))// கிக்கிக்கிகீஈஈஈஈஈஈ! எதுக்கு ஷை பண்ரீங்கோ பேபி சிஸ்டேர்? ஜீனோக்குதான் ரெம்ப ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.........ஷ்ஷ்ஷை ஆஆஆ இருக்கிது. எல்லாம் மாறிப்போச்சுது..ஊரே மாறிப்போச்சு,ஒலகம் மாறிப் போச்சு, மனுஷரும் மாறிட்டினம்.
      கண்ணைக் கட்டி, நாலு காலையும் வாலையும் கட்டி, வாலிபால் வெளாடறாங்களே ஜீனோவை! ஓ மை லார்ட்...ப்ளிஸ் ஜெல்ப் ஜீனோஓஓஓஓஓஓஓஓஓஓஓ டு எ சேவ் ப்ளேஸ்!

      Delete
  10. //கவர்ந்தற்று. ;))//

    ஐ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊஊஉ.. பூஸோ கொக்கோ? எங்கிட்டயேவா? அது கவர்ந்தற்கு எனத்தான் வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).

    ReplyDelete
    Replies
    1. ;) என்னிடம் இருப்பது செபா 56ம் ஆண்டு வாங்கிய 'பரிமேலழகருரை' மட்டுமே. 'ஆரணியுரை' எந்தப் புத்தகக்கடையிலும் கிடைக்கவில்லை. இன்னும் விற்பனைக்கே வரவில்லையாமே!

      http://www.youtube.com/watch?v=so7jesrVHxk

      Delete
    2. என்னாது ஆரணியா? அவ்வ்வ்வ்வ்:))).

      Delete
    3. ஹஹ்ஹஹ்ஹா......!!!!!!!! ;)

      Delete
  11. நல்ல மருத்துவ குணமுள்ள மணத்தக்காளியாச்சே! வேஸ்ட் செய்யாமல் பயன்படுத்தி விடுங்கள்.மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. இதன் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்திருக்கிறேன். பருப்பில் கீரை சேர்த்துச் சமைப்பேன். வற்றல் குழம்பும் வைப்பதுண்டு. பச்சைக்காய் சமைத்துப் பார்க்க ஆசை, பார்க்கலாம். நன்றி ஆசியா.

      Delete
  12. இதன் தொடர் இங்கே காண்க. ;)

    http://mahikitchen.blogspot.co.nz/2012/04/burssel-sprouts-stir-fry.html

    ReplyDelete
  13. இமா, மணத்தக்காளி சூப்பர். இதெல்லாம் இங்கே கிடைக்காது. மணத்தக்காளி வத்தல் கனடாவில் இருக்கும் என்றே நினைக்கிறேன். வாங்கியதில்லை.
    அதீஸ் சொன்னதையே நானும் வழி மொழிகிறேன். எல்லாத்துக்கும் கிறிஸ் அண்ணாச்சியை.... ( சரி முறைக்க வேணாம் ).

    ReplyDelete
    Replies
    1. !! எதிர்க்கட்சிக்கு ஆதரவு கூடவா இருக்குதே! ;)

      Delete
  14. டீச்சர் உங்க கூட ஒரு விருதை பகிர்ந்து உள்ளேன். ப்ளீஸ் வந்து வாங்கிக்குங்க

    ReplyDelete
    Replies
    1. ஹையா! கண்டுபுடிச்சுட்டேன் கிரி. இது... ஸ்பாம்ல போய் இருந்திருக்கு.

      Delete
  15. மனத்தக்காளியின் பயன் தெரிஞ்சால் தூக்கிப்போட மனசே வராது :-) . புளி ரசம் வைப்பது போல வைத்து சாப்பிட எத்தனை கால குடல் , வாய் புண் , வாய் நாற்றம் இருக்கும் ஆட்களுக்கு இதை விட செலவு குறைந்த வைத்தியம் இந்த உலகத்தில இல்லை . வாழைப்பழமும் இதே செய்யும் ஆனால் இரெண்டிர்க்கும் மற்ற விஷயத்துல வானம் பூமி அளவுக்கு வித்தியாசம் இருக்கு :-)

    ReplyDelete
    Replies
    1. ஜெய்லானி டீவீயில்... ம.த.புளிரசம் குறிப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன். ;))

      Delete
  16. மணத்தக்காளிக் கீரை இங்கு உழவர் சந்தையில் முதலில் விற்றுத்தீரும் அருமையான கீரை..

    வாய்ப்புண் , கல்லீரல், மண்ணீரல் வீக்கத்திற்கும் , காமாலைக்கும்
    பல மருந்துகளைவிட கை கண்ட மருந்து..

    ReplyDelete
    Replies
    1. இங்கு வந்ததன் பின்னாடிதான் இந்தச் செடியைப் பற்றியே தெரியவந்திருக்கிறது. ஊரில் கண்டதே இல்லை. தகவலுக்கு நன்றிங்க.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா