Tuesday 25 June 2019

மணநாள் வாழ்த்து!

நட்பு ஒருவருக்கு இன்று மணநாள். முதலில் அவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள். மகிழ்ச்சியுடன் வாழ்க பல்லாண்டு. ;-)
↔↔↔↔↔↔↔↔↔↔

அம்மாவின் சேகரிப்பில் அவருக்கு வந்த வெகு அழகான நத்தார் வாழ்த்துமடல் ஓன்று இருந்தது. அவற்றிலிருந்த இரண்டு பறவைகள் மணநாள் வாழ்த்து மடல் அமைக்கப் பொருத்தமாகத் தோன்றின. வெட்டி எடுத்தேன். மீதி அட்டையில் சில அலங்காரப் பந்துகள் தெரிந்தன. அவற்றைப் பூக்களாக வெட்டிக்கொண்டேன். சேலையிலிருந்து உதிர்ந்த கற்கள் தரையில் தென்படும் போது பொறுக்கி அருகில் உள்ள ஜன்னல்கட்டில் வைப்பதுண்டு. ஒரு ஜன்னலில் மூன்று கற்கள் இருந்தன. 3 D இதய வடிவ ஸ்டிக்கர்களில் மீதி வடிவங்களோடு இயைந்துபோகக் கூடிய நிறங்களில் இருந்த இரண்டைத் தெரிந்துகொண்டேன். 

அட்டையை மடித்துச் சீராக வெட்டி, உள்ளே வாழ்த்து எழுத வாகாக ஒரு கடதாசி ஒட்டியபின் ஓரங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி முடித்தேன். வடிவங்களைப் பரவலாக வைத்துப் பார்த்து, திருப்தியானதும் ஒட்ட ஆரம்பித்தேன். பறவைகளுக்கு முப்பரிமாணம் கொடுக்க வேண்டி, 'ஸ்டிக்கி டொட்ஸ்' வைத்து ஒட்டியிருக்கிறேன். கால்கள் பேனையால் வரைந்தவை. 
தோழிக்குக் கிடைத்திருக்கும்; பிடித்திருக்கும் என நினைக்கிறேன். ;-)

6 comments:

  1. அழகா இருக்கு ..அதிலும் பறவைகள் ரொம்ப cute

    ReplyDelete
  2. ஆஹா.. ஜோடிப்பறவைகள் ஜொலிக்கின்றன. நிச்சயம் தோழிக்குப் பிடிக்கும். எங்கள் சார்பிலும் இனிய மணநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அழகான வாழ்த்து அட்டை இமா.

    ReplyDelete
  4. வாழ்த்தினை தோழி ரகசியமாக வந்து பார்த்திருப்பார். :-) மிக்க நன்றி கீதா.

    பிரியாவுக்கும் அனுவுக்கும் என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  5. அழகான வாழ்த்து அட்டை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே!

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா