பேத்திக்கு சிம்பாவைப் பிடிக்கும். திடஉணவு உண்ண ஆரம்பித்து இருக்கிறார். ஒரு கிண்ணம் தயார் செய்ய எண்ணினேன்.
கிண்ணத்தின் அளவுகளை ஒரு கடதாசியில் அளவெடுத்துக் கொண்டேன்.
கூகுளில் கண்ணில் பட்ட சிம்பாக்கள் எவரையும் பிடிக்கவில்லை. சிரித்த முகமாக வரவேண்டும் என்று எண்ணம் இருந்தது. பல நிமிடங்கள் செலவழித்து ஒருவரைக் கண்டேன் - முகம் மட்டும் இருந்தது. அதை அடிப்படையாக வைத்து, கூடவே முன்னங் கால்களோடு வால் மட்டும் தெரிய வரைந்து நிறம் தீட்டிப் பார்த்தேன்.
திருத்தியாக வந்ததும் அதை டிஷ்யூ பேப்பருக்கு மாற்றினேன். அளவாகக் கார்பன் பேப்பர் கத்தரித்து டேப் செய்தென்.
கிண்ணத்தைஸ் சுத்தம் செய்து, சிம்பாவைப் பிரதி எடுத்தேன். க்றிஸ் வேலை செய்து வீசுவதற்காக வைத்திருந்தவற்றிலிருந்து சில துண்டு சலவைக்கற் துண்டுகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் வரைந்து நிறம் தீட்டிப் பார்த்து (முடிக்கவில்லை) திருப்தியான பின்...
கிண்ணத்தையும் நிறம் தீட்டி முடித்தேன்.
மறுபக்கம்... இந்தப் பூ.
பேக் செய்து இன்று கொண்டுபோய்க் கொடுத்தாயிற்று. குட்டிப் பெண் உறக்கம் கலைத்து வந்ததும் அவர் முன்னிலையில் அம்மா பொதியைப் பிரித்தார். "Oh! Nice chipmunk"என்றார். ;) "சிரிக்கும் சிம்பாவை வரைய முயற்சித்தேன்," என்று விளக்க ஆரம்பித்தேன். மகன் குறுக்கிட்டு, நாவுக்கு நிறம் தீட்ட மறந்ததைக் சுட்டிக் காட்டினார். வெண்மையாக இருந்த நாக்கு பெரிய பற்களாகத் தோற்றமளிக்க, மருமகளுக்கு சிம்பா சிப்மங்க் ஆகத் தெரிந்திருக்கிறார். ;)
ஹா..ஹா..ஹா..சிப்மங்க். அழகா இருக்கு சிம்பா.
ReplyDelete:-) Thank you Priya.
Delete